பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நியாயமான சம்பள உயர்வையும் மலையக மக்களின் காணி, வீட்டு உரிமையையும் வலியுறுத்தியும், இலங்கையின் அனைத்து மக்களினதும் ஜனநாயக, மனித உரிமைகளையும் வென்றெடுக்கவும் ஐக்கியப்பட்ட சுதந்திரமான இலங்கையை கட்டியெழுப்பவும் ஜனநாயக இடதுசாரி சக்திகளின் கூட்டு மே தின நிகழ்வு மே முதலாம் திகதி காலை 10 மணிக்கு கஹவத்தை கூட்டுறவு சங்க மண்டபத்தில் நடைபெறும்.
மக்கள் தொழிலாளர் சங்கம் ஏற்பாடு செய்துள்ள கூட்டு மேதின நிகழ்வில் இலங்கை கொம்யூனிஸ்ட் ஐக்கிய கேந்திரம், மக்கள் ஆசிரியர் சங்கம், மக்கள் பண்பாட்டுக் கழகம் மற்றும் பல அமைப்புகள் கலந்து கொள்ளவுள்ளன.
இம் மேதின நிகழ்வில் மக்கள் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி இ. தம்பையா, இலங்கை கொம்யூனிஸ்ட் ஐக்கிய கேந்திரத்தின் இணை இணைப்பாளர் டிபில்யூ. சோமரத்தின, மக்கள் ஆசிரியர் சங்கத்தின் தலைவர் எஸ். மோகன் மற்றும் மக்கள் பண்பாட்டு கழகத்தின் உறுப்பினர் சு. விஜயகுமார் ஆகியோர் உரையாற்றவுள்ளதுடன் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெறவுள்ளன.
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...