நுவரெலியா மாவட்ட பிரஜைகள் முன்ணியின் அமைப்பாளர் கிருஸ்ணராஜா, தோட்ட தலைவர்கள், உட்பட 1400 தோட்ட அங்கத்தினர் தமிழ் முற்போக்கு கூட்டனியின் பிரதி தலைவர் வே.இராதாகிருஸ்ணனுடன் இணைந்துள்ளனர்.
நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியில் தமிழ் முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களிக்க போவதாகவும் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பாக நுவரெலியா மாவட்ட பிரiஜைகள் முன்னனியின் அமைப்பாளர் கிருஸ்ணராஜா அவர்கள் கருத்து தெரிவிக்கையில்…
''நான் நுவரெலியா மாவட்டத்தின் பிரஜைகள் முன்னியின் அமைப்பாளராக கடமையாற்றி வந்தேன். தற்போது அவர்கள் (பிரஜைகள் முன்னணி) செய்யும் நடவடிக்கைள் கடுகளவும் ஒத்து போகாத காரணத்தினாலும் மலையக பெண்களை தேர்தல் என்ற போர்வையில் கேவலப்படுத்தும் விதமாக உலக நாடுகளுக்கே எடுத்து காட்டிக் கொண்டு இருக்கின்றார்கள்.''
எனவே இந்த செயல் எனக்கு மாத்திரம் அல்ல பிரஜைகள் முன்னியின அனைத்து அங்கத்தினரும் பிடிக்காத காரணத்தினால் அதனை தூக்கி எறிந்துவிட்டு என்னோடு கிட்டத்தட்ட 1400 அங்கத்தினர் தமிழ் முற்போக்கு கூட்டனியுடன் இனைந்து செயற்பட்டுக் கொண்டு இருக்கின்றார்கள்.
நான் ஊடகவியலாளராகவும் இருந்தேன். பிரஜைகள் முன்னியின் செயளாலர் அவர்கள் சிபார்சு செய்து அதனை பெற்றுக் கொடுத்தார் அதையும் தூக்கி எறிந்து விட்டு தற்போது தமிழ் முற்போக்கு கூட்டணியுடன் இனைந்து விட்டேன் என்னோடு பிரஜைகள் முன்னியின் அங்கத்தினர் 1400 அடங்களாக ஆதரவாளர்கள் உட்பட 1500 க்கு மேற்பட்டோர் இனைந்துள்ளனர்.
மலையக பெண்களான தோட்ட தொழிலாளர்களை பிரஜைகள் முன்னனி தொலைகாட்சியில் இவ்வாறு கேவலப்படுத்துவதை நான் வன்மையாக கண்டிக்கின்றேன். இச்செயற்பாடு எனக்கு மாத்திரம் அல்ல மலையகத்தில் அனைவருக்கும் ஒரு கடுகளவேனும் விருப்பம் இல்லை. எனவே இப்படியாக மலையக பெண்களை கொச்சப்படுத்துவது எந்த விதத்திலும் ஞாயமானதாக இல்லை என்று கூறிக் கொள்வதோடு பெருந் தொகையான நுவரெலியா ஒலிபன்ட் தோட்ட மக்களும் தமிழ் முற்போக்கு கூட்டனியுடன் இனைந்துள்ளோம் என்று கூறினார்.
நன்றி - ஸ்ரீ லங்கா மிரர்
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...