ஆசிரியர்களின் புதிய சேவை பிரமாணங்களுக்கு அமைவாக அவர்களுக்கான பதவி உயர்வுகள், சம்பள ஏற்றங்கள் என்பன இலங்கையில் பல மாகாணங்களில் குறிப்பிடத்தக்க வகையில் நிறைவேற்றப்பட்டுள்ளன. இந்நிலையில் மத்திய மாகாணத்தில் இதுவரை இவ்விடயம் அமுல் படுத்தப்படாதுள்ளது. இவ்வம்சம் எதிர்காலத்தில் ஆசிரியர்களின் நலனை பாதுகாப்பதாக அமைந்துள்ளமையால் இது தொடர்பான உரிய நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை கல்விச் சமூக சம்மேளனம் சார்பில் பொதுச் செயலாளர் திரு. ஆர். சங்கர மணிவண்ணன் மத்திய மாகாண கல்விச் செயலாளருக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளார். அத்துடன் ஆசிரியர்கள், அதிபர்கள் மற்றும் கல்வித்துறை சார்ந்தவர்களின் நலன் கருதி கல்வி அமைச்சர், கல்வி இராஜாங்க அமைச்சர் ஆகியோரையும் இவ்வமைப்பினர் சந்திக்கவுள்ளனர். அதற்காக அனுமதி கோரிய கடிதங்களும் அனுப்பப்பட்டுள்ளன. கல்விசார் சமூகத்தினரிடமிருந்து எதிர்காலத்தில் முன்னெடுக்கப்பட வேண்டிய செயற்றிட்டங்கள் தொடர்பிலான ஆலோசனைளை, கோரிக்கைகளை இலங்கை கல்விச் சமூக சம்மேளத்தினர் எதிர்பார்க்கின்றனர்.
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...