பெருந்தோட்ட இளைஞர் மத்தியில் விஸ்வரூபமெடுத்துள்ள முச்சக்கரவண்டி மோகம் பல்வேறு சிந்தனைகளை தூண்டுவதாய் அமைந்துள்ளது. தேயிலை, இறப்பர் தோட்டங்களில் பணி புரியும் தொழிலாளர்களின் ஒரேயொரு கையிருப்பும் ஒரே சொத்தும் அவர்களது ஓய்வு பெறும் காலத்தில் கிடைக்கும் சேமலாப நிதியேயாகும். இந்த தொகையை நம்பி இவர்கள் காணும் கனவுகளோ அதிகம். அக்கனவுகளை-யெல்லாம் களைந்தெறியும் புதிய கலாசாரமாக இவ் ஆட்டோ கலாசாரம் உருவாகியுள்-ளது.
எழுபது, எழுபத்தைந்து வயதினை எய்தியவர்களை தோட்ட குடிமனைகளில் காண்பதே அரிதாகும். அப்படியும் உயிரோடியிருப்பவர்கள் உடல் குன்றியும் நடைப்பி-ணங்களாகவும் வாடி வதங்கியும் காணப்படுகின்றனர். மிகக்குறைவான எண்ணிக்கை-யான பெற்றோரே பிள்ளைகளின் முறையான பராமரிப்புக்குள்ளாகியுள்ளனர். நலிந்து போயிருப்பவர்களில் பெரும்பான்மையானவர்களின் ஏக்கம் தமது வாழ்நாள் ஊதி-யத்தின் சேமிப்பாகிய சேமலாப நிதியை பிள்ளைகள் ஏப்பம் விட்டு விட்டார்கள் என்-பதே.
பிள்ளைகளின் திருமணம் சொந்தக்காணி வீடு அல்லது வங்கியில் நிரந்தர வைப்பில் பணத்தை மூலதனம் செய்து வட்டியில் வாழ்க்கை நடத்துவதென பல்வேறு எண்ணங்கள் ஐம்பது வருடங்களின் பின்னர் சரமாரியாக வந்து போவது வழக்கம்.
ஆனால், அப்பாவின் அல்லது அம்மாவின் சேமலாப நிதி கிடைத்ததும் தானும் ஓர் முச்சக்கரவண்டிக்கு சொந்தமாகி விட வேண்டுமென்பது பிள்ளைகளின் கனவாக இன்று வியாபித்துள்ளது. இக்கனவை நிறைவேற்றிக்கொள்வதற்காக இவர்கள் அடம்பி-டிப்பதும் பலவந்தப்படுத்துவதும் சர்வ சாதாரணமாக நிகழ்கின்றது.
தோட்டத்தில் தாம் வசிக்கும் பிரிவில் தாம் குடியிருக்கும் லயத்தில் யாராவது ஒருவரிடம் முச்சக்கரவண்டியொன்று இருக்குமாயின் தானும் ஒரு வண்டிக்கு சொந்-தக்காரனாகி விட வேண்டுமென்ற எண்ணம் இவர்களுக்கு தோன்றி விடுகிறது.
பிள்ளை மலையேறி பாடுபடுவதை விட மழை, வெயில் என துன்புறுவதை விட அழுக்கு படாமல் உழைக்கட்டுமே என எண்ணி தமது வாழ்நாள் சொத்தை இவர்-களுக்கு தாரை வார்த்து விடுகின்றனர் பெற்றோர். இதன் விளைவாக பெருந்தோட்ட பகுதிகளை சேர்ந்த கடை வீதிகளில் அங்காடிகளை விட அதிகமாக முச்சக்கர வண்டி-களை காண முடிகின்றது. நகரில் தமிழ் இளைஞர்கள் முச்சக்கரவண்டிகளை தரிப்பி-டங்களில் வைத்து தொழில் புரிவதற்கு எதிராக இனவாத போக்குடன் நடந்து கொண்ட-வர்களையும் நடந்து கொள்பவர்களையும் கூட இப்பெருந்தோட்ட முச்சக்கரவண்டி இளைஞர்கள் கையூட்டி வசப்படுத்தி கொண்டு நூற்றுக்கணக்கில் நகர்ப்புறங்களில் அணிவகுத்து சவாரிக்கு காத்திருக்கின்றனர்.
ஒரு சிலர் தோட்டங்களில் தமது நாளாந்த தொழிலை பூர்த்தி செய்ததன் பின்னர் மேலதிக வருமானத்திற்காக தமது வசிப்பிடத்திலிருந்து கடை வீதிக்கு செல்பவர்களுக்-காக சவாரி வந்து போவதும் சிலர் மாலைவேளைகளில் முச்சக்கரவண்டி தரிப்பிடங்-களில் நின்று தொழில்புரிந்து மேலதிக வருவாயை ஈட்டிக்கொள்வதும் உண்டு. இவர்-களும் இவர்களது குடும்பங்களும் ஓரளவு வசதியுடனும் பிள்ளைகள் கல்வி வளர்ச்சி கண்டும் விளங்குவதையும் நாம் காணக்கூடியதாக உள்ளது.
ஒரு சிலர் காலை முதல் மாலை வரை ஹோட்டல் சாப்பாடு, புகைத்தல் என்று உழைக்கும் பணத்தை வீண் விரயம் செய்கின் றனர்.
இன்னும் சிலர் தமது சகோதரிகளை மத்திய கிழக்கு நாடுகளுக்கு அனுப்பி அவர்கள் அனுப்பி வைக்கும் பணத்தில் பினேன்ஸ் கட்டிக்கொண்டு அப்பாவி பெண் பிள்ளைகளின் வாழ்க்கையையும் சீரழிப்பதையும் தோட்டங்களில் பரவலாக காணலாம். இந்த முச்சக்கரவண்டி தொழிலில் இறங்கி எத்தனை இளைஞர்கள் காணி வாங்கி-னார்கள்? எத்தனை பேர் வீடு கட்டினார்கள்? எத்தனை பேர் பிள்ளைகளை உயர்கல்விக்கு உட்படுத்தியிருக்கிறார்கள்? எத்தனை பேர் நகரில் கடை வைத்திருக்கிறார்கள்? என்று தேடிப்பார்ப்போமாகில் ஏமாற்றமே மிஞ்சும்.
நகரத்து வீதியில் நல்ல பொழுதை கழிக்கும் இவர்களுள் சிலர் தமது பாரம்பரிய பழக்க வழக்கங்களிலிருந்து விடுபட்டு நவீன யுகத்திற்குள் பிரவேசித்து குற்றச்செயல்-களில் ஈடுபடுபவர்களுக்கு உடந்தையாக சவாரி போவதெல்லாம் பொலிஸாரால் கைது செய்யப்படும்போது அல்லது விபத்துக்கள் நிகழ்ந்த போது தான் வெளிச்சத்திற்கு வரு-கின்றது.
அழுக்கு படாத நாகரிக உடையோடு தோன்ற வேண்டுமென்ற எண்ணத்தினால் போதிய வருவாய் இன்றி நாட்களை கழிக்கும் இவர்கள் நாளடைவில் உடலை வருத்தி உழைக்கும் தன்மையை இழந்து சோம்பேறிகளாக மாற்றம் காண்கின்றனர்.
இந்நாட்டு அரசியலாளர்களாக இருக்கட்டும், ஏனைய சமூகங்களாக இருக்கட்டும் இவர்களிடமிருந்து பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கென தனித்துவமான மதிப்பும் மரி-யாதையும் ஒரு விடயத்தில் இருந்ததுண்டு. அது இந்த நாட்டின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக விளங்கும் சமூகம் என்பதாகும். தேயிலை, இறப்பர் மூலம் வெளி-நாட்டு பொருளாதாரத்தை பேணிய சமூகமாக அனைவருமே ஏற்றுக்கொண்டனர். அதன் காரணமாகவே குடியுரிமை முதல் கல்வி சுகாதார குடியிருப்பு தேவைகளை பற்றிய குரல்கள் எழும்போதெல்லாம் அனைவரின் கவனத்தையும் ஈர்க்க முடிகின்றது.
க.பொ.த (சா/த)கல்வி தேர்ச்சி கூட அற்றவர்கள் அரச தனியார் உத்தியோகங்-களை பெறுவது இயலாத விடயம். எனினும், பெருந்தோட்டங்களில் வெளிக்கள தொழிற்சாலை தொழில்களில் தாராளமாக ஈடுபட வாய்ப்புண்டு. நாளாந்த வேதனம் மேலதிக கொடுப்பனவு சேமலாப நிதி ஓய்வூதியம் என சலுகைகளும் உண்டு. காலை முதல் இரவு வரை வண்டிக்குள் அமர்ந்து கொட்டாவி விடுபவர்கள் இப்பெருந்தோட்ட தொழிலை பாதுகாக்கலாம்.
காணி வேண்டும், வீடு வேண்டுமென்று கோரிக்கை விடும்போது தோட்டத்தில் தொழில் செய்யாமல் கடைத்தெருவில் ஆட்டோ தரிப்பிடத்தில் காத்திருப்பவர்கள் முன்னுரிமை கோரும்போது நிராகரிக்கப்பட்டால் அது எவரது தவறுமாகாது.
இதேவேளை முச்சக்கரவண்டி வருமானத்தின்மூலம் காணி, வீடு மற்றும் சொத்-துக்கள் வாங்கி நல்ல நிலைமையில் இருக்கும் பலரைக் காண்கிறோம். அவர்கள் உழைப்பையே உயர்வாக மதித்து, வீண் செலவைத் தவிர்த்து, வருமானத்தை சேமித்-துள்ளனர் அதனால் அவர்கள் தமது குடும்பத்தையும் நல்ல நிலைமையில் வைத்திருக்-கின்றனர் என்பதை மறந்துவிடக்கூடாது.
பெருந்தோட்ட தொழில் என்பது இழிவான அல்லது மரியாதைக்குறைவானதா-கவே கருதப்படக்கூடிய தொழிலன்று. இன்று வெளிக்களமாக இருந்தாலென்ன தொழிற்-சாலைக்குள்ளாக இருந்தாலென்ன உத்தியோகத்தர்களிடமிருந்தும் துரைமார்களிடமி-ருந்தும் மரியாதை குறைவான வார்த்தைகள் வெளி வருவதில்லை. வர முடியாது. நன்றாக உடுத்தி கொண்டும் காலணிகளை அணிந்து கொண்டும் வேலைக்கு செல்-வதை தடுக்க முடியாது.
எனவே நகர சந்திகளில் காய்ந்து கொண்டிராமல் குடியிருக்கும் தோட்டத்து தொழிலை மேற்கொண்டு மனைவி, பிள்ளைகளுடன் நலமே இல்லற வாழ்வு வாழ வழி தேடுவதே சாலச் சிறந்தது.
நன்றி - வீரகேசரி
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...