Headlines News :
முகப்பு » » வெள்ளிவிழாக் காணும் இருபத்தைந்தாயிரம் ஆசிரியர்கள்...! லெனின் மதிவானம்

வெள்ளிவிழாக் காணும் இருபத்தைந்தாயிரம் ஆசிரியர்கள்...! லெனின் மதிவானம்


1990 ஆம் ஆண்டு மறைந்த ஜனாதிபதி ஆர். பிரேமதாச அவர்களால் இருபத்தைந்தாயிரம் பயிலுனர் ஆசிரிய நியமனம் வழங்கப்பட்டது. நியமனம் வழங்கப்பட்ட ஆசிரியர்களின் எண்ணிக்கை 25000 எனக் கூறப்பட்டாலும் உண்மையில் அதன் எண்ணிக்கை 37000 ஆக அதிகரித்திருந்தது என்பதை அறிய முடிகின்றது. குறைந்த வருமானத்தை பெற்ற குடும்பங்களுக்கு சனசவிய என்ற பெயரில் உதவித் தொகை வழங்கப்பட்டிருந்த காலச் சூழலில் அத்தகைய குடும்பங்களையும் இலக்காக கொண்டு(சனசவிய உதவித் தொகை பெறுபவர்களுக்கு முன்னூரிமை) வழங்கப்பட்ட நியமனமாகவும் இது அமைந்திருந்தது.  சனசவிய உதவித் திட்டத்தை முன்னிறுத்தி இந்நியமனம் வழங்கப்பட்டமையால் சனசவிய ஆசிரியர்கள் எனவும் அழைக்கப்பட்டனர். இவ்வகையில் நோக்குகின்ற போது பின்தங்கிய சமூகச் சூழலிலிருந்தும் மத்தியதர வர்க்கத்திலின்றும்(ஒப்பிட்டளவில் மிக குறைந்த எண்ணிக்கையினர்) வந்த ஆசிரியர்களே இந்நியமணத்தை பெற்றவர்களாக காணப்பட்டனர். பின்தங்கிய சமூகத்தின் கண்களை திறக்கும் பாரிய பொறுப்பு இவ்வாசியர்களுக்கானது. கடந்த காலங்களை பின்நோக்கி பார்கின்ற பொழுது, முன் எப்போதும் இல்லாத அளவில் அக்காலச் பகுதியில் இவர்களின் சேவைக்கு வாய்ப்பான ஒரு சுழ்நிலை இருந்தது என்பதும் மனங் கொள்ளத்தக்கது.  தூற்றுதல்களுக்கும் போற்றுதலுக்கும் மத்தியில் எமது பணி தொடரவே செய்தது. அதன் அறுவடையாக இவ்வாசிரியர்கள் பணியாற்றிய பின் தங்கிய பிதேசங்களில் பரீட்சை பெறுபேறுகளையும் கலை கலாசார மற்றும் விளையாட்டு துறைச் சார்ந்த அபிவிருத்திகளையும் காண முடிந்தது. இன்று இவர்களில் பலர் இலங்கை அதிபர் சேவையிலும் பதவியுயர்வுகளை பெற்றுள்ளனர்.

அதற்கும் மேலாக 1990களில் சமரசங்களை அடி நாதமாக கொண்டு முகிழ்ந்திருந்த அரசியல் சமூக பொருளாதார சூழல் ஆசிரியர்பளையும் பாதிக்க தவறவில்லை.இத்தகைய சிதைவுகளின் பின்னணியில் மனித ஆளுமையின் கம்பீரமும் பங்களிப்பும் காலத்திற்கு காலம் மாறுப்பட்டும் வேறுப்பட்டும் வந்துள்ளது. அதிகார பீடங்களை சார்ந்தவர்களுக்கு சௌகாரியங்களை ஏற்படுத்தும் விதத்தில் அதிகார தரப்பினரின புனிதங்களிலிருந்து வழியும் சீழினை நக்கி பிழைப்போட்டும் கல்வியலாளர்களும் இங்கு குறைந்தப்பாடில்லை.      இந்த பின்னணியில் தமது ஒடுக்குமுறைகளை எதிர்த்து அவற்றை அம்பலப்படுத்தும் ஆசிரிய இயக்கங்களும் தோற்றங் கொள்ளத் தொடங்கின. இவ்வியக்கங்களில் பங்குபற்றியதில் இவர்களின் எண்ணிக்கையும் கணிசமானது. மலையகத்தில்(வேறுப் பிரதேசங்களிலும் இது குறித்த ஆய்வு செய்ய வேண்டியது அவசியமாகும்) நான் அறிந்த வரையில் திரு. ஆர் சங்கர மணிவண்ணின் பங்கு முக்கியமானதாக கருதுகின்றேன். தன்னலம் பேணி இழித் தொழில் செய்யும் நிலையிலிருந்து மாறி ஓர் ஆசிரிய சமூகத்திற்காக உழைத்து இவரின் பங்களிப்பு இத்தருணத்தில் பதிவு செய்யவேண்டியதொன்றாகும். இதே போன்று தற்போது தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுப்பட்டு வருகின்ற வீ. எஸ். துதிமேகதேவனின் பங்களிப்பும் கவனிப்புக்குரியது.  

இவ்வாறான வரலாற்றுப் பயனத்தின் இடைவேளையில் இருபத்தைந்தாவது ஆண்டில் கால் பதித்துள்ள இவ்வாசிரியர்கள்   வெள்ளி விழா நிகழ்வொன்றினை ஏற்பாடு செய்யும் முயற்சியில் ஈடுபட்டுனள்ளனர். இதற்கான முன்னோடி கலந்துரையாடல்  25.01.2014 அன்று ஒரு கலந்துரையாடல் நடாத்தப்பட்ட போது நண்பர்களை ஒன்றிணைக்கும் பணியை பின்வரும் ஆசிரிய நண்பர்கள் பொறுப்பேற்றுக்கொண்டார்கள். வெள்ளிவிழாகொண்டாட்டத்தில் இணைந்துகொள்ளவிரும்பும் நண்பர்கள் அவர்களுடன் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள். பின்வருவோர் தெரிவு செய்யபட்டுள்ளனர் தலைவர்- திரு. ஆர். சங்கரமணிவண்ணன்,செயலாளர்- திரு. கு.இராஜசேகர், பொருளாளர்: திருமதி. சிவனேஸ்வரி விஜயன், பிரதேச இணைப்பாளர்பளாக  திருவாளர்கள்  என். சந்திரன்(ஹட்டன்), வீ. எஸ். துதிமேகதேவன்(புளியாவத்தை), பி. முத்துலிங்கம்(நோர்வட்), எஸ்.பி. மைக்கல்(சாமிமலை), என். மணிமாறன்(என்பீல்ட்), வீ. முத்துசாமி(வட்டவளை), ஆர். இரவிச்சந்திரன் (நோட்டன்), எஸ். சேகர்(ஹபுகஸ்தலாவ), எம். துரைசிங்கம்(கினிகத்தேனை), கே. சண்முகநேசன்(கொட்டகலை, நுவரெலியா,டயகம), திருமதிகள் கலைவாணி சிவபாதசுந்தரம்(மஸ்கெலியா), ஸ்டெல்லா பாலமோகன்(பொகவந்தலாவ) ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். ஆலோசகர்களாக திருவாளர்கள் லெனின் மதிவானம், எம. ஜேம்ஸ் விக்டர்,வீ. எஸ். துதிமேகதேவன் ஆகியோர் தெரிவாகியுள்ளனர்.

இந்நிலையில் சமூகப் பின்னணியில் அசிரியர்களின் தொழில் வாண்மைத்துவம் குறித்து காய்த்தல் உவத்ததல் அற்ற நிலையில் மதிப்பீடு செய்ய வேண்டியது காலத்தின் தேவையாகும்.

Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates