பெருந்தோட்ட பொருளாதாரத்தின் ஆரம்பம்
இலங்கையின் வரலாற்றில் 19ஆம் நூற்றாண்டு மிகமுக்கியமானது. இந்நாட்டில் கோப்பிப் பயிர்ச்செய்கை பிறந்ததும், இறந்ததும் இந்நூற்றாண்டில்தான். 1823ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட கோப்பிப் பயிர்ச்செய்கை 1896ஆம் ஆண்டுடன் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. சுமார் 73 ஆண்டுகள் வாழ்ந்திருந்த கோப்பிப் பெருந்தோட்டங்கள் ஹெமிலியா வெஸ்டட்ரிக்ஸ் (ஏழூட்டிடூடிச் ஙச்ண்வச்வணூடிது) என்ற நோய் தொற்றியதால் முற்றிலும் அழிந்தொழிந்து போயின. எனினும், இந்நூற்றாண்டின் இலங்கை வரலாறு, கோப்பியின் தோற்றம், வளர்ச்சி, அதன் இறப்பு, அதனுடன் இணைந்த இந்திய தொழிலாளரின் வரவு என்பவற்றுடன் மட்டுமே மட்டுப்படுத்தப்பட்டுவிட்டது என்று கருதமுடியாது.
கோப்பிப் பயிர்ச்செய்கை வர்த்தக ரீதியில் ஏற்றுமதிப் பயிராகுமுன் வேறு பயிர்ச்செய்கை முயற்சிகளிலும் பல பிரித்தானிய வர்த்தகர்கள் ஈடுபட்டனர். அவற்றில் குறிப்பிடத்தக்கவைகள். கறுவா, சிங்கோனா, கரும்பு, பருத்தி, அவுரிச்செடி (ஐணஞீடிஞ்ணி கடூச்ணவ) கொக்கோ, இறப்பர் என்பன சிறிய அளவில் பயிர் செய்யப்பட்டு ஏற்றுமதி செய்யப்பட்டன.
இவற்றில் கரும்புச் செய்கை ஓரளவு வெற்றிபெற்றது. 1811ஆம் ஆண்டு அந்தனி பெற்றோலாசி (அணவடணிணதூ ஆழூணூவணிடூச்ஞிஞிடி) என்பவர் வட, தென் மாகாணங்களில் இப்பயிர்ச் செய்கையில் ஈடுபட்டு வெற்றி கண்டார். அதனைத் தொடர்ந்தே அப்போதைய பிரித்தானிய ஆளுநரான பிரட்ரிக் நோர்த் பிரித்தானிய பெருந்தோட்டச் செய்கையாளர்களுக்கு இலவசமாக நிலம் வழங்குவதற்கு தீர்மானித்தார்.
அதன் பின்னர் கோப்பிப் பயிர்ச்செய்கையின் முன்னோடிகளான பேர்ட் சகோதரர்களும் (ஆடிணூஞீ ஆணூணிவடழூணூண்) மற்றும் பலரும் இதில் ஈடுபட்டனர். எனினும், பதுளை ஸ்பிரிங்வெலி கரும்புத் தோட்டத்தை உருவாக்கியவரான சேர் வில்லியம் ரீட் (குடிணூ தீடிடூடூடிச்ட் கீழூடிஞீ) என்பவரே மலைநாட்டின் மண், காலநிலை கரும்புச் செய்கைக்கு உகந்ததல்ல என்று அறிவித்தார். பல கரும்புத் தோட்டங்கள் கைவிடப்பட்டன.
1802ஆம் ஆண்டு வில்லியம் ஒர் (ஙிடிடூடூடிச்ட் ணிணூணூ) என்பவர் மன்னாரில் பருத்தி உற்பத்தியில் ஈடுபட்டார். ரொபர்ட் நொக்ஸ் கண்டி மன்னனிடம் பிடிபடுவதற்கு முன்பு பருத்தி வர்த்தகத்தில் ஈடுபட்டிருந்தார் என்று தெரிகிறது.
அவுரிச் செய்கை போர்த்துக்கேயர் காலத்திலிருந்தே இருந்து வந்த போதும் பின்னர் வங்காளத்து பயிர்ச்செய்கை போட்டியாக வந்தால் கைவிடப்பட்டது. இப்படி இத்தகைய வர்த்தக பயிர்ச் செய்கை நடத்துவது இலங்கையில் பெரும் போராட்டமாகவே இருந்தது. பல பிரித்தானிய வர்த்தகர்கள் வங்குரோத்தாகிப் போயினர்.
இத்தகைய நிலையில் தான் பேர்ட் சகோதரர்கள் (ஏழூணணூஞீதூ ஆடிணூஞீ எழூணிணூஞ்ழூ ஆடிணூஞீ) கம்பளைக்கருகில் இருந்த சின்னப்பிட்டி (தற்போது சின்ஹபிட்டி) என்ற இடத்தில் கோப்பித் தோட்டத்தை உருவாக்கி வெற்றி பெற்றனர். ஹென்றி பேர்ட் பிரித்தானிய படையினர் உதவிக் கமிஷனராக இருந்தார். இவர் கோப்பிச் செய்கையில் 33 வருடங்கள் ஈடுபட்டபோதும் அதில் முழுமையாக திருப்தியடையவில்லை. அதன்பின் அவரது மகன் தனது தந்தையின் முயற்சியை தொடர்ந்தார். அவர் தனது பெயரை ஏழூணஞீணூதூ ஆடிணூஞீ என்று மாற்றியமைத்தார். இவர் பெருந்தோட்ட துரைமார் மத்தியில் முக்கிய புள்ளியாக இருந்தார். துரைமார் சங்கத்தின் தலைவராக 4 தடவைகளும் செயலாளராக ஏழு தடவைகளும் பதவி வகித்தார்.
---
சீன தொழிலாளர் வந்திருந்தால்...
இலங்கையில் கோப்பிப் பெருந்தோட்டச் செய்கை ஆரம்பிக்கப்பட தீர்மானிக்கப்பட்ட போது அவற்றில் ஈடுபடுத்த பெருந்தொகையான தொழிலாளர் தேவைப்பட்டனர். உள்நாட்டுத் தொழிலாளர் அவ்வளவு கடுமையாக உழைக்க விரும்பவில்லை. எனவே, முதலில் சீனத் தொழிலாளர்களை தருவிப்பதென்றே முடிவெடுக்கப்பட்டது.
சீனத் தொழிலாளர்கள் போர்த்துக்கேயர் காலத்திலிருந்தே காலனித்துவ நாடுகளில் அறிமுகமாகியிருந்தனர். இவர்கள் வேலைதேடி போர்த்துக்கேயர் ஆதிக்கத்தில் இருந்த பட்டேவியா, ஆபிரிக்காவின் நன்னம்பிக்கைமுனை ஆகிய பிரதேசங்களில் 1740 களில் குடியேறியிருந்தனர். எனினும் இவர்கள் மத்தியில் காணப்பட்ட வேலையில்லா நிலைமை காரணமாக வன்முறை மற்றும் குற்றச் செயல்களில் ஈடுபட்டமையால் சட்டபூர்வமற்ற பலர் நாடு கடத்தப்பட்டனர். நாடு கடத்தப்பட்டனர் என்று கூறினாலும், செல்லும் வழியில் இவர்களை படையினர் கடலில் வீசிவிடுவர் என்ற வதந்தியும் நிலவியது.
இதன் காரணமாக மேலும் வன்முறைகள் ஏற்பட்டன. பட்டேவியாவில் பதற்றத்தைத் தவிர்க்க ஆளுநர்நாயகம் துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவிட்டார். பலர் சுட்டுக் கொல்லப்பட்டனர். எனினும், சீனத் தொழிலாளர் தொடர்ந்தும் பயன்படுத்தப்பட்டனர். இதற்குக் காரணம் இவர்கள் அதிக உழைப்பாளர்களாக இருந்தமைதான். இக்காலத்தில் பட்டேவியாவில் போர்த்துக்கேய கவர்னராக இருந்த "ஜோன் மெட்சூகர்' 25 சீனர்கள் 50 உள்நாட்டு விவசாயிகளுக்கு சமமானவர்கள் என்று குறிப்பிட்டிருந்தார்.
1785 1794 காலத்தில் டியட்ரிக் வன் டொம்பார்க் (ஈடிழூஞீணூடிஞிடு ஙச்ண ஈணிட்ஞதணூஞ்) தனது பட்டுப்புழுச் செய்கை, நெற்பயிர்ச்செய்கை ஆகியவற்றுக்கு 50 சீனர்களைத் தருவிக்க முயற்சித்து தேல்வியடைந்தõர். பின்னர் பிரித்தானியர் காலத்திலேயே இவர்களின் பிரசன்னம் அதிகரித்தது.
இலங்கையின் முதல் பிரித்தானிய ஆள்பதி பிரட்ரிக் நோர்த் காலத்தில் 80 100 சீனர்கள் இலங்கையில் இருந்தனர் என்றும் இவர்கள் சட்டபூர்வமாக வரவில்லை என்றும் இவர்கள் அனுமதியில்லாமல் சட்டபூர்வமற்ற சூதாட்ட விடுதிகள் நடத்தியமைக்கான பதிவுகள் உள்ளன என்றும் கூறப்பட்டது.
இதன் பின்னர் ஆள்பதி மெயிற்லண்ட் (1805 1811) காலத்தில் ஐரோப்பிய அரச அதிகாரிகளின் வீட்டுத் தோட்டங்களைப் பராமரிக்கவும், காய்கறி பயிரிடவும் 100 சீனர்கள் சட்ட பூர்வமாக தருவிக்கப்பட்டனர். இவர்களின் குடியிருப்பு காலித் துறைமுகத்துக்குஅருகில் (கோட்டைக்கருகில்) அமைந்திருந்தது. இதனை யடுத்து திருகோணமலையிலும் சீன குடியேற்றமமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டபோதும் அது வெற்றி பெறவில்லை. ஏன் சீனர்கள் பெருமளவில் தருவிக்கப்படாமல் இந்தியத் தமிழர்கள் கொண்டு வரப்பட்டனர் என்பதற்கு பலமான காரணம் இருந்தது.
---
சீனத் தொழிலாளர்களை இலங்கைக்கு தருவிப்பது தொடர்பில் பலமுறை காலனித்துவ செயலாளருக்கும், துரைமார் சங்கத்துக்குமிடையில் கடிதப் போக்குவரத்துகளும் வாதப்பிரதிவாதங்களும் நிகழ்ந்துள்ளன. கோப்பிப் பெருந்தோட்டச் செய்கை ஆரம்பிக்கப்பட்டதைத் தெõடர்ந்து பெருந்தொகையான தொழிலாளர்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டது. தென்னிந்தியத் தொழிலாளர்கள் வருவதும் போவதுமாக இருந்தனர்.
1855ஆம் ஆண்டு எதிர்பாராத விதத்தில் கோப்பி அறுவடை மிக அதிகமாகக் காணப்பட்டது. தொழிலாளருக்குப் பெரும் தட்டுப்பாடு நிலவியது. அடுத்த வருடத்திலும் இத்தகைய அறுவடையை துரைமார் எதிர்பார்த்ததினால் பற்றாக்குறையான தொழிலாளர்களை சீனாவில் இருந்து வரவழைக்கும்படி கண்டி மாகாண அரச அதிபர் இ.ரௌடன் பவர் (உ.கீணிதீஞீழூண கணிதீழூணூ) வாயிலாக கோரிக்கை விடுக்கப்பட்டது. அவர் இக்கோரிக்கையை பலமுறை முன்னெடுத்த போதும் ஒன்றும் நடக்கவில்லை. சீனத் தொழிலாளர்கள் ஜமெய்க்கா, டிரினிட்டாட், டெமரேரா ஆகிய மேற்கிந்திய தீவு நாடுகளில் வெற்றிகரமாகத் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டதால் ஏன் அவர்களை இலங்கைக்குத் தருவிக்கக்கூடாது என்று அவர் வாதிட்டார். மூன்று இந்தியத் தொழிலாளர் செய்யும் வேலையை ஒரு சீனத் தொழிலாளி தனித்துச் செய்வான் என்று எடுத்துக் காட்டினார்.
இக்காலத்தில் போர்னியோ (350,000), ஜாவா(125,000), சிங்கப்பூர் (50,000), மலாக்கா (30,000), சியாம் (50,000), இந்தியா (5,000), அவுஸ்திரேலியா (70,000), கலிபோர்னியா (50, 000) ஆகிய நாடுகளில் சீனத் தொழிலாளர் தொழில் புரிந்தனர்.
அப்போது ஆள்பதியாக இருந்த டொரிங்டன் பிரபு ஹொங்கொங்கில் வெளிநாட்டுச் செயலாளராக இருந்த ஜோன்சன் என்பவரிடம் சீனத் தொழிலாளர் பற்றி விசாரித்தார். ஜோன்சன் சீனத் தொழிலாளர்பற்றியும், இந்தியத் தமிழ் தொழிலாளர் பற்றியும் நன்கு அறிந்தவர். அவரது கூற்று பின்வருமாறு இருந்தது:
1. மூன்று இந்தியத் தமிழர் (மலபார் வாசிகள்) சாப்பிடும் உணவை ஒரு சீனத் தொழிலாளி சாப்பிடுவான். எனவே பராமரிப்புச் செலவு அதிகம்.
2. மலபார் வாசிகள் (தமிழர்) எதிர்பார்க்காத சில ஆடம்பரங்களை சீனர்கள் எதிர்பார்த்தனர்.
3. சீனத் தொழிலாளர்களை அரசாங்கம் செலவழித்து (தலைக்கு 6 ஸ்ரேர்லிங் பவுண்) கொண்டு வரவேண்டியிருந்தது. தமிழ் தொழிலாளிகள் தாமாகவே வந்தனர்.
4. சீனத் தொழிலாளர்களின் மனைவிகளும், பிள்ளைகளும் வர மறுத்தனர். ஆனால், தமிழ்த் தொழிலாளர்கள் தமது குடும்பத் தினரையும் சேர்த்தே அழைத்து வந்தனர்.
5. இந்தியத் தொழிலாளர் மிக அருகில் இருந்தனர். சீனத் தொழிலாளரை தூரத்தில் இருந்து அழைத்துவர வேண்டியிருந்தது.
இத்தகைய காரணிகளாலும் மேலும் பல காரணிகளாலும் சீனத் தொழிலாளர் இலங்கைக்கு வரவில்லை. அப்படி அவர்கள் வந்திருந்தால் இன்று மøலயக மக்கள் என்ற சமூகம் இருந்திருக்காது. மாறாக சீன வம்சாவழி மலையக மக்கள் என்றோர் சமூகத்தினர் இலங்கையில் உருவாகி இருப்பார்கள்.
(தொடரும்...)
(தொடரும்...)
+ comments + 1 comments
where can i find the rest of it?
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...