(க.கிஷாந்தன்)
தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சினை மீண்டும் உருவாக்கி மிக சிறந்த பொறுப்பான தலைமைத்துவத்தை வழங்கி மலையக மக்களின் எதிர்காலத்தை அமைச்சர் பி.திகாம்பரத்திடம் ஒப்படைத்துள்ளோம் என துறைமுக மற்றும் கப்பல்துறை அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்தார்.
2015 ஆம் ஆண்டிற்கான தைப்பொங்கல் விழா தொழிலாளர் தேசிய சங்கத்தின் ஏற்பாட்டில் ஹட்டன் டீ.கே.டபிள்ய10 மண்டபத்தில் 15.01.2015 அன்று நடைபெற்றபோது அவர் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் அங்கு உரையாற்றுகையில்……
கடந்த தேர்தல் காலத்தில் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன அவர்கள் பிரதமர் ரணில் விக்கிரசிங்க அவர்கள் உள்ளடங்கிய அனைவரினதும் தலைமைத்துவத்தை ஏற்று பாரிய வெற்றியை ஈட்டிகொடுத்ததுக்கும் வடக்கிலிருந்து தெற்கு வரை கிழக்கிலிருந்து மேற்கு வரை நல்லாட்சியுடைய ஒரு சிறந்த அரசாங்கத்தை உருவாக்கும் நோக்கில் ஒத்துழைப்பு வழங்கிய மலையக மக்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன்.
சிங்களம்,தமிழ், மூஸ்லிம், போன்ற அனைத்து இனங்களினதும் அனைத்து மதங்களினதும் அனைத்து நபர்களின் ஒத்துழைப்புடன் புதிய அரசாங்கம் தற்போது உருவாக்கப்பட்டுள்ளது.
கடந்த பல வருடங்களாக மலையகத்தில் வாழும் மக்களுக்கு லயன் வாழ்க்கை மாத்திரமே இங்கு காணப்பட்டது. எமது நாட்டின் பொருளாதாரத்தின் முதுகெழும்பாக விளங்குபவர்கள் மலையக மக்கள் ஆகும். ஆயினும் மலையகத்தில் உள்ள அரசியல்வாதிகள் உங்களுக்கு சிறப்பாக தமது கடமைகளை வழங்கியுள்ளார்களாக என நாம் எண்ணிப்பார்க்க வேண்டும். தேர்தலுக்கு முன்பு நான் அமைச்சர் பி.திகாம்பரத்திடம் தொடர்பு கொண்டு இந்த நிலைமையினை மாற்றுவதற்கு எமக்கு ஒத்துழைப்பை பெற்று தருமாறு கோரியிருந்தேன். இந்த கோரிக்கையை நான் தெரிவித்தபோது அவர் எனக்கு தெரிவித்ததாவது எனக்கு தனிப்பட்ட ரீதியில் எந்தவிதமான வரப்பிரசாதங்களும் தேவையில்லை. அசாதாரணத்திற்குள்ளாகியிருக்கும் எமது மக்களுக்கு 7 பேர்ச் காணியும் அத்துடன் ஒரு வீட்டினையும் கட்டி தரவேண்டும். அவ்வாறான உறுதியை வழங்கினால் நாங்கள் தமக்கு ப10ரண ஒத்துழைப்பை வழங்க தயாராக இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
அந்தவகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவிடமும் பிரதமர் ரணில் விக்கிரசிங்கவிடமும் கலந்துரையாடி இந்த மக்கள் அசாதாரணத்திற்குள்ளாகியுள்ளார்கள் இதனால் இவர்களை இதிலிருந்து விடுவித்து மக்களுக்கு காணியினையும் வீட்டு உரிமையினையும் பெற்று தர வேண்டும் என நாம் வழியுறுத்தினோம். அதன் பிரதிபலனாக இன்று பாரிய வாய்ப்பு உங்களுக்கு கிட்டியுள்ளது.
அதேபோன்று மலையக மக்களுக்கு வாழ்வியல் சூழ்நிலையை மாற்றியமைத்து மிக சிறந்த வசதிமிக்க ஒரு கிராம சூழ்நிலையை உருவாக்கி அதனூடாக பாடசாலை கல்விக்கு, உயர் கல்விக்கு நல்லதொரு வாய்ப்பினை பெற்றுக்கொடுக்கும் முகமாக இந்த சகல விடயங்களையும் எமது ஜனாதிபதி அவர்களது கொள்கை பிரகடனத்தில் நாம் உள்ளடக்கியுள்ளோம்.
அத்தோடு உங்களுக்கு இளமையான தலைமைத்துவம் கிடைத்துள்ளது. உங்களை என்நேரமும் நினைக்கும் தலைமைத்துவம் ஒன்று கிடைக்கப்பெற்றுள்ளது.
முன்னால் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க அவர்கள் ஜனாதிபதியாக கடமையாற்றிய வேளையில் மலையக மக்களுக்கு சேவைகளை புரிவதற்காக தோட்ட உட்கட்டமைப்பு என்ற ஒரு அமைச்சு பதவியை உருவாக்கினார். கடந்த அரசாங்கத்தில் கடந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இந்த அமைச்சினை அகற்றியிருந்தார். அதனால் மலையக மக்களுக்கு பாரிய அசாதாரணம் நிலவியிருந்தது. இந்த அமைச்சினூடாக பெற்றுக்கொள்ளகூடிய சேவைகள் உங்களுக்கு கிட்டவில்லை.
ஆகையால் இதன் பிரதிபலனாக இந்த அமைச்சினை மீண்டும் உருவாக்கி மிக சிறந்த பொறுப்பான தலைமைத்துவத்தை வழங்கி உங்களது எதிர்காலத்தை அந்த அமைச்சரிடம் ஒப்படைத்துள்ளோம் என நான் தெரிவிக்கின்றேன்.
பிரதமர் ரணில் விக்கிரசிங்கவும் இது குறித்து தீர ஆராய்ந்துள்ளார். அவரும் உங்களுக்கு சிறந்த வாழ்வினை வழங்குவதற்காக தற்போது ஒத்துழைப்பு வழங்கி வருகின்றார்.
தற்போது உங்கள் மத்தியிலிருந்து உருவாகிய உங்களது தலைவர் அமைச்சராக உருவாகியுள்ளார். தொடர்ந்து அவரிடம் கோரிக்கைகளை முன்வைத்து உங்களுக்கு தேவையான அனைத்து விடயங்களையும் உட்கட்டமைப்பு வசதிகளையும் ஏற்படுத்தி கொள்வதற்கான வாய்ப்பு கிட்டியுள்ளது என இதன்போது நான் தெரிவிக்கின்றேன் என அவர் தெரிவித்தார்.
நன்றி - www.onlineceylon.com/11002
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...