Headlines News :
முகப்பு » » மலையக அரசியல் செல்நெறியும் மலையக மக்களும் - இரா.சிவலிங்கம் நினைவுப் பேருரை

மலையக அரசியல் செல்நெறியும் மலையக மக்களும் - இரா.சிவலிங்கம் நினைவுப் பேருரை


இரா. சிவலிங்கம் - 14வது நினைவுப் பேருரை 
சமூக விஞ்ஞான ஆய்வாளரான சுகுமாரன் விஜயகுமார் நிகழ்த்துகிறார். 

இரா. சிவலிங்கம் ஞாபகார்த்தக் குழு அதனது 14வது நினைவுப் பேருரையை இம்முறை கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் எதிர்வரும் 24ம் திகதி சனிக்கிழமை மாலை 4.30 மணிக்கு நடாத்த ஏற்பாடாகியுள்ளது என ஞாபகாரத்தக் குழுவின் செயாலளர் எச்.எச். விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். 
இந்த நிகழ்விற்கு தோட்ட உடகட்டமைப்பு சமுதாய அபிவிருத்தி அமைச்சின் முன்னால் செயலாளரும் ஞாபகார்த்தக் குழுவின் தலைவருமான எம். வாமதேவன் தலைமையில் நடைபெற உள்ளதோடு “இலங்கையின் அரசியல் கலாசாரமும்  சிறுபான்மையினரின் உள்முரண்பாடுகளும்” என்ற தலைப்பில் கொழும்புப் பல்கலைக்கழக அரசியல் விஞ்ஞானத்துறை சிரேஷ்ட விரிவுரையாளர்  கலாநிதி. எம்.எஸ். அனீஸ் சிறப்புரை நிகழ்த்தவுள்ளார். 

அத்துடன் முன்னால் பிரதி அமைச்சர் பெ. இராதகிருஸ்ணன் இரா. சிவலிங்கத்தின் திரு உருவப்படத்திற்கு மலர் மாலை அணிவிப்பதோடு பேராதனைப் பல்கலைக்கழக தமிழ்துறை விரிவுரையாளர் பெ. சரவணகுமார் பேருரையாளர் பற்றிய அறிமுகத்தை நிகழ்த்தவுள்ளார். 

இரா.சிவலிங்கம் ஞாபகார்த்தக் குழு 2007ம் ஆண்டு வெளியிட்ட இன முரண்பாடும் மலையக மக்களும்: பல்பக்கப் பார்வை என்ற ஆய்வு நூலில் “இன முரண்பாடும் மலையக மக்களும்: இராத்தினபுரி மாவட்டம் பற்றிய விசேட ஆய்வு” என்ற ஆய்வு கட்டுரைமூலம் எழுத்துலகத்திற்கு அறிமுகமான சுகுமாரன் விஜயகுமார் இம்முறை நினைவுப் பேருரையை நிகழ்த்துவதற்கு தெரிவு செய்யப்பட்டிருப்பது ஒரு சிறப்பம்சம் என ஞாபகார்த்தக் குழு செயலாளர் எச்.எச். விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார். 

மலையக மக்கள் வாழந்து வரும் பின்தங்கிய மாவட்டங்களில் ஒன்றான இராத்தினபுரி மாவட்டத்தின் கஹவத்தை பிரதேசத்தில் அமைந்துள்ள ஓபாத தோட்டத்தை பிறப்பிடமாக கொண்ட சுகுமாரன் விஜயகுமார் அப்பிரதேச தோட்டப் பாடசாலையில் ஆரம்ப கல்வியைப் பெற்று பேராதனைப் பல்கலைக்கழகத்தில் அரசியல் விஞ்ஞானத் துறையில் சிறப்பு இளமாணிப் பட்டம் பெற்றுக் கொண்டவர். மக்கள் தொழிலாளர் சங்கம் 2013ம் ஆண்டு வெளியிட்ட தோட்டத் தொழிலாளர்களும் கூட்டு ஒப்பந்தமும் என்ற நூலை தொகுத்தளித்த இவர் மலையகத்தின் சமூக அரசியல் விடயங்கள் பற்றி பத்திரிக்கைகளில் எழுதிவருகின்றார்.  இளம் சமூக ஆய்வாளர்களை வெளிக்கொணந்து ஊக்குவிக்கும் ஞாபகாரத்தக் குழு சுகுமாரன் விஜயகுமார் இரா. சிவலிங்கம் - 14வது நினைவுப் பேருரையை நிகழ்த்துவதையிட்டு நினைவுக் குழு மகிழ்வு கொள்வதாக எச்.எச். விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.  
இலங்கை மனவளக் கலை தலைவரும் ஞாபகார்த்தக் குழு உறுப்பினருமான பேராசிரியர் ஏ.மதுரைவீரன் வரவேற்புரை நிகழத்துவதோடு திறந்த பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளரும் ஞாபகார்த்தக் குழு உறுப்பினருமாகிய தை. தனராஜ் நன்றியுரை வழங்குவார். இந் நிகழ்விற்கு பேராசிரியர் ஏ.மதுரைவீரன் அனுசரணை வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates