வரலாற்றின் தேவைதான் பெரும் அரசியல், சமூக, பெருளாதார,
கலாசார நிறுவனங்களை தோற்றுவிக்கின்றது எனக் கொண்டால் மலையகத்தின் வரலாற்றுத்
தேவைதான் மலையக சமூக ஆய்வு மையத்தை
தேற்றுவித்தது எனலாம். அதிகார பீடங்களை சேர்ந்தவர்களுக்கு சௌகாரியங்களை
ஏற்படுத்தும் புனிதங்களிலிருந்து வழியும் சீழினை நக்கி பிழைப்போட்டும் அறிவுஜீகள் இங்கே குறைந்தபாடில்லை. இந்த பின்னணியில் ‘இனினொரு விதி செய்வோம் ‘ என்ற பாரதியின் நாகரிகத்தில்; கால் பதித்து – தம் கரங்களை உயர்த்தி கலகக்
குரலை ஒலிக்க நிர்ப்பந்திக்கப்பட்ட சமூக சக்திகள் சிலர் ஒடுக்குமுறையை, ஆதிக்கத்தை
எதிர்த்து அம்பலப்படுத்துகின்ற சமூக செயற்பாடுகளில் தம்மை அர்பணித்துக்
கொண்டார்கள். இவர்கள் எண்ணிக்கையில் குறைவுற்றிருந்தாலும் சுதந்திர காற்றை
சுவாசிக்க முற்பட்ட இவர்களின் தேற்றம்- இருப்பு உலகில் கம்பீரமாகவே இருந்துவந்து,
இன்றும் தொடர்வதாக உள்ளது.
அந்தவகையில் போராடிக் கொண்டிருக்கும் உழைக்கும் மக்களின்
உள்ளத்தை உணர்ந்து அவர்களின் துன்பத் துயரங்களை வெவ்வேறு வகைகளிலும் வடிவங்களிலும்
எதிர்த்துக் குரல் எழுப்பிவந்துள்ள எதிர் மரபு ஒன்று உலகின் பல பாகங்களிலும்
இருப்பதை போல மலையக பாரம்பரியத்திலும் அத்தகைய மரபு ஒன்று வளர்ந்து வந்துள்ளதை
அவதானிக்கலாம். எதிர் – மரபு என்று நான் குறிப்பிடுவது
மரபை எதிர்க்கும் ஒன்றையல்ல: மாறாக எதிர்த்து இயங்கும் மரபு ஒன்றினையேயாகும். இந்த
போக்கினை மலையக சமூக ஆய்வு மையத்தினர் ஏதோ ஒருவகையிலும் அளவிலும் பிரதிப்பலித்தே
நிற்கின்றனர் எனலாம்.
இன்றைய உலகமயமாதல் சூழலில் முதலாளித்துவ உற்பத்திமுறை
சர்வதேசமயமாக்கப்பட்டுள்ளது. நாடு கடந்த அமெரிக்காவின் மாநிலங்களாக ஏனைய நாடுகளை
இணைப்பது என்ற தெளிவான அரசியல் திட்டத்துடன் அமெரிக்கா செய்து வருகின்ற
சூழ்ச்சியின் விளைவே உலகமயமாகும். உலகமயம் என்ற திட்டத்தின் பின்னணியில் இன்று
ஏற்பட்டுவருகின்ற அரசியல் கலாசார பண்பாட்டு சீரழிவுகள் மலையகத்தையும் பாதிக்கவே
செய்திருக்கின்றன.
இத்தகைய நசிவு தரும் சூழலின் பின்னணியில் பொது மக்கள்
மத்தியில் ஒருவித அதிருப்தி மனங்குகள் வளர்ந்து அவர்களது சமூக எண்ணங்கள் மங்கலாகி
போவதைக் காணலாம். ஒருப்புறமாக நசிவு தரும் அரசியல் பண்பாட்டு இயக்கங்கள்
மறுப்புறத்தில் அதிதீர வரட்டு வாதத்தில் முழ்கி வெறும் கோசங்களின் அடிப்படையிலான
செயற்பாடுகள் தொடந்தவண்ணமுள்ளன. இவர்கள் பொது மக்களுக்காக இயங்குவதை விட இரசிகர்
மன்றங்களை உருவாக்குவதையே நோக்காக கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில் இன்று மலையகத்தில் பல அமைப்புகளும்
அவ்வமைப்புகளின் வெளியீடுகளும் வெளிவந்த வண்ணமே உள்ளன. இவ்வாறானதோர் சூழலில் சகல
ஜனநாயக மார்க்சிய சக்திகளும் ஒன்றினைதல் குறித்து சிந்திக்க வேண்டியுள்ளது.
ஒன்றினைவது என்பது ஒரு அமைப்பு அல்லது கட்சி சார்ந்த உணர்வை மற்றக் குழுக்களின்
மீது திணிப்பதல்ல, மாறாக ஒவ்வொரு அணியிலும்
காணப்படக் கூடிய சமூகம் சார்நத கூறுகளை சாதகமாக பயன்படுத்தி ஒன்றாக செயற்பட
வுண்டும் என்பதே அதன் பொருள். இதற்கு மாறாக ஒரு வெகுஜன அமைப்பை உருவாக்காது என்பதே
அதன் பொருள். மாறாக வெற்றுக் கோங்களினால் நிலை நிறுத்து முற்படுகின்ற எந்தவொரு
அமைப்பும் சமூகத்திற்கு பயன்படப்போவதில்லை. அழிவையே கொண்டு வரும்.
அதேவேளை, மலையக இலக்கியம் பிரமாண்டமானதோர் பாட்டாளி
வர்க்கத்தினடியாக தோன்றியதாகும். மலையகத்தின் வாழ்நிலைகளும் உற்பத்தி முறைகளும்
ஓர் உழைக்கும் மக்களின் உணர்வுகளை முதன்மைப்படுத்துவதாக அமைந்துள்ளமை அதன் பலமான
அம்சமாகும். அதற்காக மலையக இலக்கியம் சமரசத்திற்கு அப்பால் பட்ட தொன்று என்பது கருதவேண்டியதில்லை.
இங்கு அவ்விலக்கிய தொகுதியில் உழைக்கும் மக்களை நேசிக்கின்ற பண்பே முனைப்பு
பெற்றுள்ளது என்பதையே இங்கு அவதானத்திற்குரியது. இந்த பின்னணியில் எழுந்த
நடேசய்யர் மீனாட்சியம்மாள் தம்பதிகளும் பின்னர் வந்த இளஞ்செழியன் என்ற ஆளுமையும்
இந்த சமூகவமைப்பின் தோற்றுவாயிகளாக மாத்திரமன்று அதனை தேற்றுவிப்பவர்களாகவும்
இருந்தனர். மலையகத்தில் இயங்கிய இடதுசாரிகளும் இயக்கங்களும் அந்த மரபை இன்னாரு
கட்டத்திற்கு வளர்த்து செல்ல முனைந்தனர். இவர்கள் உழைக்கும் தொழிலாளர்களையும்
அவர்களுக்காக உழைக்க கூடிய அறிவுஜீவிகளையும் மையப்படுத்தியே தமது செயற்பாடுகளை
முன்னெடுத்தனர்.
இத்தகைய மானுட அணியில் தன்னை நிலைநிறுத்த முயற்சிக்கும் மலையக
சமூக ஆய்வு மன்றத்தினர் அம்மக்களின் வாழ்வுடனும் இருப்புடனும் இணைந்திருந்த
சொல்லான ”பெரட்டுக்களம்” என்ற பெயரிலான சஞ்சிகைகொன்று வெளிக்கொணர்ந்திருப்பது
ஆரோக்கியமாதொன்றாகும். இதழின் அட்டையில் மலையகயகத்தை மீட்டெடுத்த தியாகி சிவனு
லட்சுமணன் தேயிலைகளிடையே வாழ்வது போன்ற உணர்வை ஏற்படுத்தும் வகையில்.
பின்னட்டையிலும் உலகத் தொழிலாளர் தினத்திற்காக போராடிய தலைவர்களின் படங்கள்
பிரசுரிக்கப்பட்டுள்ளது. இவர்களின் தாரக
மந்திரம் இவ்வாறு பிரவாகம் கொண்டிருந்தது.
”ஓர் உழைக்கும் மக்களின் நலனிலிருந்து அந்நியமுறாமல் மலையக
சமூகத்தின் மாற்றத்தை நோக்கி பயனிப்பதே புதிய பெரட்டுக்களமாகும். நமது அரசியல்
சமூக எல்லகைளை கடந்து மலையக மக்கள் புதிய பெரட்டில் அணித்திரள வேண்டிய காலத்தின்
கட்டாயத்தின் முன் நிற்கின்றோம். இல்லையெனின், எமது வாழ்விடம் மலையத்துக்கே
உரித்தான இனத்துவ அடையாளம், அரசியல் அடையாளம் , அடிப்படை உரிமைகள் என்பன இழந்து முகவரியற்றவர்களாகி விடுவோம்”
இந்நிலை இன்றைய உலகமயமாதல் சூழலில் மாற்றமடைந்துள்ளது. மலையக
மக்களின் இருப்பையே இல்லாதொழிக்கும் வகையில் ”இந்திய தமிழர்“ என்ற பதத்தை பாவிக்கின்றனர். அச்சமூகத்தின் உயிர் நாடியான
தொழிலாளர்களை இழிவாக காட்டி தம்மை உயர்வாக காட்டுகின்ற எண்ணங்களும் சிந்தனைகளும்
இன்று எம் மத்தியில் தோன்றாமலில்லை. இதற்கு மாறாக மலையக தேசியம் எழுச்சி பெற்று
வலுவோடு விறுநடைப்போடுவதற்கான சாத்தியக் கூறுகளும் இன்றுள்ளன. சுதந்திர காற்றை
சுவாசிக்க முற்பட்ட இவர்களின் ; தேற்றம்- இருப்பு மலையகத்தில்
கம்பீரமாகவே இருக்கின்றது. அந்தவகையில் இச்சஞ்சிகை முழுமையிலும் மலையக
தேசியத்திற்கான உணர்வு முதன்மைப்படுத்தப்பட்டுள்ளது. தொழிலாளர்களின் தினமான மே
தினம் பல்லேறுப்பட்ட களியாட்டங்களுக்குரிய விழாவாகவே நடத்தப்படுகின்றன. உழைக்கும்
மக்கள் என்ற கோசத்தின் பின்னணியில் இவ்வாறான களியாட்டங்கள் நடைப்பெறுகையில்
முதலாளித்துவம் தனக்குள் புன்னகைத்துக் கொள்வதாகவே படுகின்றது. இச்சஞ்கையில்
அடங்கியுள்ள “உலகத் தொழிலாளர்கள் தின
வரலாற்றின் நினைவலைகள்“-என்ற மு. ஆஸாத்தின் கட்டுரை
மேதினத்தின் ஆன்மாவை உணர்த்துவதாக அமைந்துள்ளது.
மேலும் சிவம் பிரபாகரனின் ”மலையகத் தேசியம்- சவால்களும்
தீர்வுகளும் என்ற கட்டுரை ”மலையகத் தமிழர்” என்ற அடையாளத்தின் சமூக முக்கியத்துவத்தை சிறப்பாக அடையானம்
காட்டியிருக்கின்றது. இத்துறையில் இன்னும் ஆழமான ஆய்வுகள் வரவேண்டியதன் அவசியத்தை
வலியுத்த முற்படுவதாகவும் இக்கட்டுரை
அமைந்திருக்கின்றது. அவ்வாறே எம். ஜெயகுமார் எழுதிய ”மலையக மறுமலர்ச்சி தொடர்பில் செய்யக் கூடியவைகள் - செய்ய
வேண்டியவைகள் என்ற தலைப்பில் அமைந்த கட்டுரை மலையக தேசியத்தின் பின்னணியில்
மறுமலர்ச்சி எவ்வாறு இருக்க வேண்டும்
என்பதை நோக்குவதாக அமைந்திருக்கின்றது. மலையகத்தின் மறுமலர்ச்சி தொழிலாளர்
வர்க்க நலனை அடிப்படையாக கொண்டு அதன் பின்னணியில் கட்டியெழுப்பட வேண்டும் என்ற
நோக்கு இக்கட்டுரையை கனதியாக்கியிருக்கின்றது. மேலும் சிவனு லட்சுமணனை நினைவுக் கூறல் என்ற
கட்டுரை இன்றைய சூழலில் மலையக தியாகிகள் ஏன் நினைவுக் கூறப்பட வேண்டும் என்பதை
மலையக அரசியல் சமூகப் பின்புலத்தில் வைத்து நோக்குகின்றது. அக்கட்டுரையின்
பின்வரும் பந்தி அவதானத்திற்குரியது.
“சிவனு லட்சுமணன் போன்றோரின்
தியாகத்தால் கட்யெழுப்பட்ட மலையக மக்களின் உரிமைக்கான போராட்டமானது இன, மத மொழி, சாதி சார்ந்த போராட்டமாகவோ
அல்லது குழு போராட்டமாகவோ முன்னெடுக்கப்படாமல் அது பரந்துப்பட்ட ஜனநாயக போராட்டமாக
முன்னெடுக்கப்படல் வேண்டும். யாவற்றிற்கும் மேலாக மலையகத் தமிழர்களின் சுபிட்சத்திற்கான
மக்கள் போராட்டமானது இலங்கையில் வாழ்ந்து வருகின்ற ஏனைய அடக்கப்பட்ட மக்களின்
போராட்டங்களுடனும் முழு தேசிய விடுதலை போராட்டங்களுடனும் இணைக்கப்படல்
அவசியமானதாகும். எனினும் இவர்களின் மானுட
விடுதலைக்கான பயணத்தில் பல்வேறுப்பட்ட அடக்கு முறைகளும் தடைகளும் எதிர்பார்க்கப்படுகின்றன.
அதேவேளை அவற்றினை மீறி முன்னேறுவதற்கான சாத்தியக் கூறுகளும் காணப்படுகின்றன.
இவற்றினை வீரியத்துடனும் நேர்மையுடனும் முன்னெடுக்கக் கூடிய மக்கள் இயக்கமொன்றினை
கட்டியெழுப்புதல் அவசியமானதொன்றாகும். இந்த
பின்னணியில் சிவனு லட்சுமணனின் வீர நினைவுகள் நினைவுக் கூறப்பட வேண்டும்.”
சமூக போராட்டம் என்பது வாழ்க்கைகான போராட்டமல்ல அது சமூகத்தை
மாற்றுதற்கான பேராட்டமாகும் என்ற வகையில் மலையக சமூகமாற்றத்திற்கான போராட்டத்தில்
மலையக தியாகிகள் குறித்து நினைவுக் கூறப்பட வேண்டியதன் அவசியத்தை இக்கட்டுரை
வலியறுத்திநிற்கின்றது. அத்துடன் மலைபிள்ளை எழுதிய “நெற்றிக் கண்” என்ற கவிதையும் இச்சஞ்சிகையில் இடம்பெறுகின்றது. இவ்வெழுத்துக்களை
ஒட்டு மொத்தமாக நோக்குகின்ற போது அவற்றிடையே நுண்ணிய தத்துவார்த்த வேறுப்பாடுகள்
காணப்பட்ட போதினும் ”மலையக தேசியம்” என்ற சிந்தனைப் போக்கே அதன்
ஆன்மாவாக திகழ்கின்றது. அச்சிந்தனை குறுகிய பிரதேசவாதமாக அல்லாமல் குறித்த
சமூகத்தின் இருப்பை சமூகவுருவாக்கத்தை
நிலை நிறுத்த முயல்வாதகவே அமைந்திருப்பது வரவேற்கதக்கதொரு அம்சமாகும் . இவ்விதழ்
தொடர்ச்சி இன்றைய சமூக தேவையாகின்றது.
தொடர்புகளுக்கு- சிவம் பிரபாகரன் (071- 4903509), e-mail- upcosorec@yahoo.com
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...