என்.சரவணன் தினக்குரலில் தொடராக 1915 : கண்டி கலவரம், வீரகேசரியில் தொடர் பத்தியாக எழுதிய “அறிந்தவர்களும், அறியாதவையும்” ஆகியவை நூலுறுப் பெற்றது. அந்த நூல்களின் அறிமுக விழா நோர்வே – ஒஸ்லோவில் எதிர்வரும் ஏப்ரல் 29 ஞாயிறன்று மாலை 5 மணிக்கு Fossum Gård மண்டபத்தில் இடம்பெறவிருக்கிறது.
இந்த நிகழ்வில் கலாநிதி சர்வேந்திரா, பர்ஸான் பசீர், ஆகியோர் "1915 : கண்டி கலவரம்" நூலைப் பற்றி கருத்துரையாற்றவுள்ளனர்.
ராஜன் செல்லையா, கவிதா லட்சுமி ஆகியோர் "அறிந்தவர்களும் அறியாதவையும்" நூலைப பற்றி கருத்துரையாற்றவுள்ளனர்.
இந்நிகழ்வை ரூபன் சிவராஜா அவர்கள் வழிநடத்துகிறார். இந்த நிகழ்வின் இறுதியில் இந்நூல்கள் குறித்த உரையாடலும் இடம்பெறவிருக்கிறது.
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...