நடைபெற்று முடிந்த சனாதிபதி தேர்தலாhனது தேசிய சிறுபான்மை இனங்களுக்கு தீர்க்கமானதெனவும் மலையகத்தமிழரின் அரசியல் வாழ்வில் தீர்க்கமான பாத்திரம் ஒன்றை வேண்டி நிற்கின்றது எனவும் தேர்தலுக்கு முன்னர் நாம் சுட்டி காட்டியிருந்தோம்.
நடைபெற்று முடிந்த தேர்தலில் மலையக தமிழ் மக்கள் வகித்த தீர்க்கமான முடிவானது ஒரு கொடுங்கோலாட்சியை முடிவுக்கு கொண்டு வருவதில் தீர்க்கமான பாத்திரத்தை வகித்துள்ளது.
நுவரெலியா மஸ்கெலியா தேர்தல் தொகுதியில் அளிக்கப்பட்ட 73.01மூ மான 171578 வாக்குகளும் நுவரெலியா மாவட்டத்தில் 63.88மூ மான 272605 வாக்குகள் அளிக்கப்பட்தோடு மைத்திரிபால சிறிசேனவின் வெற்றியை அசைக்க முடியாதாக மாற்றியமைக்கப்பட்டது. அத்தேடு மகிந்த சாம்ராஜ்யத்தை தலைகீழாக சரித்ததில் மலையக தமிழரின் பாத்திரம் தீர்க்கமானதாகின்றது.
மலையக தமிழ் மக்கள் செறிவாகவும,; கணிசமான எண்ணிக்கையாகவும் வாழும் தேர்தல் தொகுதிகளில் மைத்திரிபால சிறிசேனவின் வெற்றியை நிர்ணயிப்பதில் மலையக தமிழரின் வாக்குகள் வகித்துள்ள பாத்திரத்தை பின்வரும் அட்டவனை எடுத்து காட்டுகின்றது.
இத்தேர்தலில் மலையக மக்கள் வகித்த பாத்திரம் மழுங்கடிக்கப்பட்டு எவ்வித கொள்கை கோட்பாடுகளும் அற்ற வாக்கு வியாபாரிகளும் தாமே வெற்றியின் பங்காளர்கள் என உரிமை கோருவது வெட்கக்கேடானது மட்டுமல்ல இவர்கள் ஆட்சியின் பங்காளிகளாக அலங்கரிப்பது மேலும் அருவருப்பானதாகும்.
சமூக சனநாயகத்தை நிலைநாட்டும் நோக்குடன் மக்கள் வழங்கிய வாக்குகளை பெற்றுக்கொண்ட சனாதிபதி அவர்கள் தனது வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் உறுதிபூண வேண்டும் என வேண்டுகின்றோம்.
தொகுதி அளிக்கப்பட்ட வாக்குகள் சதவீதம்
நுவரெலியா மாவட்டம்
மஸ்கெலியா 171578 73.01%
ஹங்குராங்கத்தை 36343 59.48%
வலப்பனை 32340 50.59%
மொத்தம் 272605 63.88%
பதுளை மாவட்டம்
பசறை 25598 54.42%
பதுளை 22659 52.41%
ஹளஎல 27797 51.17%
பண்டாரவலை 32766 50.42%
அப்புதளை 28725 58.02%
வெளிமடை 29431 50.68%
மாத்தளை மாவட்டம்
மாத்தளை 36052 52.7%
ரத்தொட்டை 37319 45.52%
கண்டி மாவட்டம்
நாவலப்பிட்டி 40233 54.25%
கம்பளை 45328 56.8%
உடுநுவர 38018 58.71%
யட்டிநுவர 32298 51.19%
மஹநுவர 20316 66.14%
செங்கடகல 36127 57.59%
ஹேவாகெட்ட 28049 52.84%
குண்டசாலை 41238 55.06%
பாதும்பர 37840 57.79%
கேகாலை மாவட்டம்
யட்டியாந்தோட்ட 26970 45.94%
நுவான்வெல்ல 26984 46.06%
தெரனியாகல 23648 44.47%
இரத்தினபுரி மாவட்டம்
ஹெகலியகொட 32106 40.73%
இரத்தினபுரி 43608 43.08%
பெல்மடுல 33095 47.92%
பலாங்கொட 40501 46.84%
ரக்குவானை 38366 46.45%
நிவத்திகல 32188 40.35%
கொழும்பு மாவட்டம்
கொழும்பு வடக்கு 51537 75.07%
கொழும்பு மத்தி 82495 81.28%
பொரலை 31469 66.97%
தெஹிவலை 30995 65.63%
கொலன்னாவ 56835 58.39%
அவிசாவளை 42728 45.03%
கம்பஹா மாவட்டம்
வத்தளை 56541 59.32%
நீர்கொழும்பு 53331 67.10%
கம்பஹா 53922 45.48%
களுத்துறை மாவட்டம்
ஹொரன 42065 41.85%
மத்துகம 38698 45.17%
களுத்துறை 44804 47.49%
அஹலவத்த 33995 42.67%
புளத்சிங்கல 28341 42.66%
-இளம் சமூக விஞ்ஞானிகள் கழகம்- மலையகம்
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...