ஊவா மாகாணசபை தேர்தலுக்கான நாட் கள் நெருங்கி கொண் டிருக்கின்றன. வாக்களிப்புக்கு இன் னும் 13 தினங்களே இருக்கின்றன. இந்நிலையில் கட்சிகளின் தேர்தல் பிரசாரங்கள் சூடுபிடித்துள்ளன.
மறுபுறத்தில் தேர்தல் வன்முறைச் சம்பவங்கள் என்றுமில்லாத அளவு க்கு அதிகரித்துள்ளன. தினமும் வன்முறைகள் இடம்பெற்று கொண்டிருக்கின்றன.தேர்தல் வாக்களிப்பு தினம் வரை இவ்வாறான வன்முறைகள் தொடரக் கூடும் என்ற நிலையில், மக்களின் மத்தியில் அச்ச உணர்வையும் ஏற்படுத்தியுள்ளது.
ஜனநாயக உரிமைகளில் ஒன்றே வாக்களிக்கும் உரிமை. தாம் விரும் பும் வேட்பாளர் ஒருவரை வாக்கு மூலம் தெரிவு செய்வதற்கு இந்த வாக்குரிமை வழங்கப்பட்டிருக்கின்றது. எனவே, வாக்காளர்கள் சுதந்திரமாக தமது விருப்புக்குரிய வேட்பாளரைத் தெரிவு செய்வதற்கு இடமளிக்காமை ஜனநாயக விரோத செயலாகும்.
ஒரு வாக்காளன் எவ்வாறு தமது விருப்புக்குரிய வேட்பாளரை தெரிவு செய்வதற்கு உரித்துடையவராக இரு க்கின்றாரோ அதேபோன்று தேர்த லில் எந்தவொரு கட்சியும், சுயேச்சை குழுவும், நபரும் போட்டியிட முடி யும்.
வேட்பாளர்களோ அல்லது கட்சி களோ மக்களுக்கு தாம் செய்த சேவைகளை வெளிப்படுத்தியோ அல்லது எதிர்காலத்தில் தாம் மேற்கொள்ளவுள்ள வேலைத்திட்டங்களை முன்னிறுத்தியோ வாக்கு சேகரிப்பில் ஈடுபடுவது ஜனநாயக மரபு. மக்களே தமது விருப்புக்குரிய வேட்பாளரை வாக்கு மூலம் தெரிவு செய்ய வேண் டும்.
அதைவிடுத்து மக்களை அச்சுறுத்தியோ அல்லது பலாத்காரத்தின் மூலமாகவோ 'தமக்குத் தான் வாக்களிக்க வேண்டும்' என்று நிர்ப்பந்திக்க முடியாது. அல்லது மாற்றுக் கட்சி வேட்பாளருக்கு வாக்களிப்பதை தடுக்க முடியாது. அதேபோன்று மாற்று வேட்பாளர் ஒருவர் போட்டியிடுவதிலிருந்து தடுத்து நிறுத்த முடியாது.
ஊவா மாகாண சபைத் தேர்தல் ஆளும் ஐ.ம.சு.கூட்டமைப்புக்கும் எதிர்க்கட்சியான ஐ.தே.க.வுக்கும் ஒரு சவால்மிக்க தேர்தலாகியுள்ளது. ஆளும் ஐ.ம.சு. கூட்டமைப்பு இந்த மாகாண சபையை கைப்பற்றிவிடவேண்டும் என்ற முனைப்பில் தமது முழுமையான பலத்தைக் கொண்டு தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்டுள்ளது. தேர்தல் பிரசார பணிகளுக்காக அரசின் உயர்மட்ட அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், கட்சி முக்கியஸ்தர் கள் உள்ளிட்ட அனைவரும் ஊவா மாகாணத்தில் முகாமிட்டுள்ளனர். இரவு பகலாக தேர்தல் பிரசாரப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
இதேவேளை, பிரதான எதிர்க்கட்சியான ஐ.தே.க.வும் ஊவா மாகாண த்தை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிடவேண்டுமென்று முழுமையான ஈடுபாட்டுடன் உள்ளது.
ஏற்கனவே பல்வேறு கட்டங்க ளாக நடைபெற்று முடிந்துவிட்ட 8 மாகாண சபைகளில் ஒன்றில் கூட ஐ.தே.க. வெற்றி பெறாமல் தோல்வியடைந்துள்ளது. இதனால் மக்கள் மத்தியில் ஐ.தே.கவினுடைய செல்வாக்கு பாதிப்படைந்துள்ளது. அதுமட்டுமன்றி உட்கட்சி பிரச்சினை, தலைமைத்துவ பிரச்சினை என்பவை தொடர்ந்து கொண்டிருக்கின்றன. பல முக்கிய தலைவர்கள் கட்சியிலிருந்து விலகி ஆளும் கட்சியுடன் சங்கமமாகிவிட்டனர்.
எனவே, ஊவா தேர்தலில் வெற்றி பெறுவதன் மூலம் இழந்த செல்வாக்கையும் நன்மதிப்பையும் மீள நிலை நிறுத்த முடியமென்பது ஐ.தே.க.வின் எதிர்பார்ப்பு. அதற்காகவே ஊவா மக் களிடம் ஓரளவு செல்வாக்குமிக்க ஹரின் பெர்னாண்டோவை பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகச் செய்து ஊவா மாகாண முதல மைச்சர் வேட்பாளராக போட்டியிட வைத்துள்ளது. அத்துடன் கட்சித் தலைவர்கள், முக்கியஸ்தர்கள், ஆதர வாளர்கள் ஊவா மாகாண தேர்தல் களத்தில் இறக்கி பிரசாரப் பணிகளை முன்னெடுத்துள்ளனர்.
அரசியல் கட்சிகளின் வேட்பாளர் கள் மக்களை அச்சுறுத்தி வாக்கு சேக ரிக்கும் திட்டத்தை கைவிட வேண் டும். பெரும்பான்மையின அரசியல் வாதிகளின் அரசியல் பாதை வேறு. நமது அரசியல் பாதை வேறு. அவர்களைப் போன்று செயற்பட நினைத் தால் ஒரு போதும் தமிழ் மக்களின் மனங்களை வெற்றி கொள்ள முடியாது. தேர்தலில் வெற்றி பெறவும் முடியாதென்பதை மனதிற் கொள்ள வேண்டும்.
எதிர்க்கட்சிக்கு ஆதரவாளவர்களி டம் "எமக்கு தான் வோட்டு போட வேண்டும். இல்லாவிட்டால் தேர்த லில் நாம் வெற்றி பெற்றதும் உங்களை ஒருகை பார்த்துக் கொள்வோம்" என்று சொல்வதெல்லாம் இந்தக் காலத்துக்கு ஒத்து வராத விடயங்கள். அமைதியாக, அன்பாகப் பேசி மக்களிடமிருந்து வாக்குகளை பெற்றுக்கொள்ள முயற்சி செய்ய வேண்டும்.
தவிர, மலையக மக்கள் சாராயத்திற் கும் சாப்பாட்டுப் பார்சலுக்கும் "வோட்டு" போடுபவர்கள் என்ற அவப் பெயரொன்று ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு அவப்பெயர் ஏற்பட கார ணம் யார்? அல்லது சாராயத்திற்கும் சாப்பாட்டு பார்சலுக்கும் அவர்களை பழக்கப்படுத்தியது யார்? மலையக கட்சிகள் தானே இவற்றை செய்தன.
வாக்காளர்கள் சாரா யமும் சாப்பாட் டுப் பார்சலும் வேண்டு மென்று கேட்டார்களா? வாக்கு பெறுவதற் காக எதையும் செய்துவிடக் கூடாது என்பதே ஊவா மக்களின் கோரிக்கை யாகும்.
நன்றி - வீரகேசரி
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...