Headlines News :
முகப்பு » , » நிபந்தனையுடன் ராஜதுரை ஆதரவு

நிபந்தனையுடன் ராஜதுரை ஆதரவு


நாடாளுமன்ற உறுப்பினரும் மலையக அரசியல் வாதிகளில் ஒருவரும் சட்டத்தரனியுமான திரு.இராஜதுரை அவர்கள் நேற்று மாலை நுவரெலியாவில் உள்ள விடுதியொன்றில் மாலை 7.00 மணியளவில் கூட்டமொன்றினை ஏற்பாடு செய்திருந்தார்.

இக்கூட்டத்திற்கு மலையகத்தின் முக்கிய பிரமுகர்கள். புத்திஜீவிகள். அரச உத்தியோகஸ்தர்கள். சிவில் அமைப்புகளின் உயர்மட்ட பிரமுகர்கள்,சமூக நலன்விரும்பிகள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர் இக்கூட்டம் மாலை 7.00 மணியளவில் தொடங்கி அதிகாலை 4.00 மணிவரை நீண்ட நேர கலந்துரையாடலாக இடம்பெற்றிருந்தது. இதன்போது எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு தான் தனது ஆதரவினை யாருக்கு வழங்குவது? எந்த நிபந்தனையின் அடிப்படையில் வழங்குவது தொடர்பான கூட்டமாகவே இது அமைந்திருந்தது.

இதன் போது தான் எதிர்கட்சியில் இணைந்து தனது ஆதரவினை வழங்கப்போவதாகவும் அத்தகைய ஆதரவுக்கு பல நிபந்தனைகளை முன்வைத்து இணையப்போவதாகவும் தெரிவித்துள்ளார். அதில் மலையகத்தின் நீண்ட கால தீர்க்கப்படாத மக்களின் வாழ்வாதார பிரச்சினை, கல்வி சுகாதாரம் , இளைஞர்களின் வேளையில்லா பிரச்சினை, சம்பளப் பிரச்சினை உட்பட்ட இன்னும் பல முக்கிய விடயங்களை நிபந்தனைகளாக முன்வைத்து அதனை நிவர்த்திக்க தனது ஆதரவினை வழங்கப்போவதாக தீர்மானிக்கப்பட்டதாக கூறியுள்ளார்.

தான் எதிர்கட்சியில் இணையப்போவதற்கான உத்தியோக பூர்வ அறிவித்தலை நாளைய தினமான திங்கட்கிழமை ஊடகவியலாளர் சந்திப்பில் அறிவிக்கப்போவதாக தெரிவித்துள்ளார்.

இத்தகைய முடிவானது மலையகத்திற்கு எதிர்வரும் காலங்களில் மக்களுக்கு தீர்க்கமானதும், சுபீட்சமானதுமான வாழ்வை பெற்றுத் தருமாக இருந்தால் அது வரவேற்கக்கூடியதே. இவ்வாறு முடிவுகளை ஆலோசனையின் அடிப்படையிலும், பல புத்திஜீவிகளின் அபிப்பிராயங்களின் அடிப்படையிலும் எட்டப்படுவது மலையகத்தின் எல்லா அரசியல் வாதிகளுக்கும் ஒரு முன்னுதாரணம் ஆகும். மக்களின் பிரதிநிதிகள் மக்களின் கருத்துகளுக்கு முன்னுரிமை அளிப்பதே மாபெரும் ஜனநாயகமாகும்.

இத்தகைய நிபந்தனைகளுடன் கூடிய இணைவுக்கு வெற்றி கிட்டுமானால் மலையக விடியழுக்கு ஒரு ஆரம்பமாகும். ஆயினும் தமது அரசியல் சுய இலாபத்திற்காகவும், தனது இன்ப வாழ்க்கைக்காகவும் மக்களை ஏமாற்றி அவர்களை சதுரங்க போட்டியில் பிணையாக வைத்து விளையாடும் விளையாட்டை தவிர்த்து தான் மக்கள் பிரதிநிதிகள் என்ற உணர்வுடன் செயற்படுவதையே நாங்கள் வரவேற்கின்றோம்.

இத்தகைய முடிவானது ஏனைய மலையக கட்சிகளுக்கு முன்னோடியாக அமையும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. இந்த அனுபவத்தை துணையாக கொண்டு ஏனைக மலையக தலைவர்களும் தமது பதவிகளை கட்டிகாக்காமல் சந்தர்ப்பத்தை உரிய முறையில் பயன்னடுத்துவதால் மலையக மக்களின் பிரச்சினைகளுக்கு ஒரு தீர்க்கமான முடிவினை பெற்றுத்தரக்கூடும்.
நன்றி - Pasumai Thayagam Pasuma
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates