திரு. சி. நவரட்ணம் மலையக கல்வி வரலாற்றில் முக்கியமான கணிப்புக்குரிய ஒருவர். அவர் கல்வியியியலாளர், பணிப்பாளர், அரசியல்வாதி, பண்பாட்டுச் செயற்பாட்டாளர் எனப் பன்முக ஆளுமைகளைக் கொண்டவர். மலையக எழுச்சியின் தலைமகன்களாக விளங்கிய இர. சிவலிங்கத்தின் மாணவர். அத்துடன் சில காலங்கள் அவரோடு இணைந்து முற்போக்கு அணியில் இயங்கியவர். மலையக கல்வி வரலாற்றிலே விரல்விட்டு எண்ணக் கூடிய புருஷர்களில் நவரட்ணமும் ஒருவர். அமரத்துவமாகிவிட்ட இவ்வேளையில் அவர் பற்றிய அறிமுகங்கள், மதிப்பீடுகள், நினைவுக் குறிப்புகள் அவசியமானவையாகின்றன. அவை அடுத்த தலைமுறையினருக்கு ஆதர்ஷனமாக அமையும்.
அவரது சமூக நோக்கும் பங்களிப்பும்- அந்த நினைவுகள் தரும் வேதனைகளை சுமந்துக் கொண்டு இலங்கை கல்விச் சமூக சம்மேளன தோழர்களின் சார்பில் சம்மேளனத்தின் தலைவர் லெனின் மதிவானம் மற்றும் பொதுச் செயலாளர் ஆர். சங்கரமணிவண்ணன் அவர்களும் தமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கின்றனர்.
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...