தேயிலைப் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த வேதனத்தை ஒரு ரூபாவாக அதிகரித்தால் கம்பனிகள் நாளாந்தம் ஆறு மில்லியன் ரூபா அளவிலான நட்டத்தை எதிர்நோக்க வேண்டியிருக்கும் என்று முதலாளிமார் சம்மேளனம் கூறு-கின்றது. தேயிலைத்தொழிலில் பெண்களால் மேற்கொள்ளப்படும் உழைப்பில் இருந்தே அங்கு வாழ்கின்ற ஆண் தொழிலாளர்களின் நலன்களை பாதுகாக்கவேண்டிய நிலையில் கம்பனிகள் இருக்கின்றன.
இவ்வாறு ஆண் தொழிலாளர்களுக்கான வேதனம் மட்டுமன்றி சுகாதாரம், நட்ட ஈடு மற்றும் தொழிலாளர்களின் நலன்களுக்காக மேற்கொள்ளப்படும் செலவு-களைப் பார்க்கும் போது தோட்டங்களை கம்பனிகள் இயக்கமுடியாதவொரு நிலைக்கு வந்துவிட்டதாகவே முறைப்பாடு செய்கின்றன.
கம்பனிகள் முன்வைக்கும் முறைப்பாடுகளில் முக்கியமான மற்றுமொரு விடயம் என்னவென்றால், தமது உற்பத்திக்கு சந்தையில் போதுமான இலாபத்தை பெற்றுக்கொள்ளக்கூடியதாக இல்லை என்பதாகும். இலாபத்தை உழைக்க முடியாத நிலையில் தொழிலாளர்களின் நாளாந்த வேதனமும் அவற்றில் முக்கியமானது. வேதனம் வழங்கும் கம்பனிகள் தொடர்ந்தும் தாம் நட்டத்தில் இயங்குகின்றதாகக் கூறுவதை நிறுத்திக்கொள்வதற்கான வழிமுறைகளாகும். கம்பனிகள் இலாபத்தில் இயங்குவதற்கான எல்லா வேலைத்திட்டங்களும் அவர்களிடம் இருக்கும்.
இன்றைய உலகில் அறிவு சார்ந்த தீர்மானங்களை மேற்கொள்வதையே முதன்மையாகக் கொண்டுள்ள நிறுவனங்களில் பெருந்தோட்டக் கம்பனிகள் விதிவி-லக்காக இருந்துவிட முடியாது. கம்பனிகளின் இலக்கே 'விலை'யும் 'இலாப'மும் தான். இலாபம் பெற முடியாத கம்பனிகள் உடனடியாக கலைக்கப்படுகின்றன அல்-லது கைமாற்றப்படுகின்றன. இந்நிலையில், கம்பனிகள் இலாபம் உழைக்க பின்வரும் உறுதிமொழிகளையும் சம்பளப் பேச்சுவார்த்தையின் போது பெற்றுக்கொள்வது அவ-சியமாகலாம்.
01. அதிக உயர்ந்தரக தேயிலை /இறப்பர் போன்ற வற்றினை உற்பத்தி செய்தல். இறப்பர் மூலம் கம்பனிகள் ஓரளவு இலாபம் பெறலாம். மொத்த இறப்பர் உற்பத்தி 40 வீதம் உள்ளூரில் இறுதிப்பொருட்களை உற்பத்தி செய்து சந்தைப்படுத்-தப்படுகின்றது.
02. கம்பனிகள் புதிய சந்தைகளை நாடவேண்டும். உதாரணமாக உலகில் தேயிலையை பெருமளவு கொள்வனவு செய்யும் நாடுகளில் பாகிஸ்தானும் ஒன்று. ஆனால், இலங்கை தேயிலை பாகிஸ்தான் சந்தையில் போதுமானளவு விற்பனை செய்யப்படுவதில்லை.
உலகில் தேயிலை உற்பத்தி செய்யாத நாடாக இருக்கின்ற அதேவேளை, அதனை அதிகளவில் (தனிநபர் நுகர்வு 2 கிலோ/வருடத்திற்கு) நுகர்வு செய்யும் நாடாக பாகிஸ்தான் இருந்து வருவதை யாவரும் அறிவோம்.
03.தேயிலைக்கான உற்பத்தி செலவு தொடர்பாக சுதந்திரமான கணிப்பீட்டை மேற்கொள்ள கம்பனிகள் இடமளிக்கவேண்டும். இலங்கையில் இதுவரை தேயிலைக்-கான உற்பத்தி தொடர்பாக தனிநபர்களோ நிறுவனங்களோ மதிப்பீடுகளை மேற்-கொள்ளவில்லை.கம்பனிகளே தமக்கான செலவை மதிப்பிட்டு மொத்த செலவில் 60 வீதம் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் வேதனம் என்று கூறுவதை ஏற்றுக்-கொள்ள முடியாது.
04.கம்பனிகள் கட்டாயப்படுத்தும் அதிக நாட்கள் வருகை தரும் தொழிலாளர்-களுக்கே மேலதிக கொடுப்பனவு என்பதை நன்கு ஆராய்ந்து அதில் உள்ள பலவீனங்-களை களைந்து கம்பனிகள், தொழிலாளர்கள் போன்றோரின் நல்வாழ்விற்கு ஏற்ற-வாறு ஊக்குவிப்புகள் மாற்றியமைக்கப்பட வேண்டும்.
இவ்வாறான ஏற்பாடுகள் இல்லாதபட்சத்தில் இலங்கையின் தேயிலை வர-லாற்றில் ஒரு புதிய பரிமாணத்தைப் பெற்றுக்கொண்ட சிறுதோட்டங்களின் மாதி-ரியை பெருந்தோட்டங்களில் ஏற்படுத்த நீண்டகால வேலைத்திட்டத்தை முன்வைக்க வேண்டும்.
இலங்கையில் நல்ல நிலையில் பராமரிக்கப்படும் தென்மாவட்டங்களில் காணப்படும் சிறு தோட்டங்களும் 1950 கள் வரையில் நல்ல முறையில் பராமரிக்கப்-படாத தேயிலைக் காணிகளாகும். 1972-– 75 காலப்பகுதியில் இந்நிலங்கள் சிறு சிறு துண்டங்களாகப் பிரிக்கப்பட்டன. இவ்வாறு துண்டுபட்ட காணிகள் கென்யா நாட்டின் மாதிரியை பின்பற்றி சிறு தோட்டங்களாக அரசாங்க பராமரிப்பின் கீழ் கொண்டுவரப்-பட்டன.
இன்று இந்த சிறுதோட்டங்களே நாட்டில் மொத்த தேயிலை உற்பத்தியில் சுமார் 70 வீதத்தை உற்பத்தி செய்கின்றன. இந்த சிறு தோட்டங்களின் பரப்பளவு சுமார் 130,000 ஹெக்டேயர்களாக பரந்துள்ளன. இங்குள்ள தேயிலைச்செடிகளில் சுமார் 80 வீதமானவை உயர்ந்த விளைச்சலைத் தரும் தேயிலைச்செடிகளாகும். இங்கு உற்பத்தியாகும் தேயிலைக்கு மத்திய கிழக்கு நாடுகளில் நல்ல விலை கிடைக்கின்றது.
இந்த தேயிலைகள் இங்குள்ள சுமார் 400,000 பேருக்கு பிரித்து வழங்கப்பட்-டுள்ளது. இவர்களில் சுமார் 350,000 பேர்வரையில் தமக்கு சொந்தமாக ½ ஏக்கர் காணிக்கு (சுமார் 80 பேர்ச்சஸ்) குறைவான பரப்பளவில் தேயிலை உற்பத்தி செய்பவர்களாவர்.
இத்தகைய வெற்றிகரமான முயற்சியை மலைநாட்டுப்பகுதிகளில் உள்ள தொழிலாளர்களுக்கும் வழங்குவதற்கு முயற்சிப்பது நல்லது. சிறு தோட்டங்களைப்போல மலையக மக்களும் சிறு தோட்டங்களை நடாத்துவார்களா என்றும் பலரும் கேட்கலாம். உண்மையில் தேயிலைத் தொழிலில் நன்கு பக்குவப்பட்டவர்கள் மலையகத்தொழிலாளர்கள் என்பதை எழுதிகாட்ட வேண்டிய அவசியமில்லை. இவர்கள் இன்று மூன்று அல்லது நான்காவது பரம்பரை தேயிலைத்தொழில் புரிபவர்களாக இருப்பதுடன், இந்த நாட்டிலுள்ள ஏனைய பிரஜைகள் போலவே சமமாக வாழ்கின்ற மக்களாவர்.
கடந்த காலங்கள் போலன்றி சுயதொழில் முயற்சியில் போதுமான ஆர்வத்தை காட்டும் இவர்களிடம் சிறுதோட்ட முயற்சியும் வெற்றிகரமாக செயற்படுத்தலாம்.
நன்றி - வீரகேசரி
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...