அழிந்துபோன அடையாளங்களை மீட்டெடுக்க உங்களை நோக்கி கரம் நீட்டுகிறது. பற்றிக்கொள்ள அன்புடன் அழைக்கின்றது எனும் அழைப்புடன் பெருவிரல் கலை இலக்கிய இயக்கத்தின் ‘ஆய்வும் கலந்துரையாடலும்’ மாதாந்த இலக்கிய சந்திப்பு நிகழ்ச்சி எதிர;வரும் 23-03.2014 ஞாயிறு காலை 9.30 மணிககு ஹட்டன் புகையிரதநிலைய வீதி சி.எஸ்.சி மண்டபத்தில் நடைபெறவுள்ளது. ‘தெளித்தை ஜோசப்பின் படைப்புக்கள்’ எனும் தலைப்பில் இடம்பெறும் ஆய்வரங்கிற்கு மலையகத்தின் மூத்த எழுத்தாளர; சாரல்நாடன் தலைமை தாங்கவுள்ளார;. கவிஞர; பெரியசாமி விக்னேஸ்வரன் வரவெற்புரை வழங்க தெளிவத்தை ஜோசப்பின் மூன்று நூல்களின் அறிமுக உரையை மல்லியப்புசந்தி திலகர; ஆற்றவுள்ளார;.
தெளிவத்தை ஜோசப்பின் சிறுகதை படைப்புகள் குறித்து ச.தவச்செல்வன், முன்னுரைகள் குறித்து ம.நிரேஷ்குமார;, நாவல்கள் குறித்து மு.கீர;த்தியன், இலக்கிய ஆய்வுகள் குறித்து நேரு.கருணாகரன் ஆகியோர; ஆய்வுரையாற்றவுள்ளனர;. நிகழ்ச்சியின் இறுதியில் கலந்துரையாடலும் தெளிவத்தை ஜோசப் அவர;களின் ஏற்புரையும் இடம்பெறவுள்ளது. நிகழ்வில் தெளிவத்தையின் படைப்புகள் கண்காட்சிக்கும் விற்பனைக்கும் வைக்கப்படவுள்ளன.
தகவல் : சுதர்மா
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...