Headlines News :
முகப்பு » , , » ஸி.வி.வேலுப்பிள்ளையின் கவிதைகளை நவீன நடையில் மொழிபெயர்த்தல் - மல்லியப்புசந்தி திலகர்

ஸி.வி.வேலுப்பிள்ளையின் கவிதைகளை நவீன நடையில் மொழிபெயர்த்தல் - மல்லியப்புசந்தி திலகர்


‘புழுதிப்படுக்கையில் புதைந்த என் மக்களை போற்றும் இரங்கற் புகழ்; மொழியில்லை.. என்று தொடங்கும் ஸி.வி வேலுப்பிள்ளையின் மலையக மக்கள் பற்றிய கவிதை வரிகள் மிகவும் பிரபலமானவை. அவை இலங்கை பாடாசலை பாடவிதானத்தில் சேர்க்கப்பட்ட வரிகள். இதனை வைத்தே ஸி.வியை வாசிக்கப் பழகினோம் என்பதை மறுக்க முடியாது.

இவை ‘இலங்கைத் தேயிலைத் தோட்டத்திலே ..’ எனும் சக்தீ பால அய்யாவின் தமிழாக்கவரிகள். அண்மையில் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றிற்காக சென்றியிருந்தபோது அதன் நிகழ்ச்சித் தயாரிப்பாளர் (வசந்தம் தொலைக்காட்சி - கவிஞர் அஸ்மின்) திரும்பத் திரும்ப என்னிடம் கேட்டார்: இதனை ஸி.வி எழுதவில்லையா..மொழிபெயர்ப்பா என்று. நானும் ‘ஆம்’ என்றேன்.

அந்தளவுக்கு கவித்துமிக்கதாக தமிழாக்கம் செய்திருப்பார் சக்தீ பால அய்யா. இது குறித்து சக்தீ பால அய்யாவிடம் கேட்டபோது சொன்னார்: நான் வரிக்குவரி மொழிபெயர்ப்பு செய்யவில்லை. ஸி.வியின் ஆங்கில கவிதைகளான in ceylons Tea Garden என்னில் ஏற்படுத்திய பாதிப்பு காரணமாக அதனை ‘தமிழாக்கம்’ செய்தேன். 

எனவே இங்கு நடந்திருப்பது ‘மொழிபெயர்ப்பு’ அல்ல ‘தமிழாக்கம்’ என்பதை சக்தீ பால அய்யா தெளிவாகவே சொல்லி வைத்துள்ளார். தனியே ஒரு மொழிபெயர்ப்பாளராக மாத்திரம் சக்தீ பால அய்யா செயற்பட்டிருப்பாரானால் ஸி.வியின் கவிதைகள் இவ்வாறு தமிழில் ஜீவிதம் பெற்றிருக்க முடியாது. சக்தீ பால அய்யாவும் ஒரு தேர்ந்த கவிஞர் என்றவகையில் கவித்துவ உள்ளத்தோடும் இலக்கிய நேர்மையோடும் ஸி.வியின் கவிதா சிந்தனையை ஆங்கிலத்தில் இருந்து தமிழில் தந்தவர் சக்தீ பால அய்யா. இந்த தமிழாக்க முயற்சிகள் நடந்த காலம் 1954- 1969 வரையான காலப்பகுதி.


1969 ல் ‘செய்தி’ பிரசுரத்தார் தமிழாக்க கவிதைகளை தனியான நூலாக வெளியிட்டதன் பின்னரே ஸி.வியை தமிழ் இலக்கிய உலகம் கண்டுகொண்டது. அதுவரை அவர் ஆங்கில இலக்கிய சூழலில் மாத்திரமே அறியப்பட்டுள்ளார். எனவேஸி.வியைத் தமிழுக்கு அறிமுகப்படுத்திய பெருமையும் சக்தீக்கு ண்டு. பி;னனாளில் பொன்.கிருஸ்ணசாமி (பத்திரிகையாளர்), எஸ்.செபஸ்தியன் (ஆசிரியர்) மு.சிவலிங்கம் (எழுத்தாளர்) போன்றோர் ஸி.வியின் படைப்புகளை தமிழாக்கம் செய்தனர். ஸி.வி அவர்களே நேரடியாக தமிழில் எழுதவும் தொடங்கினர். அவை நாவல்கள், கட்டுரைகளாக இருந்தனவே தவிர ஸி.வி. தமிழில் கவிதைகள் எழுதியதாக தகவல்கள் இல்லை. 

இந்த கட்டத்தில்தான் சக்தீ பால அய்யா எனும் மொழிபெயர்ப்பாளனான கவிஞனின் சீரிய பணி பற்றி சிந்திக்க வேண்டியுள்ளது. இது பற்றி நேரடியான உரையாடல்களை நான் சகதீ பால அய்யா அவர்களுடன் செய்துள்ளேன்.

ஸி.வி யின் கவிதைகள் மீது ஆர்வம் கொண்ட எனக்கு, தேயிலைத் தோட்டத்திலே … எனும் நூலை முழுமையாக வாசிக்கத் தேடிய போது, அது கிடைக்காதபொது, சிரமங்களுக்கு மத்தியில் கிடைத்த நூல் பாதி எரிந்த பிரதியாக அமைந்தபொது அதனை மீள்பதிப்பு செய்ய நினைத்தமையின் அடுத்த பரிமாணமே அம்மாவின் பெயரில் ஆரம்பிக்கப்பட்ட ‘பாக்யா பதிப்பகம்’. 1990 களின் பிற்கூறுகளில்   எனக்கு ஏற்பட்ட சிந்தனையை 2000 ஆம் ஆண்டின் பிற்கூறுகளிலேயே நடைமுறையாக்கும் சாத்தியம் கிடைத்தது. 

எனது இந்த முயற்சிபற்றி கேள்விபட்டவுடன் மலையக இலக்கிய சூழலில் ஒரு சலசலப்பு ஏற்பட்டது. சகதீ பால அய்யா ஸி.வியின் முழுமையான வீச்சை வெளிக்கொணரவில்லை என்பதுதான் அந்த சலசலப்பு. ஹட்டனை தளமாகக் கொண்டு (இயங்கிய) இயங்கும் ‘நந்தலாலா’ இலக்கிய நண்பர்கள் இதுபற்றி தமது இதழிலே குறிப்பிட்டது மாத்திரமின்றி ஆரம்ப வரிகளை நவீன வடிவில் தரவும் முயன்றனர்.
இருந்துவிட்டு எப்போதாவது தலைகாட்டி மறையும் ‘நந்தலாலா’ அந்த பணியை இன்றுவரை நிறைவ செய்யவில்லை. குறிப்பாக ஸி.வி. ஆங்கிலத்தில் குறிப்பிடும் வுழஅ…வுழஅ வுhசழடி எனும் தப்பொலியை சக்தீ ‘தப்பு’ குறிப்பிடாமல் ‘பேரிகை’ என்று குறிப்பிடுவதில் இருந்தே ‘தவறு’ ஆரம்பித்துவிவிடுவதாக ‘குற்றச்சாட்டு’ எழுந்தது. 

1969 க்குப்பிறகு இன்றுவரை இந்த சர்ச்சை தொடர்கிறதே தவிர இந்தப்ணியில் யார் அர்ப்பணிப்போடு ஈடுபடுவது எனும் கேள்வி இருந்தது. ‘பாட்டெழுதி பேர்வாங்கும் புலவர்களும் இருக்கிறார்கள். குற்றம் கண்டுபிடித்தே பேர்வாங்கும் புலவர்களும்  இருக்கிறார்கள்’ எனும் திருவிளையாடல் திரைப்பட வசனம் இங்கு நன்கு பொருந்திப்போகிறது.

2007 ஆம் ஆண்டு நான் சர்ச்சைகளுக்கு மத்தியில் சக்தீயின் தெளிவான விளக்கங்களுடனுனான சக்தீயுரை - 2 உடன்  எனது விளக்கமான பதிப்பரையுடன் பாக்யா பதிக்கபகத்தின் முதல் நூலாக ஸி.வி.யின் ‘இலங்கைத் தேயிலைத் தோட்டத்திலே..’ கவிதை நூலை மறுபதிப்பு செய்தேன். இந்த மறுபதிப்பில் ஒரு மேலதிக முயற்சியாக ஆங்கில மூல கவிதைகளையும் இணைத்து ஒரே நூலாக வெளிக்கொணர்தேன். இது புதிதாக மொழிபெயர்க்க அல்லது தமிழாக்கம் செய்ய வசதியாக இருக்கும் என்பது எனது எதிர்பார்ப்பு (நூலகம்.கொம்) இணைத்தில் இந்த நூலை பார்வையிடலாம் அல்லது படிக்கலாம். ஆயிரம் பிரதிகள் அச்சிட்டு பாடசாலை மாணவர்களுக்கு இலவசமாக வழங்கி வாசிப்புக்கு உடபடுத்தினேன். தனிமைப்படுத்தப்பட்டு கிடந்த சக்தீயையும் மீண்டும் இலக்கிய உலக்கு இழுத்துவந்தேன். எனது இந்த முயற்சி பற்றிய இலக்கிய ஆய்வாளர் லெனின் மதிவானம் தனது கட்டுரைகளில் என்னைச் சிலாகித்து எழுதியது தவிர யாரும் எனது நோக்கமான புதிய தமிழாக்க முயற்சி ஒன்றை செய்வதற்கு முன்வரவில்லை.

இந்த நிலையிலேயே 14 செப். 2014 அன்று மலையக கலை இலக்கிய பேரவை சார்பாக அந்தனஜீவா ஏற்பாடு செய்திருந்த ஸி.வி நூற்றாண்டு தொடக்கவிழாவில் தலைமையுரையாற்றிய பி.பி.தேவராஜ் அவர்கள் இந்த மொழிபெயர்ப்பு சர்ச்சைகள் பற்றியும் நவீன தமிழாக்க வடிவத்தின் தேவைகுறித்தும் உரையாற்றியது மட்டுமல்லாது சிலவரிகளை தமிழாக்கம் செய்தும் வாசித்தார். தொழிலாளர் தேசிய சங்கம் 21 செப் 2014 நடாத்திய ஸி.வி நுஸற்றாண்டு விழாவில் நினைவுப்பெருரையாற்றிய திரு.பி.பி.தெவராஜ் அவர்கள் இது பற்றி மேலும் பிரஸ்தாபதித்தார். நினைவுப் பேருரையை ஏற்கனவே தயார் செய்து எனக்கு அனப்பியருந்தமையால் ‘மாவலி’ சிறப்பிதழில் இந்த தமிழாக்க பகுதி வெளியாகியிருந்தது. 

அடுத்த இரண்டு வாரங்களில் 04 ஓக் 2014 அன்று சிவில் சமூகத்தவர் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட ஸி.வி. நூற்றாண்டு விழாவில் தப்பாக தப்பு இசைக்கப்பட்டாலும் தப்பாமல் தப்பு பற்றிய ஸி.வியின் கவிதை வரிகள் சேர்த்துக்கொள்ளப்பட்டன. இளம் கவிஞர் சு.தவச்செல்வன் மறைந்திருந்தேனும் தனது கம்பீர குரலால் தெளிவாக வாசித்தார். வரிகளின் சொந்தக்காரர் பி.பி.தேவராஜ். ஆம், மாவலியில் வெளியான புதிய தமிழாக்க வரிகள் மக்களை சென்று சேர்ந்திருக்கிறது.

பேரிகைக் கொட்டி
பேரோலி துடிப்பும் 
புலர்த லணர்த்தப் 
புரளுமாம் வைகறை.. 
என சக்தீ பால அய்யா 1960களில் எழுதியதை 
தப்போசை 
அதிர்ந்து ஒலித்திட 
திடுக்கிட்டு நின்றது 
காலைப் பொழுது ..!
தேயிலை தளிரில் 
உருண்டோடிய 
கடைசிப் பனித்துளி 
காலை கதிரில் 
உருகி மறைந்தது …

என 2014 ல் நவீன மயப்படுத்தியுள்ளார் பி.பி.தேவராஜ் அவர்கள். 


இந்த இரண்டு வகை தமிழாக்கத்திற்குமான ஆங்கில வரி இவ்வாறு அமைகிறது:

To the tom-tom’s Throb
The dawn lies started;
Trembling upon the tea;
the last dew bead is fresh
before the morning treads
On this mating hour 
where suffering and pain 
Decay and death are one 
In the life –throb
In the breathing of men

ஸி.வியின் கவிதைகளை தமிழாக்கம் செய்வது பற்றி தெளிவத்தை ஜோசப் தனது கட்டுரையொன்றில் (மாவில் ஸி.வி.சிறப்பிதழ்) இவ்வாறு குறிப்பிடுகின்றார்.
‘கவிஞர் சக்தீ பால அய்யவினால் மொழிபெயர்க்கப்பட்டிருந்த போதிலும் சற்றே வித்தியாசமான நடையில் மீண்டும்…. என்னும் குறிப்புடன் திரு.ஜோதிகுமாரின் நந்தலாலா  இதழ் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் ஒரு மீள் மொழிபெயர்ப்பினை ஆரம்பித்தது. ஆனால் தொடரவில்லை’.

பி.பி.தேவராஜ் அவர்கள் 2014 செப் 14 அறிவித்தது ஒக் 14 ல் முழுமையாக அந்த நூலை நவீன முறையில் தமிழாக்கம் செய்து பதிப்பாளரான என்னிடம் கையளித்து;ளளார். நான் ஏற்கனவே அறிவித்திருந்தபடி புதிதாக வரக்கூடிய தமிழாக்கங்கங்களையும் நான் வெளியிட தயாராகவே உள்ளேன் என்ற நிலையில் மாற்றம் இல்லை. எனவே பி.பி தேவராஜ் அவர்களின் மொழிபெயர்ப்பை வெளியிடும் ஆர்வம் உண்டு. ஆனால், பி.பி.தேவராஜ் அவர்கள் பெருந்தன்மையொடு ஒரு குழுவொன்றை அமைத்து அதில் விவாதித்து தேவையெனில் ஏதேனும் மாற்றங்கள் செய்து வெளியிடுவோம் என எனக்கு அறிவுறுத்தியுள்ளார். 

எனவே, ஸி.வியின் கவிதைகளில் நாட்டம் உள்ளோர்; சர்ச்சைகளில் பங்கேற்றோர் என்னுடன் தொடர்புகளை ஏற்படுத்துவதன் மூலம் குழுவாக இயங்கி ஸி.வியின் நூற்றாண்டு நிறைவுடையும் முன்னதாக இந்த புதிய தமிழாக்க பிரதியை வெளியீடு செய்வோம்.
தொடர்களுக்கு : thilagar@malliyappusanthi.info

Born to labour

In Ceylon's Garden

In Ceylon's Garden

இனிப் பட மாட்டேன்

மாமன் மகனே

நாடற்றவர் கதை

தேயிலை தேசம்

தேயிலைத் தோட்டத்திலே

தேயிலைத் தோட்டத்திலே

வாழ்வற்ற வாழ்வு

வீடற்றவன்


Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates