மலையகம் என்றாலே எம் கண்முன் வந்து நிற்பது அங்குள்ள லயன் வாழ்க்கை முறையே ஆகும். ஏறக்குறைய 200 ஆண்டுகள் மலையக வரலாற்றில் லயன் வாழ்க்கை முறையில் மறைக்கப்பட்ட பல்வேறு அம்சங்களில் சிறுவர்களுக்கு எதிரான துஸ்பிரயோகங்களும் ஒன்றாகும். குறிப்பாக இந்த லயன் வாழ்க்கை முறை எவ்வாறு மக்களுக்கு இடையிலான தொடர்பினை அதிகரித்துள்ளதோ அது போலவே பல சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகளும், பாலியல் ரீதியான துஸ்பிரயோகங்களும் இடம்பெற வழிசமைத்து கொடுத்துள்ளது.
இவ்வாரான வன்முறைகளுக்கு காரணம் லயன் குடியிருப்புகளின் அமைப்பு முறையாகும். மலையகத்தில் லயன் அமைப்பு முறையை பார்க்கும் போது 15 ற்கு 10 (அண்ணளவாக) அடி என்ற ரீதியில் இருபுறமும் அமைக்கப்பட்ட, இரண்டு அறைகளை மட்டும் கொண்ட 24 குடியிருப்புகளை உள்ளடக்கியுள்ளது. மிகவும் நெருக்கமாக அமைக்கப்பட்டுள்ள இந்த குடியிருப்புகள் சிறுவர் துஸ்பிரயோகத்திற்கு ஏதுவாக காணப்படுகின்றது. அதாவது மலையகத்தில் பெருப்பாலான குடுபம்பங்களில் தாய் தந்தை இருவரும் காலையில் வேலைக்கு சென்றுவிடுகின்றனர.; அவ்வாரான சந்தர்ப்பத்தி;ல் வீடுகளில் தனித்திருக்கும் சிறுவர்கள் பலரின் காம வெறிக்கு ஆளாகின்றனர். குறிப்பாக பாதுகாப்பிற்காக வீடுகளில் இருக்கும் வயோதிபர்களினாலேயே அதிகளவான சிறுவர் வன்கொடுமைகள் இடம்பெற்று வருவதாக அண்மைய ஆய்வுகள் வெளிப்படுத்தியிருக்கின்றமை குறிப்பிடத்தக்கதொன்றாகும்.
மேலும் பாடசாலைகளுக்கு செல்லாமல் வீடுகளில் தனித்திருக்கும் சிறுவர்களே இவ்வாறு அதிகளவில் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாகின்றனர். இவ்வாரான துஸ்பிரயோக நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட பிள்ளையின் பெற்றோர்கள் அதற்கெதிராக எவ்விதமான நடவடிக்கைகளை மேற்கொள்ள முன்வருவதில்லை. காரணம் தமது தன்மானம் இழந்து விடுமோ என்ற அச்சமும், போதிய விழிப்புணர்வின்மையும் ஆகும். இவ்வாரான வன்முறைகளில் இருந்து தமது பிள்ளைகளை பாதுகாப்பதற்காளன எவ்விதமான மாற்று நடவடிக்கைகளையும் பெற்றோர்கள் மேற்கொள்வதுமில்லை.
மலையகத்தில் பெரும்பாலான குடும்பங்களில் தாய்மார் குடும்ப பொருளாதார பிரச்சினையை மையமாக கொண்டு தொழில் நிமித்தம் வெளிநாடுகளுக்கு செல்கின்றனர். இவ்வாறு வெளிநாடுகளுக்கு சென்ற தாய்மார்கள் தமது பிள்ளைகளை தமது உறவினர்களிடமோ, தமக்கு அதிக நெருக்கமானவர்களிடமோ, தன் கணவனின் பொறுப்பிலோ விட்டு செல்கின்றனர். ஆனால் இவ்வாறு பாதுகாவலர்களாக நியமிக்கப்பட்டவர்களாலேயே பல சிறுவர்கள் துஸ்பிரயோகத்திற்கும் , வன்முறைக்கும் இறையாகியுள்ளனர். அத்தோடு பெரும்பாலான மலையக வீடுகளில் இரண்டு அறைகளே காணப்படுவது வழக்கம். அவ்வாரான நிலையில் வீட்டில் அனைவரும் ஒரே அறையில் உறங்க வேண்டிய நிலையில், வீடுகளுக்கு வரும் விருந்தினர்களாலும் இரவு வேளைகளில் பெரும்பாலான சிறுவர்கள் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாகின்றமையை காணலாம.
இவ்வாறு சிறுவர்களுக்கெதிரான துஸ்பிரயோக செயற்பாடுகளுக்கு லயன் வாழ்க்கை முறையானது காரணமாக அமைகின்றமையை பெரும்பாலான பெற்றோர்களுக்கு தெரிவதில்லை. தம் பிள்ளைக்கு வீட்டிலும், சமூகத்திலும் பாதுகாப்பில்லை என்பதை தெரிந்திருந்தும் பெரும்பாலான பெற்றோர்கள் தமது பிள்ளைகளை வீடுகளில் தனியே விட்டு செல்வது துஸ்பிரயோக நடவடிக்கைகளை மேலும் துரிதப்படுத்தும். அத்தோடு பாடசாலைகளுக்கு செல்லாமல் லயன்களில் தரித்திருக்கும் சிறுவர்களை தொடர்ச்சியாக, உரிய முறையில் பாடசாலைகளுக்கு அனுப்புவதற்கு பெற்றோர்கள் தயாராக இருக்க வேண்டும்.
அத்தோடு சிறுவர் துஸ்பிரயோகத்திலிருந்து பாதுகாப்பு பெருவதற்கு ஒவ்வொரு பெற்றோரும் தமது குழந்தைகளுக்கு தகுந்த ஆலோசனைகளை வழங்கவேண்டும். மேலும் இவ்வாறு சிறுவர்களை துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கும் தரப்பினருக்கு எதிராக கடுமையான சட்டங்களின் ஊடாக தண்டனை வழங்க வேண்டும். வீடமைப்பு திட்டங்களை முன்வைக்கும் போது இவ்வாரான துஸ்பிரயோகங்களில் இருந்து பாதுகாப்பு பெரும் வகையில் திட்டங்களை முன்னெடுக்க வேண்டும். இவ்விடயத்தில் பெற்றோர் விழிப்புணர்வோடு செயற்படுவது அவசியமாகும்.
நன்றி - கூக்குரல் முகநூல்
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...