‘மலையகப் பல்கலைக்கழகம் தேவையும் நியாயப்பாடுகளும்’ எனும் தலைப்பில் மலையக சமூக ஆய்வு மையம் ஏற்பாடு செய்திருந்த சிறப்பு கலந்துரையாடல் அண்மையில் அருட்தந்தை மா. சத்திவேல் தலைமையில் கொழும்பிலுள்ள என். எம். பெரேரா நிலையத்தில் இடம் பெற்றது.
மலையகக் கல்வியில் ஆர்வம்; கொண்ட மலையகத்தவர்கள், மலையகத்திற்கு வெளியிலிருந்து என பெருமளவினரின் பங்குப்பற்றுதலுடன் இடம்பெற்ற இந்நிகழ்வு சிவம் பிரபாகரனின் வரவேற்பு உரைவுடன் ஆரம்பமானது. தலைமை உரையை அருட்தந்தை மா. சத்திவேல் நிகழ்தினார். அவர் தனதுரையில் பல்கலைக்கழகம் என்பது ஒரு இனத்தின் அபிவிருத்தி, வளர்ச்சி, சமூக விடுதலையுடன் தொடர்புபட்டது என தெர்வித்தார்.
தொடர்ந்து எடுத்துரைப்பினை பேராசிரியர் சோ. சந்திரசேகரன் மேற்கொண்டார். அவர் தனது எடுத்துரைப்பிலே மலையகத்திற்கானப் பல்கலைக்கழகமொன்று அமையும் பட்சத்தில் எவ்வாறு அது சமூக அபிவிருத்தியிலும்இ சமூகத்தினுடைய இருப்பிலும் பங்களிப்பு செலுத்தும் என்பதை விரிவாக விளக்கினார். புதிய தொழில் வாய்ப்புகள் உருவாக்கப்படுவதுடன் ஆய்வுகளை மேற்கொள்ளும் இடமாகவும் மலையக மக்களின் வரலாற்றையும் அடையாளங்களை பாதுகாக்கும் இடமாகவும் அது அமையும் எனவும் குறிப்பிட்டார். மேலும் மலையகப் பல்கலைக்கழகமானது ஏனையப் பல்கலைக்கழகங்களுக்கு ஒத்ததாக இருக்க தேவையில்லை எனவும் அது மலையகம் பற்றிய ஆய்வுக்கான ஒரு தளமாக இருக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
அவரை தொடர்ந்து பேராசிரியர் தை. தனராஜ் தனது பதிலுரையில் மலையகப் பல்கலைக்கழகம் என்ற கோட்பாட்டை எவ்வாறு நடைமுறைப்படுத்துவது என்பதை விரிவாக விளக்கினார். இதற்காக அவர் மக்கள் இயக்கத்தின் தேவைஇ ஒரு ஆய்வுக் குழுவை அமைத்தல் தகவல் திரட்டுதல்இ இந்த தேவைகளை உணரக் கூடிய வேறு சக்திகளை அடையாளம் கண்டு இணைத்துக் கொள்ளுதல் என்ற செயற்பாடுகளின் அவசியத்தை விளக்கினார்.
அவரது பதிலுரையை தொடர்ந்து கலந்துரையாடல் இடம் பெற்றதுடன் குழுக்களுக்கான உறுப்பினர்களும் தெரிவு செய்யப்பட்டனர். தகவல் திரட்டும் குழுவிற்கு பேராசிரியர் சோ. சந்திரசேகரன் பேராசிரியர் தை. தனராஜ் அரசியல் ஆய்வாளர் சோதிலிங்கம் ஆகியோருடன் தேசிய கல்வி நிறுவகத்தை சேர்ந்த துணைசிங் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர். இணைப்பாளர்களாக நுவரெலியா மாவட்டத்திற்கு சுசிகுமாரும்இ பதுளை மாவட்டத்திற்கு கௌதமனும் கண்டி மாவட்டத்திற்கு பெ. முத்துலிங்கமும் மாத்தளை மாவட்டத்திற்கு பஞ்சவர்ணமும் தெரிவு செய்யப்பட்டனர். அதனை தொடர்ந்து சுசிகுமாரின் நன்றி உரையுடன் நிகழ்வு இனிதே நிறைவு பெற்றது.
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...