Headlines News :
முகப்பு » » வெளியிடப்படாத விபரங்கள்

வெளியிடப்படாத விபரங்கள்


மீரியபெத்த மண்சரிவில் புதையுண்டவர்களை கண்டுப்பிடிப்பதற்கான மீட்புப்பணி நடவடிக்கை கைவிடப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மக்களின் வேண்டுகோளுக்கிணங்கவே தேடுதல் நடவடிக்கை கைவிடப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 29ஆம் திகதி இடம்பெற்ற இந்த மண்சரிவில் சிக்கியுள்ளவர்கள் ஏறக்குறைய 3 வாரங்களாகின்ற நிலையில் அவர்கள் உயிருடன் இருப்பதற்கான வாய்ப்பில்லை என்பது உண்மைதான். ஆனால் மண்ணில் புதைந்து மீட்கப்படாதவர்கள் எத்தனைபேர் என்பதை வெளிப்படுத்தவேண்டிய பொறுப்பு உரிய தரப்பினருக்கு உள்ளதல்லவா?

ஓர் ஊகத்தின் அடிப்படையில் '34 பேர்' தான் மண்ணில் புதையுண்டுள்ளார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் உத்தியோகபூர்வமான ஓர் அறிக்கை வெளியிடப்பட வேண்டும் என்பதே அனைவரினதும் எதிர்பார்ப்பாகும்.

அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எத்தனை பேர், மண்ணில் புதையுண்டவர்கள் எத்தனை பேர், சடலங்களாக மீட்கப்பட்டவர்கள் எத்தனை பேர் போன்ற விபரங்களை பற்றி இதுவரை முழுமையான அறிக்கை வெளியிடப்படவில்லை.

இதுதொடர்பான விபரங்கள் மீரியபெத்த தோட்ட காரியாலயத்தில் நிச்சயமாக இருக்கும். தவிர, பிரிவு கிராம உத்தியோகத்தரிடமும் இருக்கக்கூடும். எனவே, இந்த விபரங்களை வெளியிடுவதில் சிரமங்கள் இருக்கப் போவதில்லை. என்ன காரணத்துக்காக இந்த விபரங்கள் இதுவரை வெளியிடப்படாதுள்ளது என்பது மர்மமாகவே இருக்கின்றது.

எனவே, மீரியபெத்த தோட்ட நிர்வாகம் இது தொடர்பான விபரங்களை வெளியிட வேண்டும். அல்லது அரசாங்கம் இதற்கு ஆவன செய்ய வேண்டும். அதனடிப்படையில் மண்ணில் புதையுண்டு காணாமல் போனவர்கள், பாதிக்கப்பட்டவர்கள், சடலங்களாக மீட்கப்பட்டோர் போன்றவர்களின் விபரங்களை அறிந்துக்கொள்ளக்கூடியதாக இருக்கும்.

அதன்பின்னர் தேடுதல் நடவடிக்கை கைவிடப்பட்டு மண்சரிவில் புதையுண்டு உயிரிழந்தவர்கள் மற்றும் காணாமல் போனவர்களின் பெய ர்கள் பொறிக்கப்பட்ட நினைவுச்சின்னம் அமைப்பதும், அந்த இடத்தை தனியானதொரு பிரதேசமாக பிரகடனப்படுத்துவதும் ஏற்புடையதாக இரு க்கும் என்பதே மீரியபெத்தயில் பாதிக்கப்பட்ட மக்களின் கருத்தாகும்.

அத்துடன் பாதிக்கப்பட்ட மக்களின் வேண்டுகோளுக்கிணங்கவே தேடுதல் நடவடிக்கை கைவிடப்படுவதாகக் கூறப்பட்ட போதிலும், மண் சரிவில் சிக்கிப் புதையுண்டவர்களின் சடலங்களை கண்டுபிடிக்கும் நட வடிக்கை தொடர்ந்து முன்னெடுக்கப்பட வேண்டுமெனவும் அதற்கு ஒத்துழைக்க தயாராக இருப்பதாகவும் மற்றொரு சாரார் தெரிவித்ததை அவதானிக்கக்கூடியதாக இருந்தது.

எனவே, உண்மை விபரங்கள் வெளியிடப்படுமா? இதுவே மக்களின் ஆதங்கம்.

நன்றி - வீரகேசரி
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates