யாழ்ப்பாணத்தில் கல்வி மறுக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் கல்வியைப் பெறுவதற்காக அனுபவித்த கொடுமைகளையும், பட்ட பாடுகளையும், பெற்ற அனுபவங்களையும், செய்த போராட்டங்களையும் பற்றிய அருமையான தொகுப்பு இது. எம்.சி.சுப்பிரமணியம் அவர்களின் மகன் எஸ்.சந்திரபோஸ் 1989 இல் வெளியிட்ட “தாழ்த்தப்பட்ட தமிழர்களின் கல்வி வளர்ச்சி” என்கிற நூலில் வெளியான ஒரு அத்தியாயம் இது.
இலங்கையின் கல்வி வரலாற்றில் 5 ஆம் 6 ஆம் 7 ஆம் பகுதிகளில் இடம்பெறுகின்ற புத்தெழுச்சி பெற்ற தேசிய உணர்வுக் கல்வியில் தாக்கம், கட்டாயக் கல்வி இயக்கம் கல்விக்கான வசதிகளை அதிகரித்தமை ஆங்கிலத்திற்குப் பதிலாக தேசிய மொழியே போதனா மொழிகளாக வேண்டுமென்ற கோரிக்கைகளும் நிகழ்காலக் கல்வி நிலைமைகள் பற்றியதுமான அம்சங்களும் இன்றைய கல்விமுறைக்கு பல்வேறு கல்வியமைச்சர்கள் காலத்தில் எடுக்கப்பட்ட முயற் சிகளும் இப்பகுதிகளுள் அடங்குகின்றன. இப்பகுதிகளுக் கிடையேதான் தாழ்த்தப்பட்ட தமிழர்களின் கல்வி வளர்ச்சிகளும், அதற்காக நடைபெற்ற போராட்டங்களும் இடம் பெறுகின்றன.
நிலப்பிரபுத்துவ சமுதாய அமைப்புக்களில் பண் ஆன அடி மைகளாக, விவசாயக் குடிமைகளாக இருந்த நிலைமைகள் தமிழர் சமுதாயத்திலும் காணப்பட்டது. இச்சமுதாய அமைப்பு கட்டிக் காக்கப்பட்ட காலகட்டங்களில் தாழ்ந்தோர் கல்வி பெற்றிருக்க வாய்ப்புக்கள் இல்லை. இதனை நாம் முன்னர் பிராமண கல்வி மரபில் அவதானித்தோம். தமிழர்கள் பரவி வாழ்ந்த வடக்குக் கிழக்கு மாகாணங்களிலும் இந்த நிலை கள் காணப்பட்டன. தமிழருடைய பழக்க வழக்கங்கள் வைதீகக் கொள்கையின் அடிப்படையிலும், சாதிப்பிரிவின் அடிப்படையிலும் எழுத்ததாகக் காணப்பட்டது. சமூகத்தில் ஒரு சிலர் தாழ்ந்தோர் ஒரு சிலர் உயர்ந்தோர் என்பதை முன்னுள்ளோர் ஏற்றுக்கொண்ட நிலையும், இந்து சமய முறைப்படி பிறவியிலே உயர்ந்தோர், இழிந்தோர் எனப் சாதிபாகுபாடு உண்டென்று மக்களே நம்பவைத்து தாழ்த்தவர்கள் என்று கூறப்பட்டோரின் அறியாமையைப் பயன்படுத்தித் தொடர்ந்தும் அடிமைகளாகவும், அறிவிலிகளாகவும் வைத்திருந்த நிலையும் காணப்பட்டது. இதுவே சமூக நீதி என்றும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்த நிலையில் தாழ்த்தப்பட்ட வர்களும் தங்கள் அறியாமையினாலும், தங்கள் பலத்தைப் புரியாமையினாலும், சமயவாதிகள் கற்பித்த கரும வினை என்ற தன்மைகளை நம்பியதனுலும், உயர்சாதியினருக்கு சேவகம் செய்வதற்காகவே இறைவனால் படைக்கப்பட்டோர்கள் என்ற எண்ணத்தோடு வாழ்ந்தாாகள். இன்றும் இப்படியான மனப்பாங்குடைய ஒரு சிலர் வாழ்ந்து கொண்டும் இருக்கின்றனர். இந்த நிலை தமிழ்ச் சமுதாயத்தில் இலங்கையில் போர்த்துக்கேயர் ஒல்லாந்தர் ஆட்சிக்காலங்களிலும் தொடர்ந்தது போர்த்துக்கேயரினாலும், ஒல்லாந்தர்களினாலும், இலங்கை பின் கல்வி வளர்ச்சிக்காக பல நடவடிக்கைகள் எடுக்கப் ட், போதிலும் தாழ்த்தப்பட்ட தமிழருக்கு எந்த விதமான கல்வி விமோசனமும் கிடைத்திருக்க முடியாது. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திலும், இலங்கையில் சுதந்திர அரசு தோன்றியதன் பின்பும் இம்மக்களின் கல்வி வளர்ச்சியில் பல இடர்ப்பாடுகளும் தடைகளும், சொல்லொனாத் துன்பங்களும் இருந்தபோது இதற்கு முந்திய காலகட்டங்களில் இவர்களுக்கு கல்வி அளிக்கப்பட்டிருக்குமென்றோ அல்லது இவர்களுக்குத்தான் கல்வி கற்பதில் ஆர்வம் இருந்திருக்குமென்றோ கூறுவதற்கில்லே.
யாழ்ப்பாணம் உடுவிலில் தொடங்கப்பட்ட மிஷனரி தேவாலயம் |
கைத்தொழிற் புரட்சியின் பயனாகவும், சமதர்ம தத்துவங்களின் ஏழுச்சியினாலும், ஜனநாயக ஆட்சியின் மலர்ச்சியினாலும் இலங்கையில் ஆங்கிலேயர் ஆட்சியின் தாக்கத்தினாலும் 20ம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில் தாழ்த்தப்பட்ட தமிழ் மக்களின் விளிப்பினாலும் அவர்களின் கல்வி வளர்ச்சிக்கு கால்கோள் இடப்பட்டது, வெளிநாடுகளுக்குச் சென்று கல்வி கற்று நாடு திரும்பிய சி. வை. தாமோதரம்பிள்ளை, ஹரோவிட், வைமன், போர்ட் துரைசாமி, கிங்ஸ்பரி போதகர் ஆகிய உயர்சாதி மக்கள் தம்முடைய சமையல் வேலை தோட்ட வேலை, ஆயா வேலைகளுக்காக அாழ்த்தப்பட்ட தமிழர்கள் சிலரை அமர்த்திக் கொண்டனர். இச்சந்தர்ப்பத்தில் புரட்டஸ்தாந்து கத்தோலிக்க மதகுழுவினர் களைச் சேர்ந்த சில பாடசாலை நிர்வாகிகளுக்கும் மேற்கூறிய விதமான சேவகங்கள் செய்த தாழ்த்தப்பட்ட தமிழர்களின் பிள்ளைகளுக்கு தங்கள் மத குழு பாடசாலைகளில் கல்வி கற்பிப்பதற்கு நட்வடிக்கைகள் எடுக்கும்படி ஆலோசனே கூறினர். இவ்வாறன வாய்ப்பினை முதன் முதல் 1803ஆம் ஆண்டு தெல்லிப்பளையில் பிறந்த திரு. யோவல் போலும், 1903ஆம் ஆண்டு வட்டுக்கோட்டையில் பிறந்த திரு. எஸ். ஆர், ஜேக்கப்பும், இதே காலத்தில் பிறந்த ஏ. பி. இராஜேந் திரா என்போரும் பெற்றனர். இவர்களின் கல்விக்கு தெல்லிப்பளை செமினரியும், வட்டுக்கோட்டை செமினரியும் யாழ்ப்பாணம் சென் பெற்றிக்ஸ் கல்லூரியும் உறுதுணையாய் இருந்தன. திரு. யோவல் போல் அவர்கள் தாமே தமிழில் ஆரம்பக்கல்வி கற்று தெல்லிப்பளை செமினரியில் ஆசிரியருக் கான பயிற்சியினைப் பெற்றார். ஆயினும் இவர் ஆசிரியராகப் பணிபுரியாது சிற்பக்கலையில் சிறந்து விளங்கினார். சாமுவேல் கிறின்ஸ்வி என்ற ஆங்கிலேயரிடம் ஆங்கிலம் கற்றுத் தேறினர். திரு. எஸ். ஆர். ஜேக்கப் அவர்கள் யாழ்ப்பான கல்லூரியில் பல் வேறு பிரச்சனைகளுக்கு மத்தியில் முதன் முதல் சேர்த்து படிக்கும் வாய்ப்புப் பெற்ற தாழ்த்தப்பட்ட தமிழ்மகனுவார். இவர் இக்கல்லூரியில் சேர்ந்த பொழுது சாதி வெறியர்கள் தம் பிள்ளைகளே அக் அல்லூரிக்கு அனுப்ப மாட்டோமென் பிடிவாதம் செய்தனர். அப்போது அங்கு அதிபராகக் கடமையாற்றிய பிக்னல் ஆங்கிலப் பாதிரியார் “யார்தான் கல்லூரியை விட்டு வெளியேறினாலும் ஜேக்கப் ஒருவன் கல்லூரியில் இருக்கும் வரை இக்கல்லூரியை தொடர்ந்து நடத்துவேன்” எனக் கூறி துணிவுடன் செயற்பட்டார்.
திரு. ஏ. பி. இராஜேந்திரா அவர்கள் ஆரம்பக் கல்வியை யாழ்ப்பாணம் சென் பெற்றிக்ஸ் கல்லூரியில் பெற்று 1906ம் ஆண்டில் கொழும்புக்குச் சென்று கல்வி கற்று கல்வியமைச்சில் லிகிதராகவும், பிரதம லிகிதராகவும் தமிழ் மொழிபெயர்ப்பாளராகவும், பரீட்சகராகவும், தமிழ்ப்பாட புத்தக சபையின் காரியதரிசியாகவும் கல்விப் பகுதியினரால் வெளியிடப்பட்ட பத்திரிகையின் ஆசிரியராகவும் கடமையாற்றினார். மகா யுத்த காலத்தில் உதவி உணவுக் கட்டுப்பாட்டு அதிகாரியாக இருந்து சிறப்பாக சேவையாற்றிமையால் 1941ல் 'முதலியார்" என்னும் பட்டத்தையும், பின்னர் எம். பி. ஒ. பட்டத்தையும் அரசாங்கம் இவருக்களித்து இவரை கௌரவித்தது மேற்கூறப்பட்ட மூவரது வரலாறும் கல்வி வளர்ச்சியும் தனி மனிதன் கல்வி வரலாறாவோ கொள்வதற்கில்லை. இது தாழ்த்தப்பட்ட சமூகத்தில் கல்வி வளர்ச்சியின் தொடக்கதின் வரலாறாகவே கொள்ள வேண்டும். இன்னல்களுக்கு மத்தியிலிருந்து ஒடுக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஸ்தாபன வடிவம் கொடுத்தவர் திரு. யோவேல் போலாகும். இவரால் “ஒடுக்கப்பட்டோர் ஊழியர் சங்கம்” உதயமாயிற்று. இவரோடு இணைந்து திரு எஸ். ஆர், ஜேக்கப் திரு, ஏ. பி. இராஜேந்திர ஆகியோர் தாழ்த்தப்பட்ட தமிழ் மக்களின் உரிமைகளுக்காக போராடினர். இச்சங்கம் மூலம் அரசியல் தலைவரின் தொடர்பை ஏற்படுத்தி டொனமூர் கமிஷன், சோல்பரி கமிஷன் போன்ற அரச விசாரணைக் குழுக்கள் முன் தோன்றி தம் மக்களின் இடர்பாடுகளே இடித்துரைத்தனர். கல்விக் கொள்கையிலே கறைபடிந்திருக்கும் குறைபாடுகளை சுட்டிக் காட்டினர். அத்துடன் கல்வி, பொருளாதாரம் சமத்துவம் போன்ற உரிமைகளுக்காகவும் வாதிட்டனர். திரு. போல் அவர்கள் சர்வசன வாக்குரிமை படித்தவர்களுக்கு மட்டுத்தான் வழங்கப்பட வேண்டும் என்று சேர், பொன்னம்பலம் இராமநாதன் போன்ற தலைவர்களின் கூற்றினை எதிர்த்து சர்வசன வாக்குரிமை சகலருக்கும் வேண்டும் என்று வாதிட்டார். சாதிக் கொடுமைகள் பாடசாலைகளில் தீவிரமாக தலைவிரித்தாடியபோது இவர் எடுத்த நடவடிக்கைககளே சகல பாடசாலைகளிலும் சாதி, பேதம் பாராட்டக் கூடாதென்று சட்டம் ஏற்பட வழிவகுத்தது. அடக்கப்பட்டு, ஒடுக்கப்பட்டு வந்த தாழ்த்தப்பட்ட தமிழ் மக்களின் விடுதலைக் குரலை எழுப்புவதற்காக “ஜனதர்ம போதினி' எனும் பத்திரிக்கையை வாராந்தம் வெளியிட்டு வந்தார்.
அச்சுவேலியில் ஒல்லாந்தர் காலத்தில் கட்டப்பட்ட மிஷனரி தேவாலயம் |
இக் காலகட்டத்தில் ஒரே பார்வையில் தாழ்த்தப்பட்ட தமிழ் மக்களுடைய கல்வி நிலையினே யாழ்ப்பாணக் குடா நாடு முழுவதினையும் நோக்கும்போது தாழ்த்தப்பட்ட தமிழர்களுள் ஓரளவு பொருளாதார வசதியுடையவர்களாக இருந்தவர்களும், கிறிஸ்தவர்களாக மதமாற்றம் பெற்றவர்களும், கிறிஸ்தவ பாதிரிமாரின் அனுசரணையைப் பெற்றவர்களும் கல்வி வசதிபெற வாய்ப்பளிக்கப்பட்டது. இவ் வாய்ப்புக்களும் மிஷனரிமார்களின் பாடசாலைகளிலேயே வழங்கப்பட்டன. பெரும்பாலும் கிராமப்புற மிஷனரிப் பாடசாலைகளில் தாழ்த்தப்பட்ட தமிழர்களேச் சேர்த்துக்கொண்ட போதிலுங்கூட சம ஆசன வசதிகள் அளிக்கப்படவில்லை. தாழ்த்தப்பட்ட தமிழ்ப் பிள்ளைகள் நிலத்தில் உட்கார்ந்தோ, நின்றோ அல்லது அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட தனியாசனங்களிலிருந்தோ கற்கவேண்டிய நிலை காணப்பட்டது. ஆனால் இவ்வேறுபாடுகள் மிஷனரியின் கொள்கையல்ல. ஆயினும் அப்பாடசாலைகளில் கற்பித்த அதிபர்கள், ஆசிரியர்கள் ஆகியோரின் கொள்கைகளாகவும் அப்பாடசாலை அமைந்துள்ள அவ்வூர் உயர்சாதி மக்களின் அச்சுறுத்ததலாகவும் இருந்தன. சில கிராமங்களில் தாழ்த்தப்பட்ட தமிழர்களே கூடுதலாக வசித்த பகுதிகளில் அவர்களை கிறிஸ்தவர்களாக்குவதற்காக அவர்களுக்கெனவே மிஷனரிப் பாடசாலைகள் அமைக்கப்பட்டிருந்தன.
வதிரி வடக்கு மெதடிஸ்த மிஷன் பாடசாலை, காரைதீவு மெதடிஸ்த மிஷன் பாடசாலை போன்றவற்றைக் குறிப்பிடலாம், கரையோரப் பகுதிகளில் அமைந்த மீனவ சமூகத்தினால் நிர்வகிக்கப்பட்ட மிஷனரிப் பாடசாலைகள் ஓரளவு, தாழ்த்தப்பட்ட தமிழர்களுக்கான கல்வியில் சம சந்தர்ப்பத்தினை அளித்தனர். இவற்றுள் சென். பெற்றிக்ஸ் கல்லுரரி யாழ்ப்பாணம். தொல்புரம் அமெரிக்க மிஷன் பாடசாலை, ஆனக்கோட்டை ரோமன் கத்தோலிக்கப் பாடசாலை போன்றவற்றைக் குறிப்பிடலாம் விவேகமுள்ள பிள்ளைகளை கிறிஸ்துவத்தில் சேர்த்து மதத்தைப் பரப்புவதற்கு மிஷனரிமார்கள் முயற்சி செய்தததனால் தாழ்த்தப்பட்ட மக்களில் கல்வி கற்ற பிள்ளைகளில் விவேகமானோரை உயர் கல்விக்கான வாய்ப்பளிக்க மிஷனரி முயற்சி செய்தது. இக்காலக்கட்டதில் சைவ பரிபாலன சபையின் கீழ் பல பாடசாலைகள் இயங்கிக்கொண்டிருந்தன. ஆயினும் இவை இந்து சமயப் பாரம்பரியம், தேசவழமை என்ற கோட்பாடுகளை காரணம் காட்டி அப்பாடசாலைகளில் தாழ்த்தப்பட்ட தமிழர்களுக்கு கல்வியளிக்க இடந்தரவில்லை. கிழக்கு மாகாணத்தைப் பொறுத்தவரை கல்வித்துறையில் கூடிய முன்னேற்றம் உடைய மாகாணமாக இருக்கவில்லை. பண்டிதர் மயில்வாகனார் இந்தியாவிலுள்ள இராமகிருஷ்ண மடத்தில் சேர்ந்து துறவு பூண்டு விபுலானந்த அடிகளார் எனும் பெயரினைத் தாங்கி கிழக்கு மாகாணத்தில் இராமகிருஷ்ண மிஷன் பாடசாலைகளை ஆரம்பித்தார்.
1929இல் இராமகிருஷ்ண மிஷன் பாடசாலைகளில் அனைவரையும் பாகுபாடின்றி சேர்த்துக்கொண்டனர், கிழக்கு மாகாணத்தில் கல்வி பிரச்சனை பற்றி 1928இல் விபுலானந்த அடிகளார் கருத்துத் தெரிவிக்கையில் கல்வி ஒரு சிலருக்கு கட்டும் சொத்தமாக இருந்தால் அக் கல்வித் தத்துவத்துக்கும் இறை தத்துவத்திற்கும் முரணாக அமையலாம். பொதுவாக தமிழ் சமுதாமுயம் சிறப்பாக இந்து சமுதாயமும் சகல மக்களுக்கும் கல்வி மூலம் விமோசனமளிக்க வேண்டும்” என்று கூறியுள்ளார். கிழக்கு மாகாணத்தைப் பொறுத்தவரை வட மாகாணத்தைப் போன்று சாதிக் கொடுமைகள் கொடூரமாக இருக்கவில்லை. அதற்குக் காரணமாக கண்டி ராச்சியத்துடன் அது கொண்டிருந்த தொடர்புகள், நிலமானிய சமுதாய அமைப்பின் தன்மைகள் உறுதி பெறாத நிலையும், பல இன - மத மக்கள் கலந்து வாழ்வதாலும், சாதி அமைப்பின் கொடுமைகள் வட மாகாணத்தை ஒத்த தன்மையாக இல்லை. எனினும் இங்கு கூட சிறுபான்மை தமிழ் சமூகத்தவர்களுக்காக களுதாவளை என்ற கிராமத்தில் ஒரு தனியான அரசாங்கப் பாடசாலையுண்டு. இராமகிருஷ்ண மிஷனரியினால் யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்ட வைத்தீஸ்வர வித்தியாலயம் தாழ்த்தப்பட்ட தமிழர்களுக்காகவும் வெற்று மதத்தவரான இஸ்லாமியருக்கும் இடத்தந்தது. யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி போன்றவைகளும் சிறுபான்மைத் தமிழருக்கு கல்வியளிக்க முன்வந்த ஸ்தாபனங்களாகும். நகரிலுள்ள பாடசாலைகள் பெரும்பாலும் தாழ்த்தப்பட்ட தமிழருக்கான கல்வி வளர்ச்சியில் சம சந்தர்ப்பங்களை அளித்தன. என்றே கூற வேண்டும். இவைகளில் பெரும்பாலானவை மிஷனரிப் பாட சாலைகளென்றால் மிகையாகாது.
இக்கால கட்டத்தில் வதிரி என்னும் கிராமத்தில் தாழ்த்தப்பட்ட மக்களுக்காக ஓர் இந்துப் பாடசாலை நிறுவவேண்டும் என்று தாழ்த்தப்பட்ட தமிழர்களுக்கிடையேயிருந்து ஒரு குரல் ஒலித்தது. இம்முயற்சியில் அல்வாய் வேலிர் சோதிடர், கரவெட்டி திரு. கா. சூரன் ஆசாரியார், வதிரி சிவசம்பு வைத்தியர் ஆகியோர் சேர்ந்து கிறிஸ்தவ மிஷனரிக்கெதிராக தங்கள் பிள்ளைகளுக்கு இந்து கலாசாரப்படி கல்வி கற்பிக்க ஒர் பாடசாலையை 1914 ஆம் ஆண்டில் நிறுவினர். இதுவே இன்று வளர்ச்சி பெற்று திகழும் தேவரையாளி இந்துக் கல்லூரியாகும். இப் பாடசாலை ஆரம்பித்த காலத்தில் அரசாங்க உதவி நன்கொடைகள் ஏனைய பாடசாலைகளுக்கு வழங்கப்பட்டது போல் உதவி நன்கொடைகள் இப் பாட சாலைக்கு கிடைக்கவில்லை 1920 ஆம் ஆண்டு தான் வதிரி தேவரையாளி சைவ வித்தியாசாலையாக வித்தியா பகுதியினரால் பதிவு செய்யப்பட்டு அரசாங்க உதவி நன்கொடையும் வழங்கப்பட்டது, இப்பாடசாலை உண்மையில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்தது. இப் பாடசாலையில் கல்வி கற்ற மாணவர்கள் இன்று பல்துறைகளிலும் சிறந்து சமுதாயத்தில் முக்கிய பங்கினை வகிக்கின்றனர்
1905 இல் ரஷ்யாவை ஆசிய நாடான ஜப்பான் வெற்றி பெற்றமையும், இந்திய தேசிய இயக்கமும், இலங்கையில். மத்திய வர்க்கத்தின் எழுச்சியும் தாழ்த்தப்பட்ட தமிழர்களிடையேயிருந்து எழுந்த சமத்துவ உரிமைப் போராட்டங்களும், முற்போக்கு சிந்தனையுடைய உயர்வகுப்பினராகக் கருதப்பட்ட சில தமிழர்களின் முயற்சிகளும் தாழ்த்தப்பட்ட தமிழர்களின் கல்வி வளர்ச்சியில் கரிசனையை ஏற்படுத்தியது. 1926 ஆம் ஆண்டு காந்தி அடிகள் இலங்கைக்கு வந்ததனுல் தமயோசனம், சம ஆசனம் என்ற இயக்கங்கள் வலுப்பெற் 2து. 1928 ஆம் ஆண்டில் சம ஆசனம், சம போசனம் என் னும் இயக்கத்தை அமெரிக்க மிஷனரிமாரின் உதவியுடன் சகல அரசியல்வாதிகளேயும் அழைத்து திரு. யோவேல் போல் உடுவில் பெண் கல்லூரியில் ஆரம்பித்து வைத்தார். அக்காலத்தில் அவருக்கு உறுதுணையாக திரு. நெவின்ஸ் செல்லத்துரை, திரு. கனகரத்தினம், திரு. ஹன்டி பேரின்பநாயகம், ரெவரன் பிக்னல் பாதிரியார் வெரன் பாதர் போல் மெத்யூஸ், டொக்டர் ஜேம்ஸ், திரு. சி. பொன்னம்பலம் எஸ். டபிள்யூ மகாதேவா அக்கலத்தில் அரசாங்க அதிபரா யிருந்த திரு. காண்டோஸ் என்போரும் பெரும் ஆதரவு அளித்தனர். இக்காலகட்டத்தில் யாழ்ப்பாணவாலிப காங்கிரஸ் காந்திய இயக்கத்தில் நம்பிக்கை வைத்து சில சமுதாயக் குறைபடுகளே சீர்திருத்த முன் வந்தது. ஆயினும் 1933ல் தனது பணிகளை செவ்வனே செயற்படுத்த முடியாது முறிவடைந்தது. ஆயினும் இவர்களின் நல்ல நோக்கங்கள் தாழ்த்தப்பட்ட தமிழரின் கல்வி வளர்ச்சிக்கு இருநூற்றண்டில் ஊக்கம் அளித்தது.
சர்வசன வாக்குரிமையும், அதனைத் தொடர்ந்து வந்த மரவரி முறையும் தாழ்த்தப்பட்ட தமிழர்களின் கணிசமான பகுதியினரின் வாழ்வில் ஒரளவு மாற்றத்தினைக் கொண்டு வந்தது பொருளாதாரம், கலாசாரம், சமூகநிலைகளில் ஏற்பட்ட மாறுதல்களினால் தாம் காலூன்றி நிற்கக்கூடிய தெம்பினே தாழ்த்தப்பட்ட மக்கள் பெற்றனர். இதனைத் தொடர்ந்து காந்தியக் கருத்துக்கள், சனநாயக உரிமைகள், இடதுசாரி இயக்கங்கள், சுயமரியாதை இயக்கங்கள் ஆகியன இணைந்து இவர்களது விடுதலைப் போருக்கு பாசறையாயிற்று. இக்காலகட்டத்தில் தாழ்த்தப்பட்ட தமிழர்களின் கல்வி வளர்ச்சி என்பது ஆங்காங்கே சில குறிகாட்டிகளாகக் காணப்பட்டனவே தவிர ஒரு முழுத்தன்மையாகச் சமுதாய அமைப்புடன் இணையவில்லை இக்கால வேளைவில் திரு. ஜி. நல்லையா, அவர்களினால் ஆரம்பிக்கப்பட்ட நல்வித்திய ஐக்கிய வாலிப சங்கம் திரு. ஜி. எம் பொன்னுத்துரை திரு. எம். சி. சுப்பிரமணியம் ஆகியோர்களால் 1941 இல் அமைக்கப்பட்ட சன் மார்க்க ஐக்கிய வாலிப சங்கம், திரு. ஆ.மீ. செல்லத்துரை பண்டிதர், செல்லையா, சைவப் புலவர் சி. வல்லிபுரம், க, முருகேசு ஆசிரியர், சாமுவேல் ஆசிரியர் ஆகியோரினால் உருவாகிய ஐக்கிய வாலிபர் சங்கமும் வடமராட்சி சமூக சேவா சங்கமும் ஒன்றிணைந்து 1942 ஆம் ஆண்டு சிறுபான்மைத் தமிழர் மகா சபையைஆரம்பித்தன. இதுவே தாழ்த்தப்பட்ட தமிழர்களுடைய சகல விடுதலைக்கும் களம் அமைத்துக் கொடுத்து போராட்டங்களை நடாத்தி விடுதலைக்கு வழிவகுத்தது. தாழ்த்தப்பட்ட மக்களின் வரலாற்றில் கடந்த 30 ஆண்டுகளின் போராட்டமே சமூகக் குறைபாடுகளே ஒழிப்பதற்கு வழிவகுத்தது. இவ்வியக்கம் தனது உரிமைகளுக்காக போராடியபோது, அதனை மழுங்கடிப்பதற்காக மிகக் கொடூரமான எதிர்த்தாக்குதல்கள் கொலைகள், கொலை முயற்சிகள், தீ வைப்புச் சம்பவங்கள், ஆலயப் பிரவேச வழக்குகள் என எத்தினையோ கொடூரங்கள் தலைவிரித்தாடின. இத்தனைக்கும் ஈடுகொடுத்து ஸ்தாபனத்தின் கட்டுக் கோப்பைக் குழைய விடாது தம்மின மக்களின் விடுதலைக்காகப் போராடிய போராட்ட வீரர்களாக திரு. யோவெல் போல், திரு. எஸ். ஆர். ஜேக்கப், தியாகி முதலி சின்னத்தம்பி ஏ. பி. இராஜேந்திரா திரு. டி. ஜேம்ஸ், திரு. ஆ. மா. செல்லத்துரை எம்.சி.சுப்பிரமணியம் திரு.ஜி.நல்லையா ஆகியோரைக் குறிப்பிடலாம். முதலியார் இராஜேந்திரா அவர்கள் டீ. எஸ். சேனநாயகாவின் ஆட்சிக் காலத்தில் செனட்டராக்கப்பட்டார். இவர் மூதவையில் தாழ்த்தப்பட்ட தமிழர்களின் முன்னேற்றங்கள் கருதி பல பிரேரணைகள் கொண்டு வந்தார்.
1956 இல் S, W. R. D. பண்டாரநாயகாவின் தலைமையில் அரசாங்கம் அமைக்கப்பட்டபோதுதான் தாழ்த்தப்பட்ட மக்களின் கல்வி வளர்ச்சி துரித கதி அடைந்தது. இக்காலத்தில் மகாசபையின் அரும் முயற்சிகளினால் பருத்தித்துறை பாராளுமன்ற உறுப்பினராக இருந்த பொன் கந்தையா அவர்களின் ஆதரவுடனும், அந்நேரத்தில் கல்வியமைச்சராக இருந்த W தஹநாயக்கா அவர்களாலும் தாழ்த்தப்பட்ட தமிழர்கள் கல்விபெற வசதியற்ற கிராமங்களில் ஏறக்குறைய 15 பாடசாலைகளே நிறுவிக் கொடுத்தார்.
அப்பாடசாலைகள் வருமாறு:
பாடசாலையும் அது அமைந்துள்ள தொகுதியும்
1. குட்டியபுலம் அ.த.க.பாடசாலை - கோப்பாய்
2. கட்டுவன்புலம் அ.த.க.பாடசாலை - காங்கேசன்துறை
3. சண்டிலிப்பாய் அ.த.க.பாடசாலை - மானிப்பாய்
4. சுதுமலை அ.த.க.பாடசாலை - மானிப்பாய்
5. அச்சுவேலி அ.த.க.பாடசாலை – கோப்பாய்
6. புலோலி அ.த.க.பாடசாலை - பருத்தித்துறை
7. இமையாணன், அ.த.க.பாடசாலை - உடுப்பிட்டி
8. வசந்தபுரம் அ.த.க.பாடசாலை - காங்கேசன்துறை
9. மந்துவில் அ.த.க.பாடசாலை – சாவகச்சேரி
10. மட்டுவில் தெற்கு அ.த.க.பாடசாலை, - சாவகச்சேரி
11.சரசாலை அ.த.க.பாடசாலை – சாவகச்சேரி
12.கைதடி அ.த.க.பாடசாலை – சாவகச்சேரி
13, வரணி, அ.த.க.பாடசாலை - சாவகச்சேரி
14. வெள்ளாம் பொக்கட்டி அ.த.க.பாடசாலை - சாவகச்சேரி
15. பொன் கந்தையா அ.த.க.பாடசாலை – மானிப்பாய்
இப்பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டபோது சில பாடசாலைகள் அக்கினி தேவனுக்கு இரையாக்கப்பட்டன. தமிழ் அரசியல் தலைவர்கள் கூட இப்படியான பாடசாலைகள் அவசியமில்லை, என அரசாங்கத்திற்கு மூறையீடு செய்தனர். தாழ்த்தப்பட்ட தமிழர்களுக்கென பாடசாலைகள் திறப்பது மேலும் அவர்களைத் தாழ்த்தி வைப்பது போலாகும் என்று நியாயம் வேறு இதற்குக் கற்பித்தனர். அக்காலச் சூழ்நிலையிலிருந்த பாடசாலைகளில் இம்மக்களுக்கு சமத்துவமான முறையில் கல்வி கற்பித்துக் கொடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்காதவர்கள், பாடசாலைகளில் மாணவர்களுக்கு சாதியின் பேரால் இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு குரல் கொடுக்காத இவர்கள் இந்து பரிபாலன சபையின் ஆதிக்கத்தின் கீழிருந்த பல பாடசாலைகளில் அனுமதித்த தாழ்த்தப்பட்டவர்களுக்கு மறுப்புத் தெரிவிக்கப்பட்ட போது அவர்களே அனுமதிப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்காத இவர்கள், இச்சந்தர்ப்பத்தில் கூப்பாடு போடுவது விசித்திரமாக
இருக்கின்றது. தாழ்த்தப்பட்ட தமிழர்களுக்கென தனியான பாடசாலைகள் திறப்பது கல்விக்கொள்கைக்கும், சமத்துவ முறைமைக்கும் முரணானதே ஆயினும் அந்தக்குறிப்பிட்ட காலகட்டத்தில் இப்பாடசாலைகளின் தோற்றந்தான் அன்று வரை தாழ்த்தப்பட்ட மக்களின் கல்விக்கு பூட்டு போட்டிருந்த பாடசாலைகள் அனைத்தும் சமத்துவமான முறையில் சகலருக்கும் கல்வி பெற திறக்கப்பட்டது. இன்று தாழ்த்தப்பட்ட தமிழர்க்கென திறக்கப்பட்ட மேற்கூறப்பட்ட பாடசாலைகள் சகல மக்களும் படிக்கின்ற, படிப்பிக்கின்ற நிலைமைகள் உருவாகியுள்ளது. எனவே இந்த நிலையில் இப்பாடசாலைகள் தாழ்த்தப்பட்ட தமிழர்களின் கல்வி வளர்ச்சிக்கு மட்டுமன்றி முழுத்தமிழ்ச் சமுதாயத்தின் கல்வி வளர்ச்சிக்குமே உறுதுணையாக இருக்கின்றது. திரு டபிள்யூ. தஹநாயக்கா கல்வியமைச்சாக இருந்த காலத்தில் 23 பட்டதாரி ஆசிரியர்களுக் கான நியமனங்களே தமிழர்கள் பெற்றனர். 1956 இலிருந்து 1960 வரை ஆசிரியர் பயிற்சிக் காலாசாலைக்கு ஆண்டு தோறும் 30 ல் இருந்து 50 வரையிலான தாழ்த்தப்பட்ட தமிழர்கள் தெரிவுசெய்யப்பட்டனர். இவ்வாறு தாழ்த்தப்பட்ட தமிழர்களின் கல்வி வளர்ச்சிக்காக சிறுபான்மைத் தமிழர் மகாசபை தொண்டாற்றியதுடன் சமூக குறைபாடுகள் ஒழிக்கப்பட்டதை 1957ல் அமுலாக்கவும் 1970ம் ஆண்டு அதன் குறைகளைக் தீர்க்கவும் நடவடிக்கை எடுத்தது. .
தாழ்த்தப்பட்ட தமிழர்களின் கல்வி வளர்ச்சியில் 1962 ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட அகில இலங்கை தமிழர் பெளத்த சங்கம், சில தமிழ் பெளத்த பாடசாலைகளை ஆரம்பிக்கும் நடவடிக்கையில் இறங்கியது. இச்சங்கத்தின் தலைவராக (டேவிற்) எம். வைரமுத்து ஜே. பி. அவர்கள் இருந்தார். இணைச் செயலாளர்களாக கே. கனகலிங்கம், வி.மார்க்கண்டு என்போரும், உப தலைவர்களாக சின்னதம்பி, எம். பொன்னுத்துரை, எஸ். கிருஷ்ணசாமி ஆகியோரும், தானாதிகாரியாக எஸ். ஐயாத்துரையும் பதவிகளை வகித்தனர். இவர்களால் பின்வரும் நான்கு பெளத்த தமிழ் பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டன.
1) புத்தூர் பஞ்ஞாசீக வித்தியாலயம்2) அச்சுவேலி ஸ்ரீ விபஸ்சி வித்தியாலயம்3) கரவெட்டி ஸ்ரீ நாரதா வித்தியாலயம்4) அல்வாய் சேய்மகே வித்தியாலயம்
இப்பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டபோது பல எதிர்ப்புகள் கிளம்பின. ஆரம்பத்தில் இப்பாடசாலைகளில் பௌத்த சமயத்தைத் தழுவிய தாழ்த்தப்பட்ட தமிழ் பிள்ளைகள் கல்வி கற்றனர். இப்பாடசாலை ஆரம்பிக்கப்பட்டதனால் தாழ்த்தப்பட்ட சமுதாயத்திலிருந்து அரசாங்க ஆசிரியர்களாகும் வாய்ப்பு பலருக்குக் கிட்டியது. இன்று இப்பாடசாலைகள் பேரளவில் பெளத்த தமிழ்ப்பாடசாலைகளாக இருந்த போதிலும் சகலரும் சமத்துவமாக கற்க, கற்பிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது .
தற்போதைய நிலையில் ஆரம்பக்கல்வி நிலையிலிருந்து பல்கலைக்கழக உயர்கல்வி வளர்ச்சிக்கும் இதற்கு மேலும் புலமைப்பரிசில்கள் பெற்று வெளிநாடுகளுக்குச் சென்று கற்கும் நிலை வரை தாழ்த்தப்பட்ட நிலையிலிருந்து தமிழர்கள் கல்வியில் உயர்நிலைக்கு வந்துள்ளனர். இந்த நிலையை இன்றைய இளம் சிறார்கள் எய்துவதற்காக நம்முன்னோர்பட்ட அரும்பாடுகள், சொல்லொணாத்துன்பங்கள் செய்த உயிர்த் தியாகங்கள் அனைத்தையும் நினைவு கூருவதுடன், எக்காலத்திலும், எந்த நிலையிலும் இத்தகையதொரு இன்னல்கள் எந்த சமூகத்திற்கும் வரக்கூடாதென்றும், அவ்வாறு சமத்துவமின்றி காணும் சமுதாயத்தின் மேம்பாட்டிற்காக உழைக்க முன்வருவோமென்று இளைஞர்கள் உறுதி பூணவேண்டும்.
இறுதியாக இலவசக் கல்வி அறிமுகம் அரசாங்கம் பாடசாலைகளேப் பொறுப்பேற்றல், இலங்கையில் தமிழர்களின் அரசியல் நிலை, தாழ்த்தப்பட்ட சமூகத்தின் விழிப்பும், எழுச்சியும், மழைக்குக்கூட பாடசாலையில் ஒதுங்கமுடியா திருந்த நிலைமாற்றப்பட்டு படிப்படியாக பல்வேறு போராட்டங்களைக் கடந்து இன்றைய கல்வி நிலையில் ஏனைய சமூகத்தவர்களோடு ஒத்த ஒரு நிலைக்கு தாழ்த்தப்பட்ட தமிழர்களின் கல்வி வளர்ச்சி உயர்வு பெற்றது.
பிற்குறிப்பு
- “தாழ்த்தப்பட்ட தமிழர்களின் கல்வி வளர்ச்சி” 1989 - யாழ்ப்பாணம் - என்கிற நூலில் இருந்து எடுக்கப்பட்ட கட்டுரை இது. நூலகம் இணையத் தளத்தில் அந்த நூலை பெற்றுக்கொண்டோம். அவர்களுக்கு எமது நன்றிகள்.
- மிஷனரி தேவாலயங்கள் பற்றிய ஓவியங்கள் "A True and Exact Description of the Most Celebrated East-India Coasts of Malabar and Coromandel and Also of the Isle of Ceylon" Philippus Baldaeus - Asian Educational Services, 1703 நூலில் இருந்து எடுக்கப்பட்டவை
- யாழ்ப்பாணத்தில் ஒடுக்கப்பட்டவர்களுக்காக போராடிய தோழர்களின் மேற்படி ஓவியங்களை வரைந்தவர் மறைந்த தோழர் தங்கவடிவேல் அவர்களின் புதல்வர் சௌந்தர் அவர்கள். அவர்களுக்கு நன்றிகள்.
+ comments + 1 comments
எஸ் சந்திரபோஸின் கட்டுரை மிகவும் பயனுள்ளதாக அமையும் என நான் எண்ணுகின்றேன் .
குறிப்பாக இன்றய இளைனருக்கு அன்றைய நிலைபற்றி அறிவதற்கு
மிகவும் உதவியாய் இருக்கும் .
இருந்தும் , மேலை நாட்டு உணவுப் பழக்கங்கள், உடைகள், படிப்பு முறை எல்லாம் இங்கே வந்துவிட்டன. ஆனால் சாதிமுறை மட்டும் அசையாமல் அப்படியே இருக்கிறது. அறிவியல், மருத்துவம், கணிப்பொறியியல், சட்டம் என்று பல்வகைப் படிப்புகளிலும் தேர்ச்சி பெறும் நம் பிள்ளைகள், பழைய சடங்குகள், போக்குகளிலிருந்தெல்லாம் விடுபட்டு விட்டதாகக் கருதும் இளைஞர்கள் அனைவரும் (அல்லது மிக மிகப் பெரும்பான்மையினர்), திருமணம் என்று வரும்போது, வீட்டிற்கு அடங்கிய நல்ல பிள்ளைகளாகி, பெற்றோரின் விருப்பப்படியும், சமூக நியதிகளின்படியும், தங்களின் சொந்த சாதியில் மணமுடித்துக் கொள்கின்றனர்.
இந்த நிலை எப்போது மாறும் ? அல்லது எப்போது மாற்றுவோம் ?
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...