1870 இல் தோட்டத்தொழிலாளர்கள் |
வாக்குரிமையின் முக்கியத்துவம் அறியாத தொழிலாளர் குடும்பங்கள்
சங்கங்கள் தெளிவுபடுத்த வேண்டாமா?
ஆண்டுதோறும் ஜுன் முதலாம் திகதி முதல் வாக்காளர் இடாப்பில் பதிவு செய்து கொள்வதற்கான விண்ணப்பப்படிவங்கள் கிராம சேவை உத்தியோகத்தர்கள் ஊடாக விநியோகிக்கப்படுவது வழக்கமாகும். இந்த விண்ணப்பப் படிவங்களைப் பூர்த்தி செய்து ஜுன் 30 ஆம் திகதிக்கு முன்னதாக அந்தந்த கிராம சேவை உத்தியோகத்தர்களிடம் ஒப்படைக்க வேண்டியது வாக்குரிமை யுள்ள அனைவரினதும் கடமையாகும்.
பெருந்தோட்டத் துறையைப் பொறுத்த வரையில் இந்த நடைமுறைகள் ஒழுங் காக பின்பற்றப்படுவதில்லை என்றே கூற வேண்டும். அரச நிர்வாகத்தினை கிராம மட்டத்தில் முன்னெடுத்துச் செல்லும் பிரதான மையமாக விளங்கும் கிராம சேவையாளர் பிரிவுகள், அவற்றின் முக்கியத்துவத்தையும் உணராத ஒரு சமூகமாக இன்னமும் இருப்பது பெருந்தோட்டத் தொழிலாளர்கள் என்றால் மிகையாகாது.
பெருந்தோட்டத் தொழிலாளர்களான இந்திய வம்சாவளியினருக்கு பிரஜா வுரிமை அந்தஸ்து கிடைக்கப் பெற்ற போதிலும் அதனை அவர்கள் எவ்வாறு பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்பது புரியாத புதிராகவே இருக்கிறது. இந் நிலையில் எதிர்காலத்தில் அரச நிறு வகத்துடனான தமது தேவைகளை எவ்வாறு பெற்றுக் கொள்ளப் போகி றார்கள் என்பது கேள்விக்குரியே!
வாக்களிப்பதற்கான உரிமை இல்லாது வாழ்ந்து வந்த இந்திய வம்சாவளி தோட்டத் துறைசார்ந்தோர் 2003 ஆம் ஆண்டு 35 ஆம் இலக்க சட்டத்திற் கமைய முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவின் ஆட்சிக் காலத்தில் பிரஜா உரிமை வழங்கப்பட்டது.
பிரஜா உரிமை என்றால் என்ன? அதனால் ஏற்படும் நன்மைகள், வாக் குரிமையின் முக்கியத்துவம் போன்ற விடயங்களில் அந்த மக்களுக்கு தெளிவூட்டப்படாமையால் இன்று வரையிலும் வாக்காளர்களாக தம்மை பதிவு செய்து கொள்ள முடியாமல் இருக்கின்றனர். இன்னும் சிலர் பிரஜா உரிமைதான் கிடைத்து விட்டதே. இனியென்ன பெயர் விபரங்கள் கிராம சேவை உத்தியோகத்தரினால் பதியப் பட்டுவிடும் என எண்ணியிருந்தனர். இன்னொரு தரப்பினர் எதைப் பற்றியும் அலட்டிக் கொள்ளாதவர்களாக இருந்துவிட்டு தேர்தல் காலங்களில் வாக்காளர் பட்டியலில் தமது பெயர் பதியப்படவில்லை என குறைகூறிக் கொண்டிருப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
இந்நிலையில் வாக்காளர்களாகப் பதிவு செய்து கொள்வது, கிராம சேவை உத்தியோகத்தரின் பணிகள், தேவைகள், வாக்குரிமை போன்ற விடயங்கள் தொடர்பாக மலையக அரசியல், தொழிற்சங்க மற்றும் சமூக நல நிறுவனங்கள் தோட்ட மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது அவசியமாகும்.
இவ்வாண்டு தேர்தல் இடாப்பு திருத் தும் பணிக்காக வாக்காளர் பட்டியல் கள் காலதாமதமாகி விநியோகிக்கப் பட்டதாக தொழிலாளர்கள் தெரிவித் தனர். குறிப்பாக மஸ்கெலியா பகுதி யில் விநியோகிக்கப்பட்ட விண்ணப்பப் படிவங்களை உரிய முறையில் பூர்த்தி செய்யப்படவில்லை என கிராம சேவை உத்தியோகத்தர்கள் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பாக ஜனநாயக தொழி லாளர் காங்கிரஸின் அம்பகமுவ பிரதேச அமைப்பாளர் க. இராஜ் குமாரிடம் வினவிய போது இவ் விடயத்தில் மலையகத்திலுள்ள சமூக நலனில் அக்கறையுள்ள அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பைத் தர வேண்டியது அவசியமாகும் என்றார்.
தோட்டப் பகுதிகளில் எமது தொண்டர்களின் உதவியுடன் தொழிலாளர் களின் பெயர், விபரங்கள் விண்ணப் பப் படிவத்தில் பூர்த்தி செய்து அந்தந்த கிராம சேவை உத்தியோகத்தர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதுவரை காலமும் விண்ணப்பிக்காதிருந்தவர்கள் தொடர்பில் கூடிய கவனம் செலுத்தப்பட்டது. புதிதாக பதிவு செய்பவர்களுக்கான சத்தியக் கடதாசி உட்பட தேவையான தஸ்தாவேஜுக்கள் வழங்கப்பட்டன.
மஸ்கெலியா கிராம சேவையாளர் பிரிவு, லக்கம், மவுசாகலை, சீத்தகங்குல, பிரவுன்லோ, பிரவுன்சீக், மொக்கா ஆகிய கிராம சேவையாளர் பிரிவு களிலுள்ள 47 தோட்டங்களிலுள்ள தோட்டக் குடியிருப்புகளுக்குச் சென்று வாக்காளர் இடாப்பில் தமது பெயர்களை சேர்த்துக் கொள்வதற்காக எமது தொண்டர்கள் உதவினார்கள்.
முதலாம் ஆண்டில் தமது பிள்ளை களை சேர்த்துக் கொள்ளும் பெற்றோரில் 30 சதவீதமானோர் வாக்காளர் பட்டிய லில் தங்களது பெயர்களைப் பதிவு செய்திருக்கவில்லை. ஏனோதானோ என்றிருந்ததாலேயே இந்நிலை ஏற்பட் டது. அரசாங்கம் பெருந்தோட்டப் பகுதிகளுக்கென தமிழ் கிராம சேவை உத்தியோகத்தர்களை நியமித்திருந்தது. ஆனால் மக்களின் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு கிராம சேவை உத்தியோ கத்தர் பிரிவுகள் அமையவில்லை. கிராமங்களுக்கு ஒருவிதமாகவும் பெருந்தோட்டப் பகுதிகளுக்கு ஒருவிதமாகவும் கிராம சேவை பிரிவுகள் ஏற்படுத்தப்பட்டுள்ள நிலையில் தமிழ் கிராம சேவை உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட வேண்டியதன் அவசியத்தை உணர்த்து கின்றன. அமரர் செளமியமூர்த்தி தொண்டமானின் காலப் பகுதியில் தமிழ் மொழியில் சேவையாற்றக் கூடிய கிராம சேவை உத்தியோகத்தர் நியமனங்கள் வழங்கப்பட்டது. நுவரெ லியா மாவட்டத்தில் கிராம சேவை உத்தியோகத்தர்கள் சேவையாற்றி வருகின்றனர். தற்போதைய நிலைமை யில் அவை போதுமானதாக இல்லை.
தோட்டப் பகுதிகளில் படித்துவிட்டு வேலையில்லாமல் இருக்கும் இளைஞர் யுவதிகளின் உதவிகளை அந்தந்த தோட்டப் பகுதிகளிலுள்ள குடும்பங்களின் வாக்காளர் விண்ணப் பப் படிவங்களை நிரப்புவதற்கு பெற்றுக் கொள்ளலாம். 18 வயதைப் பூர்த்தி செய்த அனைவரும் சத்தியக் கடதாசி, பிறப்பு சான்றிதழ், தேசிய அடையாள அட்டை போன்ற ஆவ ணங்களுடன் கிராம சேவை உத்தி யோகத்தரை அணுகினால் வாக்காளர் பதவில் தமது பெயர்விபரங்களை சேர்த்துக் கொள்வதற்கான வாய்ப்புக் கள் இருந்தும் அதனைப் பயன்படுத் திக் கொள்வோர் மிகச் சிலரே.
பாராளுமன்றம், மாகாண சபை, நகர சபை, பிரதேச சபை தேர்தல்களில் எமது பிரதிநிதித்துவத்தை இழக்க நேரிடுவதற்கு வாக்களிப்பை பயன் படுத்தாமையே பிரதான காரணமாகும். எனவே, மலையகப் பகுதியிலுள்ள தொழிற்சங்க அரசியல்வாதிகள் மற்றும் புத்திஜீவிகள் இவ்விடயத்தில் கூடிய கவனம் செலுத்துவது அவசியமாகும்.
செ. தி. பெருமாள். - மஸ்கெலியா,
நன்றி - தினகரன்
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...