Headlines News :
முகப்பு » » நய வஞ்சக அரசியலுக்குள் தோட்டத் தொழிலாளர்கள் - ஜே. ஜி. ஸ்டீபன்

நய வஞ்சக அரசியலுக்குள் தோட்டத் தொழிலாளர்கள் - ஜே. ஜி. ஸ்டீபன்


தென்னிந்திய தமிழ்த் திரைப்ப டம் ஒன்றில் வரும் பாடல் ஒன்றின் வரிகள் இப்படித் தான் அமைந்துள்ளன. அதாவது ”ஓட்டுக் கேட்க வரும்போது தாண்டா உன் மேல புதுசாக பாசம் வரும் அந்த நேரம் கொஞ்சம் அசந்தா”…. என்று செல்கின்றது. அந்த பாடல்.

உண்மையில் இந்தியாவை அதுவும் தமிழக அரசியலை முன்னிலைப்படுத்தி மேற்படி திரை ப்பாடல் எழுதப்பட்டிருந்தாலும் இலங்கை அரசியலுக்கு இந்த வரிகள் மிகவும் பொருத்தமானவையாக இருக்கின்றன என்றே கூறத்தோன்றுகிறது.

தேசிய அரசியல் களம் என்றும் மாகாண அரசியல் களம் என்றும் பிரித்து வைத்து பேசப் பட்டுக் கொண்டிருக்கின்ற இன்றைய சமகாலத்து அரசியல் களத்தில் மலையக அரசியல் என்று ஒன்றிருப்பது குறித்தும் அதன் பாவனை கள் தொடர்பிலும் அது சார்ந்த சமூகம் உற்று நோக்காமல் இல்லை.

அரசியல் என்றால் அது ‘அழுக்கு’ என்று கூறுவதுதான் வழமையான வழக்காக உள்ளது. ஆனாலும் அதனை அவ்வாறு சொல்லி விட முடியாது.

பரிசுத்த வேதாகமத்தில் இவ்வாறு பழைய ஏற்பாட்டில் ஒரு வசனம் உயிருள்ளதாய் இருந்து வருகின்றது. அதாவது ‘ஒரு ஊரில் ஒரே ஒருவன் நல்லவனாக இருப்பானேயா னால் அந்த ஊரை அழிவினின்று காப்பேன், என தேவன் கூறுகிறதாக அமைந்துள்ளது.

அவ்வாறு நோக்குகையில் அரசியல் என்பது அழுக்காகவே இருந்தாலும் அதில் ஒரு துளியாய் எங்கோ ஒரு நன்மை அல்லது நல்மனிதம் இருப்பதால் தான் அரசியலும் வாழ்ந்து கொண்டிருக்கிறதோ என்றும் எண்ணத் தோன்றுகிறது.

இங்கு மேலே குறித்துரைக்கப்பட்டது போன்று இலங்கையின் தேசிய அரசியல் களம் எவ்வாறு அவதானிக்கப்படுகிறதோ அதேபோன்று மலையக அரசியல் குறித்தும் அவதா னம் இருக்கின்றது.

இன்றைய நிலையில் இலங்கையின் போக்கானது ஒரு வித பரபரப்புத்தன்மைக்குள் சிக்கிக்கொண்டிருப்பதற்கு காரணம் எதிர்வரும் ஜனவரி மாதம் 8ஆம் திகதி நடைபெறவிருக் கும் ஜனாதிபதித் தேர்தலே ஆகும்.

நாட்டின் சீரற்ற காலநிலை, அடை மழை, மண்சரிவு, வெள்ளம், போக்குவரத்துத்தடை, ஸ்தம்பிதநிலை, தொழில் இழப்பு, உயிரிழப்பு, அகதி நிலை, சொத்துக்கள் இழப்பு, உள்ளிட்டதான இன்னோரன்ன விடயங்களுக்கு மத்தி யில்தான் ஜனாதிபதி தேர்தலுக்கான சூறாவளிப் பிரசாரமும் சூடு பிடித்து தூள் கிளப்பி கொண்டிருக்கிறது.

ஆளும் கட்சியின் சார்பிலும் எதிர்க்கட்சி யின் சார்பிலும் எமது ஏமாளி மக்களிடத்தில் ஏதேதோ பேசி கவிழ்த்து எல்லையில்லா வாக்குறுதிகளும் வழங்கப்பட்டு வருகின்றன.

நாம் ஒவ்வொருவரும் இந்நாட்டின் குடிகள் என்பதாலும் வாக்குரிமையைக் கொண்டிருக்கும் பிரஜைகள் என்பதாலும் எமது வாக்குரிமையைப் பயன்படுத்துவதற்கும் அதனை அர்த்தமுடையதாக்குவதற்கும் கடமையை யும் உரித்தினையும் கொண்டவர்களாய் உள் ளோம்.

இது எண்ணத்தில் மட்டுமல்லாது செயலிலும் இருப்பதே பிரதானமாகும்.
வாக்குரிமை கொண்டிருக்கும் ஒவ்வொரு வரும் முதலில் சிந்திக்கத் தெரிந்தவராய் இருத் தல் வேண்டும். நாட்டு மக்களின் சிந்தனையே செயலுருவம் பெறுகின்றது.

ஆகையினால் அந்த சிந்தனை மிகவும் விவேகமானதாக அமைதல் அவசியமாகும் இதன் போது தான் அது காத்திரமான நகர்வுகளுக்கு உந்தப்படுகிறது.

தீர்மானம் ஒன்றை எடுப்பத்கு முன்பதாக ஒரு முறை அல்ல எத்தனை முறை வேண்டுமானாலும் பரிசீலனை செய்து பார்க்கலாம். அதில் தவறே கிடையாது. ஆனாலும் முடிவு நிலையானதாகவும் அது உயிருள்ளதாகவும் இருத்தல் வேண்டும். அப்படியான நகர்வு ஒன்றை நோக்கியே இன்றைய இலங்கை தேசம் மெதுவாய் அசைந்து கொண்டிருக்கிறது.

தேசம் எதனை விரும்புகிறது? இனங்கள் கட்சிகள் எதனை விரும்புகின்றன என்பதை ஒரு புறம் வைத்து விட்டு மலையக சமூகத்தின் நாளைய நிலைமை என்ன என்பது குறித்தும் இங்கு சிந்தித்துப் பார்க்க வேண்டியுள்ளது.

மஹிந்த – மைத்திரி எனும் இரு துருவங்களு க்கு மத்தியில் நாட்டு மக்கள் சிக்கிக் கொண்டுள்ளனர். மலையகத்தைப் பொறுத்த வரையில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், மலையக மக்கள் முன்னணி மற்றும் தொழிலாளர் தேசிய சங்கம் என்ற ரீதியில் மூன்று கட்சிகள் மக்களிடத்தில் மிக ஆழமாகக் காலூன்றியுள்ளன எனலாம்.

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸானது ஆரம்பம் முதலே ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவுக்கே தமது ஆதரவு என்பதை தெரிவித்து விட்டது. அதே நிலைப்பாட்டில்தான் இன்றும் இருந்து வருகின்றது.

மலையக மக்களின் பிரதான பிரச்சினையான நிரந்தரமானதும் பாதுகாப்பானதுமான தனி வீட்டுத் திட்டம், அடிப்படை சுகாதாரப் பிரச்சினைகள் ஆகியவற்றுக்கு தீர்வு வேண் டும் என்பதே ஆகும்.

தோட்டத்தொழிலாளர்களின் மேற்படி பிரச்சினைகள் தொடர்பில் மூன்று தசாப்த காலங்களாக கோரிக்கைகளாகவும் வலியுறுத்தல்க ளா கவும் முன் வைக்கப்பட்டு வருகின்ற போதி லும் அது ஏறெடுத்தும் பார்க்கப்பட்டாத விடய மாக்கப்பட்டதே வரலாறா கும்.

தோட்டத்தொழிலாளர்களின் வீடில்லாப் பிரச்சினைகளுக்கு தீர்வுகள் காணப்பட வேண் டும் என்று சொல் லப்பட்டு வந்தாலும் மீரிய பெத்த சம்பவம் இடம்பெற்றதையடுத்தே அத ற்கான அழுத்தங்களும் அதிகரித்தன.
எனினும் இரண்டு மாதங்கள் கடந்து விட்ட நிலையில் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை முன்னிலைப்படுத்தியே தற்போது அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. ஏற்கனவே இரண்டு மாதங் கள் ஓடியுள்ள நிலையில் அடிக்கல் நாட்டப்பட்ட வீடுகளை கட்டி முடிப்பதற்கு இன்னும் நான்கு மாதங்கள் காத்திருக்கும் நிலைமையும் உருவாகியுள்ளது. ஆனாலும் நான்கு மாதங்களில் அது நிறைவுறுமா என்பதும் பாதிக்கப்பட்ட மக்கள் எப்போது அந்த வீடுகளுக்கு செல்வர் என்பதும் கடவுளுக்கே வெளிச்சமாகும்.

கடந்த ஒன்பது வருடங்களாக ஆட்சி புரிந்து வரும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தலைமையிலான ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் நீண்டகால பங்காளியாகவும் அதே நேரம் அமைச்சுப்பதவிகளையும் பெற்று செயற்பட்டு வருகின்றமை உலகறிந்த உண்மையா கும்.

இன்றைய அரசாங்கத்தால் 2014 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் 50 ஆயி ரம் வீட்டுத்திட்டம் தொடர்பான முன்மொழிவொன்று முன்வைக்கப்பட்டது.

ஆனாலும் இத்திட்டமானது 2015ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்க ப்படும் வரையில் தூசு தட்டிப்பார்க்கப்படவில்லை என்பதுதான் உண்மை.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முதலாவது பதவிக்காலத்திலும் தனது இரண்டாவது பத விக்காலத்திலும் நிறைவேற்ற முடியாத அதாவது தோட்டத்தொழிலாளர்களுக்கு பெற்றுக்கொடுக்க முடியாதவற்றை தனது மூன்றாவது பதவிக் காலத்தில் பெற்றுத்தருவார் என்பதில் எந்த உத்தரவாதமும் கிடையாது என்பதே பரவலான கருத்தாகும்.
இத்தகைய பல காரணங்கள் இன்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸுக்குள் புகைந்து கொண்டிருக்கின்றன.

மாகாண சபை பிரதேச சபை உறுப்பினர்கள் ஆதரவாளர்கள் மற்றும் செயற்பாட்டு ரீதியிலானோர் என பலரும் ஒருவிதமான அசௌகரியத்துக்குள் இருந்து வருகின்றனர்.

இவ்வாறான நிலையில்தான் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உபதலைவரும் மத்திய மாகாண சபை உறுப்பினருமான எம். உதயகுமார் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸிலிருந்து விலகி ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொண்டுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொண்ட உதயகுமார் இலங்கைத் தொழிலா ளர் காங்கிரஸை விமர்சிப்பதை விரும்பாதவராக உள்ள அதேவேளை மக்களுக்கு அதிகமான சேவையையும் அழுத்தங்கள் இல்லாத பணியையும் முன்னெடுக்கவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் மலையக எதிர்கால சமூகத்தின் கல்வி வளர்ச்சியும் இளைஞர், யுவதிகளுக்கான வேலை வாய்ப்புமே தனது பிரதான இலக்காக உள்ளது எனக் குறிப்பிட்டுள்ள உதயகுமார் தனது அரசியல் அழுக்கற்றதாக இருக்க வேண் டும் என்று விரும்புவதாகவும் கூறியுள்ளார்.

மத்திய மாகாண சபை உறுப்பினர் உதயகுமாரைப் பொறுத்த வரையில் அவர் மக்கள் செல்வாக்கினை அதிகமாகக் கொண்டுள்ளவர் என்பது மத்திய மாகாண சபைத் தேர்தலில் அவர் பெற்றுக்கொண்ட விருப்பு வாக்குகள் பறைசாற்றுகின்றன.

இவ்வாறு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸுக்குள் சிக்கல்கள் அல்லது குழப்பங்கள் இருக்குமிடத்து அவை சரி செய்யப்படுதல் அவசியமாகும். தேர்தலில் யாரை ஆதரித்தாலும் அது இணக்கப்பாட்டின் தீர்மானமாக இரு க்குமானால் சிறப்பாக இருக்கும்.

மேலும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உபதலைவராகவும் மக்கள் செல்வாக்குப் பெற்றவரும் மாகாண சபை உறுப்பினருமானவருமான ஒருவர் கட்சியை விட்டு விலகிச் சென்றமையை அக்கட்சி சாதாரண விடயமாக கொள்வது சாணக்கியமாக அமையாது. அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் இவ்விவகாரம் தொடர்பிலும் இனிவரும் காலங்கள் தொடர்பிலும் தமது கட்சி தொடர்பில் ஊன்றிய கவனம் செலுத்த வேண்டியவராக ஆகியுள்ளார்.

இது இவ்வாறிருக்க, மத்திய மாகாண சபைத் தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு முன்பிருந்தே அரசாங்கத்துடன் உறவுகளைப் பேணிவந்த வர் எனக் கூறப்படுகின்றவரும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் முன்னாள் ஆலோசக ரும் ஐக்கிய தேசிய கட்சியின் மத்திய மாகாண சபை உறுப்பினருமான எஸ். சதாசிவம் ஐக்கிய தேசிய கட்சியிலிருந்து விலகி ஆளும் கட்சியில் இணைந்து கொண்டுள்ளார். இதனை சந்தர்ப்பவாத அரசியல் என்றே கூற வேண்டியுள்ளது.

எதிர்க்கட்சியில் இணைந்து கொள்பவர்களைப் பற்றிய விமர்சனங்கள் பெரிதாக எடுபடாத போதிலும் ஆளும் கட்சியில் இணைந்து கொள்ளும் அரசியல்வாதிகள் தொடர்பான விமர்சனங்கள் மிதமிஞ்சியவையாகவே உள்ளன.

அதேபோன்றுதான் மலையக மக்கள் முன்ன ணி என்றதும் இன்றுவரையில் அமரர் பெ. சந்திரசேகரனின் சிறிப்பு கலந்த சாந்தமான முகமே யாருக்கும் நினைவில் வரும்.

மிகச்சிறந்த தலைவராகவும் அரசியல்வாதியாகவும் அதேநேரம் மக்களின் மனங்களை அறிந்து அவர்களை வென்றவராகவும் திகழ்ந்த அமரர் சந்திரசேகரன் தனது கட்சியின் அடுத்த தலைமைத்துவத்தை உருவாக்காததே அவரில் காணப்பட்ட பெருங்குறைபாடாகும்.

ஜனாதிபதி தேர்தலில் யாரோ ஒருவருக்கு வாக்களிக்க வேண்டும் என்பது தவிர்க்க முடியாத ஒன்றாக இருக்கின்ற போதிலும் இது தொடர்பான தீர்மானம் நிறைவேற்றலின் போது ஏகமாக என்ற சொல்லின் கௌரவம் பாதுகாக்கப்பட வேண்டியுள்ளது.

மலையக மக்கள் முன்னணியானது முதலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவுக்கே ஆதரவு என்ற ரீதியில் தீர்மானித்திருந்த போதிலும் அதற்குள்ளும் பல்வேறு முரண்பாடுகள் இருந்து வந்தன, வருகின்றன.

ஜனாதிபதி மஹிந்தவுக்கு ஆதரவு என முன் னர் தெரிவித்த மலையக மக்கள் முன்னணி பின்னர் பிரதியமைச்சர் பதவியை துறந்து அரசாங்கத்திலிருந்து விலகி எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளரை ஆதரிப்பதாக உத்தியோகபூர்வமாக அறிவித்தது. இவ்வாறு உத்தியோகபூர்வ அறிவித்தல் வெளியிடும் போது அது தலைவர் அறியாதிருக்க சிறிதும் வாய்ப்பிருந்திருக்காது என்பதே உண்மை.

இவ்வாறான நிலையில் கடந்த வாரத்தில் முன்னணியின் தலைவியான திருமதி சாந்தினி தேவி சந்தி ரசேகரன் திடீரென செய்தியா ளர் மாநாடொன்றை கூட்டி தமது கட்சி எடுத்துக்கொண்ட தும் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டதுமான அறவித்தலுக்கு நேரெதிரான வகையில் தனது ஆதரவு ஜனாதிபதிக்கே என்ற ரீதியில் கூறியிருந்தார்.

அத்துடன் கட்சி தாவி தனது கணவரான சந்திரசேகர னின் நற்பெயருக்கு களங்கம் விளை விக்க விரும்பவில்லை என்றும் கூறியிருந்தார். அத்துடன் தனது வீடு ஏலத்தில் போகவிருந்ததான கதையொன்றையும் அவர் கூறியிருந் தார்.

அப்படியெனில் இங்கு என்ன வகையான பிரச்சினை இருக்கிறது என்பதை ஊகித்துக் கொள்ள முடிகின்றது. இன்னும் கூறினால் மேலே கூறப்பட்டது போன்று எதிர்க்கட்சிகளு க்கு தாவுவோரை விட ஆளும் கட்சிக்கு தாவு வோர் தொடர்பில் விமர்சனங்கள் எழுவதை இங்கு நியாயப்படுத்த முடியாமலும் இல்லை.

சாந்தினிதேவியின் நடவடிக்கையினையடு த்து மலையக மக்கள் முன்னணிக்குள் முரண்பாட்டு நிலைமை காணப்பட்டு வருகின்ற அதே வேளை அவரைக் கட்சியின் தலைமைப்பதவியிலிருந்து நீக்கி புதிய தலைவரை நியமிப்பது தொடர்பிலும் ஆராயப்பட்டு ஆலோசிக்கப்ப ட்டு வருகின்றது. எப்படியோ மிக விரைவிலேயே மலையக மக்கள் முன்னணியின் புதிய தலைவர் பெயரிடப்படுவார் என்பதில் சந்தேகமேயில்லை. ஏனெனில் கட்சியின் விதிகளுக்கு அமைவாக செயற்படாத திருமதி சாந்தினிதேவி சந்திரசேகரன் தற்போது அதிருப்திக்குரியவராக ஆக்கப்பட்டுள்ளார்.

ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்பது ஊர் வழக்காகும். அதன்படி மலையக கட்சிகள் எந்தளவு பிரச்சினைகளுக்குள் விழுகின்றனவோ அல்லது முரண்பாடுகளுக்குள் சிக்கிக்கொள்கின்றனவோ அவை அனைத்தையும் திரட்டி அற்ப அரசியல் இலாபம் தேடுகின்ற அநாகரீக அரசியல்வாதிகளும் உள்ளனர்.

தொழிலாளர் தேசிய சங்கம் மலையக மக்கள் முன்னணி ஆகிய மலையக கட்சிகள் இரண்டும் தோட்டத் தொழிலாளர்களுக்கு 7 பேர்ச் காணியுடனான வீடு ஒன்றைப் பெற்றுக் கொடுக்கும் பொருட்டே பொது வேட்பாளர் மைத்திரிபாலவை ஆதரிப்பதாக கூறி வருகின் றன.

இது இவ்வாறிருக்க தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர் பி.திகாம்பரம் தோட்டத் தொழிலாளர்களுக்கு 7பேர்ச் காணியுடனான தனி வீடு குறித்து தொடர்ந்தும் வழியுறுத்தி வருகிறார்.

அதேநேரம் மேற்படி கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்ற நம்பிக்கையிலேயே இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஜனாதிபதியை ஆதரிப்பதற்கு முடிவு செய்துள்ளது.

இந்நிலையில் வெறும் விமர்சனத்தை மட் டுமே மலையக அரசியல்வாதிகள் மீது முன் வைத்து விதண்டாவாதம் பேசி வருகின்ற பிர ஜைகள் முன்னணி, மலையக மக்கள் சார்பில் எத்தகைய கோரிக்கையினை முன் வைத்துள் ளது? நடைபெறப்போகும் ஜனாதிபதி தேர்தலில் அக்கட்சி யாரை ஆதரிக்க போகின்றது என்பது குறித்தும் அக்கட்சி ஆதரவாளர்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பது குறித்தும் அதன் செயலாளர் நாயகம் ஜே.ஸ்ரீரங்கா அறிவிக்க வேண்டும்.

மலையக அரசியல் நாடக மேடையில் இடம் பெறும். அனைத்தையும் மலையக வாக்காளர் கள் கவனத்திற்கொள்ள வேண்டியது அவசிய மாகும். வாக்களிப்பு என்பது அவரவர் உரிமை என்பதால் அது ஒருபோதும் தவிர்க்கப்பட்டு விடக்கூடாது.

மலையக மக்களையே நம்பியிருக்கும் மலையக கட்சிகளின் தலைமைகளின் நாடகங்களையும் நடிப்புக்களையும் அவதானித்து வரு கின்ற மலையக சமூகம் அரசியலில் வஞ்சிக் கப்படுகின்றது. ஓட்டுக்கேட்டு வருகின்ற போது இருக்கின்ற பாசம், பரிவு, இரக்கம் அனைத்தும் பதவி வந்த பின்னர் பறந்தோடி விடுகின்றன. தோட்டத் தொழிலாளர்களே மேற் கூறப்படுகின்ற நயவஞ்சக அரசியலுக்குள் சிக்கிக்கொண்டுள்ளனர். ஆனாலும் அவர்கள் எழுவார்கள். அவர்கள் எழும்போது வீண்பேச்சு அரசியல் வாதிகள் வீழ்வார்கள்.

நன்றி -  ஈகுருவி
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates