நவீன சமூக மற்றும் அரசியல் கோட்பாடுகளில் “குடிமகன்” என்பதன் மூலம் பொதுவாக விளங்கிக் கொள்ளப்படுவது சட்டமுறையாக ஏதாவது அரசின் உறுப்பினராக இருத்தலேயாகும். இந்த சட்டமுறையான உறுப்புரிமை பெரும்பான்மை சிறுபான்மை என பிரிக்கப்படவில்லை. உலகில் வாழும் அனைத்து இனக்குழுக்களும் ஏதாவது நாட்டில் இந்தக் குடியுரிமை (தஞ்சம் புகுந்தோர், மனித விற்பனைக்கு உட்பட் டோர், சட்ட முறையாக இடம்பெயர்ந் தோர் தவிர) உள்ளது. இதில் அனைத்து இனக்குழுக்களுக்கும் பால் வேறுபாடின்றி அந்நாட்டின் சிவில், பொருளாதார, அரசி யல் மற்றும் சமூக உரிமைகளை அனுபவிக்க சட்டத்தில் வாய்ப்புண்டு. அரசியல் கட்சி, தேர்தல் நடவடிக்கை, வாக்களித்தல், பிரதிநிதித்துவம் செய்தல், அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்தல் மற்றும் விமர்சனம் செய்தல் போன்ற செயற்பாடுகளிலும் அரசாங்க வேலைவாய்ப்புகளிலும் உண்மையா கப் பயன்படுத்துவதற்கு அனைவருக்கும் உரிமை உண்டு.
“மனித உரிமைகள்” கோட்பாடுகளுக்கு ஏற்ப சகல பெண் மற்றும் ஆண்களுக்கும் சமூக, கலாசார, பொருளாதார மற்றும் அரசி யல் உரிமைகள் சமமாகக் கிடைக்கின்றன. எந்நவொரு மனித உயிர்களுக்கும் தமது இருப்பு, தனியாள் அபிவிருத்தி, அடையாளத்தை பாதுகாத்துக் கொள்ளல் மற்றும் சுதந்திரத்தை அனுபவித்தல் தொடர்பில் மனித உரிமைகள் அத்தியவசியமாகும். எல்லா சமூக, அரசியல் மற்றும் பொருளாதார உரிமைகளினதும் பொதுவான அம்சம் உலகமயமானதோடு, ஒரு உரிமை இன்னொருவரை கருத்தில் கொள்ளாமல் இருக்க அல்லது மீள முடியாது. உதாரணமாக பெண்ணாக இருப்பதால் வாக்குரிமை பெற்றிருந்தாலும், பிரதிநிதித்துவத்திற்காக உள்ள உரிமையை கருத்திற் கொள்ளாமல் இருத்தல் மனித உரிமை கோட்பாட்டினால் செய்ய முடியாது. ஏதாவது சமூகத்தில் அவ்வாறு செய்தால் அந்த சமூகத்தினுள் ஜனநாயகம் பூரணமற்றதாகும்.
இந்த ஒதுக்கீட்டு முறைகளை நேர்கணிய பாரபட்சம் (Positive Discrimination) என்றும் சிலர் குறிப்பிடுகின்றனர். அதாவது, பின்தள்ளப்பட்டுள்ள சமூகம் ஒன்றினை ஏனைய சமூகத்திற்கு சமமான முறைக்கு கொண்டுவருதற்காக ஓர் இனக்குழுவுக்கு அல்லது இனக்குழுக்களுக்கு விசேட சலுகைகள் காட்டப்படுதலேயே இது குறிக்கின்றது. இது தொடர்ந்தும் பின்பற்றப்படுவதில்லை. ஏனைய சமூகங்களுக்கு ஏற்ற நிலையினை குறித்த சமூகமும் வரும்வரையில் மாத்திரமே இது கடைப்பிடிக்கப்படும்.
அந்தவகையில் மலையக சமூகத்தைப் பொறுத்தவரை, இலங்கை சுதந்திரம் பெற்றது முதல் இன்றுவரை பல்வேறு சந்தர்ப் பங்களில் புறக்கணிப்புக்கு உள்ளாக்கப்பட்டதொரு சமூகமாகும். குறிப்பாக சுதந்திரத்திற்கு முன்னதாகவே கொண்டுவரப்பட்ட இலவச கல்விக் கொள்கைக்கான பிரேரணையிலேயே இதனை நாம் காணலாம். C.W.W.W கன்னங்கரா இலவச கல்வி என்பது இலங்கை பிரஜைகளுக்கு மட்டுமே என வரையறுத்திருந்தார். இதன்பின்னர் 1948ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்றவுடன் ஆட்சியிலிருந்த அரசாங்கம் பிரஜா உரிமை சட்டத்தை கொண்டுவந்து மலையகத் தமிழர்களின் வாழ்க்கையில் பாரிய பின்னடைவை ஏற்படுத்தியது. அக்காலத்தில் இருந்து தொடர்ந்த புறக்கணிப்புகளால் 1972ஆம் ஆண்டுவரை இலவச கல்வியினை முழுமையாக அனுபவிக்க முடியாத நிலையே காணப்பட்டது.
இதன்பின்னர் தேசியக் கல்விக்கொள்கை அறிமுகத்தோடு தோட்டப் பாடசாலைகள் அரசு மயப்படுத்தப்பட்டது. இதன்பின்னரே மலையக மக்களும் தேசிய கல்வி நீரோட்டத்தில் இணைந்து கொண்டனர். எனவே, சுமார் 69 ஆண்டு கால இலவச கல்வி வரலாற்றில் மலையக மக்கள் வெறும் 42 ஆண்டுகளே பயணித்துள்ளனர். இதன்மூலம் 27 வருட கால இடைவெளியினை கொண்டு ள்ள சமூகமாக எமது சமூகம் காணப்படுகின்றது.
அதேபோல் 1949ஆம் கொண்டுவரப்ப ட்ட தேர்தல்கள் திருத்தச் சட்டத்தின் மூலம் அரசியல் பிரதிநிதித்துவம் பாரிய சாவாலுக்கு உட்பட்டதோடு 1949–1970ஆம் ஆண்டுவரை எமக்கான பிரதிநிதிகள் பாரா ளுமன்றில் இருக்கவில்லை. 1970ஆம் ஆண்டு சௌமியமூர்த்தி தொண்டமான் செனட் சபைக்கான உறுப்பினராக நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. அதன்பின் னர் 1978ஆம் ஆண்டு அரசியலமைப்பின் படியே பிரஜா உரிமை பிரச்சினைகள் சற்று தீர்க்கப்பட்டு பிரதிநிதிகளை தெரிவு செய் யும் வாய்ப்பு கிடைத்தது. அதிலும் விகிதாசார தேர்தல் முறை எமக்குப் பெரும் வரப்பிரசாதமாகவே உள்ளது என்பதையும் கருத் திற் கொள்ள வேண்டும். இதன்மூலம் அரசியலிலும் சுமார் 30 வருட இடைவெளியை கொண்ட சமூகமாகவே மலையக சமூகம் உள்ளது.
இதனைத் தொடரந்து 1972ஆம் ஆண்டு காணி மறுசீரமைப்புக் கொள்கைக்கு ஏற்ப அனைத்து காணிகளும் அரசுடைமை ஆக்கப்பட்டு பின்னர் பெருந்தோட்டங்கள் குத்தகை அடிப்படையில் (ஆரம்பத்தில் 99 ஆண்டுகள் என்றும் தற்போது அது 56 ஆண்டுகளுக்கு என வரையறுக்கப்பட்டுள்ளது) தனியார் நிறுவனங்களுக்கு தாரைவார்த்துக் கொடுக்கப்பட்டன. இதனால் சுயதொழில் முயற்சி காணி மற்றும் வீட்டுரிமை போன்ற விடயங்களில் பின்தள்ளப்பட்ட சமூகமாக மலையக சமூகம் மாறியது.
அதேபோன்று இலங்கையின் புள்ளிவிபரங்களின்படியும் வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் மக்களாகவே மலையகத் தமிழ் மக்கள் குறிப்பிடப்படுகின்றனர். அதிலும் குறிப்பாக மலையக மக்கள் செறிந்துவாழும் நுவரெலியா மாவட்டமே வறுமை நிலை உயர்வாக உள்ள மாவட்டம் (09 வீதம் என அரச புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.) 2009இல் இது 30 வீதமாக இருந்தது என்ப தும் குறிப்பிடத்தக்கது.
இந்தப் பின்னணிகளை எடுத்து நோக்கும்போது பங்கு முறைமை அல்லது நேர்கணிய பாரபட்சம் என்ற முறைமைக்குள் மலையக மக்கள் உள்வாங்கப்பட வேண்டும் என்பதோடு, இலங்கையில் ஆட்சி செய்த அரசாங்கங்கள் இதற்கான சில வாய்ப்புகளையும் ஆங்காங்கே ஏற்படுத்தியுள்ளமையை கவனத்தில் கொள்ளுதல் வேண்டும். குறிப்பாக அண்மைக்காலம் வரை இலங்கையில் வழங்கப்பட்ட சில விசேட ஒதுக்கீடுகள் இதற்கு எடுத்துக்காட்டாகும். 1989ஆம் ஆண்டு மலையக இளைஞர், யுவதிகளை மையப்படுத்தி 402 ஆசிரியர் நியமனம் வழங்கப்பட்டமை, 1991ஆம் மீண்டும் 25,000 ஆசிரியர் நியமனத்தில் கணிசமான அளவு மலையக ஆசிரி யர்கள் உள்வாங்கப்பட்டமை, 2000ஆம் ஆண்டில் 89 தமிழ் மொழிமூலமான கிராம சேவையாளர்களை பெற்றுக்கொண்டமை, 2005ஆம் ஆண்டு 500 தமிழ் மொழிமூல வசதியளிப்பாளர்களை பெற்றுக்கொடுத்தமை, அதேபோன்று சமூர்த்தி உத்தியோகத்தர்கள், 2005ஆம் ஆண்டு 3179 ஆசிரியர் நியமனம், 2011ஆம் ஆண்டு தோட்டப்புறங்களுக்கான தபால் உத்தியோகத்தர்கள், தற்போது கோர ப்பட்டுள்ள 3000 ஆசிரியர் உதவியாளர்கள் போன்றனவற்றை குறிப்பிட்டுக் கூறமுடி யும். இதற்கு அப்பால் 2010ஆம் ஆண்டு வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு மட்டும் தனித்து சுமார் 49 அரசாங்க நிருவாக சேவை உத்தியோகத்தர்கள் (SLAS) பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளன.
மேற்குறிப்பிட்ட விடயங்களை பார்க்கையில் ஒருவிடயம் தெளிவாகின்றது. இலங்கையில் பங்குமுறைமை முடிவுக்கு கொண்டுவரப்பட்டிருப்பினும் அரசியல் தலைமைகள் மற்றும் சமூகத்தின் அழுத்தம் காரணமாக சில விசேடமான வேலைத் திட்டத்தின் கீழ் வாய்ப்புகள் வழங்கப்பட் டுள்ளன என்பதேயாகும். மேலும், மலை யக மக்களை பொறுத்தமட்டில் ஆசிரியர் துறையிலும் அதேபோன்று கீழ் மட்ட அரச உத்தியோகங்களிலும் ஓரளவு சொல் லக்கூடிய அளவில் இன்று பணியாற்றுகின் றனர்.
எனினும் தீர்மானம் எடுக்கும் மட்டங்க ளான உயர் தொழில் துறைகளில் எமது பிரதிநிதித்துவம் மிகவும் குறைவாகவே உள்ளது. குறிப்பாக இலங்கை நிருவாக சேவை (SLAS), இலங்கை திட்டமிடல் சேவை (SLPS) இலங்கை வெளிநாட்டு சேவை (SLOS) போன்ற கொள்கையாக்க மட்டங்களிலும் தீர்மானமெடுக்கும் மட்ட ங்களிலும் பணிபுரியக்கூடிய உத்தியோக த்தர்கள் மிகவும் சொற்ப அளவிலேயே உள் ளனர்.
தற்போதைய நிலையில் எமக்கு தீர்மானம் எடுக்கும் மட்டங்களில் குறிப்பிடத்தக்க பணியாளர்கள் தேவைப்படுகின்றனர். மலை யகத் தமிழர்களில் 10 இற்கும் குறைவான வர்களே இவ்வாறான துறைகளில் உள்ள னர் என்பது கவலைக்குரிய விடயமா கும். இதற்கு எமது பின்புலமே காரணம். எனவே, அரசியல் தலைமைகள் தங்களுக் குள் ஓர் இணக்கப்பாட்டிற்கு வருவதன் மூலம் இவ்விடயத்தினை சாதித்துக் கொள்ள முடியும். குறிப்பாக வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு மட்டும் அரச நிருவாக சேவை போட்டிப்பரீட்சை நடத்த ப்பட்டதுபோல் மலையகத் தமிழர்களை மாத்திரம் மையமாகக் கொண்டு இவ்வா றான போட்டிப்பரீட்சைகளை கோர முடி யும்.
அவ்வாறில்லையேல் பல்கலைக்கழகங் களில் உள்வாரியாக விசேட துறைகளில் பட்டப்படிப்பை முடித்தவர்கள் மத்தியில் இருந்து பணியாளர்களை விசேட நேர்முகத் தேர்வின் மூலம் தெரிவு செய்து குறித்த கால இடைவெளிக்கும் அரசாங்க நிருவாக சேவை பரீட்சையினை சித்தியடைய செய்ய வைக்க முடியும். (தற்போது ஆசிரியர் உதவி யாளர்கள் பதவிக்கு விதிக்கப்பட்டிருப்பது போன்று).
அரசியல் கட்சிகளின் தலைமைகள் வெறு மனே தேர்தல் காலங்களில் அமைச்சுப் பத விகளையும், தேசிய பட்டியல் ஆசனங்க ளையும் கோருவதற்கு அப்பால் ஆட்சிக்கு வரும் அரசாங்கங்களிடம் இவ்வாறான உயர் வான கோரிக்கைகளை முன்வைப் பதன் மூலம் இதனை வெற்றிகொள்ள முடியும். ஒரு சமூகத்தின் வளர்ச்சியில் கொள்கைக ளும் தீர்மானம் எடுத்தலும் முக்கியம் என்ப தால் இவ்வாறான மட்டங்களை நோக்கிய கோரிக்கைகள் எழுப்பப்பட வேண்டும் என் பதோடு அரசியல் வராலாற்றை பார்க்கும் போது அதற்கான சாத்தியப்பாடுகள் வெகு தொலைவில் இல்லை என்பதே உண்மை.
நன்றி - வீரகேசரி
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...