ஹட்டன் கல்வி வலயத்தில் குறிப்பிட்ட எண்ணிக்கையான ஆசிரியர்களுக்கு மே மாத சம்பளம் நிறுத்தப்பட்டுள்ளது. சிலருக்கு தமது நியாயமற்ற இடமாற்றத்தை அங்கீகரிக்க மறுத்ததால் சம்பளம் நிறுத்தப்பட்டுள்ளதாக குறித்த அதிகாரியிடமிருந்து கடிதம் வந்துள்ளது. பலருக்கு எவ்வித அறிவித்தலும் இன்றியே சம்பளம் நிறுத்தப்பட்டுள்ளது. இவ்வம்சம் ஆசிரியர்களின் அடிப்படை உரிமை மீறுவதாகவும் அவர்களை சித்திரவதைக் குள்ளாக்குவதாகவும் அமைந்துள்ளது. இது தொடர்பில் சில ஆசிரியர்கள் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர். இதனை ஆட்சேபித்து இலங்கை கல்விச் சமூக சம்மேளனத்தினர்; மத்திய மாகாண செயலாளருக்கு தந்தி மூலம் தமது முறைப்பாட்டை அனுப்பியுள்ளனர்.
மேலும் இந்நிலை தொடருமாயின் இதுகுறித்து சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் இதற்கு எதிராக சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் ஆர். சங்கரமணிவண்ணன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பான இறுதி முடிவெடுப்பதற்காக அவசர செயற்குழுக் கூட்டம் எதிர்வரும் சனிக்கிழமை ஹட்டனில் நடைபெறவுள்ளது.
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...