Headlines News :
முகப்பு » » இன்று சர்வதேச தேயிலை தினம்: அதன் பின்புலம் - பெ.முத்துலிங்கம்

இன்று சர்வதேச தேயிலை தினம்: அதன் பின்புலம் - பெ.முத்துலிங்கம்


இன்று தண்ணீருக்கு அடுத்ததாக உலக மக்களால் அருந்தப்படும் பானம் தேநீ-ராகும். தேயிலையை சர்வ நோய் நிவாரணி பானமாக உலக சுகாதார ஸ்தாபனம் அறிவித்தமையினால் இன்று உலகின் அனைத்து நாடுகளும் தேநீரைப் பருகும்படி தம்நாட்டு மக்களை ஊக்குவித்து வருகின்றன. அதனால் தேயிலை உற்பத்தியின் தேவை சனத்தொகை அதிகரிப்பிற்கேற்ப அதிகரித்துச் செல்லவேண்டிய தேவை அடையாளம் காணப்பட்டுள்ளது. எனவே, தேயிலை உற்பத்திற்கான சூழலைக் கொண்டுள்ள நாடுகள் தேயிலை உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றன. அறுபதுகளுக்கு முன்பதாக சீனா, இந்தியா மற்றும் இலங்கை உள்ளிட்ட சில நாடுகளே தேயி-லையை உற்பத்தி செய்து வந்தன. ஆனால் இன்று உலகின் 58 நாடுகள் தேயிலை உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றன.

எழுபதிற்கு முன்பு தேயிலை உற்பத்தி காலனியாதிக்கத்துடன் தொடர்புடைய-தாகக் காணப்பட்டது. குறிப்பாக பிரித்தானிய காலனியின் கீழிருந்த நாடுகளில் தேயிலை உற்பத்தி செய்யப்பட்டதுடன் இத்தேயிலைத் தோட்டங்களில் ஒப்பந்தக் கூலிகள் என்ற பெயரில் தொழிலாளர்கள் தோட்டத்திற்குள்ளேயே வேலைக்கமர்த்தப்-பட்டனர். இவ்வாறு வேலைக்கு அமர்த்தப்பட்டவர்கள் குடிபெயர் தொழிலார்களாக இருந்தனர். இக்குடிபெயர் தொழிலாளர்கள் உள்ளூருக்குள்ளேயே குடிபெயர்ந்தவர்க-ளாகவும் மற்றும் பிறநாட்டிற்கு குடிபெயர்ந்தவர்களாகவும் அமைந்தனர். பிரித்தா-னிய காலனியாதிக்கவாதிகளின் பிரதான தேயிலை உற்பத்தி நாடுகளாக இந்தியாவும் (இன்றைய பங்களாதேஷ்) இலங்கையும் விளங்கின.

இந்தியாவின் அஸாம் பகுதியில் முதன் முதலில் 1838 இல் தேயிலை உற்-பத்தியை ஆரம்பித்த பிரித்தானியர், பின்னர் நாளடைவில் இந்தியாவின் தமிழ்நாடு, கேரளா மற்றும் டார்ஜலிங் முதலிய பிரதேசங்களிலும் அதனைத் தொடர்ந்து 1867 இல் இலங்கையிலும் தேயிலைப் பயிர்ச்செய்கையை முன்னெடுத்தனர். இதே-வேளை, தேயிலைப் பயிர்ச்செய்கைக்கு முன்பதாக கோப்பி பயிர்ச்செய்கையை இந்-தியாவிலும் இலங்கையிலும் பிரித்தானியர் மேற்கொண்டிருந்தனர். கோப்பி பயிர்ச்-செய்கையைப் போலல்லாது தேயிலைக்கு நிரந்தரத் தொழிலாளர் தேவைப்பட்டனர். பிரித்தானியர் தாம் ஆரம்பித்த தோட்டங்களில் ஒப்பந்தத் தொழிலாளர்களாக தொழி-லாளர்களைப் பெறுவதற்கு இந்தியாவில் நிலவிய சாதி- – நிலவுடமை, சமூகக் கட்ட-மைப்பு மிக வாய்ப்பாக இருந்தது. இந்திய சாதி- நிலவுடமைக் கட்டமைப்பில் நில-மற்றவர்களாகவும் சாதிகட்டமைப்பில் தீண்டத்தகாதவர்களாகவும் கணிக்கப்பட்ட தாழ்த்தப்பட்டோரையே பெரும்பாலும் ஒப்பந்தத் தொழிலாளர்களாக (கூலிகளாக) தமது தோட்டங்களில் வேலைக்கமர்த்தினர்.

இந்நிலையில் 2001 ஆம் ஆண்டு முதல் இன்னுமொரு உலகம் சாத்தியம் என்ற சுலோகத்தின் கீழ் உலக நாடுகளின் சிவில் அமைப்புகளும் தொழிற்சங்கங்-களும் ஒன்றிணைந்து உலக சமூக மன்றத்தை பிரேஸில் நாட்டில் சர்வதேச மாநாட்டை நடத்தின. இம்மாநாட்டின் விளைவாக 2003 ஆம் ஆண்டு உலக சமூக மாமன்றத்தின் ஆசிய மாநாடு இந்தியாவின் ஐதராபாத்தில் நடைபெற்றது. இம்மா-நாட்டில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கட்டுரையாளருக்கு கண்டி சமூக அபிவிருத்தி நிறுவகம் சார்பாகக் கிடைத்ததுடன் இம்மாநாட்டில் இந்திய தேயிலைத் தோட்டத் தொழிலாளர் சார்பாக கல்விக்கும் தொடர்பாடலுக்குமான நிறுவனம் சார்பாக சட்டா-டு என்பவருக்கும் கிடைத்தது. இம்மாநாட்டில் இருவரும் தமது உரைகளை ஆற்றிய-துடன் கூடியிருந்த தொழிற்சங்கப் பிரதிநிதிகளும் சிவில் பிரதிநிதிகளும் பிரச்சினை-களின் ஒத்த தன்மைகளை கண்டறிந்ததுடன் ஒன்றிணைந்து குரல் எழுப்புவதன் அவசியத்தையும் உணர்ந்தனர். இதன்போது 2004 ஆம் ஆண்டு மும்பாயில் நடைபெ-றவுள்ள உலக சமூக மாமன்ற மாநாட்டின்போது தேயிலைத்தோட்டத் தொழிலாளர்-களது பிரச்சினை தொடர்பாக தனியான மாநாடு ஒன்று நடத்துவது என்றும், அதற்கு முன்னோடியாக இருநாள் கருத்துரையாடல் ஒன்றினை உலக சமூக மாமன்றம் நடைபெறுவதற்கு முன்பதாக நடத்தி தீர்மானங்களை எடுத்து அதனை உலக சமூக மாமன்றத்தின்போது பிரகடனப்படுத்துவது எனத் தீர்மானிக்கப்பட்டதுடன், அதற்கான நிதியையும் பிரதிநிதிகளையும் தெரிவு செய்யும் பொறுப்பினை சமூக அபிவிருத்தி நிறுவகத்திற்கும், புதுடெல்லி கல்விக்கும் தொடர்பாடலுக்குமான நிலையத்திற்கு ஒப்-படைக்கப்பட்டது.

இத்தீர்மானங்களுடன் இலங்கை வந்த கட்டுரையாளர், மலையக சிவில் அமைப்புகளுடனும் தொழிற்சங்கங்களுடனும் கலந்துரையாடியதுடன் அதன் விளை-வாக பெருந்தோட்ட சமூக மாமன்றம் உருவாக்கப்பட்டது. இப்பெருந்தோட்ட சமூக மாமன்றத்தை உருவாக்குவதில் பிரிடோ, சி.ஈ.சி, செங்ககொடி சங்கம், யுனிவெலோ உள்ளிட்ட பல சிவில் அமைப்புகள் பெரும் பங்கு வகித்தன. பெருந்தோட்ட சமூக மாமன்ற உறுப்பினர்கள் பலர் 2004 ஆம் ஆண்டு மும்பாய் உலக சமூக மாமன்-றத்தில் கலந்துக்கொண்டதுடன் ஏலவே குறிப்பிட்டுள்ளதன்படி சமூக அபிவிருத்தி நிறுவகமும் கல்விக்கும் தொடர்பாடலுக்குமான புதுடெல்லி நிலையமும் இணைந்து மும்பாயிலிருந்து சற்றுத் தொலைவிலுள்ள லொனாவாலாவில் இரண்டுநாள் கருத்-தரங்கை நடத்தியது. இக்கருத்தரங்கில் கென்யா, இந்தியா, பங்களாதேஷ், தான்சா-னியா, இலங்கை முதலிய நாடுகளை ேசர்ந்த தொழிற்சங்க மற்றும் சிவில் அமைப்-புகளைச் சார்ந்த நாடுகளைச் சார்ந்த பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். இலங்கை சார்பாக செங்கொடிச் சங்க பொதுச் செயலாளர் தோழர் ஓ.ஏ. இராமையா, ஐக்கிய கூட்டுறவு மற்றும் வர்த்தக தொழிற் சங்கத்தைச் சேர்ந்த ராஜா உஸ்வெடகெய்யாவ மற்றும் சமூக அபிவிருத்தி நிறுவகத்தைச் சேர்ந்த பெ.முத்துலிங்கம், செல்வி.கே.யோகேஸ்வரி, செல்வி. கே.மானெல், தோட்டத் தொழிலாளி குழந்தை மேரி முதலியோர் கலந்துகொண்டனர்.

இக்கலந்துரையாடலின் போது சர்வதேச நாடுகளிலுள்ள தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் பிரச்சினை ஏனைய தொழிற்றுறைகளைச் சார்ந்த தொழிலாளர்-களின் பிரச்சினைகளிலிருந்து வேறுபட்டது என அடையாளம் காணப்பட்டதுடன், இவர்களது பிரச்சினைகளை வெளிப்படுத்த தனித்துவமான வலைப்பின்னல் மற்றும் தனித்துவமான தினம் ஒன்றின் அவசியம் அடையாளம் காணப்பட்டது. இதேவேளை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு வாழ்வதற்கான சம்பளம், கௌரவமான வேலைச்சூழல், சொந்த வீடு, காணி உரிமை, தொழிற்பாதுகாப்பு, சமூகப் பாதுகாப்பு முதலிய பிரச்சினைகள் அடையாளம் காணப்பட்டதுடன், அவற்றினை இரண்டு நாட்-களின் பின்னர் நடைபெறவுள்ள உலக சமூக மாமன்ற அரங்கத்தில் பிரகடனப்படுத்-துவது எனத் தீர்மானிக்கப்பட்டது. இதேவேளை, தேயிலைத் தோட்டத் தொழிலாளர்க-ளுக்கான சர்வதேச தேயிலைத் தினத்தை அடையாளம் காணும் படியான பொறுப்பு சட்டாட்ருவிடமும், பெ.முத்துலிங்கத்திடமும் ஒப்படைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து மேற்படி தீர்மானங்கள் உலக சமூக மாமன்றத்தில் பிரகடனப்படுத்தப்பட்-டதுடன் இப்பிரகடன மாநாட்டில் பெருந்தோட்ட சமூக மன்றத்தைச் சேர்ந்த எஸ். சந்திரசேகர், திருமதி சந்திரமதி, எஸ்.முருகையா, வண.பிதா. பொன்கலன், எஸ். இரா-ஜேந்திரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இம்மாநாட்டைத் தொடர்ந்து 2005 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பிரேஸிலின் போர்டே அல்க்கிரியில் நடந்த உலக சமூக மாமன்ற நிகழ்வின் போது லொனாவே-லாவில் கலந்துகொண்ட குழு மீண்டும் ஒன்று கூடியதுடன் சர்வதேச தினம் பற்றிய ஆய்வின் பெறுபேறுகளைப்பற்றி கோரியது. இச்சந்தர்ப்பத்தில் சட்டார்ரு வேறு நிறு-வனத்தில் இணைந்து கொண்டதால் சர்வதேச தினத்திற்கான திகதியை அடையாளம் காணும் பொறுப்பு பெ.முத்துலிங்கத்திடமே விடப்பட்டிருந்தது. பிரித்தானியரின் முத-லாவது இந்திய அஸாம் தேயிலைத் தோட்டத்தில் சீன நாட்டைச் சார்ந்த ஒப்பந்தத் தொழிலாளர்கள் 1838 டிசம்பரில் மேற்கொண்ட முதலாவது சம்பளப் போராட்டத்தின் நினைவாக சர்வதேச தேயிலைத் தினமாக டிசம்பர் 15 ஆம் திகதியை பிரகடனப்ப-டுத்தலாம் என இக்கலந்துரையாடலின்போது கூறினார். இதனை பங்குபற்றிய அனைத்து நாடுகளினதும் தொழிற்சங்கப் பிரதிநிதிகளும், சிவில் அமைப்பின் பிரதிநி-திகளும் ஏற்றுக்கொண்டதுடன் டிசம்பர் 15ஆம் திகதியை சர்வதேச தேயிலை தின-மாக செங்கொடிச் சங்கத்தின் பொதுச் செயலாளர் மறைந்த தோழர். ஒ.ஏ. இரா-மையா முன்மொழிந்ததுடன், அதனை கல்கத்தாவின் ஐக்கிய தொழிற்சங்க காங்கி-ரஸின் பொதுச் செயலாளர் தோழர் அசோக் கோஸ் வழிமொழிந்தார். இதன் பின்னர் போர்டே அல்க்கிரியில் நடந்த உலக சமூக மாமன்ற மாநாட்டில் டிசம்பர் 15ஆம் திகதி சர்வதேச தேயிலைத் தினமாக பிரகடனப்படுத்தப்பட்டது.

இப்பிரகடனப்படுத்தலுடன் முதலாவது சர்வதேச, தேயிலைத் தின மாநாடு புதுடெல்லியில் 2005 டிசம்பர் 15 ஆம் திகதி நடத்தப்பட்டதுடன் இரண்டாவது சர்வதேச தேயிலைத்தின மாநாடு 2006 ஆம் ஆண்டு கண்டியில் நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து அந்தந்த நாடுகள் தேயிலைத் தினத்தை நினைவுகூரித் தமது செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றன.

சர்வதேச தேயிலைத் தினத்தை எதிர்வரும் டிசம்பர் 15ஆம் திகதி இலங்கை உட்பட தேயிலை உற்பத்தி செய்யும் சில நாடுகளைச் சார்ந்த சிவில் அமைப்புகள் மற்றும் தொழிற்சங்கங்கள் நினைவு கூரவுள்ளன. ஒன்பதாவது சர்வதேச தேயிலைத் தினத்தை நினைகூரவுள்ள நிலையில் இத் தேயிலைத்தினமான டிசம்பர் 15 ஆம் திகதியை விதந்துரைத்தவர் என்ற ரீதியில் இத்தினம் எவ்வாறு உருவானது என்பது பற்றி இக்கட்டுரையில் கூற விழைந்துள்ளேன்.

நன்றி - வீரகேசரி
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates