பரீட்சைகளில் தோற்றும்
ஆசிரியர்கள் பெரும் நெருக்கடிகளை எதிர் நோக்கியுள்ளனர்- பொதுச் செயலாளர் ஆர். சங்கரமணிவண்ணன்
எதிர்வரும் நவம்பர்
மாதம் 21 ஆம் திகதி நடைப்பெவுள்ள அதிபர் தரம் 111 க்கான போட்டிப் பரீட்சையும் இலங்கைத் திறந்த பல்கலைகழகத்தின் பட்ட
பின் கல்வி டிப்ளோமா பரீட்சையின் பாடம் ஒன்றும் ஒரே தினத்தில் நடைப்பெறவுள்ளதால் இவ்விரு
பரீட்சையிலும் தோற்றும் ஆசிரியர்கள் பெரும் நெருக்கடிகளை எதிர் நோக்கியுள்ளனர். இவ்வம்சம்
அவ்வாசிரியர்களின் பதவி உயர்வு, சம்பள ஏற்றம் என்பனவற்றை பாதிப்பதாக
அமைந்துள்ளமை குறிப்பிடதக்கதொன்றாகும். இலங்கை பரீட்சை திணைக்களம் அசிரியர்களின் நலன்கருதி ஏற்கனவே பரீட்சைக்காக நிச்சயக்கப்பட்ட தினத்தை பின் போட்டுள்ளனர். இந்நிலையில், சம்மேளனத்தின் பல அங்கத்தவர்களின் வேண்டுகோளுக்கிணங்க, இது தொடர்பில் ஆசிரியர்களுக்கு சாதகமான முடிவொன்றினை
மேற்கொள்ளுமாறு இலங்கை கல்விச் சமூக சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் ஆர். சங்கரமணிவண்ணன்
இலங்கைத் திறந்த பல்கலைகழக துணைவேந்தருக்கு விண்ணப்பித்துள்ளார்.
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...