Headlines News :
முகப்பு » » வீடுகள் நிர்மாணிப்பதற்கான சவால்களும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சும் - கலாநிதி ஏ.எஸ். சந்திரபோஸ்

வீடுகள் நிர்மாணிப்பதற்கான சவால்களும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சும் - கலாநிதி ஏ.எஸ். சந்திரபோஸ்


நடந்து முடிந்த ஜனாதிபதிக்கான தேர்தலில் மலையக மக்கள் தமது தேவைகளை முன்னிறுத்தி மிகவும் பொறுப்புடன் நடந்து கொண்டுள்ளனர் என்பதை பலரும் பாராட்டுகின்றனர். தேசிய அரசியலில் அவர்கள் மிகவும் கரிசனையுடன் இருக்கின்றனர் என்பதும் தெளிவான விடயமாகும். இம்மக்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்யும் வகையிலான வேலைத்திட்டங்களை மேற்கொள்வது ஆட்சியாளர்களின் கடமையாகும். இம்மக்களின் அடிப்படைப் பிரச்சினையை தீர்த்து வைக்கும் முகமாக மீண்டும் ஒரு தடவை தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சு வழங்கப்பட்டுள்ளதை பூரணத்துவமாகப் பயன்படுத்திக்கொள்வதன் மூலம் இவர்களது வாழ்க்கையில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தலாம்.

இம்மக்களின் பிரச்சினைகளை அனுபவமாக பெற்றுள்ளவரும் இம்மக்கள் மத்தியிலிருந்து உருவாகிய ஒருவருமான அமைச்சர் ப. திகாம்பரத்திடம் தோட்ட உட்கட்டமைப்பினை மேற்கொள்வதற்கான பொறுப்பு வழங்கப்பட்டுள்ளமை மிகப்பெரிய வரப்பிரசாதமாகவே கருத வேண்டும்.
இச்சந்தர்ப்பத்தில் பெருந்தோட்டங்களில் எவ்வாறு வீடமைப்புத் திட்டங்களை மேற்கொள்ளலாம் என்பதை பற்றிய சில விடயங்களை குறிப்பிடுவது பயனுள்ளதாக இருக்கலாம்.

முதற்கட்ட வேலையாக, ஏற்கனவே இந்திய அரசாங்கத்தினூடாக திட்டமிடப்பட்ட 4000 வீட்டு திட்டத்தினை உடனடியாக ஆரம்பிக்க ஏற்பாடுகளை மேற்கொள்வது பிரதானமாகும்.

இதற்கென சுமார் 500 கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. அதைவிட 17 கம்பனித் தோட்டங்களில் வீடுகள் நிர்மாணிப்பதற்கான காணிகளும் அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. ஏதோ காரணங்களுக்காக கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக இவ்வீட்டுத்திட்டத்தினை அமைக்க அனுமதிக்கப்படவில்லை. புதிய அமைச்சர் இவ்வீட்டுத் திட்டத்தினை செயற்படுத்துவதற்கு அனுமதி வழங்குதல் மக்களுக்கு கிடைக்கும் உடனடியான நிவாரணமாக இருக்கும்.
இரண்டாவதாகத் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சின் ஊடாக மேற்கொள்ளப்பட வேண்டிய வீட்டு திட்டங்களாகும். உண்மையில் தோட்ட மக்களின் வீடமைப்பிற்கென முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் காலப்பகுதியில் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சு முதன் முதலில் உருவாக்கப்பட்டதையும், சுமார் 10 வருடங்களாக அந்த அமைச்சு செயற்பட்டதையும் யாவரும் அறிவர். இருப்பினும் இவ்வமைச்சின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் தோட்டங்களில் வீடுகளை நிர்மாணிக்க முடியாமல் போனமையையும் பலர் அறிவர். ஏன் இவ்வாறான நிலைமை ஏற்பட்டது? இதற்கான பரிகாரம் என்ன என்பதையும் அறிவது நல்லது.

தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சும் பெருந்தோட்ட நிதியமும்
இலங்கையில் உள்ள பெருந்தோட்டங்கள் தொழிற்சட்டங்களின் கீழ் உள்ள அமைப்பாகும். தொழிற்சட்டங்களின் படி தொழிலாளர்கள் தோட்ட முகாமையினால் வழங்கப்படும் வீடுகளில் வசிக்க வேண்டும். தோட்டத் தொழிலிலிருந்து ஓய்வு பெற்றாலும் தொடர்ச்சியாக அந்த வீட்டிலேயே வாழலாம். தோட்ட வீடுகளை பராமரிக்கும் பொறுப்பும் தோட்ட முகாமையிடமே காணப்படும். தோட்டத் தொழிலாளர்களுக்கு தலைமை வகித்து வரும் தொழிற்சங்கங்கள் என்பன தொழில் சட்டங்கள், தோட்டங்களில் முறையாக செயற்படுத்தப்படுகின்றனவா என்பதில் அதிக கவனம் செலுத்தும் நிறுவனங்களாகவே செயற்பட முடிந்தது.

இந்நிலையில் தொழிலாளர்கள் தொடர்ச்சியாக சுகாதாரமற்றதும், தோட்ட முகாமையினால் பராமரிக்கப்படுவதுமான லயன் காம்பிராக்களை மாற்றியமைக்க வேண்டும் என்று பலமான கோரிக்கைகள், இவர்கள் மத்தியில் உருவாகின. அரசியல் அமைப்புக்கள் கேட்டுக்கொண்டதற்கமைய 1992ஆம் ஆண்டளவில் பெருந்தோட்ட தொழிலாளர்களின் வீடமைப்பு நலன்புரி நிதியம் உருவாக்கப்பட்டது. 2002இல் இந்நிதியம் பெருந்தோட்ட மனித அபிவிருத்தி நிதியமாக (PHDT) மாற்றியமைக்கப்பட்டது. தோட்டங்களில் உள்ள வீடுகளை திருத்தியமைத்தல், பயிற்சி வழங்குதல், சுகாதார நலன்களை பாதுகாத்தல் என்பனவற்றினை செயற்படுத்தும் அதிகாரம் உள்ள அமைப்பாக PHDT காணப்படுகின்றது. தோட்டங்களில் PHDTஐ தவிர இலங்கையின் எந்தவொரு அமைப்புக்கும் வீடுகளை நிர்மாணிக்கும் உரிமை வழங்கப்படவில்லை. இவ்வமைப்பு தோட்ட முகாமையின் அனுசரணையுடன் திட்டங்களை மேற்கொள்ளும். இலங்கை அரசாங்கம் வழங்கும் நிதியுதவி மட்டுமன்றி உலகின் பல்வேறு நிறுவனங்களும் PHDTஇன் வேலைத்திட்டத்திற்கு உதவியாகவும், கடனாகவும் நிதியுதவி வழங்குகின்றன.

தோட்டங்களில் வளர்ச்சியடைந்துள்ளதாக கூறப்படும் வீடமைப்பு, சுகாதாரம், மனித வள மேம்பாடு என்பனவற்றிற்கு கடந்த 22 வருடங்களாக இந்நிதியம் பங்களிப்பு செய்துள்ளது. தோட்டங்களில் குடும்ப கட்டுப்பாடு, சிசு மரணத்தில் வீழ்ச்சி, குழந்தை பராமரிப்பில் வளர்ச்சி, வறுமை ஒழிப்பு என்று பட்டியல் இட்டு காட்டும் இந்நிறுவனத்தின் ஊடாக தோட்டங்களில் உள்ள 22,000 குடும்பங்களுக்கு தனி வீடுகள், இரட்டை வீடுகள், மாடி வீடுகள் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த 22 வருடங்களில் PHDTஇல் வீடமைப்பு சாதனை இதுவாகும். முக்கியமாக இவ்வீடுகள் யாவரும் அங்கு வாழ்கின்ற 22,000 குடும்பத்திற்கும் சொந்தமானது அல்லது இவ்வீடுகளை நிர்மாணிக்க PHDT உதவி????? தொழிலாளர்களும் வங்கியில் கடன் வாங்கி செலவு செய்துள்ளனர். இவ்வீடுகளில் வசிப்போர் தாம் பெற்றுக்கொண்ட கடனை வட்டியுடன் மாதாந்தம் ரூபா 600/= அளவில் வழங்குகின்றனர். சில கடன்கள் 25 வருட காலத்தில் திருப்பி வழங்கக்கூடிய கடனாகவும் காணப்படுகின்றது. அதிகமான கடன்கள் திருப்பி வழங்கப்பட்டபோதும் தாம் வாழ்கின்ற வீடுகள் தமக்கு சொந்தமானதாக இன்று வரையும் வழங்கப்படவில்லை.

என்ன செய்யலாம்?
PHDT தொடர்ந்தும் தமது பணிகளை மேற்கொள்ளும். ஆனால் அவர்களால் அமைக்கப்படும் வீடுகளை தொழிலாளர்களுக்கு சொந்தமாக வழங்குவதற்கான அதிகாரம் அவர்களிடம் இல்லை. அவர்கள் பல நல்ல காரியங்கள் செய்வதாக நம்புகின்றனர். அவர்கள் அதனை தொடர்ந்து செய்வர். இவ்வாறான நிலையில் புதிய அமைச்சு தோட்டங்களில் வீடமைப்பிற்கென ஒரு அதிகாரமுள்ள தனியார் நிறுவனம் ஒன்றை உருவாக்குவது அவசியமாகும். அவ்வாறு உருவாக்கப்படும் அதிகார சபையானது தேசிய வீடமைப்பு அதிகார சபைக்கு ஒத்ததாக அதிகாரத்தைக் கொண்டதாகவும், தோட்டங்களில் வீடுகளை நிர்மாணிக்கக்கூடிய காணிகளை அடையாளப்படுத்தி தமது அதிகார சபையின் கீழ் கொண்டு வரப்பட்டு வீடுகளை நிர்மாணிப்பதன் மூலமாகவே பெருந்தோட்ட மக்களின் 'சொந்த வீடு' கனவு பலனளிப்பதாக அமையும்.

தோட்டத் தொழிலாளர்கள் யாவருக்கும் வீடுகள் கட்ட தோட்டங்களில் காணிகள் உண்டா?
இன்று சுமார் 250,000 பேர் பெருந்தோட்டங்களில் பதிவு செய்து கொண்ட தொழிலாளர்களாக உள்ளனர். இவ்வெண்ணிக்கையானது அங்கு வாழ்கின்ற உத்தியோகத்தர்களையும் உள்ளடக்கியதாகும். ????? ஒரு குடும்பத்தில் இருவர் வேலை செய்கின்றனர் என்று எடுத்துக்கொண்டால் (250,000 / 2 = 125,000) 125,000 குடும்பங்கள் காணப்படலாம். ஒவ்வொருவருக்கும் 20 பேர்ச் காணி அளவில் வீடுகள் அமைக்க வேண்டுமாயின் மொத்தமாக தேவைப்படும் காணியின் அளவு சுமார் 6500 ஹெக்டேயர் காணிகளாகும். (ஒரு ஹெக்டேயர் என்பது சுமார் 395 பேர்ச் ஆகும்) ஒருவருக்கு 20 பேர்ச் காணி வழங்????? ஒரு ஹெக்டேயரில் சுமார் 18 முதல் 20 வீடுகளை அமைக்கலாம். அவ்வாறாயின் 125,000 குடும்பங்களுக்கும் தேவைப்படும் மொத்த காணி (125,000 / 20 = 6250) அண்ணளவாக 6500 ஹெக்டேயர் காணிகளே தேவைப்படும்.

இது இப்போது பெருந்தோட்ட கம்பனிகளில் நிர்வாகத்தின் கீழ் உள்ள மொத்த காணிகளின் (118,000 ஹெக்டேயர்) பரப்பில் சுமார் 5.5 வீதமானதாகும்.

பெருந்தோட்டங்களில் உள்ள காணியில் 118,000 ஹெக்டேயர்களில் சுமார் 85,000 ஹெக்டேயர் காணிகள் மட்டுமே பயிர்செய்கைக்காக பயன்படுத்துவதாக பெருந்தோட்ட புள்ளி விபர தொகுப்பில் காட்டப்பட்டுள்ளது. எனவே (118,000 – 85,000 = 33,000) மிகுதியான ????? 33,000 ஹெக்டேயர் காணியில் மேற்குறிப்பிட்டது போல 6500 ஹெக்டேயர் வீடுகள் நிர்மாணிப்பதற்கான அதிகார சபையின் கீழ் கொண்டுவரக்கூடி?????தொழிலாளர்களின் ?????

நன்றி - வீரகேசரி

Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates