Headlines News :
முகப்பு » » பிள்ளைகள் குறித்து அதிக கவனம் செலுத்த வேண்டியதன் அவசியம் - நுவரெலியா எஸ்.தியாகு

பிள்ளைகள் குறித்து அதிக கவனம் செலுத்த வேண்டியதன் அவசியம் - நுவரெலியா எஸ்.தியாகு


ஒவ்வொரு பெற்றோரும் தமது பிள்ளைச் செல்வங்களை எவ்வாறு வளர்க்க வேண் டும் என்று திட்டமிடுவதும், அவர்களைப் பற்றி கனவு காண்பதும் இயற்கையா கும். பிள்ளைகளை நன்றாக படிக்கவைக்க வேண்டும். அவர்களை கல்விமான்களாக உருவாக்க வேண்டும். நல்ல தொழிலில் அமர்த்த வேண்டும். தான் பெறாத கல்வியை அவர்கள் பெற வேண்டும் என்றெல்லாம் திட்டமிடுகின்றனர். பல்வேறு கனவுகளுடன் தமது பிள்ளைகளை வளர்க்கும் பெற்றோர், அவர்களை இடைநடுவில் பிரிவதும் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.

இன்று பல பெற்றோர்கள் தமது பிள்ளைகளை சித்திரவதை செய்வதாகவும் தாயே தனது பிள்ளையை துன்புறுத்துவதாகவும் பல செய்திகளை நாம் அன்றாடம் பத்திரிகைகள் மூலம் தெரிந்து கொள் கின்றோம். இவர்கள் பெற்றோர் களா என்று நினைக்குமளவிற்கு அவர்களது சில செயற்பாடுகள் அமைந்திருக்கின்றன. ஆனால் விரல்விட்டு எண்ணக்கூடிய ஒரு சில பெற்றோர்கள் இப்படி இருந்தாலும் அநேகமான பெற்றோர் தனது பிள்ளைகளுக்காகவே வாழ்ந்துக் கொண்டிருக்கின்றனர்.

மலையகத்தை பொறுத்தவரையில் பெற்றோர்கள் தமது பிள்ளைகளை பல சிரமங்களுக்கு மத்தியில் வளர்த்து வருகின்றனர். இவர்கள் தமது பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகளை முன்னெடுக்கின்ற பொழுது பொருளாதார ரீதியாக பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கின்றார்கள். தாம் சாப்பிட்டாலும் சாப்பிடாவிட்டாலும் பிள்ளைகளைப் படிக்க வைத்து நல்ல நிலைக்கு கொண்டு வர வேண்டும் என கஷ்டங்களை மறைத்து பிள்ளைகளை வளர்க்கின்றனர்.

இந்த சூழ்நிலையில் 16 வயது மகனை பறிகொடுப்பது என்பது பெரும் கொடுமை. அண்மையில் தலவாக்கலை, பெரிய மட்டுக் கலை பகுதியை சேர்ந்த (தலவாக்கலை பகுதி பாடசாலையொன் றில் கல்வி கற்கும்) மாணவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அந்தப் பிரதேசத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்த வருடம் க.பொ.த.சாதாரண பரீட்சைக் குத் தோற்றவிருந்த மிகவும் திறமைசாலியான மாணவன் லோகநாதன் ஸ்ரீவத னன் (வயது 16) மேல் கொத்மலை நீர்தேக்கத்திலிருந்து கடந்த 6ஆம் திகதி சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இது உயிரிழந்த மாணவனின் பெற்றோரை மாத்திரமன்றி, அந்தப் பகுதியில் உள்ள அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி யது.

சம்பவம் நடந்த அன்று காலையில் நீர்தேக்கத்திற்கு அருகிலுள்ள தலவாக்கலை, லிந்துலை நகரசபைக்கு முன்னா லுள்ள நுவரெலியா தலவாக்கலை பிரதான வீதியில் ஒன்று கூடிய பெரும் எண்ணிக்கையிலான பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றிலும் குதித்தனர். காணாமற்போன மாணவன் தொடர் பாக முறைப்பாடு செய்யப்பட்டதைத் தொடர்ந்து பொலிஸார் உடனடியாக செயற்பட்டு முறையான தேடுதல் நடவ டிக்கை மேற் கொள்ளவில்லையெனத் தெரிவித்தே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர்.

எனினும், பின்னர் பேச்சுவார்த்தை களை தொடர்ந்து ஆர்ப்பாட்டம் சுமுகமாக தீர்க்கப்பட்டதுடன் சிறுவனின் சடலம் நீர்தேக்கத்திலிருந்து மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக நுவரெலியாவிற்கு கொண்டு செல்லப்பட்டது. பிரதே பரிசோதனையின் பின்பு சடலம் பெற்றோரிடம் கையளிக்கப்பட்டது. பிரேத பரிசோதனை அறிக்கையில் நீரில் மூழ்கியதன் காரணமாக மரணம் சம்பவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

குறித்த மாணவன் 03.09.2014 இரவு 11.10 மணியளவில் வீட்டில் இருந்து வெளியில் சென்றதாகவும் அதன் பின்பு அவர் வீட்டிற்கு திரு ம்பவில்லை என் றும் தெரிவிக்கப்படுகின்றது. பெற்றோர் இது தொடர்பாக லிந்துலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தது டன் தோட்டப் பொதுமக்களுடன் இணைந்து மாணவனை தேடியுள்ளனர்.

ஆனால், பின்பு 6ஆம் திகதி காலை மாணவனின் சடலம் அவரது வீட்டிலிருந்து சுமார் 7 கி.மீ தூரத்துக்கு அப்பால் தலவாக்கலை நகரத்துக்கு அருகிலுள்ள மேல் கொத்மலை நீர்த்தேக்கத்திலிருந்து மீட்கப்பட்டது. இது தொடர்பாக பல் வேறு சந்தேகங்கள் நிலவியப் போதும் பிரேத பரிசோதனையில் மரணத்திற்கான காரணம், நீரில் மூழ்கியதன் காரணமாக சம்பவித்துள்ளதாக தெளிவாக குறிப்பிட ப்பட்டுள்ளது. இருந்தும் இந்த மரணம் தொடர்பாக மக்கள் மத்தியில் பல சந்தேகங்கள் நிலவி வருகின்றன.

குறித்த மாணவன் பாடசாலையிலும் மிகவும் நல்ல மாணவன் என்ற பெய ரைப் பெற்றுள்ளார். அப்படியாயின் இம் மாணவனுக்கு படிப்பில் எந்த பிரச்சினையும் இருந்திருக்க வாயப்புக்கள் இல்லை.

இதுமுதலாவது சம்பவம் அல்ல. இதற்கு முன்னரும் இந்தப் பகுதியில் இதேபோன்றதொரு சம்பவம் இடம்பெற்றுள்ளது. கடந்த ஜனவரிமாதம் சின்ன மட்டுக்கலை தோட்டத்தில் என்தனி ரொபட் (வயது10) என்ற சிறுவன் காணாமற்போன நிலையில் மட்டுக் கலை ஆற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

பிள்ளைகள் தொடர்பில் பெற்றோர்கள் மிகவும் அவதானத்துடன் இருக்க வேண்டும். அவர்களது ஒவ்வொரு செயற்பாடுகள் தொடர்பாகவும் கவனமாக இருக்க வேண்டும். பிள்ளைகள் பாடசாலையை விட்டு வீடு திரும்பிய தும் அவர்களின் மனநிலை எப்படி இருக்கின்றது என்பதை பெற்றோர்கள் புரிந்துகொள்ள வேண்டும். பிரத்தியேக வகுப்புக்களுக்கு அனுப்பும்போது அவர்களை கண்காணிக்க வேண்டும். அவர்கள் இரவு நேரங்கள் எழுந்து சென்றால் அவ ற்றை கவனிக்க வேண்டும். இதற்கு கார ணம் இன்று பல்வேறு குழப்பமான ஒரு சூழ்நிலையில் சிறுவர்கள் இருப்பது தான்.

இந்த சிறுவனின் மரணம் பலரையும் சிந்திக்க வைத்துள்ளது. எனவே, பெற் றோர் பிள்ளைகளின் விடயத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்பதை இந்த சம்பவம் எமக்கு ஞாபகப்படுகின் றது. இனிமேலும் இவ்வாறான ஒரு சம்பவம் நடை பெறாமலிருக்க பெற் றோர் அனைவரும் கவனமாக செயற் பட வேண்டியுள்ளமை காலத்தின் கட் டாயமாகும்.

Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates