Headlines News :
முகப்பு » » கோப்பிக்கால வரலாறு - 1824- 1893 (கண்டிச் சீமையிலே) - அத்தியாயம் 07 - இரா சடகோபன்

கோப்பிக்கால வரலாறு - 1824- 1893 (கண்டிச் சீமையிலே) - அத்தியாயம் 07 - இரா சடகோபன்


மலபார் வாசிகளும் மலபார் கூலிகளும்
ஆரம்பத்தில் தோட்டங்களில் தொழில் செய்வதற்காக வந்த இந்தியத் தொழிலாளர்கள் ஒருபோதும் இங்கே நிரந்தரமாக தங்கிவிட எண்ணியிருக்கவில்லை. கோப்பியைப் பொறுத்தவரையில் அதற்கான பராமரிப்பு மிகக் குறைவாகவே இருந்ததால் தொழிலாளர் வருவதும் திரும்பிப் போவதுமாக இருந்தனர். எனினும், 1860களைத் தொடர்ந்து கோப்பிப் பயிர்ச் செய்கை மிக அதிகரித்து சென்றபோது தொழிலாளர்களுக்கு பாரிய தட்டுப்பாடு நிலவியது. தொழிலாளர்களை உரிய நேரத்தில் பெற்றுக் கொள்வது துரைமாருக்கு பெரும் பிரச்சினையாகியது. 

அறுவடைக் காலம் நெருங்க துரைமாரின் வயிற்றில் புளி கரைய ஆரம்பித்தது. இத்தகைய நிலையைத் தொடர அவர்கள் விரும்பவில்லை. எனவே, தொழிலாளர்கள் தாமாக தங்க உற்சாகப்படுத்தப்பட்டனர். 1841ஆம் ஆண்டு தொழிலாளர் பிரச்சினை தொடர்பில் கருத்துத் தெரிவித்த லெப்டினன்ட் டி பட்ஸ் (ஃடிழூவ. ஈழூ ஆதவவண்),""இம்மக்கள் நீண்டகாலம் தமது குடும்பத்தினரைப் பிரிந்திருக்க முடியாமல் திரும்பிச் செல்கின்றமையால் இவர்கள் மீண்டும் குறித்த நேரத்தில் திரும்பி வருவார்களா என்ற நம்பிக்கையின்மையை தோட்டத் துரைமார் மத்தியில் தோற்றுவித்தது'' என்று குறிப்பிட்டுள்ளார். 

1869ஆம் ஆண்டு ஈணூ.டபிள்யூ.ஜி.வன்டோர்ட் (ஈணூ.ஙி.எ.ஙச்ணஞீணிணூவ) இத்தொழிலாளர்களின் சுகாதார நிலைமை தொடர்பில் ஓர் அறிக்கை தயாரித்தார். அவ்வறிக்கையின்படி இத்தொழிலாளர்  இலங்கைக்கு வந்து மூன்று வருடங்கள் முதல் நான்கு வருடங்கள் வரை தங்கியிருந்து தொழில் பார்த்து விட்டுப் பின் தம் தாய்நாடு செல்கின்றனர் எனக் குறிப்பிட்டுள்ளார். ஏ. எம். பெர்குஸனின் (அ.ஆ.ஊழூணூஞ்தண்ணிண) மதிப்பீட்டின்படி 1839 தொடக்கம் 1864 வரையுள்ள காலத்தில் 1,250,000 தொழிலாளர்கள் இலங்கை வந்தனர் என்றும் இவர்களில் மூன்றில் ஒரு பங்கினர் இங்கு நிரந்தரமாகத் தங்கி விட்டனர் என்றும் குறிப்பிடுகின்றõர். 1874 ஆம் ஆண்டு மாத்திரம் 1,25,156 தொழிலாளர்கள் வந்தனர் என்பதற்கும் அதே ஆண்டு 89,727 பேர் திரும்பிப் போயுள்ளனர் என்பதற்கும் பதிவுகள் உள்ளன. 

பத்திரிகையாளரும் எழுத்தாளருமான வில்லியம் டிக்பி (ஙிடிடூடூடிச்ட் ஈடிஞ்ஞதூ) என்பவர் குறிப்பிட்டுள்ளதாவது: ""இக்காலத்தில் இலங்கைக்கு வருகை தந்த 35,000 தொழிலாளர்கள் மத்தியில் குடும்பங்களும், பெண்களும், பிள்ளைகளும் இருந்தமை இவர்கள் நிரந்தரமாக இங்கு குடியேறி விட்டனர் என்பதைக் காட்டுகிறது'' என்று குறிப்பிட்டுள்ளார். 

1884 ஆம் ஆண்டு இத்தொழிலாளர்களின் நிரந்தரமற்ற தன்மை தொடர்பில் சட்ட சபையிலும், தோட்டத் துரைமார் சங்கத்திலும் விவாதம் நடைபெற்றது. அப்போதிருந்த கவர்னர் சேர். ஆர்தர் ஹமில்டன் கோர்டன் (குடிணூ.அணூவடழூணூ ஏச்ட்டிடூவணிண எணிணூஞீழூண), ""இந்த மக்கள் நாட்டின் குடித் தொகையில் ஒரு அம்சமாகி விட்டனர்'' என்று குறிப்பிட்டார். இவர்களின் தாயகம் திரும்புதல் பற்றி கருத்துத் தெரிவித்த அப்போதைய துரைமார் சங்கத் தலைவர் ஜோர்ஜ் வோல் (எழூணிணூஞ்ழூ ஙிச்டூடூ) வருடாந்தம் சுமார் 50,000 பேர் தாய்நாடு திரும்பிய போதும் விரைவிலேயே இவர்கள் மிக அதிகமான தொகையினரை மீண்டும் அழைத்து வந்தனர் என்று குறிப்பிட்டார்.

---

இலங்கையின் பெரிய அளவிலான முதலாவது பெருந்தோட்டப் பயிர்ச்செய்கை கோப்பி என்பது அனைவருக்கும் தெரியும். கோப்பிப் பயிர்ச் செய்கை 1830களில் ஆரம்பிக்கப்பட்டு 1890களில் முற்றாக அழிந்தது. இப்பயிர்ச்செய்கையில் ஈடுபடுத்த அழைத்து வரப்பட்ட இந்தியத் தொழிலாளர்களை என்ன காரணத்துக்காகவோ "மலபார்  கூலிகள்' (ஆச்டூச்ஞச்ணூ இணிணிடூடிழூண்) என்று அழைத்தார்கள். இந்த "மலபார்' என்ற வார்த்தை ஏன் அடைமொழியாக வந்தது என்பது பலருக்கும் புதிராகவே இருந்தது. 

ஆரம்பத்தில் போர்த்துக்கேயர் இலங்கையின் வடபகுதியைக் கைப்பற்றியபோது அங்கு வாழ்ந்த வடபகுதி தமிழ் மக்களை "மலபார் குடிகள்' என்றே அழைத்தனர். போர்த்துக்கேயர் இந்தியாவின் கரையோரப் பகுதிகளைக் கைப்பற்றியபோது அவற்றில் ஒரு பிரதேசமான மலபார் கரையோரத்தில் வாழ்ந்த மக்களும் அவர்கள் பேசிய மொழியும், அவர்கள் இந்து மதத்தவர்களாக இருந்ததும்தான் போர்த்துக்கேயர் வடக்குவாழ் மக்களை "மலபார் குடிகள்' (ஆச்டூச்ஞச்ணூ ஐணடச்ஞடிவச்ணவண்) என்று அழைக்கக் காரணம். 

போர்த்துக்கேயருக்குப் பின்வந்த டச்சுக்காரர்களும் வடபகுதி மக்களை "மலபார் வாசிகள்' என்றே தொடர்ந்தும் தமது ஆவணங்களில் குறிப்பிட்டனர். அவர்கள் வடபகுதியில் நிலவி வந்த குடிசார் வழக்காறுகளைத் தொகுத்து அதனை "தேச வழமைச் சட்டங்கள்' என்றனர். அதன் பின் டச்சுக்காரரை விரட்டி, இலங்கையின் கரையோரப் பிரதேசங்களைக் கைப்பற்றிய ஆங்கிலேயரும் "மலபார் வாசிகள்' என்றே அழைத்ததுடன் டச்சுக்காரர்கள் தொகுத்த தேச வழமைச் சட்டத்தை 1806 ஆம் ஆண்டின் 18ஆம் இலக்க ஆணை மூலம் "இலங்கையின் வடபகுதியான யாழ்ப்பாண மாகாணத்தில் வாழ்கின்ற மலபார் வாசிகள் தொடர்பான வழக்குகளின்போது ஏற்புடையதான சட்டம்' என பிரகடனப்படுத்தினர்.

பின் கோப்பித் தோட்டங்களில் வேலை செய்வதற்காக அழைத்து வந்த தொழிலாளர்கள் வடபகுதி மக்கள் பேசிய அதே மொழியையும், மதத்தையும் தோற்றத்தையும் கொண்டிருந்ததால் இந்தியாவின் மெட்ராஸ் மாவட்டங்களில் இருந்து அழைத்து வரப்பட்டதாலும் அவர்களையும் "மலபார் கூலிகள்' என்று பெயரிட்டே அழைத்தனர். 

1879 முதல் 1891ஆம் ஆண்டு வரை இலங்கையின் அப்போதைய சட்டசபையில் தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்திய சேர் பொன். இராமநாதன்,  சேர். பொன். அருணாசலம் போன்றோர் இலங்கைத் தமிழர்களை "மலபார் வாசிகள்' என்றழைப்பது இம்மக்களைக் கொச்சைப்படுத்துவதாகும் என்று எதிர்ப்புத் தெரிவித்தனர். 1880ஆம் ஆண்டு "இலங்கை ஏசியாட்டிக் சொசைட்டி'யில் (அண்டிச்வடிஞி குணிஞிடிழூவதூ ணிழூ இழூதூடூணிண) உரை நிகழ்த்தும்போது சேர். பொன். இராமநாதன் இதனை வெளிப்படையாகவே தெரிவித்திருந்தார். எனினும் "மலபார் வாசிகள்' என்ற சொற்பிரயோகம் தொடர்ந்து அரச ஆவணங்களில் பயன்படுத்தப்பட்டு வந்தது. 1911ஆம் ஆண்டு இலங்கையின் முதலாவது சனத்தொகை கணக்கீட்டின்போது, சனத்தொகை மதிப்பீட்டுக் குழுவின் ஆணையாளராக இருந்த சேர். பொன். அருணாச்சலம் கணக்கீட்டு ஆவணங்களில் இலங்கைத் தமிழர் என்ற பிரிவையும், இந்தியத் தமிழர் என்ற பிரிவையும் ஏற்படுத்தினார். இப்பிரிவு பிறப்புச் சான்றிதழ், இறப்புச் சான்றிதழ் என எல்லா ஆவணங்களுக்கும் பரவி இம்மக்கள் மீதான சிலுவையாக அமைந்து இன்னும் பாரமாக உள்ளது.
---

கோப்பித் தோட்ட வரலாறு உலகின் அடிமை ஒழிப்பு முயற்சியுடன் சேர்ந்தே ஆரம்பமாகின்றது. பிரிட்டிஷ் காலனித்துவ நாடுகளõன மேற்கிந்தியத் தீவுகள், மொறீசியஸ், பிரிட்டிஷ் கினியா போன்றவற்றில் அடிமை முறை ஒழிக்கப்பட்டதைத் தொடர்ந்து அங்கிருந்த பருத்தி, கரும்புத் தோட்டங்களில் வேலை செய்வதற்குத் தொழிலாளர்கள் இந்தியாவிலிருந்து தருவிக்கப்பட்டனர்.  இலங்கையில் அடிமை முறை இருக்கவில்லை. எனினும் "இராஜகாரிய' முறை என்ற கட்டாய வேலை முறைமை இருந்தது.

ஆனால் அதனைப் பயன்படுத்தி கோப்பித் தோட்டங்களில் உள்ளூர் சிங்கள தொழிலாளர்களைப் பயன்படுத்தும் முயற்சி தோல்வியடைந்தது. பொதுவாகவே கோப்பித் தோட்டங்கள் ஆரம்பிப்பதற்கும் பயிர்ச்செய்கையில் ஈடுபடுத்துவதற்கும் சிங்கள மக்களிடையே எதிர்ப்பு காணப்பட்டது.

இத்தகைய நிலையில்தான் 1848ஆம் ஆண்டு பிரித்தானிய அரசுக்கு  எதிரான புரட்சி வெடித்தது. இப்புரட்சிக்கு வீர புரான் அப்பு என்பவன் தலைமை வகித்தான். இப்புரட்சியின் ஒரு காரணமாக மலையக சிங்கள தேசத்தின் நிலம் பிரித்தானிய துரைமார்களுக்கு விற்கப்படலாகாது என்பதும் இவற்றில் தொழில் செய்வதற்கு இந்தியத் தொழிலாளர் தருவிக்கப்படலாகாது என்பதும் முன்வைக்கப்பட்டது. இத்தகைய கோரிக்கைகள் தொடர்பில் 1848 ஆம் ஆண்டு ஜூலை 6 ஆம் திகதி வீர புரான் அப்பு தலைமையிலான ஒரு குழுவினர் பிரித்தானியரின் கண்டி முகவர் சி.ஆர்.புலர் (இ.கீ.ஆக்ஃஃஉகீ) என்பவரைச் சந்தித்தனர். அவரிடம் மனு ஒன்றும் கொடுத்தனர். எனினும் இக்காலத்திலேயே  கோப்பிச் செய்கை ஆரம்பிக்கப்பட்டு நன்கு வளர்ச்சியடைந்திருந்ததுடன்  இலங்கையில் 300,000 இந்தியத் தொழிலாளர்களும் 100,000 ஐரோப்பியரும் குடியேறி இருந்தனர். 

மேற்படி மலையகக் கிளர்ச்சியின் போது கோப்பித் தோட்டங்களின்  முன்னணி துரைமார்களில் ஒருவரான மாத்தளையில் வசித்த லெப்டினன் ஜெனரல் ஹெர்பார்ட் மெடொக் (ஃடிழூதவ. எழூண. ஏழூணூஞழூணூவ ஆச்ஞீஞீணிஞிடு) என்பவரின் கோப்பித் தொழிற்சாலை எரிக்கப்பட்டது. 

இந்தக் கலவரத்தை அடக்கத் தவறியமைக்காக அப்போதைய  ஆளுநர் டொரிங்டனும் இராஜாங்க செயலாளர் டெனன்ட்டும் இங்கிலாந்துக்குத் திருப்பியழைக்கப்பட்டனர்.

இக்கலவரத்தின் நிலைமை பற்றி ஆளுநர் டொரிங்டன் இங்கிலாந்து மகாராணிக்கு எழுதிய அறிக்கையில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்: 
""நிலைமை கட்டுப்பாட்டில் உள்ளது. எம்மிடம் போதுமான இராணுவத்தினரும் பொலிஸ் படையினரும் இருக்கின்றனர். இவற்றைத் தவிர 300,000 இந்திய கூலித் தொழிலாளர்களையும் இராணுவத்தில் இணைக்கலõம். 

இவர்களில் 100,000 பேர் அவர்களது மண்வெட்டி அலவாங்குகளுடனும் தீட்டிய கவ்வாத்து கத்திகளுடனும் துரைமார்களின் தலைமையில் எந்த ஒரு கலவரத்தையும் சமாளிக்கத் தயாராக உள்ளனர்'' என்று குறிப்பிட்டார். பின்னர், வீர புரான் அப்புவும் அவன் தலைமையிலான கோஷ்டியினருமே அடக்கப்பட்டனர். அவர்களுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது.

தொடரும் 
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates