நேற்று மாலை ஜனாதிபதி செயலகத்தில் இடம் பெற்ற அமைச்சர்களுக்கான அமைச்சு பதவிக்கான சத்தியபிரமாண நிகழ்வில் மலையக மக்களை பிரதிநிதித்துவ படுத்தும் ப.உறுப்பினர்களான ப.திகாம்பரம் அவர்கள் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சராகவும், திரு.இராதாகிருஸ்ணன் கல்வி இராஜாங்க அமைச்சராகவும், திரு. வேலாயுதம் பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சராகவும் ஜனாதிபதி முன்னிலையில் சத்தியபிரமாணம் செய்து கொண்டனர்.
இந்த மூன்று அமைச்சு பதவிகளை பொறுத்த வரை மலையக மக்களுக்கு தனது சேவைகளை திறம்பட செய்து கொடுக்க கூடிய பதவிகளாகும். மலையக மக்களின் அவசியமான தேவைகளை இனம்கண்டு உரிய நடவடிக்கைகளை எடுக்க இவர்கள் முன்வர வேண்டும். தன்னுடைய சேவைகளை அவர்கள் உரிய முறையில் செய்யாவிடத்து மலையக மக்கள் தனது மாற்று தெரிவினை எதிர்வரும் பொது தேர்தலில் தெரிவு செய்வர் என்பது நிச்சயம்.
பெருந்தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சு என்பது முன்னாள் ஜனாதிபதியான சந்திரிக்கா அம்மையாரால் வழங்கப்பட்டது இவ்வமைச்சு மூலம் முழுமையாக மலையக பகுதிகளின் அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்க முடியும் என்பதாலே இவ்வமைச்சு வழங்கப்பட்டது அப்போது அவை உரிய முறையில் பயன்படுத்த தவறிவிட்டனர் நம்தலைவர்கள. பிறகு மகி;ந்த அரசாங்கத்தில் அவை இல்லாது செய்யப்பட்டது . மீண்டும் புதிய இவ்வரசாங்கத்தில் இவ்வமைச்சு வழங்கப்பட்டிருப்பது வரவேற்க தக்கது எனினும் இப்பதவியை தக்கவைத்து கொள்ளும் நோக்கிலும் அரசியல் சுயலாபம் தேடும் நோக்கில் பயன்படுத்தாது மக்கள் நலத்திட்டத்தை மனதில் கொண்டு செயற்படவேண்டிய தேவையில் நாம் உள்ளம் என்பதை நினைவில் நிறுத்தி கொள்ள வேண்டும்.
தொடர்ந்து கல்வி இராஜாங்க அமைச்சு மூலம் மலையக கல்வி புலத்தில் புதிய மாற்றங்களையும், சீர்திருத்தங்களையும் கொண்டு வரவேண்டும் அத்தோடு பாடசாலைகளின் கல்வி தரம் இணங்கானப்படல், பல்கலைக்கழக அனுமதியை பெற பாடசாலை முன்னேற்பாடு, மலையக பல்கலைக்கழக மாணவர்களுக்கான உதவி தொகை என்பவற்றை பெற்று கொடுக்க முன்வர வேண்டும் மற்றும் மலையகத்தில் ஆரம்பகல்வியினை வினைத்திறன் வாய்த மாணவ சமூகத்தை கட்டியெழுப்பும் நோக்கில் மாற்றம் செய்ய வேண்டும் இவ்வாறு பல தேவைகள் காணப்படுகின்றது இவற்றை பரீசீலித்து மாற்று ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.
மற்றும் பெருந்தோட்ட இளைஞர்யுவதிகளுக்கான வேலைவாய்ப்பு சுயதொழில் ஊக்கு விப்பு முயற்சி, மலையக மக்களின் வேதன உயர்வு, சுகாதாரம், வாழ்கை செலவினத்திற்து ஏற்ற ஊதியம் என்பவற்றை பெற்று கொடுக்க முன்வர வேண்டும்.
இவ்வாறு பல தேவைகள் மலையக மக்களின் வாழ்கையில் செய்யவேண்டியதாக இருக்கும் நிலையில் இவற்றை இவ்புதிய அமைச்சர்கள் முன்நின்று அர்ப்பணிப்புடன் செய்ய வேண்டும் என மலையக மக்கள் சார்பாக கேட்டு கொள்கின்றோம்.
நன்றி - சுயாதீன ஊடகம் பசுமை தாயகம்
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...