ஆங்கிலேயக் காலனித்துவம்இ சிங்கள பிரபுத்துவம் முதல் தற்போதைய தேசிய அரசுவரை மலையகத் தமிழர்களுக்குப் பாரிய பாரபட்சங்களையே அரங்கேற்றப்படுகின்றன. அண்மையில் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டம் கூட இந்த மக்களின் அபிலாஷைகளை உள்ளடக்கவில்லை. 1949 ஆம் ஆண்டு குடியுரிமை பறிக்கப்பட்டமை மலையக மக்களுக்கு இழைக்கப்பட்ட பாரிய அநீதியாகும். பின்னர் 1964 சிறிமாசாஸ்திரி ஒப்பந்தம்இ 1983ஆம் ஆண்டு கலவரம் என மலையகத் தமிழர்களின் ஜனநாயக சுவாசத்தைத் துடைத்தெறிந்தது மாத்திரமின்றிஇ இந்த நாட்டில் அந்நியப்படுத்தப்பட்ட சமூகமாக இவர்களை இன்றுவரை ஒதுக்கியும் வைத்துள்ளனர்.
மலையக மக்கள் எதிர்நோக்கும் அனைத்துப் பிரச்சினைகளும் இலங்கை அரசியலில் தேசியமய மாக்கப்பட வேண்டுமானால் அவர்களுக்கென்ற கிராம அடையாளமானது அடித்தளமாக்கப்பட்டு அதனை ஜனநாயக ரீதியில் அங்கீகரிக்க வேண்டும்.
200 ஆண்டுகளாக அந்நியராலும்இ தனியார் நிறுவனங்களினாலும் ஆளப்பட்ட மலையக மக்கள் இன்று வரைக்கும் எந்தவித மாற்றமுமின்றி முன்னேற்றமுமின்றி அதேநிலையில்தான் வாழ்கின்றனர். தனியார் கம்பனிகளுக்கு பெருந்தோட்டங்கள் குத்தகைக்கு வழங்கப்பட முன்னர் இலங்கையின் பொருளாதாரத்தின் முதுகோடிகளான இவர்கள் தமக்கான எவ்விதமான உரிமைகளையோ உதவிகளையோ பெற்றுக்கொள்வதில் தேசிய ரீதியில் காலங்காலமாக அரசால் புறம்தள்ளப்பட்டுள்ளமையே நிதர்சனத்திலும் நிதர்சனம்.
உள்ளூராட்சி மன்றங்களில் காணப்படும் சிக்கல்கள்
1972 ஆம் ஆண்டுவரை பிரித்தானிய கிழக்கிந்திய வர்த்தகக் கம்பனியின் கீழ் நிர்வகிக்கப்பட்ட பெருந்தோட்டத்து மக்கள் அன்றிலிருந்து ஜனவசமஇபெருந்தோட்டயாக்கம் ஆகிய அரசகட்டமைப்பின் கீழ் கொண்டுவரப்பட்டு 1992ஆம் ஆண்டுவரை அரச நிர்வாகத்தின் கீழ் நிர்வகிக்கப்பட்டனர். அதன் பின்னர் மீண்டும் தனியார் உடமையின் கீழ் நிர்வகிக்கும் அவல நிலைக்கு அரசால் வலுக்கட்டாயமாகத் தள்ளப்பட்டனர்.
இவ்வாறு சொல்லொனாத் துயரங்களையும், ஒடுக்குமுறைகளையும், சமூக அநீதிகளையும், அடக்குமுறைகளையும் அனுபவித்துவரும் மலையகத் தமிழர்களுக்கு உள்ளூராட்சி மன்றங்களினால் தீர்வை எட்ட முடியுமா?
உள்ளூராட்சி மன்றங்களின் சிக்கல்கள் 1987ஆம் ஆண்டு 15ஆம் இலக்க பிரதேச சபைச் சட்டத்தின் பிரிவு 134(4) கீழ் பிரதேச சபையின் கீழ் வாழும் தோட்ட மக்கள் யாவரும் தோட்ட முகாமைத்துவத்துக்கு உட்பட்டுள்ளமையால் இவர்கள் வரி செலுத்தும் பிரஜைகள் அல்ல, அந்த வரியை தோட்ட முகாமையாளர்கள்தான் செலுத்தவேண்டும் என்றும், இதனால் இவர்கள் தங்களது சொந்த நிதியில் உருவாக்கும் கட்டடங்கள். உடமைகளுக்கு இலங்கை அரசின் அங்கீகார அனுமதிப் பத்திரத்தைப் பெறுவதில் விலக்கிவைக்கப்பட்டுள்ளனர். இது சட்டரீதியான அநீதி, புறக்கணிப்புமாகும்.
அதேபோல், 33ஆம் இலக்க பிரதேச சபைச் சட்டமும் மலையக மக்களுக்குச் சேவைகளை முன்னெடுப்பதில் பாரிய சிக்கலை ஏற்படுத்தும் வகையில் அமுலாக்கம் செய்யப்பட்டுள்ளது. இச்சட்டத்தின் கீழ் பெருந்தோட்டத்திலிருந்து தெரிவுசெய்யப்படும் பிரதிநிதிகள் தாம் சார்ந்த பிரதேச செயலகத்திற்குச் சேவைகளை முன்னெடுக்க முடியாத ஒரு துர்ப்பாக்கிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
நுவரெலியா மாவட்டத்தின் சனத்தொகை 8 இலட்சத்தை எட்டியுள்ளது. அம்பாறை மாவட்டத்தின் சனத்தொகை 6 இலட்சத்து 49ஆயிரமாகும். ஆனால்இ அம்பாறையில் 17 பிரதேச சபைகளும் நுவரெலியாவில் 5 பிரதேச சபைகளுமே காணப்படுகின்றன. இவ்விடயம் பெருந்தோட்டத்து மக்களின் அரசியல் ரீதியான அபிலாஷைகளையும் அச்சமூகத்தின் அடிப்படைப் பிரச்சினைகளையும் பிரதேச மட்டத்தில் மேற்கொள்ள முடியாத பாரிய அநீதியாகும்.
1930 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட இந்திய தொழிலாளர் சட்டத்தின் கீழ் வீடுஇகல்விஇசுகாதாரம்இகுடி தண்ணீர் உள்ளிட்ட சேம நலன்கள்இ அபிவிருத்தித் திட்டங்களைத் தீர்மானிக்கும் சக்தியாகத் தோட்ட முகாமைத்துவம் உள்ளமையால் இந்த மக்களுக்கு இன்னமும் இந்திய தொழிலாளர்கள் என்ற நாமம் சூட்டப்பட்டு காணப்படுகின்றமையானது இலங்கை ஜனநாயக விழுமியப் பண்பை ஏனைய சமூகங்கள் போல் மலையகத் தமிழர்களும் அனுபவிக்க முடியாத அவல நிலையே. இதனால்இ இவர்களை இலங்கையிலிருந்து ஓரங்கட்டப்பட்ட சமூகமாக இலங்கை அரசும் ஏனைய சமூகங்களும் பார்க்கின்றன.
இலங்கையின் உள்ளூராட்சி மன்றங்களில் பெருந்தோட்ட மக்களுக்கு இழைக்கப்பட்டுள்ள தனிப்பட்ட சமூக அநீதிகள் குறித்தும் மலையக மக்கள் இன்னும் தனியார் துறையினர் மூலம் நிர்வகிக்கப்படுகின்ற முறைமை பற்றியும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ்இ முன்னாள் அம்பகமுவ பிரதேச சபை உறுப்பினர் எஸ். சுரேஷ் ஆகியோர் கூறியுள்ளதாவது:
பிரதேச சபைகளுக்குத் தோட்டப்பகுதி மக்கள் வாக்களித்து அவர்களின் பிரதிநிதிகள் தெரிவுசெய்யப்பட்டாலும் அந்தப் பிரதேச சபைகளுக்கு உரித்தான நிதிவளங்களைக் கொண்டு தோட்டப்பகுதிக்கு சேவை வழங்குவதில் நடைமுறையிலுள்ள 1987ஆம் ஆண்டு 15ஆம் இலக்க பிரதேச சபைகள் சட்டத்தில் சில சிக்கல்களும்இ தடைகளும் காணப்படுகின்றன. அந்தச் சட்டச் சரத்துகளை நீக்கி தோட்டங்களும் கிராமங்களாக அங்கீகரிக்கப்படவேண்டும். தனியார் உடைமையாகப்பட்ட மலையகத் தோட்டங்கள் இலங்கைத் தேசியத்தினுள் உள்வாங்கப்பட்டு எல்லை நிர்ணயத்தின் வாயிலாகப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண அரசு எத்தனிக்க வேண்டும். நாட்டில் தற்போது சமூகக் கட்டுமானம் கிராமங்கள்இ நகரங்கள்இ தோட்டங்களென மூன்றாக வகுக்கப்பட்டுள்ளன. இது ஆங்கிலேயர் காலந்தொட்டுவரும் மரபு.
இவ்வாறு 10 இலட்சம் மலையக மக்கள் தேசிய அரச பொதுநிர்வாக முறைமைகளில் உள்வாங்கப்படாத வர்களாக வாழ்கின்றனர். இவர்களின் வாக்குரிமை பறிக்கப்பட்டு 2002ஆம் ஆண்டுதான் முழுமையாக மீளவழங்கப்பட்டமை குறித்து அறிந்துள்ளோம்.
இவர்களின் ஜனநாயக சபையாக பிரதேச சபைகளே உள்ளன. தோட்டப்பகுதிக்குச் சேவை வழங்குவதில் நடைறைமுயிலுள்ள 1987ஆம் ஆண்டு 15 ஆம் இலக்க பிரதேச சபைகள் சட்டத்தின் சிக்கல்கள்இ தடைகள் பற்றி மலையக மக்கள்இ நாட்டின் ஆட்சியாளர்கள் கூட இன்னும் அறியாதவர்களாகவே உள்ளனர்.
ஒரு நாட்டின் பிரஜை தனது வாக்கைப் பயன்படுத்தி தெரிவுசெய்யப்பட்ட ஒரு சபையினூடாக உரிய சேவைகளைப் பெற்றுக்கொள்ள பிரதேசசபைச் சட்டங்களே தடையாகவுள்ளன. அதனை மேற்கோள் காட்டி 2006ஆம் ஆண்டு கண்டி உடபலாத்த பிரதேசசபையைக் கலைக்கும் மத்திய மாகாணசபையின் கோரிக்கைக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தமை இலங்கை அரசியல் வரலாற்றில் இழைக்கப்பட்ட பாரிய ஜனநாயக உரிமை மீறலாகவே பதிவாகின்றது.
அடுத்தாண்டு மார்ச் மாதம் உள்ளூராட்சிமன்றத் தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் விரைவில் பெருந்தோட்ட மக்கள் வாழும் உள்ளூராட்சி மன்றங்களின் சட்டங்கள் திருத்தப்பட்டு எமது மக்களும் இலங்கைத் தேசிய நீரோட்டத்தில் உள்வாங்க வழிசமைக்க வேண்டும்.
நுவரெலியா மாவட்டத்தில் உள்ளூராட்சிமன்றங்களில் 80 வீதம் தமிழ் அங்கத்துவங்களே காணப்படுகின்றன. இங்கு இருமொழிக் கொள்கை அமுலாக்கத்தில் உள்ளபோதும் சுற்று நிருபங்கள் உள்ளிட்ட அனைத்துச் செயற்பாடுகளும் சிங்கள மொழியிலேயே மேற்கொள்ளபடுகின்றமை பாரிய சிக்கலாக உள்ளது எனத் தெரிவித்துள்ளனர்.
வைத்தியசாலை
வைத்தியசாலைகளை எடுத்துக்கொண்டால் அதிலும் மலையகத் தோட்டப்புற வைத்தியசாலைகள் இன்னமும் தோட்ட நிர்வாகத்தின் வைத்தியர்களின் கட்டுப்பாட்டிலேயே கையாளப்படுகின்றன. இங்கு அரசின் உத்தியோகபூர்வ வைத்தியர்களின் சேவை வழங்கப்படுவதில்லை. நோய் தொடர்பில் எந்தவி தத்திலும் அறிந்திராத சாதாரண வைத்தியர்களே அதிகமாக உள்ளனர். ஹட்டன் நோர்வூட் கிழக்குப் பிரிவில் அமைந்துள்ள தோட்ட வைத்தியசாலையில் இவ்வாறான ஒரு நிலைதான் இன்னமும் நிலவுகிறது.
இங்கு குறிப்பிட்ட நாட்கள் மாத்திரம் நோயாளர்களுக்கு மருந்துகள் வழங்கப்படுகின்றன. நேரத்துக்கு மருந்துகளும் முறையாக வழங்கப்படுவதில்லை. இதனால் டிக்கோயா கிழங்கன் வைத்தியசாலையை நோக்கியே தோட்ட மக்கள் செல்லவேண்டியுள்ளது.
தோட்டப்புற வைத்தியசாலைகள் அரச நிர்வாகத்தில் உள்வாங்கப்படாமையால் அதில் வினைத்திறனற்ற சேவையே வழங்கப்படுகிறது. என வேஇ இதில் எவ்விதமான அனுகூலங்களும் பெரும்பாலும் மக்களுக்குக் கிடைப்பதுமில்லை மக்களைச் சென்றடைவதுமில்லை. இவ்வாறான ஆதங்கத்துடனேயே மலையக மக்கள் வாழ்ந்துவருகின்றனர். இதனை அரச நிர்வாக அலகாக மாற்றவேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாகும். இங்கு குறிப்பிட வேண்டிய பிரதான விடயம் என்னவெனில்இ மலையகப் பகுதிகளில் உள்ள அனைத்துத் தோட்டங்களிலும் இவ்வாறு அரசால் புறந்தள்ளப்பட்ட தனியார் கம்பனிகளின் வைத்தியசாலைகளே காணப்படுகின்றமை கண்கூடு.
பல்கலைகழகம் இன்மை
நாட்டின் அனைத்துப் பாகங்களிலும் பல்கலைகழகங்களும்இ பல்கலைக்கழகக் கல்லூரி களும் காணப்படுகின்ற நிலையில் மலையகத்தில் மட்டும் இன்னமும் அதற்கான அடித்தளம் அத்திவாரம் இடப்படவில்லை. இதற்கான கோரிக்கைகளை மலையகத்தின் புத்திஜீவிகள் கடந்த காலங்களில் முன்வைத்திருந்தாலும் அவ்விடயம் தட்டிக்க ழிக்கப்பட்ட விடயமாகவே இன்றும் தொடர்கிறது. இன்று இவ்விடயம் தேசியமயமாக்கப்பட்டும் அரசின் கவனம் அதன்பால் திரும்பவில்லை என மலையகப் புத்திஜீவிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
பசுமை பூமித் திட்டத்தின் சிக்கல்கள்
தோட்ட உட்கட்டமைச்சின் கீழ் வழங்கப்படும் பசுமை பூமித்திட்டக் காணியுடனான வீடுகளின் உறுதிப்பத்திரம் ஒரு முழுமையான அரசின் உறுதிப் பத்திரம் இல்லை என்ற விடயம் தெளிவாகச் சுட்டிக்காட்டப்படுகிறது. இது உண்மையும் கூட என மலையக நாடாளுமன்றஇ உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்கள் அடித்துக் கூறுகின்றனர்.
பிராந்தியக் கம்பனிகளிடம் கோரிக்கை விடுத்தே பசுமை வீட்டுத்திட்டத்தில் வீடுகள் வழங்கப்படுகின்றன. இவ்வீடுகளின் உறுதிப்பத்திரங்கள் அரச காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் கீழ் வழங்கப்படுகிறதா? பெருந்தோட்ட அதிகார சபை அல்லது அரச பெருந் தோட்டயாக்கத்தின் கீழ் வழங்கப்படுகின்றதா? இவை தொடர்பில் தெளிவில்லாமல்தான் வழங்கப்படுகிறது. இதற்கு அரச பூரண அங்கீகாரம் வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
21ஆம் நூற்றாண்டின் மனிதகுலத்திற்கெதிராக நிகழும் பாரிய அநீதிகளின் சுவடுகளைத் துடைத்தெறிய வேண்டுமென்ற வெறிகொண்டு புறப்படும் மலையக சமூகத்தின் மேற்கூறப்பட்ட பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண மலையக மக்களும் இலங்கையின் தேசிய நீரோட்டத்தில் உள்வாங்கப்பட்டு அவர்களுக்கு இழைக்கப்பட்டுள்ள சமுக அநீதிகளும்இ சட்டச் சிக்கல்களும்இ அடிப்படை உரிமைகள் போன்றவையும் தேசியரீதியில் தீர்க்கப்பட்டு இலங்கைத் தேசியத்தி லிருந்து புறந்தள்ளப்பட்டுள்ள தாங்களும் இந்த நாட்டின் சமஉரிமைகள் உள்ள பிரஜைகளாக அங்கீகரிக்கப்பட வேண்டும். உள்ளூராட்சிமன்றங்களில் காணப்படும் சட்டங்கள் நாடாளுமன்றத்தில் திருத்தப்பட வேண்டும். அரச நிர்வாகத்திற்கு மலையக மக்களை உள்வாங்கும் தடைகள் உடைத்தெறிய வேண்டும். தேசிய ஜனநாயக உரிமைகளைத் தாங்களும் அனுபவிக்க வேண்டும் என்பதே இந்த மக்களினதும்இ பெருந்தோட்ட ஆட்சி யாளர்களினதும் உள்ளக்குமுறலாகும். இதற்கான அங்கீகாரம் நடைமுறை அரசால் வழங்கப்பமா?
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...