Headlines News :
முகப்பு » » முன்னுரை : கோப்பிக்கால வரலாறு - 1824- 1893 (கண்டிச் சீமையிலே)

முன்னுரை : கோப்பிக்கால வரலாறு - 1824- 1893 (கண்டிச் சீமையிலே)


""கண்டிச் சீமையிலே'' என்ற இந்த வரலாற்று நூல் இலங்கையின் பெருந்தோட்ட வரலாற்றின் முதற் கட்டமான கோப்பிப் பயிர்ச்செய்கையின் தோற்றத்தையும் பின்னர்  அது படிப்படியாக வளர்ச்சியடைந்து ஒரு குறித்த காலத்தில் இலங்கை பொருளாதாரத்தின் ""பொற்காலம்'' என்ற பெயரையும் பெற்ற பின் மிகக்குறுகிய காலத்திலேயே ஹெமிலியா வெஸ்டாரிக்ஸ் (ஏழூட்டிடூடிச் ஙழூண்வச்ணூடிது) என்ற நோய்க்கு இலக்காகி மடிந்து போன வரலாற்றையும் கூறுகின்றது. மிகச் சரியாகக் கூறுவதாயின் ஹென்றி பேர்ட் (ஏழூணஞீணூதூ ஆடிணூஞீ) (பிரிட்டிஷ் இராணியின் படைகளின் உயர் கட்டளை அதிகாரி) அவலும் அப்போதைய ஆள்பதியான எட்வர்ட் பாண்ஸ் (உஞீதீச்ணூஞீ ஆச்ணூணழூண்) அவர்களாலும் கம்பளைக்கருகில் சிங்ஹபிட்டி என்ற இடத்தில் முதலாவது கோப்பித் தோட்டம் 1823ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து 1893ஆம் ஆண்டு வரையான கோப்பி பெருந்தோட்ட வரலாற்றினை இந்நூல் பதிவு செய்கின்றது.

கோப்பித்தோட்ட வரலாறு என்றவுடன் இது ஒரு விவசாய பயிர்ச்செய்கையின் வரலாறு என்று கருதிவிடக்கூடாது. கோப்பித்தோட்டத்தில் கூலி வேலை செய்வதற்கென தென்னிந்தியாவில் இருந்து அழைத்து வரப்பட்டு கண்டிச்சீமையெனும் கண் காணாத தேசத்தில் அவர்கள் அனுபவித்த அவலமும் வாங்கிய அடியும் உதையும் கண்ணீரும் கம்பலையும் கொண்ட துன்பியல் வரலாறுதான் இந்நூல் எனக் கூறுவது மிகப் பொருத்தமானதாகும்.

உலகின் மானிடவியல் வரலாற்றில் பல்வேறு அழிந்தொழிந்து போன நாகரிகங்களின் வரலாறு பற்றி நாம் தெரிந்து வைத்துள்ளோம். அமெரிக்காவின் இன்கா, மான் இனமக்களின் நாகரிகம், பபிலோன், யூப்ரடீஸ் டைகரிஸ், மொஹஞ்சதாரோ, ஹரப்பா, சிந்துவெளி நாகரிகங்கள் என பல நாகரிகங்கள் வரலாற்றில் பேசப்படுகின்றன. இவையெல்லாமே இலட்சக்கணக்கான மக்கள் மடிந்தொழிந்த மண் மேடாகத்தான்  பின்னர் காணப்பட்டன. அண்மையில் கூட இலங்கையின் வடக்கில் முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற கடுமையான யுத்தத்தால் இலட்சக்கணக்கானக்கானோர் மாண்டு மண்ணோடு மண்ணாயினர். இவர்கள் மாண்ட இடமும் இன்று முள்ளிவாய்க்கால் மண் மேடாகி வரலாறாகிப் போனது.

இப்படித்தான் கோப்பிக்கால வரலாறு என்று சொல்லப்படுகின்ற 1823 முதல் 1893 வரையுள்ள இந்த ஏழு தசாப்த வரலாற்றை ஆராய்ந்தவர்கள் சுமார் இரண்டு இலட்சம் பேர் இயற்கை மரணங்களுக்கு அப்பால் கொலரா, பசி, பட்டினி, கொடிய மிருகங்கள் மற்றும் பாம்புக்கடி, கடுமையான குளிர் போன்றவற்றுக்கு பலியாகி தாம் நட்ட கோப்பி மரங்களுக்கே உரமாகி மண்மேடாகிப் போனார்கள்.

இவர்கள் இந்த நாட்டுக்கு செய்த தியாகம் எண்ணற்றன. இந்த நாட்டின் ஏற்றுமதிப் பொருளாதாரம், போக்குவரத்து மார்க்கங்களான பெருந்தெருக்கள், புகையிரத வீதிகள், பாலங்கள் முதலானவற்றை அமைத்தவர் இவர்கள் தான் என்றால் யார் நம்புகிறார்கள். அதனால்தான் இந்த வரலாற்றுத்தொடர் வீரகேசரியின் வெளியீடான "சூரியகாந்தி' பத்திரிகையில் தொடராக வெளிவந்து முடிவற்ற தருவாயில் அதன் முடிவுரையாக பின்வரும் கவிதை வரிகளை எழுதினேன்.

தாஜ்மஹாலைக் கட்டியது
யாரென்று கேட்டேன்
ஷாஜகான் என்றார்கள்
பிரமிட்டுகளை கட்டியது
யாரென்று கேட்டேன்
பாரோ மன்னன் என்றார்கள்
தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டியது
யாரென்று கேட்டேன்
ராஜராஜ சோழன் என்றார்கள்
மலையகத்தின் தேயிலைத் தோட்டங்களையும்
பெருந்தெருக்களையும் தண்டவாளங்களையும் 
பாலங்களையும் கட்டி உருவாக்கியது 
யாரென்று கேட்டேன்
பிரிட்டிஷ்காரன் என்றார்கள்.

இந்நூலுக்கு வழங்கியுள்ள அணிந்துரையில் பேராசிரியர் சந்திரசேகரன் அவர்கள் குறிப்பிட்டது போல் வரலாறுகள் மன்னர்களும் சக்கரவர்த்திகளும் பேரரசுகளும் ஏகாதிபத்தியங்களும் பெற்ற வெற்றி வரலாறுகளாக மாத்திரமே உள்ளன. இந்த மாமன்னர்களின் வெற்றிகளுக்குப் பின்னால் தியாகிகளாகி மரணித்துப் போய்விட்ட மக்கள் வரலாறுகளும் அவ்விதம் அம்மன்னர்களால் தோற்கடிக்கப்பட்டு சித்திரவதைக்கு உள்ளாகி மாண்டொழிந்து போனவர்களின் வரலாறுகளும் எங்கும் உரிய முறையில் எழுதப்படவில்லை. அதனால்தான் மேற்படி தொடரின் முடிவுரையின் இறுதி அங்கமாக மேற்படி கவிதையை எழுதினேன். 

தாஜ்மகாலைக் கட்டிய ஷாஜகானின் வரலாறு இன்றுவரை பேசப்படுகின்றது. பிரமிட்டுகளை கட்டிய பாரோ மன்னர்களின் வரலாறுகள் இன்றுவரை பேசப்படுகின்றன. தஞ்சை பெரிய கோயிலைக் கட்டிய ராஜராஜ சோழனை இன்றும் நாம் போற்றிப் புகழ்கின்றோம். இலங்கையின் கோப்பிக் கால வரலாற்றின் முக்கிய அம்சங்களில் ஒன்றான இலங்கையில் ரயில் பாதைகள், பெருந்தெருக்களுடன் தொடர்புடைய நூற்றுக்கணக்கான பாலங்கள் நீண்ட, பெரிய, கரிய சுரங்கப்பாதைகள் ஆகியவற்றை நமக்கு அமைத்துத் தந்தவன் பிரிட்டிஷ்காரன் என்று நன்றியுடனும் பெருமையுடனும் கூறுகிறோம். ஆனால், இவற்றையெல்லாம் அமைக்க பாடுபட்ட இலட்சக்கணக்கான தொழிலாளர்கள், தொழில்நுட்பவியலாளர்கள், சித்திர மற்றும் சிற்பக்கலைஞர்கள், பொறியியலாளர்கள் இப்படி இவற்றின் உருவாக்கத்துக்கு அர்ப்பணிப்புச் செய்த மக்கள் பற்றி எங்கும் வரலாறுகள் எழுதப்பட்டுள்ளனவாகத் தெரியவில்லை. இந்த ஆதங்கங்கள் அவஸ்தையினூடாக பிரசவிக்கப்பட்டது தான் இந்தநூல். இந்த பிரசவத்தின் 50 சதவீத வலி என்னையும் மிகுதி 50 சதவீத வலி டொனோவன் மொல்ட்ரிச் அவர்களையும் சேரும். 

டெனோவன் மொல்ட்ரிட்ச்
ஈணிணணிதிச்ண ஆணிடூஞீணூடிஞிட
டொனோவன் மொல்ட்ரிச் என்ற உன்னத உத்தம மானுடன் ஆடிவவழூணூ ஆழூணூணூதூ ஆணிணஞீச்ஞ்ழூ  கூடழூ Nடிணழூவழூழூணவட இழூணவதணூதூ இணிழூழூழூழூ தீணிணூடுழூணூண் ணிழூ குணூடிடூச்ணடுச் என்ற நூலை எழுதாதிருந்தால் இந்த நூல் உருவாகி இருக்காது. மேற்படி நூலை பெருந்தோட்டப் பிரதேசங்களுக்கான ஒருங்கிணைப்புச் செயலகம் (இணிஞிணிணிணூஞீடிணச்வடிணஞ் குழூஞிணூழூவச்ணூடிச்டூ ழூணிணூ கடூச்ணவச்வடிணிண ச்ணூழூச்ண், ஓச்ணஞீதூ) 1990ஆம் ஆண்டு வெளியிட்டுள்ளது. மேற்படி நூல் வெளியிடப்படுவதற்கு மூல காரணமாக இருந்துள்ளவர் சமூகப் போராளி வண. பிதா. போல் கெஸ்பர்ஸ் அவர்களை நன்றியுடன் நினைவு கூருகிறேன்.
டொனோவன் மொல்ட்ரிச், தான் மேற்படி நூலை எழுத வேண்டும் என்று நினைத்ததற்கான காரணத்தை பின்வருமாறு அந்நூலின் முன்னுரையின் விபரித்துள்ளார். 

""1950களில் அப்போதைய டைம்ஸ் ஒப் சிலோன் (கூடிட்ழூண் ணிழூ இழூதூடூணிண) பத்திரிகையில் நான் பத்திரிகையாளனாக தொழில்பார்த்த போது தொழிலாளர் தொடர்பான செய்திகளுக்கு பொறுப்பாளனாக இருந்தேன். அப்போது தேயிலை பெருந்தோட்டத்துறையைச் சேர்ந்த தொழிலாளர்களின் ஏகப் பிரதிநிதியாக இ.தொ.கா. தொழிற்சங்கமே செயற்பட்டது. அக்காலத்தில் சங்கத்தின் தலைவராக நாவலப்பிட்டி தொகுதி பா.உ. இருந்த கே. ராஜலிங்கம் என்ற மனதிற்கினிய மனிதர் செயற்பட்டு வந்தார். இவருக்கூடாகவே அப்போது தலவாக்கலை தொகுதி பா.உ. ஆக இருந்த சி.வி. வேலுப்பிள்ளையையும், வி.கே. வெள்ளையனையும் தெரிந்து கொண்டேன். இவர்கள் தொழிற்சங்க யோகிகளாகவும் குருவாகவும் இருந்தார்கள். 1954ஆம் ஆண்டு இ.தொ.கா. பிளவுபட்ட போது இவ்விருவருமே புதிதாக உருவாகிய தேசிய தொழிலாளர் யூனியனில் இணைந்து கொண்டனர். இவர்கள் இருவருமே தொழிலாளர்கள் பிரச்சினையில் பரிவு  காட்டி செயற்படுமாறு என்னைக் கேட்டுக் கொண்டனர்.

வேலுப்பிள்ளை என்ற நல்லிதயம் கொண்ட மனிதர் பிரபலமான அரசியல் கோட்பாட்டாளராகவும் திகழ்ந்தார். இவர் பெருந்தோட்ட மக்களின் மனங்கவர்ந்த கவிஞராகவும் இருந்தார். இவரது கரிய, ஆழமான, உயிர்த்துடிப்புள்ள கதை கூறும் விழிகள் ஆயிரம் வார்த்தைகளுக்கு சமமானவை. இவரது உழைக்கப்பிறந்தவர்கள் (ஆணிணூண வணி ஃச்ஞணிதணூ) என்ற நூலைப் படித்துவிட்டு கண்ணீர்விட்டு அழுதிருக்கிறேன். இந்த எனது அனுபவத்தை எனது அலுவலகத் தோழர்களுடன் பகிர்ந்து கொண்டிருக்கிறேன். டைம்ஸ் பத்திரிகையில் எனக்கு மூத்தவரான என் நண்பர் அமரர் பிரெட் டி சில்வா (ஊணூழூஞீ ஈழூ குடிடூதிச்) மேற்படி நூலுக்கு மிகச்சிறப்பான உள்ளத்தை உருக்கும் முகவுரையொன்றை எழுதியிருந்தார். அந்த முகவுரையில் வேலுப்பிள்ளையின் கவிதைகள் கவிஞரின் உணர்வுகளை குழைத்து கனிந்தூட்டி படிப்பவர்களின் கண்களை குளமாக்கி இரத்தத்தை துடிக்கச் செய்பவை'' என்று குறிப்பிட்டிருந்தார்.

மற்றவரான வி.கே வெள்ளையனை நாம் "வெல்ஸ்' ('ஙழூடூடூண்') என்றே நட்புடன் அழைத்தோம். கண்டி திரித்துவக் கல்லூரியின் ரக்பி காற்பந்தாட்டக் குழுவுக்கு தலைமை தாங்கிய இவரை திரித்துவக் கல்லூரியின் சிங்கம் என்று அழைத்தனர். எனினும், இவர் அக்காலத்தில் மேற்கிந்திய தீவுகளின் (ஙிழூண்வ ஐணஞீடிழூண்) கிரிக்கட் அணியை சேர்ந்தவரைப்போல் கடுமையானவராகத் தோன்றுவார். இவர் ஒரு முறை என்னை விடுமுறை எடுத்துக்கொண்டு ஹட்டன் கிரௌன் ஹோட்டலில் வந்து சில தினங்கள் தம்முடன் தங்கியிருக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டார். அக்காலத்தில் இ.தொ.கா. அட்டன் காரியாலயத்தில் "பியர்ட்' மோட்டார் வாகனம் ஒன்று இருந்தது. அதனை எடுத்துக்கொண்டு ""வெல்ஸ்'' அருகிலுள்ள தோட்டங்களுக்கு அழைத்துச் சென்றார்.  எங்களது அன்றைய அந்தப் பயணம் என் வாழ்வில் திருப்புமுனையாக அமைந்தது. வெள்ளையன் என்ற மானிடன் தொழிலாளர் மத்தியில் அந்த அளவுக்கு அன்பும் மரியாதையும் கொண்டு மதிக்கப்படுபவர் என்று நான் நினைத்திருக்கவில்லை.

மேலே மலைச்சாரலில் இருந்து நூற்றுக்கணக்காக ஆண், பெண் பிள்ளைகள் என்ற பேதமின்றி தொழிலாளர்கள் இறங்கி வந்து தம் அன்புக்குரிய தொழிலாளர் தலைவனை தரிசிக்க சூழ்ந்து கொண்டனர். அந்த உணர்வுபூர்வமான சந்திப்பு அபூர்வமானது, அற்புதமானது என் நெஞ்சை நெகிழச் செய்தது. நான் கொழும்பில் இருந்து கொண்டு பத்திரிகை காரியாலயத்தின் வெள்ளைத்தாள்களில் எழுதிய செய்தி அறிக்கைகளில் குறிப்பிட்டிருந்த பத்து இலட்சம் தொழிலாளர்களின் உண்மைத் தோற்றத்தை அன்றுதான் கண் முன் தரிசித்தேன். இக்கால கட்டத்தில் இலங்கை, இந்திய காங்கிரஸ{ம், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ{ம் தம் மக்களின் பறிக்கப்பட்ட வாக்குரிமையை மீளப் பெற மேற்கொண்ட கடும் போராட்டத்தில் தோல்வியைத் தழுவிக் கொண்டிருந்தன. இந்த மக்கள் என்ன பாவம் செய்தார்கள். இவர்களின் முன்னோர்கள் இந்தியாவில் இருந்து வந்து இந்த மண்ணை வளம் கொழிக்கச் செய்ய பாடுபட்டு தம் உடலையும், உயிரையும் இந்த மண்ணுக்கேயல்லவா அர்ப்பணித்தார்கள். அவர்கள் எதற்காக இந்த மண்ணில் இருந்து மீண்டும் இந்தியாவுக்கே துரத்தப்பட வேண்டும்? 

இந்த மக்களின் முன்னோர்கள் இங்கு வந்து மாய்வதற்காக இந்தியாவில் பிறந்தார்கள். இவர்களோ இந்தியாவுக்குச் சென்று மாய்வதற்காக இங்கு பிறந்துள்ளார்கள். என்மனதில் எழுந்த இந்த சோகமயமான உணர்வு தான் ஒரு நாள் எப்படியாவது இவர்கள் பற்றிய நூல் ஒன்றை எழுத வேண்டுமென என் அடிமனதைத் தூண்டியது. அதன் பின்வந்த வருடங்களில் நான் தேயிலைத் தோட்டத்தொழிலாளர்களின் வரலாறு பற்றி தேடியபோது தான் மெலிந்த, பஞ்சையான, கூனிக்குறுகிய, கவனிக்கப்படாத அந்த மனிதன் தூரத்தில் பனிக்கருக்கலில் நிழலுருவமாகத் தோன்றினான். அவன்தான் கோப்பித்தோட்டத் தொழிலாளி. அவனது வரலாறு தான் இது.

இவ்வாறு டொனோவன் மொல்ட்ரிச் அவர்கள் ஆடிவவழூணூ ஆழூணூணூதூ ஆணிணஞீச்ஞ்ழூ என்ற நூலை தான் ஏன் எழுத நினைத்தேன் என்பதை அந்த நூலுக்கான முன்னுரையில் தெரிவித்துள்ளார். ஆச்ஞீணூச்ண் உஞீடிவணிணூடிச்டூ குழூணூதிடிஞிழூ அமைப்பின் நிறுவுனரும் பிரபல பத்திரிகையாளரும் நூலாசிரியருமான எஸ். முத்தையா அவர்கள் "கூடழூ ஐணஞீணி  ஃச்ணடுச்ணண்  கூடழூடிணூழூ 200 ழூழூச்ணூ குச்ஞ்ச்" என்ற நூலை எழுத முற்பட்ட போது என்னை அழைத்து அந்த நூலை எழுதுவதற்கான ஆய்வாளனாக நியமித்து ஒரு நூற்பட்டியலைக் கொடுத்து அவற்றை தேடி வாங்கி வருமாறும் இல்லாத பட்சத்தில் போட்டோ பிரதி எடுக்குமாறும் பணித்தார். அவ்விதம் நூல்களை தேடியத் போது தான் மேற்படி ஆடிவவழூணூ ஆழூணூணூதூ ஆணிணஞீச்ஞ்ழூ நூல் கிடைத்தது. அதனை வாசித்த பின் எமது இனத்தவர்களுக்காக குரல் கொடுக்கும் புத்திஜீவிகள், அரசியல் தலைவர்கள் முதலானவர்களிடம் இந்நூலை படித்துள்ளீர்களா என்று கேட்டேன். அநேகமானவர்கள் இல்லை என்றே பதில் கூறினார்கள். சமூக, அரசியல், பொருளாதார ஆய்வாளர்கள் கூட இதனைப் படித்திருக்கவில்லை. இவர்கள் தான் நம் இனத்தின் விடுதலைக்காக குரல் கொடுப்பவர்கள் என்று எண்ணிய போது மிகவும் ஏமாற்றம் ஏற்பட்டது. நான் ஏற்கெனவே மொழிபெயர்த்த கசந்த கோப்பி ஆடிவவழூணூ ஆழூணூணூதூ என்ற கோப்பிக்கால வரலாற்று நாவல் தொடர்பிலும் இதே நிலைபாடுதான்.

ஈணிணணிதிச்ண ஆணிடூஞீணூடிஞிட என்ற வேற்று இனத்தவரான (பறங்கியர்) ஒருவருக்கே இம்மக்களின் கையறு நிலை இத்தனை ஆழமான வலியை மனதில் உண்டு பண்ணி மேற்படி நூலை எழுத தூண்டியிருக்குமாயின் அது என்னிலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. என்னிலும் என் மூதாதையர்பட்ட துயரம், அடி, உதை, பிரம்படி, சாட்டையடி, கரடுமுரடான பூட்ஸ் காலால் அந்தரங்க உறுப்பில் எட்டி உதைத்தது, மலத்தை உண்ணச் செய்த கோரம், கடுங்குளிரை தாங்க முடியாமல் வெட்ட வெளியில் தாயும் பிள்ளைகளும் மடிந்தொழிந்த துயரம் இப்படி சொல்லலொண்ணாத துயரம் என் தொண்டையை அடைக்கத் தொடங்கியது. டொனோவின் மொல்ட்ரிச்சின் நூல் காரண காரியங்களுடனான விஞ்ஞான பூர்வமான ஆய்வுநூல். பெற்ற தகவல்கள் சேகரித்த புள்ளிவிபரங்கள், தரவுகள் ஆண்டு வாரியிலான விபரிப்புகள், ஆய்வின் பெறுபேறுகள் என பொன்னும் மணியும் முத்தும் இரத்தினமும் நிறைந்த பொக்கிஷம். நான் அந்த பொக்கிஷங்களை அணுங்காமல் அள்ளி எடுத்து தங்கப்பேழையில் கலைத்துவத்துடன் இழைத்து கசக்கிப் பிழிந்த என் உணர்வுகளால் குழைத்து சாந்து செய்து பதித்துத் தந்துள்ளேன். அமரர் டொனோவன் மொல்ட்ரிச்சுக்கு நம் சமூகம் மிகக் கடமைப்பட்டுள்ளது. அதனால் இந்நூலை அவருக்கே அர்ப்பணம் செய்துள்ளேன். அது அவருக்கு நாம் செய்யும் கைமாறு என்று கருதுகிறேன். இந்நூலைப்படிக்கும் போது நான் அனுபவித்த அதே மனக்குமுறல்களை நீங்களும் உணர்வீர்களாயின் அது தான் இந்நூலுக்குக் கிடைத்த வெற்றியெனக் கருதுவேன். 

நன்றி.
இரா. சடகோபன்
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates