Headlines News :
முகப்பு » » சிறுவர் துஷ்பிரயோகங்கள் அதிகரிக்க பெற்றோரின் கவனயீனமே காரணம்? - சத்தியமூர்த்தி

சிறுவர் துஷ்பிரயோகங்கள் அதிகரிக்க பெற்றோரின் கவனயீனமே காரணம்? - சத்தியமூர்த்தி


இலங்கையில் முக்கிய பிரச்சினைகளில் ஒன்றாக சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள் காணப்படுகின்றன. இவ்வாறான சம்பவங் கள் நாடு முழுவதிலும் அதிகளவில் இடம்பெற்று வருகின்றன. எனினும் ஒரு சில சம்ப

வங்களே வெளிச்சத்திற்கு வருவதாக சிறு வர் நலன் பேணும் அமைப்புக்களும் அரச சார்பற்ற நிறுவனங்களும் தங்களது ஆய்வு களை அடிப்படையாகக் கொண்டு தெரிவிக்கின்றன.

சிறுவர்கள் அதிகளவில் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாவது கிராம புறங்களிலும் தோட்டப் பகுதிகளிலுமாகும். சிறுவர்களை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்துபவர்கள் அவர்களது பெற்றோரின் நெருக்கமான நண்பர்கள் அல்லது ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களாகவே உள்ளனர்.

மலையகத்தைப் பொறுத்தவரையில் அதிகமான சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள் இடம்பெறுவதற்கு பெற்றோரின் கவனயீனமும் தெளிவூட்டல் இன்மையுமே காரண மாகும் என இவ்விடயம் தொடர்பாக நடவடிக்கை எடுத்து வருகின்ற அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். பெரும்பாலான தோட்டப்புறங்களில் அண்மைக்காலமாக மாணவர்கள் பாடசாலை கல்வியை இடைநடுவில் நிறுத்தி விட்டு வீடுகளில் இருப்பது அதிகரித்து வருகின்றது.

இவ் இடைவிலகலானது வயது, பால் வித்தியாசமின்றி இடம்பெற்று வருகின்றது. மாணவர்களின் இடைவிலகலை தடுப்பதற்கு பாடசாலை நிர்வாகங்கள் பிரதேச செயலகத்தின் உத்தியோகத்தர்களான கிராம சேவை பிரிவுகளில் உள்ள சமுர்த்தி உத்தியோகத்தர்கள், சமூகசேவை அதிகாரி, கிராமசேவை உத்தியோகத்தர் மற்றும் பொலிஸாருடன் இணைந்து நடவடிக்கை எடுக்கின்ற போதிலும் இவர்களது செயற்பாடுகள் குறுகிய கால வெற்றியையே அளிக்கின்றன. பாடசாலைகளில் இருந்து இடை விலகிய மாணவர்கள் மீண்டும் பாடசாலைகளுக்கு சென்று சில நாட்களில் வழமை போல் இடை விலகி வீட்டிலேயே தங்கி விடுகின்றனர்.

இடைவிலகிய மாணவர்களில் அதிகமா னோர் தமது பெற்றோர்களில் ஒருவரை இழந்தவராகவும் தாய் தந்தையரை பிரிந்து பாதுகாவலர்களின் பராமரிப்பில் உள்ளவர்களாகவும் உள்ளனர். இடைவிலகலுக்கு முக்கிய காரணமாக தாய்மாரின் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோகத்துடன் கூடிய பயணங்கள் அமைந்து விடுகின்றன.

இவ்வாறான சூழ்நிலைகள் மிகவும் பின்தங்கிய கிராமப்புறங்களிலும் மலையகத்திலுமே அதிகளவில் உள்ளன. மலையக பகுதியில் காலை நேரங்களில் வீடுகளில் தனித்திருக்கும் சிறுவர்கள் வயது முதிர்ந்த தமது தாத்தா பாட்டியருடனேயே நேரத்தை போக்குகின்றனர். இந்நிலையை தமக்கு சாகதமாக்கிக் கொள்ளும் நபர்கள் வயது பால் வித்தியாசமின்றி அவர்களை தமது பாலியல் இச்சைக்குட்படுத்திக் கொள்வது அதிகரித்து வருகின்றது.

பாலியல் வேட்கையை இளம் மொட்டுக்களிடம் தீர்த்துக் கொள்ளும் சமூக விரோதிகள் தொடர்ந்தேர்ச்சியாக இவ்வாறான செயற்பாடுகளில் சிறுவர்களை உட்படுத்தி அவர்களது எதிர்காலத்தையே பாழ்படுத்தி விடுகின்றனர். இச்சம்பவங்கள் குறித்து அதிகமான பெற்றோர் அறிந்திருந்தும் தமது குடும்ப கெளரவம் பிள்ளைகளின் எதிர்காலம் என்பவற்றை கவனத்திற்கொண்டு கண்டும் காணாமல் இருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அண்மையில் பசறை பகுதியில் 9 வயது மதிக் கத்தக்க சிறுமி பாலியல் துஷ்பிரயோகத் திற்கு உட்படுத்தப்பட்டு மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டார். இப்படுபாதக செயலுடன் தொடர்புபட்ட 21 வயது மதிக்கத்தக்க இளைஞன் தொடர்ந்து சில மாதங்களாக இச்சிறுமியை வல்லுறவுக்கு உட்ப டுத்தியமை விசாரணைகளில் தெரிய வந்து ள்ளது. சிறுமி வல்லுறவுக்கு உட்படுத்தப்படுவதை இன்னுமொரு சிறுமியே வெளிச்சத்திற்கு கொண்டுவந்துள்ளார். அது வரை யில் இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுமி யின் பெற்றோர் அறிந்திருக்கவுமில்லை அல்லது வாய்திறக்கவுமில்லை.

பாதிக்கப்பட்ட சிறுமி பாடசாலைக்கு செல்லாது இடைவிலகி வீட்டில் இருப்ப வர் என்பது மேலதிக தகவலாகும். அதேபோன்று மலையகத்தில் அதிகளவான வயது வந்த பெண் பிள்ளைகளும் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுவதுடன் ஒருவித பாதுகாப்பற்ற அச்ச சூழ்நிலையிலேயே உள்ளனர்.

அண்மையில் ஹட்டன் பிரதேசத்தில் உள்ள தாய் ஒருவர் தனது மகள் பாடசாலை க்கு செல்லும்போது முச்சக்கர வண்டியில் வரும் ஒரு இளைஞர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த தொடர்ந்தும் முற்படுவதாகவும் தனது மகளின் சீருடையை இவர் கிழித்திருந்ததாக பொலிஸில் முறைப்பாடு செய்திருந்ததாகவும் ஊடகங்களில் செய்தி வெளிவந்திருந்தது.

பாடசாலைகளிலும் இளம் மாணவிகள் ஆசிரியர்களால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்படுவது அதிகரித்துள்ளதை அண்மைக்காலமாக இடம்பெற்று வரும் சம்பவங்கள் புலப்படுத்துகின்றன. இந்நிலையில் சிறுவர்களின் எதிர்காலம் பாதுகாப்பற்ற அச்சுறுத்தல் மிகுந்த சூழ்நிலையில் உள்ளதை நாம் உணர முடியும்.

சிறுவர் துஷ்பிரயோகங்கள் இவ்வாறு அதி கரிப்பதற்கு சிறுவர் பாதுகாப்பு குறித்து பெற்றோரின் விழிப்புணர்வு குறைந்து வருகின்றமையே காரணம் என்பதை அறிய முடிகின்றது. அதிகமானவர்கள் பணம் பொருட்களுடன் சுகபோக வாழ்க்கை வாழ நினைக்கின்றனரே தவிர தமது பிள்ளைகளின் எதிர் காலம் குறித்து சிந்திக்க தவறிவிடுகின்றனர். இதன் காரணமாகவே வெளிநாட்டிற்கு

செல்லும் தாய்மாரின் பிள்ளைகள் பெற் றோரை பிரிந்து வாழும் பிள்ளைகள் முறை யான பாதுகாப்பின்றி தனித்து விடப்பட்டு பாதை தவறிப் போவதுடன் தமது எதிர் காலத்தையும் தொலைத்து சமூகத்திற்கு ஒவ்வாதவர்களாக மாறி வருகின்றனர். நவீன தொலைத் தொடர்பாடல் வசதிகளும்சமூக வலைத்தளங்களும் இதற்கு துணை யாகின்றன.

எனவே நாடு முழுவதிலும் ஏற்பட்டுள்ள இவ் அவல நிலையின் பாதிப்பு மலையகத் தில் அதிக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. மலையக சிறுவர்களின் பாதுகாப்பு குறித்து அவர்களின் பெற்றோர், பாதுகாவலர்கள் அனைவரும் அனைத்து மட்டங்களிலும் தெளிவுபடுத்தலுக்குட்பட வேண்டியவர்க ளாவர். இதற்கான நடவடிக்கையை மலையக மக்கள் பிரதிநிதிகள் அரச திணை க்கள மட்டத்திலும், பொது அமைப்புகள், சமூக நலன் கருதிய அடிப்படையிலும் மேற் கொள்ள வேண்டும்.

நன்றி - veerakesari
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates