Headlines News :
முகப்பு » » மலையக நகரங்களை கல்வி வளநிலையங்களாக மாற்றிக்கொள்ள வேண்டியது சமூகப்பொறுப்பு - திலகர் எம்.பி

மலையக நகரங்களை கல்வி வளநிலையங்களாக மாற்றிக்கொள்ள வேண்டியது சமூகப்பொறுப்பு - திலகர் எம்.பி


உயர்தர மாணவர்களுக்கான பயிற்சி செயலமர்வில் திலகர் எம்.பி

யாழ்ப்பாணம் தொண்டைமானாறு கல்விச்சமூக செயற்பாடுகளுக்கு என நீண்ட வரலாறு உண்டு. யுத்தம் இடம்பெற்ற காலத்திலும் தமது பணிகளை இடைவிடாது தொடர்ந்த பெருமை இதற்கு உண்டு இது போன்று மலையக நகரங்களை மையப்படுத்தி வெளிக்கள நிலையங்களை தோற்றுவிப்பது மலையக கல்விச்சமூகத்தின் பொறுப்பாகிறது. இதற்கு அரசியல்வாதிகள் ஒத்துழைப்பு வழங்க முடியும். அதற்கான எண்ணமும் அனுபவமும் என்னிடம் இருக்கிறது என நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.திலகர் தெரிவித்தார்.

நுவரெலியா மாவட்ட உயர்தர கணித விஞ்ஞான மாணவர்களுக்கான பயிற்சி செயலமர்வு ஒன்று அண்மையில் பத்தனை ஶ்ரீ பாத கல்வியியல் கல்லூரி கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. விரிவுரையாளர் அ.மெத்யூஸ் அவர்களின் ஏற்பாட்டில் யாழ்.தொண்டைமானாறு கல்விச்சமூகமும் 'ஆறுதல்' - இலங்கை அமைப்பினரும் இணைந்து நடாத்திய இந்த பயிற்சி செயலமர்வில் சிறப்பு அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் எம்.திலகர் மேலும் உரையாற்றுகையில்,

இன்று விரிவுரையாளர் மத்யூஸ், 'ஆறுதல்' அமைப்பினருடன்  எடுத்திருக்கும் இந்த முயற்சி வெறுமனே ஆறுதலானதற்கு மட்டுமல்ல ஒரு மாறுதலுக்கானது. மலையகத்தில் மாறுதல் வேண்டுமெனில் கல்விச்சமூகம் வெளிக்களமாகவும் ஆளுமை மிக்க ஆசிரியர்களை வெளிவளமாகவும் கொண்டு இயங்க முன்வருதல் வேண்டும். 1993- 2000 காலப்பகுதியில் அத்தகையதொரு கல்வி வெளிக்களப் பணியில் பங்காற்றிய அனுபவம் எனக்கிருக்கிறது. தற்போது கல்வியமச்சில் பணியாற்றும் சு.முரளதரன் நடாத்திய பிரத்தியேக கல்வி நிலையத்தை, ஶ்ரீ பாத கல்லூரி விரிவுரையாளர்கள் கலாநிதி.பொன். சிங்கரட்னம், சஞ்சீவி ஆகியோரை வெளவளமாக்க் கொண்டு விரிவுபடுத்த முடிந்தது. அப்போது ஹைலன்ஸ் கல்லூரியில் ஆசிரியப்பணியில் இருந்த ஆசிரியர் நாகரட்ணம் எமக்கு பூரண ஒத்துழைப்பு வழங்கியதோடு அவர் பட்டப்பின் படிப்பு டிப்ளமோ பாடநெறிக்காக யாழ்.பல்கலைக்கழகம் சென்றிருந்த சமயம் யுத்த காலத்திலும் தொண்டைமானாறு மாதிரி வினாத்தாள்களை எமக்கு அனுப்பி வைப்பார். நாம் அதனைக்கூட கொண்டு ஹட்டன் நகரை மையப்படுத்திய வெளிவளமாகவும் நிலையமாக தொழில்பட்டோம். பொகவந்தலாவையில் கற்பித்த ஆசிரியர் ஜீவராஜன் அவர்களையும், தலவாக்கலையில் கற்பித்த கணேசன் ஆசிரியர் அவர்களையும் பல பல்கலைக் கழக மாணவர்களையும் இணைத்துக்கொண்டு உயர்தரத்தின் அனைத்து பாடத்திட்டத்துக்கான அவள் நிலையமாக ஹட்டன் நகரை மாற்ற முடிந்தது. இன்றும் ஹட்டன் நகரில் அந்த கலாசாரத்தை அவதானிக்கும் முடியும். இது போன்று மலையக நகரங்கள் ஒவ்வொன்றையும் அருகாமையில் கிடைக்ககூடிய கூடியதான வளவாளர்களைக் கொண்ட வெளிக்கள நிலையமாக மாற்ற மலையக கல்விச்சமூம் முனைதல் வேண்டும். இத்தகைய பணியில் அனுபவம் உள்ள என்னால் ஒரு அரசியல்வாதியாக ஊக்குவிப்பு  வழங்க முடியும்.

உயர்தரத்தில் கணித, விஞ்ஞான பிரிவில் கற்கும் மாணவர்கள் பொறியியலாளர் , வைத்தியர் ஆகிய இலக்குகளை மாத்திரம் கொள்ளாது அவை தவறுகின்ற பட்சத்தில் பட்டதாரி ஆசிரியர்களாகவும் செயற்பட முன்வர வேண்டும். தான் ஒரு பொறியியலாளராக ஆகாத போதும் அர்ப்பணிப்பு மிக்க ஆசிரியத்துவத்தின் ஊடாக  பல பொறியியலாளர்களையும் பட்டதாரிகளையும் நமக்கு தந்துவிட்டு போனவர் ஆசிரியர் (அமரர்) ஜீவராஜன் எனவும் தெரிவித்தார்.

மாணவர்களுக்காக ஊக்கம்மூட்டும் கவிதைகளையும் எனுத்துக்கூறிய பாராளுமன்ற உறுப்பினர் திலகர் அமைச்சர் திகாம்பரம் அவர்களின் சார்பிலும் தனது சார்பிலும் பிரத்தியேகமாக ஒரு தொகை நிதியை பங்கு கொண்ட மாணவர்களின் உணவுத்தேவைக்காக வழங்கி வைத்தார். கல்வி ராஜாங்க அமைச்சர்  வே.ராதாகிருஷ்ணன் பிரதம அதிதியாக கலந்து கொண்ட இவ்விழாவில் சிறப்பு அதிதிகளாக பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அ.அரவிந்த குமார், மத்திய மாகாண சபை உறுப்பினர் ராஜாராம் உட்பட பிரதேச கல்வியாளர்கள் பலரும் கொண்டனர்.

(கேதீஸ்- தலவாக்கலை)
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates