மனிதத்துவத்திற்கு எதிராக அரங்கேரிவரும் மனித படுகொலை மலையகத்திலும் அதிகரித்து வருகின்றது. ஒருபுறம் சிறுவர்களுக்கு எதிரான துஸ்பிரயோகங்களும் மறுபுறம் மர்மமான முறையில் மனிதப்படுகொலைகளும் இடப்பெற்று வருகின்றமை சுட்டிக்காட்ட வேண்டும்.
இதனை பறைசாற்றும் வகையில் கடந்த வாரம் 03.09.2014 அன்று தலவாக்கலை மட்டுகலை தோட்டத்தை சேர்ந்த 16 வயது நிரம்பிய மாணவனான லோகநாதன் சிறிவதனன் காணாமல் பேயிருந்தார். இரண்டு நாட்களுக்கு பிறகு தலவாக்கலை மேல் கொத்மலை நீர் தோக்கத்தில் அவர் சடலமாக மீட்கப்பட்ட சந்தர்ப்பம் எம் உள்ளத்தை ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தியது. இம் மரணத்தின் மர்மம் குறித்து எத்தகைய நீதியான விசாரணை இடம்பெறுகின்றது என்பது சந்தேகமே.
இம் மாணவன் காணாமல் போனவூடன் இம் மாணவனின் பெற்றௌர் தலவாக்கலை லிந்துலை பொலிசாருக்கு தகவலை தெரிவித்தும் பொலிஸார் உடனடியாக எவ்வித நடவடிக்கைகளையூம் எடுக்காதிருந்தது பொலிஸார் மீது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியூள்ளது.
இதனை கண்டிக்கும் முகமாக சமூக நலன் விரும்பிகள் ஒன்றுதிரண்டு பொலிஸாருக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தமை அறிந்த விடயமே. இச்சம்பவத்தின் காரணமான உண்மைத்தன்மையினை கண்டுபிடித்து குற்றவாளிகளை நீதிக்கு முன்னிருத்த வேண்டிய பொலிஸாரே நீதித்தவறி அசமந்த போக்குடன் செயற்படுவதானது கொள்ளைகாரனுக்கும் கொலைகாரனுக்கும் கரம்பிடித்து தூக்கிவிடுவதை போன்றதாகும்.
தொடர்ச்சியாக மலையகத்தில் பொலிஸாரின் அசமந்த போக்கினால் பல பாரிய விளைவூகளை ஏற்படுத்த போகின்றது என்பது ஊர்ஜிதமே. இம்மரணத்தின் பின்னணியை ஆராய்ந்து குற்றவாளிகளை கண்டுபிடித்து தகுந்த தண்டனையை பெற்றுக்கொடுப்பது பொலிஸாரின் கடமையூம் பொறுப்புமாகும்.
தற்போது பொலிஸாரின் மீதான மக்கள் கொண்டிருந்த நம்பிக்கை தற்போது அருகி வருகின்ற நேரத்தில் இச்சம்பவம் குறித்து பொலிஸாரின் அசமந்த போக்கினால் மக்கள் வெறுப்படைந்து அவர்களை கடுமையாக சாட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இவர்கள் இவ்வாறு தொடர்சியாக செயற்பட்டால் சமூகத்தில் இதைவிட கொடூரமான நாசகர செயல்கள் இவர்களின் துனையூடனேயே சில விஸமிகள் செய்வார்கள் என்பது நிச்சயமே.
இதனை தகர்தெரிந்து சமூகத்தை கட்டிகாக்க வேண்டிய பொறுப்பு பொலிஸாரையே சார்ந்தது. இது போன்ற சம்பவங்களில் அலட்சியமாக செயற்படாமல் குறித்த நேரத்தில் உடனடியாக செயற்பட வேண்டும் என்ற உந்துதலை சமூக அமைப்புகளும் பொது மக்களும்இ மத்திய மாகாண பொலிஸ் ஆணைக்குழுவூம் வழங்க வேண்டும்.
இறந்த மாணாவனுக்காக இரங்கலை தெரிவிப்பதுடன் மரணத்தின் பின்னணியில் உள்ளவர்களை கண்டு பிடித்து தண்டனை பெற்றுக்கொடுக்க கைகோர்ப்போம்.
நன்றி - மலையகம்.lk
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...