Headlines News :
முகப்பு » » “தேயிலையின் செழுமையும் தொழிலாளரின் ஏழ்மையும்” - ஏ. எஸ். சந்திபோஸ் அவர்களின் உரை.

“தேயிலையின் செழுமையும் தொழிலாளரின் ஏழ்மையும்” - ஏ. எஸ். சந்திபோஸ் அவர்களின் உரை.

“தேயிலையின் செழுமையும் தொழிலாளரின் ஏழ்மையும்”
மலையகத்தின் இருந்து தோன்றிய முதல் பல்கலைக்கழக விரிவுரையாளரும், ஓய்வுப் பெற்ற மூத்த பேராசிரியருமான மு. சின்னத்தம்பி அவர்கள் பல காலம் ஆய்வு செய்து எழுதிய “தேயிலையின் செழுமையும் தொழிலாளரின் ஏழ்மையும்” என்ற நூலின் அறிமுகவிழா ‘இலங்கை கோபியோ’வின் அனுசரையுடன் கடந்த 17.05.2015 மாலை கொழும்புத் தமிழ்ச் சங்க சங்கரப்பிள்ளை மண்டபத்தில் தொழிலதிபர் ஈ. முத்துகிருஸணன் அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. 
பல்கலைக் கழக விரிவுயாளருக்கும், மாணவர்களுக்கும்; வழிகாட்டியாகவும் முன்னோடியாகவும் திகழ்ந்த பேராசிரியர் மு. சின்னத்தம்பி மலையக சமூகத்தின் பொருளாதார நிலைமையை கட்டுரை நூல் வடிவில் பல்கலைக்கத்தில் மட்டுமன்றி உள்நாட்டு மற்றும் சர்வதேச ஸ்தாபனங்களுடன் இணைந்து வெளியிட்டுள்ளார். ஓய்வுப் பெற்ற பின் பல ஆய்வுகளை மேற் கொண்டு வருகிறார். அத்தகைய ஆய்வுகளில் ஒன்றான ““தேயிலையின் செழுமையும் தொழிலாளரின் ஏழ்மையும்”  என்ற நூலின் அறிமுக உரையாற்றிய திறந்த பல்கலைக்கழக சமூக விஞ்ஞான பீட சிரேஸ்ட விரியாளர் கலாநிதி ஏ. எஸ். சந்திபோஸ் அவர்களின் உரை.
தொகுப்பு வெள்ளவத்தை கரு. வசீகரன்.

பேராசிரியர் மு. சின்னத்தம்பியும், முன்னால் இராஜாங்க அமைச்சர். பி.பி. தேவராஜ் அவர்களும் இரவு பகலாக தயார் செய்தனர். இதனை அப்போதைய தலைவர் சௌமியமூர்த்தி தொண்டமான் நன்கு செவிமடுத்து சிறந்த முறையில் பேரம் பேசி தொழிலாளர்களின் வேதனங்களை நிர்ணயிப்பதில் வரலாற்று சாதனை புரிந்தார். அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் கற்றறிந்தவர்களை மக்களின் நலனுக்கு எவ்வாறு பயன்படுத்திக் கொண்டார் என்பதை எவரும் மறுப்பதற்கில்லை. என்று ஓய்வு பெற்ற பேராசிரியர் மு.சின்னதம்பி எழுதிய “தேயிலையின் செழுமையும், தொழிலாளரின்; ஏழ்மையும்” என்ற நூலின் வெளியீட்டு விழா கடந்த 17.05.2015 அன்று கொழும்பு தமிழ்ச் சங்கம் சங்கரப்பிள்ளை மண்டபத்தில் இலங்கை கோபியோவின் அனுசரணையுடன் தொழிலதிபர் ஈ. முத்துகிருஸ்ணன் தலைமையில் நடைபெற்ற போது நூலை அறிமுகம் செய்து வைத்த இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் சிரேஸ்ட விரிவுரையாளர் கலாநிதி ஏ.எஸ். சந்திரபோஸ்  உரையாற்றும் போது குறிப்பிட்டார்.

இந்நூல் வெளியீட்டு விழாவில் அங்குரார்ப்பண உரையை இலங்கை கோபியோவின் தலைவர்  உதேஸ் கௌசிக் நிகழ்த்த, பேராசிரியரியரின் மாணவர்களான பேராதனை பலக்கழக சிரேஸ்ட விரிவுரையாளர் திருமதி சோபனாதேவி இராஜேந்திரன், பேராதனை பலக்கழக சிரேஸ்ட விரிவுரையாளர் திரு எஸ். விஜேசந்திரன் ஆகியோர் 'குருவந்தனம்” நிகழ்த்த, சிரேஸ்ட ஒலி,ஒளிப்பரப்பாளர் நாகபு+}ணி கருப்பையா நிகழ்வை தொகுத்து வழங்கினார். நுன்றியுரையை எஸ் வௌ;ளாந்துரை வழங்கிய இந்நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய கலாநிதி ஏ.எஸ். சந்திரபோஸ் அவர்கள்.

இந்த நூல் இலங்கை தேயிலை பொருளாதாரம் பற்றி முழுமையாக அவதானிக்கப்பட்ட முயற்சியின் விளைவாகும் என்றால் மிகையாகாது. ஒன்பது அத்தியாயங்களையும் ஒரு பின்னிணைப்பையும் கொண்டதாக 224 பக்கங்களில் மிக நேர்த்தியான முறையில்”  வெளியீட்டு விழாவை இலங்கை “கோபியோ கோலாகலமாக ஏற்பாடுகள் செய்திருந்தனர். எழுத்தாளர்கள், ஆய்வாளர்கள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், தொழிற்சங்க,அரசியல் பிரமுகர்கள் பத்திரிகையாளர்கள் வர்த்தக பிரமுகர்கள் என்று சங்கரப்பிள்ளை மண்டபத்தில் சபை நிறைந்த விழாவாக காணப்பட்டது.

இந் நூலின் முதல் மூன்று அத்தியாயங்களும் பெருமளவில் பெருந்தோட்டங்களின் வளர்ச்சி , இலங்கையின் பொருளாதாரத்தில் வழங்கிய பங்களிப்பு மற்றும் இத்துறை சார்ந்து ஏற்பட்ட மாற்றங்கள் பற்றி படிப்பினை தரும்; விடயங்கள் தொகுக்கப்பட்டுள்ளன. இந்த அத்தியாயங்களை வடிவமைப்பதற்கு பேராசிரியர்; மு. சின்னதம்பி அவர்கள் பிரசித்தி பெற்ற  சமூகவியலாளர்களான  G.L Becford,(1972) , V.Daniel, (1982), Eric Meyer (1990), Asoka Bandarage (1982) மற்றும்  பு.டு Pநசைளை  (1984)  எழுதிய பிரபல்யம் வாய்ந்த நூல்களை துணையாக கொண்டுள்ளார். பொதுவாக இவர்கள் ஆங்கிலத்தில் சொல்லப்பட்ட பெருந்தோட்ட கட்டமைப்பு அதன் மாற்றம் தொடர்பாக தமிழ் வாசகர்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் மு.சின்னதம்பி வடிவமைத்துள்ளார்.;. இந் நூலாசிரியர் இதற்கான கடுமையான உழைப்பை நல்கியுள்ளார் என்பதை வாசகர்கள் நன்கு புரிந்து கொள்வர். இந் நூலில் உள்ள முதல் நான்கு அத்தியாயங்களும் பெருந்தோட்டத்துறை சார்ந்தது. தமிழ் மொழியில் ஆய்வுகளை மேற்கொள்ளும் மாணவர்கள் மிகவும் பயனுள்ள தகவல்களை பெற்றுக் கொள்ளலாம் என்பதனை உறுதியாக கூற முடியும்.

பேராசிரியர் சின்னத்தம்பி பெருந்தோட்ட துறையில் எந்தளவில் புலமை பெற்று காணப்படுகின்றார் என்பதை அடுத்துவரும் இரண்டு அத்தியாயங்களை வாசிக்கும் போது தெளிவாக புலப்படுகின்றது. ஒரு பொருளியல் பேராசான் என்ற நிலையில் உற்பத்திக் காரணிகள் எந்தளவில் தேயிலை பெருந்தோட்டச் செய்கையில் செயல்படுகின்றன. இதில் தொழிலாலர்களின் திறன் எந்தளவு பங்களிப்பு செய்துள்ளது என்பதை பல்வேறு உதாரணங்கள் மூலம் விளக்கியுள்ளார். இத்துறை குறித்து ஆய்வு செய்யும் பொருளியல் மாணவர்களுக்கு இவரது விளக்கங்கள் மிகவும் பயன்பாடு மிக்கதாகும். .இவரது வியாக்கியானத்தின்படி தொழில் திறனற்ற தொழிலாளர்களாக அடையாளப்படுத்தப்பட்ட பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு குறைந்த மட்டத்திலேயே சம்பளம் நிர்ணயிக்கப்பட்டதாகவம் மேலதிகமாக சம்பளம் சலுகைகள் வழங்குவதனால் இவர்களிடம் இருந்து மேலதிக உற்பத்தியை எதிர்பார்க்க முடியாது என்ற வாதம் ஆரம்பகால ஐரோப்பிய பெருந்தோட்ட கம்பனி;களிடம் காணப்பட்டது என்று குறிப்பிடுகின்றார். இருப்பினும் பிற்பட்ட காலத்தில் எந்தளவில் தொழிலார்களது நலன் கவனிக்கப்படகின்றதோ அந்தளவில் துறைசார்ந்த உற்பத்தி அதிகரித்துள்ளது என்பதை பிற்காலத்தில் பெருந்தோட்ட துறை சார்ந்து மேற்கொள்ளப்பட்ட கணிப்பீடுகளில் குறிப்பிடப்பட்டிருக்கின்றன என்பதையும் பேராசிரியர் பல இடங்களில் சுட்டிக்காட்டியுள்ளார்

சின்னதம்பி அவர்கள் 1984 ஆம் ஆண்டு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் முன்வைத்த ஆண், பெண் இருபாலருக்கும் சம சம்பளம் மற்றும் அடிப்படை சம்பளத்தில் ஒரு உயர்வு மற்றும் வாழ்க்கைச் செலவு புள்ளி மாற்றங்களுக்கு ஏற்ப தொழிலாளர்களது நாளாந்த சம்பளம் அதிகரித்து வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைக்கு பின்னணி ஆய்வு வேலைகளை மேற்கொண்டு அதனை வெற்றிகரமாக செயற்படுத்த உதவியவர்களில் முக்கியமானவராகும்.

இக் காலத்தில் சம்பளச் சபையுடன் மேற்கொண்ட பேச்சுவார்த்தைக்கான ஆவணங்களை  பேராசிரியர் மு. சின்னத்தம்பியும், முன்னால் இராஜாங்க அமைச்சர். P.P தேவராஜ் அவர்களும் இரவு பகலாக தயார் செய்தனர். இதனை அப்போதைய தலைவர் சௌமியமூர்த்தி தொண்டமான் நன்கு செவிமடுத்து சிறந்த முறையில் பேரம் பேசி தொழிலாளர்களின் வேதனங்களை நிர்ணயிப்பதில் வரலாற்று சாதனை புரிந்தார். அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் கற்றறிந்தவர்களை மக்களின் நலனுக்கு எவ்வாறு பயன்படுத்திக் கொண்டார் என்பதை எவரும் மறுப்பதற்கில்லை.

இந்த அனுபவங்களை கொண்டு வேதனம் பற்றிய அத்தியாயங்களையும் ஓரளவிற்கு பெருந்தோட்ட தொழிலாளர்களின் வேதனம் சம்பந்தமான முழுமையான பார்வையை முன்வைக்க வேண்டும் என்ற இந் நூல் ஆசிரியரான மு.சின்னதம்பிக்கு இருந்திருக்கின்றது.

உண்மையில் பெருந்தோட்ட தொழிலாளர்ககளின் வேதனம் பற்றி எழுதியவர்களில் முன்னால் மத்திய வங்கியின் ஆய்வாளரான திருமதி நுடயinநெ புரயெறயசனநயெ    மற்றும் தொழில் ஆணையாளராக இருந்த திரு யேறயசயவநெ போன்றவர்களின் வரிசையில் அவ்விடயம் பற்றிய தமிழ் மொழி மூலமான விவரமான ஆவணத்தை சின்னதம்பி படைத்துள்ளார் என்பது மிகையாகாது.

இந் நூலில் மிக ஆழ்ந்த சிந்தனைகளுக்கு விட்டுச் சென்ற அத்தியாயமாக 7 ஆம், 8 ஆம், 9 ஆம் அத்தியாயங்களை குறிப்பிடலாம். 7 ஆம் அத்தியாயத்தில் மிகை ஆக்கம் பற்றி சரியான தகவல்களை தந்துள்ள  நூலாசிரியர்; தேயிலை விற்பனையின்போது மேற்கொள்ளப்பட்ட வரிகள் பற்றி விரிவாக விளக்கியுள்ளார். சட்ட ரீதியாக தொழிலாளர்களுக்கு இருக்கும் உரிமைகள் , அவை எவ்வாறு மிறப்படுகின்றன சட்டங்களால் கட்டுண்ட தொழிலாளர் வர்த்தகத்தின் சமூக மேம்பாடு பற்றிய ஆசிரியர்களின் கருத்துக்கள் என்பன ஆய்வு மேற்கொள்ளும் மாணவர்களுக்கு பெரு விருந்தாக அமையும். ஊநுளுளு வரி, ஏலவிற்பனை, ஏற்றுமதி சந்தைபடுத்தல் போன்ற உப தலைப்புகள் பயனுள்ள தகவல்களைக் கொண்டுள்ளன. இதனை வாசிப்பவர்களுக்கு ஏன் “தேயிலையை” ஏல விற்பனையில் சந்தைபடுத்தினர், சாதாரணமாக ஏனைய பொருட்கள் போல சந்தையில் ஏன் விற்பனை செய்யப்பட வில்லை போன்ற வினாக்களுக்கு  பதில்களை பெற்றுக் கொள்ள முடிகின்றது.

இது போல பெருந்தோட்ட குடியிருப்பு அவர்களில் சமூக பொருளாதார நிலை என்பன நூல் ஆசிரியரின் சொந்த அனுபவங்கள் , அவரது ஈடுபாடு என்பனவற்றை  கோடிட்டு காட்டும் அத்தியாயங்களாக காணப்படுகின்றன. தோட்டங்களில் உள்ள வறுமையில் இருந்து விடுபெற்று கொள்வதற்காக கணிசமான தொழிலாளர்கள் வேறு இடங்களுக்கு அதாவது நகரங்கள் கிராமங்கள் என்று இடம் பெயர்ந்து செல்கின்றனர். அவ்வாறே இடம் பெயர்ந்து செல்பவர்கள் தாம் செல்லும் இடத்தில் வளர்ந்துள்ள சமூகத்தில் தம்மை இணைத்துக் கொள்ளக் கூடியதாக இல்லை மாறாக அவர்கள் அங்கு வளர்ந்துள்ள சமூகத்தினால் உருவாக்கப்பட்டு வறுமையில் இருக்கும் சமூகத்தில் மேலும் ஒரு உறுப்பினர்களாக இணைத்துக் கொள்கின்றனர்.    

இலங்கையினர் தேயிலையை பற்றி முழுமையான பார்வையை வைக்க வேண்டும் என்பதற்காக பேராசிரியர் சிறு தோட்டங்களில் தேயிலைச் செய்கையையும் பின்னிணைப்பாக சேர்த்துள்ளார். இந்த வகையில் இந்நூல் மலையகம் தொடர்பாக இலங்கையின் கல்வி, சமூக பொருளாதாரம் தொடர்பாக 20 க்கு மேற்பட்ட நூல்களை எழுதிய ஓய்வு நிலை பேராசிரியர்  சோ. சந்திரசேகரம் இந் நூலானது தமிழ் மொழியில் வெற்றி வந்துள்ள முதலாவது விரிவான ஓர் ஆய்வு நூலாகும் என்று வர்ணித்து மகுடம்; சூட்டியுள்ளார்.
இந் நூலை வாசிக்கும் போது ஒரு விடயம் தெளிவாக புலப்படுகிறது அதாவது வறுமை நிலையில் வாழ்கின்ற சமூகம் தமது  வறுமையில் இருந்து விடுபெற்று கொள்வதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சிகள் தோல்வியடையும் போது வேறு ஒரு சூழலில் உள்ள வறுமை சக்கரத்தில் சிக்கிக் கொள்பவர்களாக காணப்படுகின்றனர். உதாரணமாக இலங்கையில் வடக்கு கிழக்கில் உள்ள வளர்ந்துள்ள தமிழ் சமூகத்துடன் ஒன்றினைந்திருப்போம் என்ற மலையக மக்கள் இடம் பெயர்ந்தாளும் அவ்வாறு இடம் பெயர்ந்தவர்களும் அங்குள்ள வறுமையான துறையிலேயே இருப்பதற்கு அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் இடம் பெயர்ந்தாலும் பெரும்பாலான தொழிலாளர்கள் தொடர்ந்தும் வறுமையானவர்களாகவே வாழ்கின்ற நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.

Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates