ஐக்கிய தேசியக் கட்சி என்பது முதலாளித்துவ முதலைகளின் கட்சி என்பதற்கு மாற்றுக் கருத்தில்லை. எந்தவொரு சந்தர்ப்பத்திலும் முதலாளித்துவ வர்க்கத்தின் சுகபோகங்களுக்கு ஐ.தே.க. ஆதரவாகவே செயற்பட்டுள்ளது.
ஐ.தே.கவின் கொள்கைகளும், சித்தாந்தங்களும் முதலாளித்துவத்தின் மறுவடிவமாக இவ்வளவு காலம் இருந்த போதிலும் தற்போது நவீன முதலாளிகளின் அடிமையாகவே செய்றபடுகின்றது. ஆனால், காலங்காலமாக ஐ.தே.கவுடன் இணைந்து சிறுபான்மைச் சமூகங்கள் தமது அரசியல் அபிலாஷைகளை நிறைவேற்றிக்கொள்வதாலும், அரசியல் சமரசங்களை பேணிவருவதாலும் விரும்பியோ விரும்பாமலோ சமகால அரசியல் நகர்வுகளை ஐ.தே.கவுடன் இணைந்தே சிறுபான்மைச் சமூகங்கள் முன்னெடுக்க வேண்டியுள்ளது. (நாட்டின் சூழலுடன்)
நேற்றைய தினம் நாடாளுமன்றில் சம்பளப் பிரச்சினை தொடர்பில் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ் சபை ஒத்திவைப்புவேளை பிரேரணையொன்றை கொண்டுவந்திருந்தார். இவர்களின் உரைகளை சற்று பொருளாதார கொள்கை ரீதியாக ஆராயும் போது முற்று முழுதாக முதலாத்துவ ஆதரவான போக்கிலேயே அமைச்சர் நவீன் திஸ்ஸாநாயக்க உரையாற்றியிருந்தார்.
600 அடிப்படை சம்பளத்தில் இருந்து ஒரு ரூபாவேனும் அதிகரிக்க முடியாது. அவ்வாறு அதிகரித்தால் கம்மபனிகள் வீழ்ச்சியை சந்திக்கும் என்பதே இவரின் உரையின் சாராம்சம். நீண்டகால அடிப்படையில்தான் இந்தப் பிரச்சினையை பார்க்க வேண்டும் என்கிறார். 1994ஆம் ஆண்டுமுதல் நீண்டகால இலக்குகளுடன் பயணத்திருந்தால் பெருந்தோட்டத்துறை இன்றும் இலங்கையின் வருமானத்தை ஈட்டிதரும் முதல்தர துறையாக இருந்திருக்கும்.
இதேவேளை, ஊக்குவிப்பு கொடுப்பனவு தற்போது 100 ரூபாவால் அதிகரிக்கப்பட்டால் கம்பனிகளுக்கு இவ்வருடம் 5 பில்லியன் ரூபா செலுத்த வேண்டியுள்ளது. அது 200 ரூபாவால் அதிகரிக்கப்பட்டால் 7 பில்லியன் ரூபா கம்பனிகளுக்கு மேலதிகமாக செலுத்த வேண்டிய நிலையை ஏற்படும். இதுதான் யதார்த்தம் என்கிறார்.
உற்பத்தித் திறன் கொடுப்பனவு 140 வழங்கப்படுகிறது. அதில் மாற்றங்கள் செய்ய கம்பனிகள் தயாரகவுள்ளதாக கூறுகிறார். பெருந்தோட்டத்துறையில் பங்குடமைகளாகவுள்ள எந்தவொரு கம்பனியும் நட்டத்தில் இயங்கவில்லை. நட்டத்தில் இயங்குவதாக ஏதுமொரு கம்பனி கணக்கறிக்கையை காட்டினால் அது முற்றிலும் தொழிலாளர்களை ஏமாற்றும் செயற்பாடு மாத்திரமே.
ஆண்டொன்றுக்கு அண்ணளவாக 300 மில்லியன் கிலோ வரை இலங்கையில் தேயிலை உற்பத்தி செய்யப்படுகிறது. அதேபோல் தேயிலை ஏற்றுமதி வருமானமும் 1.5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வரை பெறப்படுகிறது. இந்தத் தொழில்துறையில் பாரிய வருமானத்தை கம்பனிகள் வருடாந்தம் பெறுகின்றன என்பதே மறைக்கப்படும் உண்மை.
தொழிலாளர்களின் உழைப்பை உறிஞ்சும் அல்லது அதிகம் சுரண்டு தொழில்துறைவும் இலங்கையில் பெருந்தோட்டத்துறையே காணப்படுகிறது.
பலகோணங்களில் பார்த்ததால் முதலாளித்துவத்தின் சித்து விளையாட்டுகள்தான் இத்தொழில்துறையினுள் அதிகம். நவீன் திஸ்ஸாநாயக்க கூறுவது போன்று உற்பத்தி திறன் கொடுப்பனவு மாத்திரம் அதிகரிக்கப்படும் பட்சத்தில் அடுத்த இரண்டு வருடத்தில் அதனை கம்பனிகள் வழங்கிவிடுமா? காலங்காலமாக நஷ்டத்தில் இயங்குவதமாகவே கம்பனிகள் பாடும் புரணத்தைதான் தொடர்ந்து கூறப் போகின்றன.
எனவே, இந்தத் தொழில்துறையை பாதுகாக்க வேண்டுமென்ற எண்ணம் இலங்கையை ஆண்டுவரும் அரசுகளுக்கு இல்லை என்பதே நிதர்சனம். மாறுபட்ட கோணங்களிலும் இவ்விவகாரத்தை சிந்திக்க வேண்டிய காலகட்டம் என்பது மாத்திரம் தெளிவாகவுள்ளது.
நன்றியுடன் நிசாந்தன் சுப்பிரமணியத்தின் முகநூல் பதிவிலிருந்து
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...