Headlines News :
முகப்பு » » இயக்கங்களுக்கும் இராணுவத்துக்கும் பயிற்சியளித்தது பற்றி மொசாட் உளவாளியின் ஒப்புதல் வாக்குமூலம்

இயக்கங்களுக்கும் இராணுவத்துக்கும் பயிற்சியளித்தது பற்றி மொசாட் உளவாளியின் ஒப்புதல் வாக்குமூலம்


விக்டர் ஒஸ்ட்ரோவ்ஸ்கி
“By way of Deception” (ஏமாற்றுவதன் மூலம்) என்கிற நூல் 1990இல் வெளியானது. 1990இல் உலகில் அதிக விற்பனையான நூலாக அந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட நூல் அது. இதை எழுதிய விக்டர் ஒஸ்ட்ரோவ்ஸ்கி இஸ்ரேலின் மொசாட் உளவு நிறுவனத்தில் உளவாளியாக பணிபுரிந்த கனேடியர். அந்த நூல் உலகளவில் அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்திய நூல்.
2004 இல் வெளியாகி உலகைக் கலக்கிய "ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்" (Confessions of an Economic Hit Man) நூலும் ஏகாதிபத்தியத்தின் சதி ஏஜென்டாக பணியாற்றிய 'ஜோன் பெர்க்கின்ஸ்' எழுதி ஒரு தசாப்தமாக தமிழுலும் பிரபலமாக பேசப்படுவதுப்படுவது தான். ஆனால் விக்டர் ஒஸ்ட்ரோவ்ஸ்கி சொல்லும் கதை நேரடியாக இலங்கையுடன் தொடர்புபட்டது. இயக்கங்களுக்கும் இராணுவத்துக்கும் அதே இஸ்ரேலில் உள்ள ஒரே தளத்தில் ஒரே சமயத்தில் பயிற்சியளித்தது பற்றி மொசாட் உளவாளியின் ஒப்புதல் வாக்குமூலம் அந்த நூல். பரஸ்பரம் கொன்றழிப்பதற்கான பயிற்சியை அவர்களுக்கு பரஸ்பரம் தெரியாமலேயே மொசாட்டிடம்  பெற்ற பயிற்சி பற்றி நிறையவே உள்ளது அந்த நூலில். (அந்த நூலை முழுமையாக கட்டுரையில் இறுதியில் உள்ள இணைப்பின் மூலம் தரவிறக்கிக் கொள்ளலாம்)

ஆபிரிக்காவில் இயங்கி வரும் அபிஜாரின் தொடர்பு உத்தியோகத்தர்கள் கோடிக்கணக்கான அமெரிக்க டொலர்களுக்கு ஆயுத விற்பனையில் ஈடு பட்டிருந்தார்கள். இவர்கள் தமது வேலையை மூன்று கட் டங்களாக செயல்படுத்துகிறா ர்கள். முதலில் ஒரு நாடு என்ன தேவையை கொண்டு வள்ளது. எதற்கு அது பயப்படு கிறது. யார் யாரை அது எதிரிக ளாக கருதுகிறது என்பது பற்றிய தகவல்களை தமது நேரடி அவதானிப்பின் மூல மாக திரட்டுகிறார்கள். இதன் நோக்கம் இந்தத் தேவைகளை அடிப்படையாகக் கொண்டு உறவுகளை உருவாக்கிக் கொள் வதும், பிறகு ஆயுதங்களோ பயிற்சியோ எதுவேண்டுமானாலும் சரி வேண்டிய உதவிகளை வழங்க இஸ்ரேல் தயாராக இருப்பதாக அறியத் தருவதுமேயாகும். இதன் இறுதிக் கட்டமாக ஒரு நாட்டின் தலைவர் ஆயுதங்களை நோக்கிக் கவரப்பட்டதும், மொசாட்டைச் சேர்ந்தவர்கள் விவசாய உபகரணம் போன்ற ஒன்றையும் அவர் கட்டாயமாக வாங்க வேண்டும் எனத் தெரிவிப்பார்கள். அடுத்ததாக அந்த நாட்டின் தலைவர் இஸ்ரேலுடனான இராஜதந்திர உறவுகளை உருவாக்கி கொள்ளும் பட்சத்தில் இவ்வுதவிகளை மேலும் விஸ்தரிக்க முடியும் என்று நம்ப வைக்கப்படுவார். இது இத்தகைய இராஜதந்திர உறவுகளை உருவாக்கிக் கொள்வதற்கான ஒரு பின் கதவு வழிமுறையாக கையாளப்பட்டு வருகிறது. ஆயினும் ஆயுத விற்பனையானது மிகவும் லாபகரமாக இருந்த போதிலும் இந்த தொடர்பாளர்கள் இதை தொடர்ந்து கடைப்பிடிப்பதில் அவ்வளவு அக்கறை காட்டுவதில்லை.

எப்படியோ, அவர்கள் இலங்கையில் இதனைச் செய்தார்கள். அமிஜார் என்பவரே இத் தொடர்பை ஏற்படுத்தியவர். கரையோர ரோந்து நடவடி க்கைக்கான PT படகுகளை (DEVORA) விநியோகிப்பது உள்ளிட்ட பல இராணுவ உபகரணங்களை வழங்குவதன் மூலம் இராணுவ ரீதியான இத்தொடர்பை அவர் உருவாக்கினார். அதே சமயம் ஜாரும் அவரது கூட்டாளிகளும் PT படகு எதிர்ப்பு உபகரணங்களை இலங்கை அரசுக்கு எதிராக அவற்றைப் பாவிப்பதற்காக போராடும் தமிழர்களுக்கும் வழங்குகினார்கள். ஒருவருக்கு ஒருவர் தெரியாவண்ணம் இலங்கை அரசுக்கும், போராடும் தமிழருக்கும் இஸ்ரேலியர்கள் தனித் தனியே பயிற்சிகளை வழங்கினார்கள். அத்துடன் உலக வங்கியிடமும் பிறநாட்டு முதலீட்டாளர்களிடமும் இலங்கை அரசு வாங்கிய கடனை தம்மிடம் செய்யும் ஆயுதக் கொள்வனவுக்கு பயன்படுத்திவிட்டு அவர்களை எப்படி ஏமாற்றுவது என்றும் இலங்கை அரசுக்கு சொல்லிக் கொடுத்தனர்.நீண்ட காலமாக பொருளாதார நெருக்கடியைக் கொண்டிருந்த இலங்கை அரசானது விவசாயிகளிடையேயான அமைதியின்மை குறித்து மிகவும் கவலைகொண்டிருந்தது. அதனால் அது தீவின் ஒரு பகுதியிலிருந்து இன்னொரு பகுதிக்கு அவர்களை குடியேற்றுவதன் மூலமாக அவர்களிடையே பிளவை ஏற்படுத்த விரும்பியது. ஆனால் அதற்கு ஒரு நியாயப்படுத்தக் கூடிய காரணம் அதற்கு தேவைப்பட்டது. இந்த இடத்தில்தான் அமிஜார் வருகிறான். இவன் தான் மாபெரும் பொறியியல் வேலைத் திட்டங்களை கொண்டதான "மாவலித் திட்டம்” என்ற வரண்ட பிரதேசங்களுக்கு மாவலியை திசை திருப்பும் திட்டம் பற்றி கனவு கண்டவன். இதற்கு சொல்லப்பட்ட காரணம் இது இலங்கையின் நீர் மின்னியல் அளவை இரண்டு மடங்காக்கும் என்பதும் 750,000 ஏக்கர் தரிசு நிலம் நீர்ப்பாசன வசதி கொண்ட விளை நிலமாக்கப் படுமென்பதுமாகும். இந்தப் பாரிய திட்டத்திற்கு உலக வங்கி, கனடா, சுவீடன் ஜேர்மனி, ஜப்பான், ஐரோப்பிய பொருளாதார சமூகம் மற்றும் அமெரிக்கா ஆகியவை முதலிட்டன.

ஆரம்பத்திலிருந்தே இது ஒரு மட்டு மீறிய எதிர்பார்ப்புடன் உருவான திட்டமாக இருந்த போதும் உலக வங்கியோ பிற முதலீட்டாளர்களோ இதை அறிந்திருக்கவில்லை. மாறாக அது இற்றை வரை முன்னேறி வரும் ஒன்றாகவே அவர்கள் நம்பிக் கொனன்டிருக்கின்றனர் தொடக்கத்தில் 30 ஆண்டுத் திட்டமாக இருந்த இதை 1977ல் மொசாட்டின் உதவி யுடன் துரித கதியில் முடிக்கும் சாத்தியம் உண்டு என ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தனா கண்டுபிடித்ததுடன் இது துரிதப்படுத்தப்பட்டது.

2.5 பில்லியன் டொலரை முதலிட்டிருந்த உலக வங்கிக்கு இத்திட்டம் காரிய சாத்தியமானதென நம்ப வைக்கவும் விவசாயிகளை அவர்களது சொந்த இடங்களிலிருந்து வெளியேற்றி வேறிடங்களில் குடியேற்றுவதற்கு வசதியான காரணங்களைக் காட்டவும். மொசாட் இரண்டு இஸ்ரேலிய கல்விமான்களை இலங்கைக்கு அனுப்பி வைத்தது. அவர்களில் ஒருவர் ஜெருசலேம் பல்கலைக்கழகத்தின் பொருளியலாளர், மற்றவர் ஒரு விவசாயப் பெராசிரியர். இவர்களின் வேலை இத்திட்டத்தின் முக்கியத்துவம் பற்றியும் அதன் பயன் பற்றியும் ஆய்வுக் கட்டுரைகளை எழுதுவதே இஸ்ரேலின் மாபெரும் நிர்மான வேலைகட்கான கம்பனியான Sobel Bonah வுக்கு பெரியளவு ஒப்பந்த வேலையும் வழங்கப்பட்டது.

காலத்துக்குக் காலம் உலக வங்கியின் பிரதிநிதிகள் இலங் கைக்கு பரிசீலனைக்காக சென்ற போதும் அவர்களைப் பாதுகாப்பு காரணங்களைக் காட்டி குறுக்கு வழிகளினுடாக அழைத்துச் செல்வதன் மூலம் எப்படி ஏய்ப்பது என்று அங்குள்ளவர்களுக்கு ஏற்க னவே கற்பிக்கப்பட்டிருந்தது. இந்த நோக்கத்திற்காகவே உண்மையாக கட்டப்பட்ட ஒரு சிறிதளவான பகுதிக்கே அவர்கள் திரும்பவும் கூட்டிச் சென்று காட்டப்படுவர்.

பிறகு மொசாட்டின் தலைமை அலுவலகத்திலிருந்த ஜாரின் திணைக்களத்தில் நான் வேலை செய்து கொண்டிருந்த போது ஜெயவர்த்தனாவின் மருமகள் - இப்பெண்மணியின் பெயர் பென்னி இஸ்ரேலுக்கு செய்திருந்த இரகசிய விஜயத்தின் போது அவரை அழைத்துச் சென்று இடங்களைக் காட்டும் பொறுப்பு எண்ணிடம் விடப்பட்டது. அவர் என்னை "சைமன்" என்றே அறிவார் நாம் அவரை அவர் விரும்பிய இடமெல்லாம் அழைத்துப் போனோம், நாங்கள் பொதுவான பல விசயங்களைப் பற்றிப் பேசிய போதும் அவர் மாவலித் திட்டத்தைப் பற்றியும் அதற்கான பணம் எப்படி இராணுவ உபகரணங்களுக்கு பயன்படுத்தப்படுகிறது என்பது பற்றியும் சொல்வதிலேயே அதிகம் அக்கறை காட்டினார்.

தாங்கள் அதன் மூலம் திருப்தியுறவில்லை எனக் குறைப்பட்டுக் கொண்டார். இதில் நகைப்புக்குரிய விசயம் என்னவென்றால், இத்திட்டமே ஆயுதத்திற்குரிய நிதியினை உலக வங்கியிடமிருந்து பெறுவதற்காக கண்டு பிடிக்கப்பட்ட ஒன்றே என்பதுதான்.

அந்த நாட்களில் இலங்கைக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் எந்த இராஜதந்திர உறவும் இருக்கவில்லை. உண்மையில் அவர்கள் எங்களை தடை செய்திருந்தார்கள். ஆனால் அவர் அவர்கள் இந்திய அணு விஞ்ஞானிகள் போனதற்கு மறு நாள் எனது வழமையான பத்திரிகை வேலைகளில் ஈடுபட்டிருந்த போது, அமி இரு ஒப்பந்தங்கள் தொடர்பாக என்னை தனது அலுவலகத்திற்கு அழைத்தான். முதலாவது, தென்னாபிரிக்க இரகசியப் பொலிஸாருக்கு பயிற்சி வழங்குவதில் உதவப் புறப்படத் தயாராக இருந்த இஸ்ரேலிய குழுவொன்றிற்கு புறப்பட ஆக வேண்டியதை கவனிப்பது, அடுத்தது ஆபிரிக்க தூதராலயம் ஒன்றிக்கு சென்று தனது சொந்த நாட்டுக்கு பயணமாக இருந்த ஒருவனை அழைத்து வருவது அவனை ஹேர்சிலா பிற்றுவாவிலுள்ள (Herzlia Pituah) – அவனது வீட்டிற்கு அழைத்துக் செல்வதும் பிறகு பாதுகாப்பாக விமான நிலையத்திற்கு கொண்டு செல்வதுமாகும்.

"நான் உன்னை விமான நிலையத்தில் சந்திக்கிறேன் ஏன் என்றால் இலங்கையிலிருந்து ஒரு குழுவினர் இங்கு பயிற்சிக்காக வருகின்றார்கள்” என்றான் அமி.

விமான நிலையத்தில் நான் அவனை சந்தித்த போது அமி லண்டனிலிருந்து வரும் இலங்கை விமானத்திற்காக காத்துக் கொண்டிருந்தான். இவர்கள் வந்திறங்கும்போது முகத்தைச் சுளிக்காதே..” என்றான் என்னிடம். 

"நீ என்ன சொல்கிறாய்? - என் றேன் நான், "ஆம், இந்த மனிதர்கள் குரங்குகளை போன்றவர்கள், இன்னமும் நாகரிகமடையாத ஒரு நாட்டிலிருந்து இவர்கள் வருகிறார்கள். அவர்கள் மரங்களை விட்டிறங்கி நீண்ட நாளாகவில்லை. எனவே அதிகம் எதிர்பார்க்காதே! நானும் அமியுமாக அந்த ஒன்பது இலங்கையரையும் விமான நிலைய பின் கதவு வழியாக ஒரு குளிரூட்டப்பட்ட வாகனத்தில் அழைத்து வந்தோம்.

(பென்னி) இரகசிய அரசியல் கூட்டங்கள் நடப்பது பற்றி சொல்லிக் கொண்டிருந்தார். இந்தக் கூட்டங்கள் பற்றிய இரகசிய தகவல்கள் வெளியான போது இஸ்ரேலின் 150 மொசாட் உறுப்பினர்கள் இலங்கையில் இருப்பதாக தெரிவித்தார்கள். ஆனால் எம்மிடமோ உலகம் முழுவதற்குமே அத்தனை பேர் இருந்ததில்லை உண்மையில் அமியும் அவரது உதவியாளரும் மட்டுமே குறுகிய விஜயம் ஒன்றினை மேற்கொண்டு அப்போது அங்கு சென்றிருந்தார்கள்.

இது மொத்தமாக வரவிருக்கும் 50 பேரில் முதல் 9 பேர்களது வருகையாகும். அவர்கள் பின்னர் மூன்று சிறு சிறு குழுக்களாக பிரிக்கப்பட்டனர்.

பயங்கரவாத எதிர்ப்புக் குழுவொன்று பெற்றா திக்வா (Petha Tikvah) என்ற இடத்திற்கு அருகிலுள்ள க்ஃபார் சேர்க்கின் (Kfar Sirken) என்ற தளத்தில் பயிற்றுவிக்கப்பட்டது. இக்குழுவுக்கு எப்படி பஸ் மற்றும் விமானக் கடத்தல்காரரை முறியடிப்பது, எப்படி ஒரு கட்டிடத்தில் வைத்து அவர்களை சமாளிப்பது, எப்படி ஹெலிகப்ரர்களிலிருந்து ஒரு கயிற்றின் உதவியுடன் தப்புவது போன்ற பயங்கரவாத எதிர்ப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டன. அத்துடன் இவர்கள் UZIS மற்றும் குண்டு துளைக்காத ஆடை உட்பட இஸ்ரேலிய போர்க் கருவிகள், விசேட கிரனைட்டுகள் என்பவற்றையும் வாங்குவதாக இருந்தனர்.

இஸ்ரேலில் மிகப் பெரியளவில் ஆயுதங்களை கொள்வனவு பிரிவும் இருந்தது. உதாரணமாக, இவர்கள் எட்டு “டேவோரோ” (Devoro) PT விசைப்படகுகளை வடக்குப் பயங்கரவாதிகளுக்கு எதிராக பாவிக்கவென கொளவனவு செய்தனர்.

இது தவிர, உயர்மட்ட உத்தி யோகத்தர்களை கொண்ட ஒரு குழுவும் இருந்தது. இது றாடர் போன்ற கடற்படை தளபாடங்களை இந்தியாவிலிருந்து இன்னமும் உதவிகள் பெற்றுக் கொண்டிருக்கும் தமிழர்கட்கு எதிராகப் பாவிக்கவென) வாங்குவதற்கு விரும்பியது. நான் ஜனாதிபதி ஜெயவர்த்தனாவின் மருமகள் பெண்னியை முக்கியமான சுற்றுலாப் பயணிகள் பார்க்கும் இடங்களுக்கு இரண்டு நாட்களுக்கு அழைத்துச் செல்லும் பொறுப்புகளுடன் இருந்தேன். அதன் பின் எமது அலுவலகத்திலிருந்து வேறு யாராவது இவ்வேலையைச் செய்வார்கள் என்று இருந்தென். பென்னி ஒரு குதூகலமான பெண்.கேரோசின்கேரோசின் க்கிநோவின் இந்திய மாதிரி எனச் சூழலாம். இவளது கணவன் ஒரு பௌத்தர் என்பதால் இவளும் ஒரு பௌத்த பெண்ணாகவே இருந்தால். ஆகவே இவள் எல்லா புனித கிருஸ்தவ இடங்களையும் பார்க்க விரும்பினால். இரண்டாவது நான் வெராட் ஹோக்லில் (Vered Hoglil) அல்லது ரோஸ் ஒப் கலீலி (Rose of Galilee) என்ற பெரிய உஅனவு விடுதிக்கு அழைத்துச் சென்றேன். இது அருமையான காட்சிகளைக் காணக் கூடியதுமான மலை உச்சி அமைந்த ஒரு உணவு விடுதியாகும். எமக்கு அங்கு கணக்கு இருந்தது.

அடுத்ததாகஎனக்கு றாடர் உபகரணங்களை வாகவிருந்த மேல் மட்ட உத்தியோகத்தர்களைக் கவனிக்கும் பொறுப்பு இருந்தது. அஸ்டோட் என்ற இடத்திளிலுள்ள அல்டா என்ற இந்த உபகரணம் தயாரிக்கும் நிறுவனத்திற்கு இவர்களை அமைத்துச் செல்ல நான் பணிக்கட்டிருந்தேன். இக் கொம்பனி இவர்களுக்கு வேண்டியதை கவனிக்கும் படி எனக்கு சொல்லப்பட்டது. ஆனால் இவர்கல் உபகரணம் வாங்குவதாக கூறிய போதும் அவர்களில் அப்படித் தோணவில்லை.அதனைக் கண்ட அல்டா பிரதிநிதி இவர்கள் சும்மா பார்த்துப் போகவே வந்துள்ளனர். இவர்கள் எதையும் வானகப் போவதில்லை” என்று சொன்னார்.

"ஏன்?" என்றேன் நான். "இந்த குறிப்புகள் இந்தக் குரங்குகளால் எழுதப்படவில்லை. டெக்கா என்ற இங்கிலாந்து றாடர் கொம்பனிக் காரர்களால் இது எழுதப்பட்டி ருக்கிறது. எனவே இவர்கள் தாம் என்ன வங்கப் போகிறோம் என்பதை முன்னரே அறிவார்கள். இவர்களுக்கு ஒரு வாழைப்பழத்தைகொடுத்து அனுப்பி விடு. உனது நேரத்தை வினாக்காதே" என்றான் அந்த மனிதன்.

"சரி. அப்படியானால் இவர்களை சந்தோஷப்படுத்தும் வித த்தில் ஏதாவது (றாடர் பற்றிய) விளக்கவுரை சொல்வது பற்றி என்ன நினைக்கிறீர்கள்.”

- இந்த உரையாடல் ஹீபுரு மொழியில் நடந்தது. அப் போது நாம் ஒன்றாக இருந்து சிற்றுண்டி சாப்பிட்டு தேனீரும் கோப்பியும் அருந்திக் கொண்டிருந்தோம். அல்டா பிரதிநிதி, "இவர்களை திருப்திப்படுத்த ஒரு சிறு விளக்கவுரையை சொல்வதில் எனக்கு ஆட்சேபனை இல்லை. ஆனால் அப்படி சொல்வதானால் கொஞ்சம் முசுப்பாத்தியும் விடுவம்" என்று ஒப்புக் கொண்டான்,

இந்த உரையாடலின் பின் நாம் இன்னொரு அலுவலகத்திற்கு போனோம். துறை முகங்களில் ஊற்றப்பட்ட எண்ணையை சுத்தம் செய்யும் மிகப் பிரமாணடமான துப்பரவாக்கும் கருவி (Vacum Cleaner) ஒன்றின் பெரிய ஒளிபுகும் விளக்கப்படம் அங்கு இருந்தது. இப்பிரதிநிதியிடம் அழகான விளக்கப்படங்கள் கொண்ட இயக்கு முறை வழிகாட்டிப் பிரசுரங்களும் இருந்தன. எல்லாம் ஹீபுறு மொழியில் எழுதப்பட்டிருந்தது. ஆனால் இவன் ஆங்கிலத்தில் தனது விளக்கவுரையை ஆற்றினான் அவனது விரிவுரை "மிக உயர்சக்தி வாய்ந்த றாடர் கருவி" பற்றியதாக இருந்தது எனக்கு சிரிப்பை அடக்கிக் கொள்வது மிகக் கஷ்டமாக இருந்தது. அவன் மிகவும் அளவு மீறி றாடர் கருவி பற்றிப் புளுகினான். இந்தக் கருவி கடலில் நீந்திக் கொண்டிருக்கும் ஒருவனுடைய நீந்துமிடத்தையும் அவனது சப்பாத்தின் அளவையும் தெரிவிக்கக் கூடியது. அவனது பெயர், முகவரி, ஏன் குருதியின் குறுப் என்ன என்பதைக் கூட இது தெரிவிக்கும் என்று சொன்னான். அவன் தனது "விரிவுரையை முடித்ததும் இலங்கையர் ஒருவன் அவனுக்கு நன்றி சொன்னான். தாம் இஸ்ரேலின் தொழில் நுட்ப வளர்ச்சியையிட்டு வியப்பு அடைவதாகவும். இக்கருவி தமது கப்பல்களுக்கு பொருத்தமற்றது என்பதால் வாங்க முடியவில்லை என்றும் தெரிவித்தான்.

இவர்கள் தமது கப்பலைப் பற்றி எங்களுக்குச் சொல்கிறார்கள் எப்படி இருக்கும்? இந்தக் கப்பல்களை எங்களுக்கு நன்றாக தெரியும். ஏனென்றால் அவற்றை செய்தவர்களே நாங்கள்தான்.

என்னை ஹொட்டலில் இறக்கி விட்டதும் நான் அமியிடம் சொன்னேன். இந்த இலங்கையர்கள் றாடர் கருவியை வாங்கப் போவதில்லை என்று.

"ஓம் எனக்குத் தெரியும்” என்றான் அமி.

அமி பிறகு என்னை கஃபார் சேர்க்கின்னுக்கு போகச் சொன்னான். அங்குதான் இலங்கையின் சிறப்பு படை பிரிவுக் குழு பயிற்சி பெற்றுக் கொண்டிருந்தது. அவர்களுக்கு தேவையானதை செய்து விட்டு டெல் அவிவுக்கு பின்னேரம் அவர்களை அழைத்து வருமாறும் அமி என்னிடம் தெரிவித்தான். அவ்வாரம் அந்தப் பகுதிக்கு மாற்றப்பட்டிருந்த ஜோசியுடன் எண்னை கலந்து உரையாடி விட்டே இதை செய்யுமாறு எனக்கு எச்சரிக்கை விடவும் அவள் மறக்கவில்லை. ஜோசியும் இலங்கையில் இருந்து வந்த இன்னொரு பிரிவுக்கு பயிற்சியளிப்பதை கவனிப்பவனாக இருந்தான். ஆனால் இவர்கள் என்னுடையவர்களை சந்திக்கக் கூடாது என்பது முக்கியமாகவிருந்தது. ஏனென்றால் அவர்கள் தமிழர்கள். சிங்கள குழுவின் பரம எதிரிகள். பெருமளவில் இந்துக்களை கொண்ட இந்த தமிழர்கள் 1948ல் பிரிட்டிஷாரிடமிருந்து சுதந்திரம் பெற்ற நாளிலிருந்து இன்று வரை தாம் பெளத்த சிங்கள பெரும்பான்மையினரால் பாரபட்சமாக நடத்தப்பட்டு வருவதாக கூறினார்கள், 16 மில்லியன் சனத் தொகை கொண்ட இலங்கையில் 74% சிங்களவரும் கிட்டத்தட்ட 20% தமிழர்களும் ஆவர். இத்தமிழர்கள் பெருமளவில் நாட்டின் வடக்கை மையமாகக் கொண்டு வாழ்பவர்கள் 1983ல் ஒரு தமிழ் கெரில்லா குழு- புலிகள் என பொதுவாக அழைக்கப்படுகிறது- தனித் தமிழ் நாட்டை அமைக்கவென ஒரு போராட்டத்தை வடக்கில் தொடங்கியது. இது இன்று வரை தொடர்வதுடன் ஆயிரக் கணக்கில் உயிர்களை இருபுற மும் பலி கொண்டுள்ளது தென்னிந்தியாவில் 40 மில்லியன் தமிழர் வாழும் தமிழ் நாடு மாநிலத்தில் இந்த தமிழருக்கு ஆதரவு பெருமளவில் இருக்கிறது. பல தமிழர்கள் யுத்தத்திற்கு பயந்து தென்னிந்தியாவிற்கு அகதியாக ஓடியுள்ளனர். இலங்கை தமிழருக்கு பாதுகாப்பும் பயிற்சியும் இந்தியாவால் வழங்கப்படுவது குறித்து இலங்கை அரசு இந்தியா மீது குற்றம் சுமத்தி வருகிறது ஆனால் உண்மையில் இலங்கை அரசு குற்றம் சுமத்த வேண்டியது மொசாட்டைத் தான்.

கொமாண்டோ கடற்படைத்தளத்தில் பயிற்சி பெறும் தமிழர்கள் டெலோராவில் பயிற்றுவிக்கப்படுவது போலவே உடைத்துக் கொண்டு நுழைவது, கண்ணி வெடி வைப்பது, தகவல் தொடர்புகளை செய்வது, கப்பல்களை நாசமாக்குவது போன்றவற்றை பயின்று கொண்டிருந்தனர். அங்கு ஒவ்வொரு குழுவிலும் 28 பேர் இருந்தார்கள். ஆகவே ஜோசி தமிழர்களை ஹுஃபாவுக்கு (Haila) அன்றிரவு அழைத்துச் செல்வதென்றும், சிங்களவர்களை நான் டெல் அவிவுக்கு அழைத்து செல்வதென்றும் ஒழுங்கு செய்தோம். இதன் மூலம் ஒருவரை ஒருவர் நேர டியாக சந்திக்காமல் வைத்திருக்க முடிந்தது.

உண்மையான பிரச்சினை பயிற்சியின் இரண்டு வார கால நேரத்தில் உருவானது. இந்த இரு வாரமும் ஒருவரை ஒருவர் அறியாத இரு குழுக்களும் ஹஃபார் சேர்க்கின்னில் பயிற்சி பெற்றுக் கொண்டிருந்தனர். இது மிகவும் பெரிய தளமாக இருந்த போதிலும் இவர்களது துள்ளல் பயிற்சியின் போது ஒரு தடவை ஒருவரை ஒருவர் சில யார் இடைவெளியில் கடந்து சென்றார்கள். சிங்களவர்களுக்கான அடிப்படை பயிற்சிகள் முடிந்ததும் கடற்படை தளத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள், அங்கு தமிழர்கட்கு விசேடமாக, அண்மையில் சிங்களவர்கட்கு கற்பிக்கப்பட்டவற்றினை எப்படி முறியடிப்பது என்பதை கற்பிப்பதாக இருந்தது. இது மிகவும் அழகாக ஒழுங்கு செய்யப்பட்டது. அவர்களுக்கு இரவு நேரப் பயிற்சியையோ அல்லது தண்டனைகளையோ வழங்குவதன்மூலம் அவர்களை ஓய்வில்லாமல் எந்நேரமும் அலுவலாக வைத்திருந்தோம் இதன் காரணமாக ஒரே நேர த்தில் இரு குழுவினரும் டெல் அவிவ்வில் ஒன்றாக இருக்க விடாமல் தவிர்த்தோம். இவ் விரு குழுக்களும் சந்தித்திருந்தால் அமி என்ற இந்த தனி மனிதனது நடவடிக்கைகள் இஸ்ரேலிய அரசியல் சூழ்நி லையையே மிகுந்த ஆபத்துக்குள்ளாக்கியிருக்கும். எனக்குத் தெரியும் Peres இதை அறிந்திருப்பானாக இருந்திருந்தால் இரவுகளில் தூங்கியே இருந்திருக்க மாட்டாள். ஆனால் நல்ல வேளையாக அவன் அறிந்திருக்கவில்லை !

மூன்று வாரங்கள் முடிகின்ற தறுவாயில், சிங்களவர்கள் மிகவும் அதிஉச்ச இரகசிய கடற்படை கொமாண்டோ தளமான அற்லிற்றுக்கு (Atlit) போக தயாராகிக் கொண்டிருந்த போது தான் அவர்களுடன் போகப் போவதில்லை என்று அமி என்னிடம் தெரிவித்தான். Sayret Matcal (சேரல் மற்கல்) என்ற குழு இவர்களுக்கான பயிற்சியினை செய்வதாக இருந்தது. இக்குழு மிக உயர்மட்ட, எதிரியின் பலமறியும் உளவு வேலைகளைச் செய்யும்-புகழ் பெற்ற என்டபே தாக்குதலைச் செய்த குழுவாகும். (இக் கடற்படை கொமாண்டோக்கள் அமெரிக்க நீர் நாய்களுக்கு சமானமானதாகும்) கவனி, எங்களுக்கு ஒரு சிக்கல் வருகிறது 27 SWAT குழுவை சேர்ந்த இவர்கள் இந்தியாவிலிருந்து வருகிறார்கள். அட ஆண்டவனே! இது என்ன? முதலில் சிங்களவர்களும் தமிழர்களும் இப்போது இந்தியர்களுமா? அடுத்ததாக வரப் போவது யார்? என்றேன் நான்.

Download


Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates