Headlines News :
முகப்பு » » இந்தியப் பிரதமர் மோடிக்கு மலையகத்திலிருந்து மகஜர்

இந்தியப் பிரதமர் மோடிக்கு மலையகத்திலிருந்து மகஜர்


இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுதினம் 11 ஆம் திகதி இலங்கை வரவுள்ளார்.

இலங்கை அரசின் அழைப்பின்பேரில் சர்வதேச வெசாக்தின ஆரம்ப நிகழ்வில் பங்கேற்கவரும் அவர், இந்திய அரசின் நிதியுதவியுடன் நிர்மாணிக்கப்பட்ட ஹட்டன், கிளங்டன் வைத்தியசாலையையும் திறந்துவைக்கவுள்ளார்.

இந்நிலையில், இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளி தமிழ் மக்கள் ( மலையக மக்கள்) எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பிலும் அவர்களுக்கான தீர்வு என்னவென்பது குறித்தும் இந்தியப் பிரதமரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் மகஜரொன்று கையளிக்கப்படவுள்ளது.

கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகத்தின் ஊடாக மகஜரை கையளிப்பதற்காக மலையக சமூக ஆய்வு மையத்தின் ஏற்பாட்டாளர் அருட்தந்தை மா. சக்திவேல் தலைமையிலான மலையக சிவில் செயற்பாட்டாளர்கள் இன்று பகல் இந்திய தூதரகம் சென்றிருந்தனர்.

மலையக சமூக ஆய்வுமையம், மலையக உரிமைக்குரல், மலையக இளம் ஊடகவியலாளர் ஒன்றியம் ஆகியவற்றின் பிரதிநிதிகளும் உடன் இருந்தனர்.
தூதரகத்தின் இரண்டாம்நிலை செயலாளர் நித்தின் சுபாஸ் குறித்த மகஜரை பெற்றுக்கொண்டதுன், அதை பாரத பிரதமரிடம் ஒப்படைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியுமளித்தார்.


கௌரவ நரேந்திர மோடி அவர்கள்
பிரதம மந்திரி - இந்திய குடியரசு

இலங்கையில் மலையகத் தமிழர்கள் என அறியப்பட்ட இந்திய வம்சாவழித் தமிழர்கள் தமிழகத்திலிருந்து இலங்கைக்கு வந்து இருநூறு ஆண்டுகள் பூர்த்தியாகின்றது. இவ்விருநூறு ஆண்டுகளில் மலையகத்திற்கு வருகைத்தரும் முதலாவது இந்திய பிரதமர் என்ற வகையிலும் இந்திய வம்சாவழி மலையக தமிழர்கள் மேல் அக்கரையுடையவர் எனும் ரீதியில் உங்களை மலையக மக்கள் சார்பில் வரவேற்கின்றோம். இந்த பின்னணியில் இலங்கையில் வதியும் மலையகத் தமிழர்கள் (இந்திய வம்சாவழித் தமிழர்கள்) பற்றியும் , அவர்கள் எதிர் கொள்ளும் நெருக்கடிகள் பற்றியும் உங்கள் மேலான கவனத்திற்கு கொண்டு வர விரும்புகின்றோம்.
பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியின் போது பல்வேறு தேவைகளுக்காக (குறிப்பாக பெருந்தோட்டத்துறை தொழிலாளர்களாக) தமிழகத்தின் தென் மாவட்டங்களிலிருந்து பல இலட்சம் தமிழர்கள் குறிப்பாக இலங்கையின் மத்திய மலைநாட்டு பிரதேசத்தில் குடியமர்த்தப்பட்டனர். இன்று இம்மக்கள் இலங்கையின் மொத்த சனத்தொகையில் 7% மாக உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. (ஒரு காலத்தில் 13% மாக காணப்பட்டனர்).

1817 முதல் அமைந்த இம்மக்களின் வருகையானது தொடர்சியாக 1956 வரை இடம் பெற்றது. இம்மக்களின் அயராத உழைப்பினாலேயே இலங்கையின் பெருந்தோட்டத்துறை வளம் கொழிக்கும் பூமியாக மாறியது. இன்றும் இலங்கையின் பெருமளவு அந்நிய செலாவணியை உழைத்து கொடுக்கும் மக்கள் பிரிவினராக இம்மக்களே உள்ளனர்

1963 வரை இம்மக்களே இலங்கையின் இரண்டாவது பெரிய சனத்தொகையை கொண்ட இனமாக காணப்பட்டனர். ஆனால் துரதிஷ்டவசமாக 1964 இல் மேற்கொள்ளப்பட்ட சிறிமா – சாஸ்த்திரி ஒப்பந்தத்தின் மூலமும், 1974 இல் மேற்கொள்ளப்பட்ட சிறிமா - இந்திரா ஒப்பந்தத்தின் மூலமும் இம் மக்களில் சரி அரைவாசி பேர் அவர்களின் விருப்பமின்றியே இந்தியாவிற்கு குடிப்பெயர்த்தப்பட்டனர். இவ்வாறு இந்தியாவிற்கு நாடுகடத்தப்பட்ட மக்களில் மிக பெறும் எண்ணிக்கையானோர் தமிழகத்திலும் (குறிப்பாக நீலகிரி மாவட்டம்) அண்டை மாநிலங்களிலும் இன்று சொல்லில் அடங்கா துன்பங்களை அனுபவிப்பதை அறியக்கூடியதாக உள்ளது.

இவ்வாறே இலங்கையில் காலத்துக்கு காலம் ஏற்பட்ட இன வன்முறைகளினால் பாதிக்கப்பட்ட இம்மக்களில் கணிசமானோர் இன்று வடக்கே வன்னியில் குடியேறியுள்ளனர்

இந்நிலையில் மலையக பிரதேசங்களிலும்;, தெற்கிலும் வாழும் இம்மக்களின் மிக பெரும் எண்ணிக்கையானோர் பல்வேறு நெருக்கடிகளை அன்றாடம் சந்தித்து வருகின்றனர்.

 கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக இம்மக்கள் மத்தியில் தொடர்ச்சியாக திட்டமிட்ட வகையில் மேற்கொள்ளப்பட்டு வரும் கருத்தடை காரணமாக இம்மக்களின் இன விகிதாசாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த 30 ஆண்டுகளில் இலங்கையின் சராசரி குடிசன அதிகரிப்பானது 37.13மூ ஆக இருக்கும் நிலையில் இந்திய வம்சாவழி மலையகத் தமிழரின் அதிகரிப்பானது 2.55மூ மாக மட்டுமே உள்ளது. (இதே வேலை முஸ்லிம்களின் அதிகரிப்பானது 80.78மூ மாக அதி உச்சத்தில் உள்ளது)

 மலையக தமிழருக்கு சொந்தமாக காணி கிடையாது. கடந்த இருநூறு வருடங்களாக இம் மக்கள் காணி உரிமை அற்றவர்களாகவே உள்ளனர்

 மலையக தமிழர்கள் செறிவாக வாழும் பிரதேசங்களில் மேற் கொள்ளப்படும் திட்டமிட்ட குடியேற்றங்கள் மூலம் இம்மக்களின் செறிவுத் தன்மை பாதிக்கப்பட்டுள்ளது.

 மலையகத் தமிழர்கள் ஐதாக வாழும் தென் மாகாணம்;, சப்ரகமுவ மாகாணம் , மேல் மாகாணத்தின் களுத்துறை மாவட்டம் போன்ற இடங்களில் இம் மக்கள் திட்டமிட்ட வகையில் இன மாற்றத்திற்கு குறிப்பாக சிங்கள – பௌத்தர்களாக மாற்றப்பட்டுக் கொண்டுள்ளனர். (இங்கு தமிழ் மொழி மூல பாடசாலைகள் அரிதாக காணப்படுவதால் சிங்கள மொழி மூலம் கல்விகற்று தங்கள் இனத்துவ அடையாளங்களை இழந்து வருகின்றனர்)

 இம் மக்களின் வாழ்வாதாரமாக உள்ள பெருந்தோட்டப் பொருளாதாரம் இன்று திட்டமிட்ட வகையில் சிதைக்கப்பட்டு தரிசு நிலங்களாக மாற்றப்பட்டு மக்கள் சிதறடிக்கப்படுகின்றார்கள். வேறு தொழில்களை நோக்கி மறைமுகமாக தள்ளப்படுவதால் இம் மக்கள் வாழ்ந்த பூமியிலிருந்து விரட்டப்படுகின்றார்கள்.

 படித்த இளைஞர் யுவதிகளுக்கான வேலை வாய்ப்புகள் இம் மக்கள் வாழும் பிரதேசங்களில் உருவாக்கப்படுவதில்லை. இதனால் இவர்கள் வேலைத்தேடி கட்டாயமாக வேறு நகர் பகுதிகளுக்கு இடம் பெயற வேண்டியுள்ளது. இதனாலும் இம் மக்கள் சிதறடிக்கப்பதட்டு செறிவாக வாழும் நிலையை இழந்து கொண்டு வருகிறார்கள்.

 தோட்டத் தொழிலாளர்களுக்கு உழைப்பிற்கேற்ப ஊதியம் வழங்கப்படுவதில்லை. மிக குறைந்த ஊதியமே வழங்கப்படுகின்றது.

 கல்வி நிலையில் சமமான வளப்பங்கீடு இம் மக்கள் வாழும் பிரதேசங்களில் வழங்கப்படுவதில்லை. இம் மக்கள் வாழும் பிரதேசங்களிலுள்ள பாடசாலைகளில் உயர் தரம் கணித, விஞ்ஞான துறையில் படிப்பதற்கு போதிய கட்டட, ஆய்வுக் கூட மற்றும் ஆசிரியர் வசதிகள் கிடையாது. இதனால் மருத்துவர்களும் பொறியியலாளர்களும் இச் சமூகத்திலிருந்து வருவது மிகவும் குறைவாகவே உள்ளது.

இதே போல் இலங்கையில் ஒவ்வொரு சமூகம் சார்ந்தும் பல்கலைக்கழகங்கள் இருந்த போதிலும் , மலையகத் தமிழர்கள் சார்ந்து ஒரு பல்கலைக்கழகம் இல்லாத குறையும் காணப்படுகின்றது.

 மலையகத் தமிழர்கள் வாழும் பிரதேசங்களில் மொழி அமுலாக்கம் சரியாக நடைமுறைப்படுத்தப்படுவதில்லை. இதனால் அன்றாட தேவைகளை நிறைவு செய்து கொள்வதில் இம் மக்கள் பெரும் சிரமங்களை எதிர் கொண்டுள்ளனர்.

 இம் மக்கள் வாழும் இடங்களில் அடிப்படை சுகாதார வசதிகள் மிகவும் குறைந்த நிலையிலேயே காணப்படுவதோடு, இம் மக்களிடையே மிகவும் குறைந்த போஷாக்கு நிலையே காணப்படுகின்றது. இதனால் இலங்கையிலேயே அதி கூடிய மாணவர் இடை விலகல் இச் சமூக மாணவர்களிடத்திலேயே காணக் கூடியதாக உள்ளது.

மேற் போன்ற பிரச்சினைகள் மற்றும் நெருக்கடிகளுக்கு முல காரணம் இந்த நாட்டில் மலையக மக்கள் தேசிய இனமாக அங்கீகரிக்கப்படாமையே ஆகும். எனவே உங்களது வருகையும் உங்களது எதிர்கால செயற்பாடுகளும் மலையக மக்களை இந்நாட்டில் ஒரு தேசிய இனமாக அங்கீகரிக்க உதவும் என்று நம்புகின்றோம். இதனடிப்படையில் நாம் உங்கள் மேலான கவனத்திற்கு கொண்டு வந்த மேற் சொன்ன விடயங்களையிட்டு உரிய நடவடிக்கைகளை எடுத்து இம் மக்களின் எதிர்கால இருப்பிற்கு உதவுமாறு தயவுடன் கேட்டு கொள்கின்றோம்.


His Excellency Narendra Modi
Prime Minister of the Republic of India
High Commission of the Republic of India
Colombo, Sri Lanka

Your Excellency,

Almost two centuries have passed since the people of Indian origin known as the upcountry Tamils arrived in Sri Lanka from Tamil Nadu. As the first Indian Prime Minister to visit the Upcountry in the last two centuries and a well-wisher of the people of Indian origin, we welcome you on behalf of the Upcountry Tamil people. We would like to draw your attention to the Upcountry Tamils (Tamil people of Indian decent) living in Sri Lanka and the challenges they face on a daily basis.

Under the British Colony, hundreds of thousands of Tamil people of the Southern districts in Tamil Nadu were settled especially in the central parts of Sri Lanka for various purposes (most importantly as laborers in the Plantation sector). Today, it is estimated that the Tamil people of Indian origin make up almost 7 percent of the total population (formerly they were 13 percent of the total population). The arrival of the Tamil people of Indian origin commenced in 1817 and went on till 1956. It is the hard work of the Upcountry Tamil people that developed the plantation sector. Even today this community happens to be one of the main contributors towards the foreign exchange of Sri Lanka.

Until 1963 the Upcountry Tamil people constituted the second highest population in the Island. But, unfortunately half of the total Upcountry Tamil population were sent back to India against their will, as a result of the Sirima-Shasthri agreement in 1964 and Sirima-Indra agreement in 1974.

Many of the deported Upcountry population settled in Tamil Nadu (especially in the Neelagiri district) and nearby states. It is observed that the Upcountry Tamil people who were forcibly sent back to India are experiencing immense hardships to this day.

It is important to note that many of the Tamil people of Upcountry who have been affected by ethnic riots in Sri Lanka from time to time, have settled in the Vanni region in the Northern province.

In the meantime, many of the Tamil people of Indian descent living in upcountry and elsewhere in the South face various challenges on a day to day basis.

Ø The population growth rate of Upcountry Tamil people has decreased significantly due to the deliberate and forced sterilization measures carried out amongst this community by the authorities for the past 40 years. While Sri Lanka’s average population growth rate for the past 30 years has been 37.13 percent, the growth rate of Upcountry Tamil people of Indian origin has only been 2.33 percent. (Meanwhile, the increase in growth rate amongst the Muslim community has been the highest at 80.87 percent).

Ø Upcountry Tamil people do not own lands. For the past two centuries they do not have ownership to lands and considered landless.

Ø The demography of the Upcountry Tamil people is being affected due to new settlements coming up in areas that are densely populated by the Upcountry Tamil people.

Ø Deliberate measures are being carried out where the Upcountry Tamil people are forced to change their ethnicity and even religion (especially as Sinhala Buddhists) in the Southern province, Sabragamuwa province and Kalutara district of the Western province where a lesser percentage of Upcountry Tamil people live in. (Since Tamil language schools does not exist in these predominantly Sinhalese areas, the Tamil people of Indian origin are forced to follow their education in Sinhala.)

Ø The plantation sector has been the source of livelihood for the people living there. However, these plantation lands which were once the main contributors towards the national economy, have now been destroyed and turned into wastelands and the Upcountry people are being scattered all over. They have no choice but to find other employment and consequently they are forced to leave the land where they have been living for generations.

Ø There is no suitable employment in the plantation sector for educated young Tamil men and women of the Upcountry and there are no initiatives for job creation taken up by relevant authorities. Therefore, the youth are forced to leave their native lands in search of employment in cities. As a result, they scattered in various places and abandoning the land which was once densely populated by the Upcountry Tamil people.

Ø Plantation workers are not paid fair wages for their labor. They receive comparatively insignificant salaries.

Ø As for education, there is no equal distribution of resources to the plantation areas where the people of Indian origin live. The schools in the Upcountry lack infrastructure facilities such as proper class rooms and science labs as well as there is shortage of qualified teachers in order to peruse their G.C.E. Advance Level education in mathematics or science. Therefore, the community hardly produces any doctors or engineers.

Ø Similarly, there are universities established for each community in Sri Lanka. However, no university has been built for the Upcountry Tamil people.

Ø Implementation of language right is not fully carried out in areas where Upcountry Tamil people predominantly live. Therefore, many in the community are facing difficulties in carrying out their day to day activities.

Ø The community lacks basic health facilities and also malnourishment is a common concern in the areas where the community live. Consequently, the community has the highest dropout rate amongst school students in Sri Lanka.

The root cause for the above challenges and problems stem from the fact that the Upcountry Tamil people are yet to be recognized as a national ethnic group. Therefore, we hope that Your Excellency’s arrival and future initiatives will pave the way to recognizing the Upcountry Tamil people as a national ethnic group in Sri Lanka. Accordingly, we humbly request you to intervene on behalf of the Upcountry Tamil people with regard to the above challenges and take necessary steps to resolve the issues.
............
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates