நேர்கண்டவரின் குறிப்பு
1994இல் இந்த நேர்காணலை சிறையிலிருந்த மலையக மக்கள் முன்னணியின் தலைவர் சந்திரசேகரனுடன் கண்டிருந்தேன். சந்திரசேகரன், பி.ஏ.காதர், வி.டி.தர்மலிங்கம் ஆகியோர் நான்காம் மாடியிலிருந்து வாராந்தம் கோட்டைக்கு அழைத்துவருவார்கள். பழைய Dutch Hospital அது. இப்போது அது மீண்டும் அழகிய ரெஸ்டுரண்டுகளாக ஆக்கப்பட்டுள்ளன. அங்கு அவர்களைப் பார்ப்பதற்காக உறவினர்கள், கட்சித் தொண்டர்கள், நண்பர்கள் வருவார்கள். 93 தொடக்கம் 94 வரை அவர்கள் விடுவிக்கப்படுவதற்கு முதல் வாரம் வரை அவர்களை அடிக்கடி சென்று சந்தித்து வந்திருக்கிறேன்.
அவர்களின் விடுதலைக்கான வெளிப் பிரச்சாரங்களை (ஊடகங்கள் மூலம்) மேற்கொண்டதில் எனக்கு அதிகமான பங்கிருப்பதாகவே நம்புகிறேன். எனக்கு தொடர்புடைய உள்நாட்டு-வெளிநாட்டு, தமிழ், சிங்கள ஊடகங்களில் அவர்களின் கருத்துக்களை வெளிக்கொணரச் செய்தேன். குறிப்பாக மலையகத்துக்கான தனியான நிர்வாக அலகு குறித்தும், மலையகத்துக்கான புரட்சிகர அரசியல் மாற்றம் குறித்தும் அவர்களே உறுதியான தெளிவான அரசியலைக் கொண்டிருந்தார்கள் என்று நம்பியதே அதற்குக் காரணம். கூடவே மலையகத்தின் சாபக்கேடான இ.தொ.காவின் அரசியலை அம்பலப்படுத்துவதற்கான தகுதியும் இவர்களிடத்திலேயே இருந்தன.
அது தவிர இவர்கள் மூவரையும் தொடர்ந்தும் சிறையில் அடைத்து வைத்திருக்க இ.தொ.கா செய்த சதிகளை சரிநிகர் பத்திரிகைக்கு ஊடாக அம்பலப்படுத்திக்கொண்டே இருந்தோம். இவர்களின் விடுதலை மலையகத்தின் மாற்றத்திற்கு பெரிதும் பங்களிக்கப்போகிறது என்கிற நம்பிக்கை என் போன்றவர்களுக்கு இருந்தது. சந்திரசேகரனிடமிருந்து பேட்டிகளையும், காதரிடமிருந்து கட்டுரைகளையும், வி.டி.தர்மலிங்கத்திடமிருந்து கட்டுரை தொடர்களையும் வெளியே எடுத்துக் கொண்டு வருவதை தொடர்ந்து செய்தேன். அப்போதைய கால கட்டத்தில் அது ஒரு “ரிஸ்க்”கான பணியும் கூட. அப்படி வெளிகொணரப்பட்ட கட்டுரைத் தொகுதிகளில் ஒரு பகுதி தான் சரிநிகரில் வெளிவந்து பின்னர் சமீபத்தில் வெளியான “மலையகம் எழுகிறது” நூல். துரதிர்ஸ்டவசமாக அந்த இந்த கட்டுரை எப்படி வெளியில் கொணரப்பட்டது, அதற்க்கு பின்னால் இருந்த உழைப்பு பற்றி அந்த நூலில் ஒரு சொல்லும் குறிப்பிடப்படவில்லை.
ஒவ்வொரு சனிக்கிழமையும் அவர்களுடனான சந்திப்பு எப்போதும் மகிழ்ச்சியானதாக இருக்கும். உணர்ச்சி பூர்வமானதாகவும் இருக்கும். அங்கு அவரைக் காண செல்லும் சில சந்தர்ப்பங்களில் நண்பர்கள் பொன்.பிரபாகரன், சோதிலிங்கம் ஆகியோரும் இணைந்து கொள்வார்கள். ம.ம.மு இன்னொரு இ.தொ.க வாக குறுகிய காலத்தில் ஆகிவிடும் என்று என்னைப் போன்றவர்கள் கற்பனையும் செய்து பார்த்திருக்க மாட்டார்கள். ம.ம.மு அன்று வைத்திருந்த அந்த கொள்கையுடன் இன்றுகூட எந்த ஒரு மலையாக சக்தியும் இல்லை என்றே கூறலாம். அந்த அரசியலுக்கான இடைவெளி இன்றும் இருந்துகொண்டே இருக்கிறது. அந்த கொள்கைகளும், வேலைத்திட்டங்களும் இன்னும் வலுவிலக்கவில்லை. சந்திரசேகரன் வெளியில் வந்த கதை, அவருடன் தொடர்ந்தும் நடத்திய உரையாடல்கள் என்பன சகிக்கக் கசப்பானவை.
சந்திரசேகரன்: இவர் மலையக மக்கள் முன்னணியின் தலைவர். மலையக மிதவாத அரசியல் தலைமைச் சூழ்நிலை நிலவும் நிலையில் முற்போக்கு அரசியல் சக்தியாகவும் மாற்று அரசியல் சக்தியாக வளரக்கூடியவர் என்றும் இனங்காட்டப்பட்டவர். கொழும்பில் கூட்டுப்படைத் தலைமையகக் குண்டு வெடிப்பு சம்பவத்தின் சூத்திரதாரி எனச் சந்தேகிக்கப்படும வரதனுக்கு புகழிடம் அளித்ததாகக்கூறி 1991 இல் இவரும் ம.மஇ முவின் ஏனையத் தலைவர்களான காதர், தர்மலிங்கம் ஆகியோரும் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு வந்த சூழ்நிலையில் 18.03.94 அன்று சந்திரசேகரன் மாத்திரம் பிணையில் விடுதலை செய்யப்பட்டார். இவரது விடுதலை சந்தேகத்துக்குரிய சர்சைகளை கிளப்பி விட்டிருந்த போதும் இவர் விடுதலை செய்யப்படுவதற்கு முன் சிறையிலிருந்து விடிவு சஞ்சிகைக்கு அளித்த பேட்டியை இங்கே தருகிறோம். - விடிவு - 1994
விடிவு: மலையகப் பிரச்சினைகளுக்கு தீர்வுகளில் ஒன்றாக தாங்கள் மலையக மக்கள் செறிவான வாழும் பகுதிகளை ஒன்றிணைத்த மலையக மாகாணம் ஒன்றை ஏற்படுத்த வேண்டும் என அறிவித்துள்ளீர்கள். ஆயின் அதன் எல்லைகளை வரையறுத்து விட்டீர்களா: அவ்வாறாயின் கூறமுடியுமா?
சந்திரசேகரன் : மத்திய, ஊவா, சப்ரகமுவ, மாகாணங்களில் மலையகத் தமிழர்கள் செறி வாக வாழும் பகுதிகளை உள்ளடக்கியதாக இந்த மாகாணம் அமைகிறது. ஆனால் எல்லைகளின் நிர்ணயம் இன்னும் எம்மால் பீரணப்படுத்தப்பட்ட வில்லை . இதன் புவியியல் அமைப்பு, இன விகிதாசாரம், தற்போதைய நிர்வாகப் பிரிவுகளின் அடையாளம், மலையக மக்களை ஒருங்கிணைப்பதற்கான சாதகத் மன்மை நடைமுறை சாத்தியத்துக்கான ஏதுக்கள், என்பவற்றை சகலருக்கும் ஏற்புடைய விதத்தில் நியாயப்படுத்தக் கூடியதாய் இதன் எல்லைகளைப் பற்றிய ஆய்வின் பூர்வாங்க நகலை கவனமாக தயாரித்துக் கொண்டிருக்கிறோம்.
துரித கதியில் இதனை பகிரங்கப்படுத்தி மக்களின் ஆமோதிப்பையும் ஆதரவையும் திரட்டுவதற்கு ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறோம்.
விடிவு: தாங்கள் மற்றும் காதர் தர்மலிங்கம் போன்றவர்களின் கைது, வழக்கு நீடிப்பு என்பவற்றுடன் அமைச்சரவையில் உள்ள தமிழ் பிரதிநிதி மற்றும் அவரின் கட்சி தொடர்புள்ளதாக பொது மக்கள் கருதுவது எவ்வளவு தூரம் உண்மை?
சந்திரசேகரன்: எமது கைது சட்டவிரோதமானது என உயர் நீதிமன்றம் தீர்பளித்தும் கூட நாம் தொடர்ச்சியாக தடுத்து வைக்கப்பட்டிருப்பது பிணை மறுக்கப்படுவது, வழக்கு இழுத்தடிக் கப்படுவது என்பவை தொடர்பாக அரசியல் கட்சிகளும், பல்வேறு தலைவர்களும் பாராளு மன்றத்திலும் வெளியிலும் பிரஸ்தாபிக்கும் போதெல்லாம் இவர்களின் 'நழுவித்தப்புகின்ற' நிலைபாடு இத்தகைய கருத்த மக்கள் மத்தியில் வலுப்பெறக் காரயமாயுள்ளது.
அதேபோல, மாகாணசபையில் நாம் மக்களால் தெரிவ செய்யப்பட்டபின் எம்மை விடுவிக்க கோரி சகல கட்சிகளம்- மத்திய மாகாண ஆளும் ஜ.தே.க உட்பட அனைத்தக்கட்சிகளும் குரல் கொடுத்த போது, ”தேர்தல் வெற்றி குற்றவாளிகள் தப்பவதற்கான மார்க்கமாகி விடக்கூடாது” என இவர்கள் கருத்த தெரிவித்ததற்கும், மாகாண சபையில் சத்தியபிரமாணம் எடுப்பதற்க மேல் நிதிமன்ற நீதிபதி அனுமதி வழங்கியதை இறதி நேரத்தில் அரசு தரப்பினர் விகற்பமான காரணங்களைக் கூறி ஆட்சேபிப்பதற்கும். தொடர்பு இருக்க வேண்டுமென அவதானிகள் சந்தேகம் கொள்வது அலட்சியப்படுத்தக்கதல்ல.
விடிவு: இலங்கையின் இனப்பிரச்னைக்க சமஷ்டி தீர்வ பற்றி உங்கள் அபிப்பிராயம்: அல்லது இன பிரச்சனைக்கு எந்த வகையில் தீர்வை காணலாம்?
சந்திரசேகரன் : எந்த ஆட்சி முறையும் இந்திந்த உரிமைகளை உள்ளடக்கியது என்ற சூத்திரத் துக்கள் இயங்குவதல்ல. ”தமிழர்களின் அரசியல் தீர்வுக்கு எவ்வளவு உரிமைகளை விட்டுக் கொடுக்கிறோம் என்பதைவிட சமஷ்டி என்ற சொற்பதத்தை சிங்கள மக்கள் ஏற்கத்தயாரில்லை” என ஆளும் கட்சி அமைச்சர் ஒருவரும் ஸ்ரீ.ல.சு. கட்சி பா.உ. ஒருவரும் அண்மையில் பி.பி.சி.க்க (BBC) அளித்த பேட்டியொன்றில் கூறியிருப்பது நினைவு கொள்ளத்தக்கது.எத்தகைய ஆட்சி முறை என்பதைவிட அது எந்தவிதமான உரிமைகளை உத்தரவாதம்ப் படுத்தகின்றது என்பதுதான் தமிழ் பிரதேசத்தின நிரந்தர அமைதியை தீர்மான்க்கம். மத்திய அரசின் அதிக்கமோ, தலையீடோ ஏற்பட முடியாத சகல கோணங்களிலும் சுயமான, சுதந்திரமான செயற்பாட்டை உறுதிபடுத்தம் வகையிலான திட்டவட்டமான அரசியல் ஏற்பாடுகளே இப்போதைய கொந்தளிப்பை தணிக்க உதவும்.
அரசு கட்டுபாட்டில் உள்ள சில பகுதிகளில் தேர்தலை நடத்தியும், குறிப்பிட்ட சில தமிழ் பிரதிநிதிகளை இணைத்த கொண்டும் தற்போதைய சூழ்நிலைகளில் சில திருப்பங்களை ஏற்படுத்தி அதனால் ஏற்படும் சிறிய தளம்பல் நிலையை தனக்க வாய்ப்பான சந்தர்ப்பமாக பயன்படுத்தி கொள்ள அரச எத்தனிக்குமானால் அது தீர்க்கதரிசனமற்ற பேதமையாகவும், பிரச்சனையின் நெருக்கடியை மேலும் சிக்கலாக்குவதாகவுமே முடியும்.
” இது இனப்பிரச்சனை அல்ல: பயங்கரவாதப் பிரச்சனை மட்டுமே” எனக் கூறுவது காப்பாற்ற முடியாத வாசமாகும். எனவே யதார்த்தத்தை புரிந்து கொண்டு சம்பந்தபட்டவர்களோடு சமரச பேச்சுவார்த்தைகளின் மூலம் இணக்கமான உடன்பாட்டுக்கு வர முயற்சிப்பதே நாட்டின எதிர்காலத்துக்கு நன்மை பயக்கும்.
ஒத்தி போடுவதை தப்பவதற்கான சாணக்கியமாக எவராவது நம்புவார்களேயானால் அவர்களையெல்லாம் இந்நாட்டின் சாபக் கேடுகளென எதிர்கால வரலாறு எழுதி வைத்துவிடும்.
விடிவு: பிரேமதாஸ ஆட்சிக்கும் தற்போதைய ஜனாதிபதி டி.பி. விஜயதுங்காவின் ஆட்சிக்கும் இடையிலான ஒற்றுமை வேற்றுமை என்ன?
சந்திரசேகரன் : இப்பொது புதிதாக ஒரு ஜனாதிபதி நாட்டை நிரிவகிக்க வந்திருக்கிறார் என்பதையே மக்கள் மறந்துவிடுமளவுக்கு 'அதே தண்டவாளத்தில் ஓடும் ரயிலாக' ஆட்சி ஓடிக்கொண்டிருப்பதை ஒரே அச்சாக நம்மால் பார்க்க முடிந்தாலும், இரண்டு முக்கியமான மாற்றங்களும் கவனத்தில் படுகின்றது.
ஒன்று, கருத்து சுதந்திரத்தக்கான இறுக்கம் தளர்ந்திருப்பதும், அரசின் - அரசியல் வாதிகளின் -அதிகார பிரயோகம் ஆதிக்கம் சார்ந்திருப்பதும் பரவலாக பிரதிபலிக்கின்றது.
இரண்டு, தமிழ் மக்களின் பிரச்சனையில், உணர்ச்சிவயப்பட்ட தனது நிலைப்பாட்டை - அரசியல் விமர்சனங்களைப் பற்றிய கண்ணோட்டமில்லாமல் - போட்ட உடைத்த விடுவதோடு அதைபூசி மெழுகி சமாளிக்க வேண்டிய அவசியத்தை கூட புரிந்து கொள்ளத் தெரியாத அப்பாவித்தனத்தை புதிய ஜனாதிபதியின் பேச்சுக்களிலும் முடிவுகளிலும் காணமுடிகிறது.
கிழக்கு மாகாண தேர்தல் அறிவிப்பும் இந்த வெளிபாட்டின் விளைவு என்றே கருதுகின்றோம். எப்படியோ, பழைய ஜனாதிபதிகளின் கபடத்தனத்தை புதிய ஜனாதிபதி அடிக்கடி நினைக்க வைக்கிறார்.
விடிவு: பாராளுமன்ற வழி முறையை முழுமையாக நம்புகிறீர்களா? மாகாண சபை தங்களின் நோக்கத்தக்கு எந்தளவு வெற்றியை தரும்?
பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தால் மட்டும் எல்லாவற்றையும் சாத்த்து விடமுடியும் என்றால் தமிழர் விடுதலைக் கூட்டணியால் வடக்கு கிழக்க தமிழ் மக்களின் பிரச்சனை 1983 க்கு முன்னரே தீர்க்கப்பட்டிருக்க வேண்டும். அவர்கள் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியாகவும் செயற்படும் வாய்ப்பு அமைந்தபோது அந்தப் பதவியையும் அதற்கான அந்தஸ்துக்களையும் அவர்கள் குற்றம் சொல்ல முடியாதளவுக்கு பயன்படுத்தினார்கள் ஜனநாயக ரீதியிலான பாராளுமன்ற செயற்பாட்டின் உச்சக்கட்ட போராட்டத்தக்கு அவர்களின் நடவடிக்கைகள் உதாரணங்களாக அமைந்தன. வடகிழக்கு மக்களின் ஏகோபித்த அங்கீகாரத்தையும் பரிபூரண ஆதரவையும் அவர்கள் கொண்டிருந்தனர் ஆனால் இறுதியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளை துறந்த விட்ட வெளியேற நேரிட்டது.
இந்த நிகழ்வுகளை முன்னுதாரண படிப்பினையாக கொண்டே மாகாண சபையம் பார்க்கிறொம். ஆனால் எமது கருத்தை தெளிவாக வெளிச்சம் போட்டுகாட்ட இது போன்ற வாய்ப்புகள் உதவும் என நம்புகிறோம். எமது கோரிக்கைக்கு மக்கள் மத்தியில் பெருகிவரும் செல்வாக்கை தேர்தல்களின் மூலம்தான் நாம் நிரூபித்தாக வேண்டியுள்ளது.
ஆனால் தேர்தலினால் எம்மை வந்தடையும் பதவிகளை, எமத அரசியலுக்கான மேலதிக பலமாக நினைக்கிறோமே தவிர இதுவே எமது நோக்கமோ, அரசியல் அடித்தளமோ ஆகிவிடாது.
விடிவு: தோட்டங்களின் தனியார் மயத்தினால் அண்மைக்கால பிரச்சனை பற்றி தங்களின் நடவடிக்கைகள்?
சந்திரசேகரன் : தோட்டங்கள் தனியார் மயப்படுத்தப்பட்டதன பின்னர் ஏற்பட்டுள்ள பாரதுhரமான பின்விளைவுகள் மக்களைக் கிலேசமடைய வைத்துள்ளது. 'தோட்டங்கள் தனியார் மய மாக்கலை ' ஆரம்பத்தில் கண்மூடித்தனமாக ஆதரித்து, சிலாகித்து, பாராட்டிய தலைவர்கள் இன்று மக்களின் அதிருப்தியையும், ஆக்ரோஷமான எதிர்ப்பையும் தணிக்க முடியாமல், இத ஏதோ தங்களுக்குத் தெரியாமல் நடந்துவிட்டதைப் போல ஒப்பாரியை பாடத் தொடங்கியிருக்கிறார்கள்.
இது கூட மக்கள் மிதுள்ள அக்கறையா? அல்லது தங்களின் அரசியல் எதிர்பார்ப்புகள் புறம் தள்ளப்பட்ட உதாசீனப்படுத்தப்பட்டதினால் ஏற்பட்ட விரக்தியின் வெளிப்பாடா? என்பதை எதிர்காலம் தான் தீர்மானிக்கும்.
மக்களின் கொந்தளிப்பால் கரிசனை காட்டுவதை விட இந்தத் தலைவர்களை சாந்தப்படுத் துவதில்தான் அரசு அக்கறையோடு முனைவதாகத் தெரிகிறது. இந்த பிரச்சினையில் எமது தலைவர்கள் எந்தளவு நேர்மையாக நடந்து கொள்வார்கள் என்பதை” தோட்டத் தொழிலாளர்களின் குடியிருப்புகளை அவர்களுக்கே சொந்தமாக்குவோம்” என்ற கொள்கையில் அவர்கள் காட்டியிருக்கிறார்கள்.
தோட்டங்கள் தனியார் மயமாக்கல் என்பது திடீரென்று புதிதாக மேற்கொள்ளப்படும் நடவடிக்கையல்ல. எமது தலைவர்களை பெருமை படுத்தி புளங்காகிதம் அடைய வைப்பதன மூலம் பெருந்தோட்ட த்துறையில் நினைத்ததையெல்லாம் செய்து கொண்டிருக்கலாம் என்ற அரசினது மனப் போக்கின் வளர்ச்சிக்கட்டத்தின் - இன்னொரு வடிவமே இதுவுமாகும்.
மக்கள் தற்போது விரக்தியோடும் வேதனையோடும் வாழ்ந்தாலம் இதுபோன்ற பிரச்னைகள் எங்கிருந்து தொடங்குகின்றன என்ற தோற்றுவாய் பற்றிய விளக்கத்திலோ, இதிலிருந்து மீளும் விமோஷனத்துக்கான வழிமுறைகளிலோ எம்மக்களுக்கு பூரணத் தெளிவு ஏற்படுத்தப்படவில்லை.
தற்பேதைய வேலை நிறுத்தங்களும், வேறுசில போராட்ட வடிவங்களும் மக்களின் குமுறலை வெளிபடுத்துவதையும், மக்களின் ஆத்திரத்தை தணித்து கொள்வதையுமே நோக்கமாக கொண்டிருக்கின்றன.
இதன் மூலம் தொழிளாலர்களின் போராட்ட சக்தி விரயமாக்கபடுகின்றது என்பதே உண்மையாகும்.
காரணம் மக்களுக்கு பிரச்சனைகளைப்பற்றிய பூணை தெளிவில்லதாதால், தொழிற் சங்கங்களின் மூலம் சில சமரசங்களாலேயே போராட்டங்கள் இடைநிறுத்தப்படுகின்றன.
தோட்ட பகுதிகளில் ஒரே காரணத்துக்காக நடைபெறும போராட்டங்கள் வெவ்வேறு பகுதிகளில், பல்வேறு கால கட்டங்களில் வெவ்வேறு தொழிற்சங்கங்களினால் ஒன்றுக்கொன்று எந்த தொடர்புமற்று மக்களை திருப்திபடுத்த மட்டுமே நடத்தப்படுவதால்- போராட்டங்களின் தாக்கம் அரசை உலுக்குவதற்கு பதிலாக தொழிலாளர்களின் தன்னம்பிக்கையைத் தான் தவிடு பொடி ஆக்கிக் கொண்டிருக்கிறது.
இடைக்கால சமரசங்களின் மூலம் தற்காலிக சமாளிப்புகளை மட்டும் ஏற்படுத்தி கொள்வது தொழிற்சங்கங்களின் பிழைப்பாக போய் விட்டிருப்பது எமது பிரச்னைகள் இன்னம் இறுக்கமாகவே வழி வகுக்கம்.
எனவே இதைப்பற்றிய தெளிவான கண்ணோட்டமும், தீர்க்கமான வேலைத்திட்டமும், முரண்பாடற்ற பொதுக் கொள்கையும் மலையக தொழிற்சங்க தலைமைகளுக்க முதலில் ஏற்பட வேண்டும். அடுத்து, இன்று புதிதாக கொதிநிலையை அடைந்துள்ள தோட்டங்கள் தனியார் மயமாக்கல் பிரச்னை மட்டுமல்ல: எமது சகல கோரிக்கைகளையும் அரசியல் விவகாரமாக வெளிக்கொணர வேண்டும். இது திட்டமிட்டு புறக்கணிக்கப்படுகின்ற சிறுபான்மை மக்களின் அரசியல் பிரச்சினை என்பதை நமது மக்களுக்கும் புரிய வைக்க வேண்டும்.
இந்தக் கண்ணோட்டத்தோடு எமது எதிர்கால செயற்திட்டங்களை தொடங்குவதற்கு தயாராகி இருக்கிறோம். அதே நேரத்தில் எமது ஸ்தாபனத்தின் முக்கியமான பதவியிலிருக்கம் நாங்கள் மூவருமே மக்களிடமிருந்து பிரிக்கப்பட்டு எமது முனைப்பான செயற்பாடுகள் பின்தள்ளப்பட்டுக் கொண்டும் இருக்கின்றன.
நன்றி - விடிவு
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...