Headlines News :
முகப்பு » , , » இன்று ஸி.வி நூற்றாண்டு நினைவு நாள் - மல்லியப்புசந்தி திலகர்

இன்று ஸி.வி நூற்றாண்டு நினைவு நாள் - மல்லியப்புசந்தி திலகர்




மக்கள் கவிமணி ஸி.வி.வேலுப்பிள்ளை அவர்களின் 100வது பிறந்த நாள். 1952களில் அவர் எழுதிய
‘In Ceylon’s Tea Garden எனும்  ஆங்கில நெடுங்கவிதைத் தொகுப்பின் சில ஆங்கில வரிகளையும் அதன் தமிழாக்கமாக கவிஞர் சக்தீ பால அய்யா தந்த இலங்கைத் தேயிலைத் தோட்டத்திலேஎனும் நெடுங்கவிதையில் இருந்தும் ஒரு சில பகுதிகளைப் பகிரந்துகொள்கிறேன்.

And so the tom-tom’s throb
That for a hundred years
In fettered darkness held
My bronze bodied men
Shall sound yet again
From the mountain heights 
to the valleys below
with a clearer call 
with a surer call

From their Vote less gloom
From their stateless doom
Of rights withered dross
Shall wake another dawn
In that matting hour 
Where once life decayed 
Shall spring a fire –throb,
In the breathing of men

The tears and the sweat
That for a hundred years
Scattered on the dust 
Gathered unto the might 

Of a risen sun
Shall be get a million men
To march forwards and on
To where great mornings wait
For the tom-tom throb

நூற்றாண்டு காலமாய்
நுழைந்த இவ்விருட்டை
வேரோடழிக்க
என் தமிழ் மக்கள்

கூறுவர் சிகர
     உச்சியில் ஏறிக்
கூறுவர் திடல்கள்
யாங்ஙனு மடுக்கவே

விடுதலைக் குரலது
     வெற்றிக்குரலது
     வீரக்குரலது
விரைந்தெழும் கேட்பீர் ..!
அடிமை நிலையை
அகற்றவும் அழைக்கும்
அன்புக் குரலது
அன்பரீர் கேட்பீர் !
வாக்குரிமையோடு
வளநாட்டுரிமையும்
ஊக்கமும் வெற்றி
ஓம்பிடும் காலம்
பு+க்குமே யந்தப்
           புண்ணிய நாள்தனில்
           ஆக்கம் புரிந்தவர்
           அமைதி இழந்தவர்
மூச்சிலே சுதந்திரத்
           திருகலந்திடுமே
           மூச்சிலே விடுதலைச்
சுகம் மலர்ந்திடுமே
பேச்சிலே வீரமும்
           உறுதியும் மாட்சியும்
பிறந்திடும்  வெற்றிப்
பெரு வாழ்வாமே..!
    



Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates