மலையகத்தில் தொழில்வாய்ப்பு மிக வும் குறைவாகவே காணப்படுகின்றது. அதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. குறிப்பாக அரசாங்க வேலைகளுக்கு விண்-ணப்பிக்கின்ற பொழுது மலையக இளைஞர், யுவதிகளுக்கு அதற்கான கல்வித்தராதரம் போதாமல் இருக்கின்றது. தவிர இளைஞர், யுவதிகள் வர்த்தமானி அறிவித்தல்களை முறையாகப் பார்வையிட்டு அதற்கேற்றவாறு விண்ணப்பிப்பதில்லை. இப்படி பல குறைபாடுகள் இருக்கின்றன.
ஆனால், ஆசிரியர் தொழில் மட்டுமே மலை
யகத்தில் பலருக்கு தற்பொழுது கிடைத்து வருகின்றது. பெருந்தோட்ட இளைஞர், யுவதி
களை மையப்படுத்திய பல நியமனங்கள் கடந்த காலங்களிலும் தற்பொழுதும் வழங்கப்படுகின்றன. இது தவிர கல்வியியல் கல்லூரிகளில் பயிற்சிபெற்று வெளியேறு-கின்றவர்களுக்கும் ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்படுகின்றன. இப்படி பல வழிகளி லும் ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இருந்தபோதிலும், இன்னும் அநேகமான பாடசாலைகளில் ஆசிரியர் பற்றாக்குறை தொடர்ந்து நிலவி வருகின்றது. ஒரு சில நகர்ப்புறப் பாடசாலைகளில் ஆசிரியர்கள் தேவைக்கு அதிகமாக இருப்பதா-கவும் கூறப்படுகின்றது. அப்படி இருக்கின்ற பல ஆசிரியர்கள், நேர அட்டவணை கூட இல்லாமல் பாடசாலைகளில் வீணாகப் பொழுதை கழித்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்குக் காரணம் என்னவென்று சற்று ஆராய்ந்து பார்க்க வேண்டும். இதன் மூலம் யாருடைய தனிப்பட்ட மனதையும் புண்படுத்த வேண்டும் என்ற நோக்கம் இல்லை. இதன் மூலமாக பல விடயங்களை வெளிக்கொணர வேண்டும் என்பதே நோக்கமாகும்.
ஆசிரியர் நியமனம் வழங்கப்படுகின்ற பொழுது பெரும் எண்ணிக்கையிலானோர் விண்ணப்பிப்பார்கள். சிலருக்கு மாத்திரமே
அவர்களின் தகுதி அடிப்படையில் நியமனங் கள் வழங்கப்படும். ஆனால் இந்த தொழிலை பெற்றுக் கொண்ட பலரும் தங்களுக்கு வழங்கப்படுகின்ற பாடசாலைக்கு செல்ல முடி யாது என்ற காரணத்தை காட்டி தமது நியமனத்தின் போதே இடமாற்றத்-திற்கு விண்ணப்பிக்கின்றார்கள். ஆனால் இது எந்த வகை யிலும் நியாயமான ஒரு விடயமாகக் கருதமுடியாது.
அரசாங்க வேலைக்காக நியமனம் பெறுகின்றவர்கள். இலங்கையின் எந்தப் பகு-தியிலும் தமது தொழிலைச் செய்யத் தயாராக இருப்பதாகக் கூறியே நியமனத்தை பெறுகின்றனர். ஆனால் நியமனம் பெற்றுக் கொண்டு வந்தவுடன் அனைத்தும் தலைகீழாக மாறிவிடுகின்றது. தூரப் பாடசாலைகளுக்குச் செல்ல முடியாது தங்களுக்கு பல பிரச்சினைகள் இருக்கின்றன என இடமாற்றம் வேண்டி அரசியல் தலைவர்களிடம் செல்வதை ஒரு வழக்கமாக இந்த ஆசிரியர்கள் கொண்டிருக்கின்றனர்.
ஆனால், அரசாங்க உத்தியோகத்தர்களைப் பொறுத்தவரையில் இவர்கள் மாத்தி-ரமே இவ்வாறு நடந்து கொள்கின்றார்கள். காரணம் வேறு எந்த அரசாங்கத் தொழில் செய்கின்றவர்களும் இப்படி நடந்து கொள்வதில்லை. உதாரணமாக தாதியர்களாக நிய-மனம் பெறுகின்றவர்கள் அவர்களுக்கு எங்கே நியமனம் வழங்கப்படுகின்றதோ அங்கே சென்று கடமையைச் செய்கின்றார்கள். ஆனால் அதனை ஏனோ ஆசிரியர்களால் செய்ய முடிவதில்லை.
பின்தங்கிய பகுதிகளுக்கு சென்று இவர்கள் கடமையைச் செய்யாவிட்டால் அர-சாங்கம் அங்கிருக்கின்ற பாடசாலைகளை எவ்வாறு நிர்வகிக்கும்? அல்லது அங்கிருக்-கின்ற மாணவர்களின் நிலை என்ன? அது மட்டுமல்லாமல் ஒரு குறிப்பிட்ட சிலர் மாத்-திரம் என்றுமே பின் தங்கிய பகுதிகளில் வேலை செய்ய வேண்டும் என்ற நிபந்தனை ஏதும் இருக்கின்றதா? ஆசிரியர்கள் சமூக ரீதியாக சிந்தித்து செயற்பட வேண்டும்.
எல்லா ஆசிரியர்களையும் இங்கு குறிப்பிடவில்லை. ஒரு சிலர்தான் இவ்வாறு நடந்து கொள்கின்றனர். இடமாற்றத்திற்காக இவர்கள் கூறும் பொதுவான காரணங்கள் தாயை நான் தான் பார்த்துக் கொள்ள வேண் டும், தந்தைக்கு சுகமில்லை, வேறுயாரும் இல்லை, எனக்குப் பல நோய்கள் இருக்கின்றன. எனவே நீண்ட தூரம் பயணம் செய்ய முடியாது இது போன்ற காரணங்களையே அநேகமானவர்கள் கூறுகின்றார்கள்.
அப்படியானால் அவர்கள் கொடுத்திருக் கின்ற வைத்திய சான்றிதழ் போலியா-னதா? என்ற சேள்வி எழுகின்றது. எத்தனை ஆசிரி யர்கள் இன்று சமூக உணர்வுடன் செயற்படுகின்றார்கள் என்பதும் ஒரு கேள்விக்குறியே? பாடசாலைக்கு காலையில் நேரத்திற்கு வராத ஆசிரியர்கள் இருக்கின்றார்கள். அதிபர்கள் இருக்கின்றார்கள். எல்-லோரும் அல்ல ஒரு சிலர்தான் இப்படி இருக்கின்றனர். இவர்கள் மாணவர்களுக்கு நேரத்தை முகாமைத்துவம் செய்வது எப்படி என்று எவ்வாறு பாடம் நடத்த முடியும்.
பாடசாலை நிறைவடைவதற்கு முன்னால் எத்தனை ஆசிரியர்கள் பாடசா-லையை விட்டு வெளியேறிவிடுகின்றார்கள். ஆனால் கடந்த 25–30 ஆண்டுகள் பின்-நோக்கிப் பார்த்தால் அன்று எந்த வசதியும் இல்லாமல் ஆசிரியர்கள் சிறப்பாக செயற்-பட்டதை நாங்கள் பார்த்திருக்கின்றோம். இன்று ஒரு சில சிக்கல்களும் ஆசிரியர்களுக்கு இருப்பதை நாம் சுட்டிக்காட்ட வேண்டும். இன்று மாணவர்களை ஆசிரியர்கள் தண்டிக்க முடியாது. அப்படித் தண்டித்தால் உடனே பொலிஸ் முறைப்பாடு, மனித உரிமை ஆணைக்குழு என பல பிரச்சினைகளுக்கு அவர்கள் முகம் கொடுக்க வேண்டியுள்ளன. இதன் காரணமாகவோ ஏனோ தானோ என ஒரு சில ஆசிரியர்கள் நடந்து கொள்கின்-றார்கள்.
ஆசிரியர்களுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டாலும் அதனை அவர்கள் ஏற்றுக் கொள்வதில்லை. அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்தி அந்தப் பாடசாலையிலேயே தங்கிவிடுகின்றனர். இந்த நாட்டின் சட்டத் தைக் கடைப்பிடிக்க வேண்டியது அனைவ-ரதும் கடமையாகும். இப்போது கல்வித் திணைக்களத்துக்கும், கல்வி அமைச்சருக் கும் எதிராக போராட்டங்கள் நடத்துவது ஒரு வழமையாகிவிட்டது.
போராட்டங்கள் உண்மையான விடயங்களுக்குத் தேவைதான். ஆனால் சட்-டத்தை அமுல்படுத்தவிடாமல் போராட்டம் நடத்துவது எந்த விதத்தில் நியாயமானது என்பது புரியவில்லை. மேலும் அரசாங்கம் பாரிய அளவில் நிதியை செலவு செய்து ஆசிரியர்களை பயிற்றுவித்துப் பாடசாலைகளுக்கு அனுப்புகின்ற பொழுது, அவர்களுக்கு ஒரு கடமை இருக்கின்றது. அவர்களுடைய கடமையை உணர்ந்து செயற்பட வேண்டி-யது அவர்களுடைய பொறுப்பாகும். சில ஆசிரியர்கள் அர்ப்பணிப்புடனும் சமூக உணர்-வுடனும் செயற்படுகின்றார்கள் என்பதையும் சுட்டிக்காட்ட வேண்டும்.
பல மைல்கள் கால்நடையாக நடந்து சென்று தமது கடமைகளை செய்கின்ற ஆசிரியர்களை நிச்சயமாகப் பாராட்ட வேண் டும். ஒருசில பாடசாலைகளில் நிர்வாகம் மிகவும் மோசமாக இருப்பதையும் குறிப்பிட வேண்டும். பாடசாலையின் சூழல் எந்த-விதமான பராமரிப்பும் இன்றிக் காணப்படுகின்றது. ஒரு சில பாடசாலைகளில் அரசியல் நடைபெறுகின்றது. இது குறிப்பாக மலையக பகுதிகளிலேயே அதிகம் நடைபெறுகின்-றது. கல்வி கற்ற சமூகம் ஏன் அரசியல்வாதிகளுக்கு பின்னால் செல்கின்றார்கள் என்-பதை புரிந்து கொள்ள முடியாமல் இருக்கின்றது.
நீங்கள் திறமையுடையவராக இருந்தால் நீங்கள் யாருடைய பின்னாலும் செல்ல வேண்டிய அவசியமில்லை.
இங்கு ஒரு விடயத்தை குறிப்பிட வேண்டும். அதிபர் ஒருவர் ஒரு கூட்டத்தில் பேசும் போது, நீங்கள் உங்களுடைய தொழிலுக்கு சலாம் போடாவிட்டால் மற்ற அனைவருக்கும் சலாம் போட வேண்டிய சூழ்நிலை ஏற்படும். அது ஒரு தற்காலிக ஊழியராக இருந்தாலும் அவருக்கும் நீங்கள் சலாம் போடவேண்டி வரும். எனவே என்-றுமே உங்கள் தொழிலுக்கு சலாம் போட பழகிக் கொள்ளுங்கள் என்றார். இது முற்-றிலும் உண்மை. இன்று சில பாடசாலைகளில் நிலைமை இப்படித்தான் இருக்கின்றது.
நன்றி - வீரகேசரி
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...