Headlines News :
முகப்பு » , , » ஐ.நா.வில் சிறிலங்காவுக்கே வெற்றி என்கிறார் அமைச்சர்! - என்.சரவணன் (இணைப்புடன்)

ஐ.நா.வில் சிறிலங்காவுக்கே வெற்றி என்கிறார் அமைச்சர்! - என்.சரவணன் (இணைப்புடன்)


ஐ.நா.வில் சிறிலங்காவுக்கே வெற்றி என்கிறார் அமைச்சர்!

ஐ.நாவில் மீண்டும் தாம் வென்றிருப்பதாக சிறிலங்கா தெரிவிக்கிறது.

வெளியுறவு அமைச்சர் தினேஷ் குணவர்த்தன அதற்கு கொடுக்கும் விளக்கத்தைப் பாருங்கள்...

பிரித்தானியா கொண்டு வந்த யோசனை என்று இந்த பிரேரரனையை சிறுமைப்படுத்தல். அதன் மூலம் இது பல சபையின் தீர்மானமல்ல என்றும், பல நாடுகளின் தீர்மானமில்லை என்று காட்ட முயற்சித்தல்.

14 நாடுகள் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை என்பது உண்மை. ஆனால் அதுவும் தமக்கு சாதகமாகத் தான் அந்த நாடுகள் நடந்துகொண்டதாக அவர் அறிவித்திருக்கிறார். "இந்த பரிந்துரையை ஆதரிப்பதை தவிர்த்திருக்கிறார்கள் என்கிறார்.  தாம் வாக்களிப்பதை தவிர்ப்பதாக அந்த நாடுகள் அறிவித்ததாக குரிப்பிடுகிறார். அப்படி எதுவும் அங்கு அறிவித்து தவிர்ப்பதில்லை. இயல்பாக ஓரங்கட்டினார்கள் என்று தான் கூற வேண்டும். இன்னும் சொல்லப்போனால் அந்த 14 நாடுகளும் பிரேரணையை ஆதரிக்கவும் இல்லை எதிர்க்கவுமில்லை என்று தான் பொதுவில் எடுத்துக்கொள்வார்களேயொழிய ஒன்றை ஏதோ ஒன்றை சார்ந்திருந்தார்கள் என்று எடுத்துக்கொள்வதில்லை. ஆனால் விழுந்தும் மேசையில் மண் படவில்லை என்கிற தொணியில் அவர் 

44 நாடுகளில் 21 வாக்குகள் தான் ஆதரவளித்துள்ளன 25 நாடுகள் இலங்கைக்கு எதிராக கொண்டு வந்த இந்த ஏகாதிபத்தியவாதிகளின் தீர்மானத்துக்கு ஆதரவாக வென்றெடுக்க முடியவில்லையாம். பெரும்பான்மை நாடுகள் இந்த தீர்மானத்துக்கு ஆதரவளிக்கவில்லையாம். 47 இல் 25  நாடுகள் அதாவது பெரும்பான்மை நாடுகள் தீர்மானத்துக்கு ஆதரவாக கையெழுத்திடவில்லையாம்.

இவ்வளவு காலம் இலங்கைக்கு ஆதரவளித்த இந்தியா, ஜப்பான் ஆகியவையும் இலங்கைக்கு ஆதரவளிக்கவிலையே என்று பத்திரிகையாளர் ஒருவர் கேள்வி எழுப்பிய போது "அனால் அவர்கள் பிரித்தானிய தீர்மானத்துக்கு ஆதரவளிக்கவில்லையே! அப்படிப் பாருங்கள் என்கிறார் அமைச்சர்.

அமைச்சர் இந்தியா ஜப்பான் போன்ற நாடுகளுக்கும் நன்றி தெரிவித்து அவரின் ட்விட்டரில் பகிர்ந்த செய்தி


இது இலங்கையின் இராஜதந்திர தந்திர முயற்சிகளுக்கு கிடைத்த தோல்வி என்பதை மறைக்க அத்தனை முயற்சிஎடுக்கிறார் அமைச்சர். இதற்கு பொறுப்பு சொல்லவேண்டிய அமைச்சு என்கிற வகையில் வெளியிறவுத்துறை அமைச்சும், அதன் அமைச்சராக தினேஷ் குணவர்த்தன அப்படியே தலைகீழாக இதனை தமது வெற்றி என சிங்கள மக்களின் காதுகளில் பூ சுற்ற முயற்சிக்கிறார்.

சிங்களப் பேரினவாத அரசு இதை இரண்டு வகையில் அணுக முடியும். சிங்கள பெரும்பான்மை மக்களிடம் தமக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றிவிட்டார்கள் என்று கூறி தமது கைமீறிய விடயம் என்று தெரிவித்து மக்களைக் கொண்டு ஐ.நாவுக்கு எதிரான எதிர்ப்பு நடவடிக்கைகளை முடுக்கி விடலாம். அல்லது மேலே சொன்னவாறு தமக்கு தான் வெற்றி என்று போலி வாக்களிப்பு சூத்திரத்தின் மூலம்  மக்களை சுயகளிப்பில் வைத்திருக்க முயற்சிக்கலாம். இந்த இரண்டாவது வழியைத் தான் சிறிலங்கா இப்போது கையாள முயற்சிக்கிறது.

அதே வேளை இனி அடுத்ததடுத்த நாட்களில் ஐ.நாவுக்கு எதிராக பெரிய அளவில் எதிர்ப்பு நடவடிக்கைகளை சிங்கள மக்களைக் கொண்டு தூண்டிவிடத்தான் செய்யும் அரசாங்கம்.

2009 யுத்தம் முடிந்ததிலிருந்து சர்வதேச ரீதியில் எழுந்த யுத்தக் குற்றச்சாட்டு நெருக்கடிகளை சமாளிப்பதற்காக போலி சமாதானங்களையும், பொய் வாக்குறுதிகளையும் சர்வதேசத்துக்கு வழங்கி நீதியை நீர்த்துப்போகச் செய்து வந்தது சிங்கள அரசு. இந்த ஒத்திவைப்புகள் காலப்போக்கில் மக்கி மறைந்து காணாமல் போய்விடும் அதற்கப்புறம் அவரவர் வேலைகளைப் பார்த்துவிட்டு அந்தந்த நாடுகள் போய்விடும் என்று நம்பியே இருந்தது அரசு. நீதியை வழங்குவதற்குப் பதிலாக இருந்த உரிமைகளை திட்டமிட்டு பறிக்கும் வேளைகளில் மும்முமுரமாக இருந்தது. இம்முறை வாக்களிப்பு தமக்கு சாதகமாக இருக்காது என்பதை ஓரளவு கணித்திருந்த ஸ்ரீ லங்கா ஆரசு பல நாடுகளிடம் இராஜதந்திர தூது சென்று ஆதரவு கேட்டது. ஆனால் சர்வதேச நாடுகள் இலங்கையிந மீது தமது நலன்களை அடைவதற்காக அரசியல் சதுரங்கக் கைகளை நடத்துவதிலேயே குறியாக இருந்தது.

இப்போதும் ஆதரவளித்த, எதிர்த்த நாடுகள் பலவற்றின் வாக்களிப்பு இலங்கையை தமது நிகழ்ச்சிநிரலுக்குள் கையாள்வதற்காக கொடுத்த வாக்குகள் தான்.

மறுபக்கம் இந்தத் தீர்மானம் கூட தமிழ் மக்களின் ஆகக் குறைந்தபட்ச அபிலாசையை உள்ளடக்கிய தீர்மானம் அல்ல என்பதையும் பதிவு செய்ய கடமைபட்டுளோம்.


Sri Lanka UN Resolution 22.03.2021 by SarawananNadarasa on Scribd

Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates