Headlines News :
முகப்பு » » பெண்பிள்ளைகள் மேலதிக பாதுகாப்புக்கு உரிமையுடையவர்கள் என்பதை உணர வேண்டும் - எஸ்.வடிவழகி

பெண்பிள்ளைகள் மேலதிக பாதுகாப்புக்கு உரிமையுடையவர்கள் என்பதை உணர வேண்டும் - எஸ்.வடிவழகி


ஒக்டோபர் 11 சர்வதேச பெண்பிள்ளைகள் தினம் நினைவாக

அனைத்துலக சிறுவர் தினம் ஒக்டோபர் மாதம் முத லாம் திகதி கொண்டாட ப்படுவதை அனைவரும் அறிவார்கள். பொதுவாக சிறுவர்களின் நலன், அவர்க ளின் பாதுகாப்பு, மேம்பாடு ஆகியவற் றில் சமூகத்தின் கவனத்தை ஈர்ப்பதற்காக இந்த தினம் கொண்டாடப்படுகிறது. சிறுவர்கள் மீது மேற்கொள்ளப்படும் அத்துமீறல்கள், துஷ்பிரயோகங்கள் அதிகரிக்கும் போது சிறுவர் தினம் கொண்டாடுவதில் சமூகம் காட்டும் அக்கறையும் அதிகரித்து வருகிறது. சிறுவர்கள் தொடர்பாக ஆய்வு செய்தவர்கள், பாலியல் ரீதியான துஷ்பிரயோகங்களுக்கு உட்படுத்தப்படும் ஆண் பிள்ளைகளினதும் பெண்பிள்ளைகளினதும் எண்ணிக்கை சமமாகவே இருப்பதாகவும் ஆனாலும், பெண்பிள்ளைகள் பாலியல் ரீதியில் துஷ்பிரயோகங்களுக்கு உட்படுத்தப்படுவது குறித்தே அதிக கரிசனை காட்டப்படுவதாகவும் கூறப்படுகி றது. பெண்பிள்ளைகள் பாலியல் ரீதியான துஷ்பிரயோகங்களுக்கு உட்படுத்தப் படு ம்போது உடல் ரீதியாகவும், உள ரீதியா கவும், சமூக ரீதியாகவும் அதிக பாதிப்புக்குள்ளாகிறார்கள். இதைவிட கல்வி, முன்னேறுவதற்கான வாய்ப்புக்கள் ஆகியவற்றில் அதிகமான பாதிப்புக்குள்ளாவது பெண் பிள்ளைகளே. எனவே பெண்பிள்ளைகள் தொடர்பாக சமூகம் அதிக கவன மும் கரிசனையும் காட்ட வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு ஐ.நா. சபை 2012ஆம் ஆண்டு முதல் ஒக்டோபர் மாதம் 11ஆம் திகதி யை உலக பெண்பிள்ளைகள் தினமாக (International Girl child day) அல்லது சிறுமியர் தினமாக பிரகட னப்படுத்தியுள்ளது. அதன்படி மூன்றாவது வருடமாக இம்மாதம் 11ஆம் திகதி சர்வதேச பெண் பிள்ளைகள் தினமாக கொண்டாடப்பட்டது.

மற்றைய துறைகளில் உள்ள பெண்பிள்ளைகளை விட பெருந்தோட்டப் பகுதிகளில் அண்மைக்காலம் வரையில் பெண்பிள்ளைகளின் உரிமைகள் மிக மோசமான முறையில் மீறப்பட்டு வந்தன. அவர்கள் மீது பல்வேறு உடல் ரீதி யானதும் பாலியல் ரீதியானதுமான துஷ்பிரயோகங்கள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. பெண்பிள்ளைகளே அதிகமாக வெளியிடங்களுக்கு வேலைக்கு அமர்த்தப்பட்டார்கள். படிப்படியாக இந்த நிலைமையில் மாற்றம் ஏற்பட்டு வருகின்றது. உண்மையாகிலும் இந்த நடைமுறை முற்றாக மாறிவிட்டது என்று சொல்ல முடியாத அளவுக்கு அவ்வப்போது பெண்பிள்ளைகள் வேலைக்கு அமர்த்தப்படுவது, பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்தப் படுவது தொடர்பான சம்பவங்கள் நடக்கின்றன.

குடும்பங்கள் பொருளாதார ரீதியான பாதிப்பு உள்ளாக்கப்படும் போது பெண்பிள்ளைகளின் கல்விக்கு முடிவுகட்டும் நடைமுறைகூட இதுவரையில் பெருந்தோட்டத்துறையில் நடைமுறையில் உள்ளது. பெண்பிள்ளைகள் வயதுக்கு வரும் போது அவர்களின் கல்வியில் பாதி ப்பை ஏற்படுத்தும் வகையில் நீண்ட காலம் அவர்கள் பாடசாலைக்கு செல்வ தில் இருந்து தடுக்கப்பட்டார்கள். இந்த நிலைமையிலும் இப்போது முன்னேற் றம் ஏற்பட்டாலும் கூட இதுவிடயத்திலும் பெண்பிள்ளைகளுக்கு நியாயம் வழங்கப்படுகிறது என்று சொல்ல முடியாதுள்ளது.

விளையாடுவது எல்லா பிள்ளைகளின் உரிமை என்பது ஏற்றுக்கொள்ளப்பட்டா லும் கூட பெருந்தோட்டங்களிலுள்ள பெண்பிள்ளைகளுக்கு இந்த உரிமை கிடைக்கவுமில்லை. அதற்கான வசதியை செய்து கொடுக்க வேண்டும். பெண்பிள்ளைகளுக்கு உணவு, ஓய்வு வழங்குதல் என்பன போன்ற பல விடயங்களிலும் பாகுபாடு காட்டப்படுகிறது.

இதைவிட அண்மைக்காலமாக பெருந் தோட்டப்பகுதிகளில் பாடசாலைகளிலும் கூட பெண்பிள்ளைகள் மீது பாலியல் ரீதியிலான துஷ்பிரயோக சம்பவங்கள் அதிகரித்து வருவது தொடர்பான செய்தி கள் வந்த வண்ணம் உள்ளன. ஒரு சில ஆசிரியர்களின் வக்கிரமான செயல்பாடுகளை வெளியில் சொல்ல முடியாத நிலையில் பல பெண்பிள்ளைகள் இருக்கிறார்கள் என்பது பலருக்கு தெரியாத விடயமாக இருக்கலாம். ஆனால், அது தான் உண்மை. பெண்பிள்ளைகளுக்கு பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிக்க வேண்டிய பாடசாலைகளில் பெண்பிள்ளைகளை உடல் ரீதியாகவோ உளரீதியாகவோ பாதிப்பை ஏற்படுத்தும் ஆசிரியர்கள் எவ்வாறு பாடசாலைகளில் பணியாற்ற தொடர்ந்து அனுமதிக்கப்படுகிறார்கள் என்ற கேள்வியை சமூகம் இன்னும் ஆணி த்தரமாக கேட்காமல் இருப்பது ஏன்? புரியாத புதிராகவே இருக்கிறது.

இதற்கெல்லாம் காரணம் பெண்பிள் ளைகளுக்கும் சம உரிமை உண்டு என்ப தையும் அவர்கள் மேலதிக பாதுகாப்பி ற்கு உரிமையுடையவர்கள் என்பதையும் சமூகம் இன்னும் ஏற்றுக்கொள்ளாமையே காரணமாகும்.
இந்த விடயம் தொடர்பாக சமூகம் ஆக்கபூர்வமாக சிந்திக்க வேண்டும் என்பதாலேயே சர்வதேச பெண்பிள்ளைகளுக்கான தினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த பின்னணியில் பெண் பிள்ளை களை பாதுகாப்பது ஒரு சமூக ரீதியான பொறுப்பாகும் என்பதை வலியுறுத்தும் முகமாக “பெண்பிள்ளைகள் மேலதிக பாதுகாப்பிற்கு உரிமையுடையவர்கள்’;” என்ற தொனிப்பொருளில் பிரிடோ நிறு வனமும் பிரிடோ சிறுவர் கழகங்களும் இம் மாதம் முழுவதும் பல்வேறு நிகழ்வு களை நடத்தவுள்ளன.

மலையக சமூகம் தமது சமூகத்திலுள்ள பெண்பிள்ளைகள் சம உரிமையுள்ளவர்க ளாக வாழும் சூழலை அவர்களுக்கு ஏற் படுத்திக் கொடுப்பது அவசியம் என்பதை உணர வேண்டும்.

நன்றி - வீரகேசரி
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates