தற்போது மலையக மக்கள் மீது திடீர் அக்கறை கொண்டு 200 வருடமாக வாழ்ந்து வந்த லயன் வீடுகளை மாற்றி தனி வீடுகளை அமைத்து கொடுப்பதாக தம்பட்டம் அடித்துக் கொள்ளும் மலையக அரசியல்வாதிகள் எங்களது அவல வாழ்க்கையை எப்போது புரிந்துக்கொள்ள போகின்றார்கலோ என புலம்பி தவிக்கின்றனர்.
பூண்டுலோயா சீன் மேற்பிரிவு மக்கள் இத்தோட்டம் நகரத்திலிருந்து சுமார் 8 கிலோ மீற்றர் தூரத்தில் அமைந்துள்ளது.
இங்கு 150 இற்க்கு மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர்.
வெள்ளையர்கள் காலத்தில் கட்டப்பட்ட பழைய லயன் காம்பிராக்களே அதிகமாக உள்ளது. கூரைதகரம் மாற்றப்படாத நிலையில் கூரையின் மேற்பகுதியில் கம்பு, தடிகள், கற்கள் மற்றும் டயர்கள் வைக்கப்பட்டுள்ள நிலையில் மழைக்காலங்களில் மழை நீர் வடியாமல் கறுப்பு றபர் சீட்டுகள் போடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இது இவ்வாருயிருந்தாலும் மலசலகூடம் இல்லாமல் பல இடர்களை சந்திப்பதாக இம்மக்கள் நொந்து போயுள்ளனர்.
மலசல கூடம் கட்டித்ருமாறு தோட்ட நிர்வாகத்தினரிடம் கோரிக்கை விடுத்த போதிலும் நிர்வாகம் தட்டிக் கழிப்பதாக இம்மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
தோட்ட நிர்வாகம் மலசல கூடம் கட்டப் போவதாக கூறி விபரங்கள் சேகரிக்கப்படுகின்றார்களே தவிர நடைமுறைக்கு எதுவும் வரவில்லையென இவர்கள் தெரிவிப்பதோடு இரண்டு வருடங்களுக்கு முன்பு பொது சுகாதார அதிகாரிகளின் மூலம் 50 மலசல கூடம் கட்டி தருவதாக கூறப்பட்டது அதுவும் நடைமுறைக்கு வரவில்லை.
டர்ஸ்ட் நிறுவனம் நடவடிக்கை எடுப்பதாக கூறப்பட்டது.
அதுவும் வாக்குறுதிகள் மாத்திரம் தான் எவ்விதமாற்றமும் இல்லை.
திரு.புண்ணியமூர்த்தி,
நாங்கள் வாழும் குடியிருப்பை பற்றி கூறவே வெட்கமாகவே உள்ளது. கூரை தகரம் மாற்றப்படாமையால் தற்போது கூரை தகரம் சல்லடைப்போல் காணப்படுகின்றது. மழைக்காலங்களில் வீட்டில் உள்ள பாத்திரங்களை
கொண்டுதான் மழை நீரை அப்புறப்படுத்துகின்றோம். அத்தோடு தகரத்தின் மேல் கறுப்பு றபர் சீட் போட்டுள்ளோம். தொழிலுக்கு சென்று வீடுவந்து நிம்மதியாக உறங்க முடியாமல் தவிக்கின்றோம்.
தகரத்தினை மாற்றி தருமாறு தோட்ட அதிகாரியிடம் பல முறை கேட்டபோதும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையென தெரிவிக்கின்றார்.
திரு.யுவராஜ்
எங்களுடைய தோட்டத்தில் பாரிய பிரச்சினை என்றால் அது மலசல கூடம் தான் தோட்ட நிர்வாகம் இந்தா கட்டித் தாறோம் அந்தா கட்டி தாறோம் என கூறுகின்றார்கள். ஆனால் எதுவும் நடந்தப்பாடில்லை.
லயத்தில் இருபக்கங்களிலும் வீடுகள் உள்ளதால் மலசல கூடம் கட்டிக்கொள்ள முடியவில்லை. தோட்ட நிர்வாகம் மலசலகூடம் கட்டுவதற்கு இடத்தினை வழங்க மறுக்கின்றது. பொது சுகாதார வைத்தியர்களால் 50 மலசல கூடம் நிர்மானித்து தருவதாக சொன்னார்கள். அதுவும் நடைபெறவில்லை டிரஸ்ட் நிறுவனம் இவ்விடயத்தில் அக்கறை காட்டுவதாக தெரியவில்லை.
வாக்கு கேட்டுவந்தவர்களும் தலையிட்டதாக இல்லை. தற்போது இதனால் இரவு வேலைகளில் பல சிரமங்களை எதிர் நோக்கி வருவதாக இவர் தெரிவிக்கின்றார்.
வயது போன பூங்கொடி அம்மா தெரிவிக்கையில்,
எங்களுக்கும் வயது போய்விட்டது முன்ன சொன்ன பல்லவி தான் இப்போவும் எனது காதில் விழுகின்றது. நாங்கள் தான் கஸ்டப்பட்டோம். எங்களுடைய பிள்ளைகள் ஒருநாளும் இவ்வாறு கஸ்டப்படகூடாது லயத்தில் வாழ்ந்தவர்களுக்கு தான் எங்களின் துயரம் புரியும் மற்றவர்களுக்கு எங்க புரிய போகின்றது.
தோட்டத்துக்கு வரும் அதிகாரிகளிடம் கையேந்தி கேட்டு கேட்டு வெறுத்து போய்விட்டது. அத்தோடு பாதையும் மிகவும் மோசமான நிலையில் உள்ளது.
2 கிலோ மீற்றர் தூரம் வைத்தியசாலைக்கு செல்ல வேண்டும் வாகன வசதிகள் இல்லை தேர்தல் காலங்களில் பல கோரிக்களை கொடுத்தோம் அப்போது வந்தவர்கள் நாங்கள் இருக்கின்றோமா என்பதனையும் மறந்து விட்டார்கள் எனவே எங்களுடைய பிரச்சினைகளை இனங்கண்டு தீர்த்து தாருங்கள் என அழுது புலம்புகின்றனர்.
நன்றி - Tamilcnn
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...