Headlines News :
முகப்பு » » பிர­தே­சசபை திருத்தச் சட்­டத்­திற்­காக காத்­தி­ருக்கும் மலை­யக மக்கள் - பெ.முத்துலிங்கம்

பிர­தே­சசபை திருத்தச் சட்­டத்­திற்­காக காத்­தி­ருக்கும் மலை­யக மக்கள் - பெ.முத்துலிங்கம்


இலங்கைத் தேயிலை இவ்­வ­ரு­டத்­துடன் நூற்றி ஐம்­பது வருட வர­லாற்றை எய்­து­கின்­றது. இந் நூற்றி ஐம்­பது வருட வர­லாற்றை நினை­வு­கூர தேயி­லைத்­து­றையின் முகா­மைத்­து­வங்­களும், தோட்­டத்­துறை அமைச்சும் முனை­கின்­றன. இலங்­கைத் தேயி­லையின் வர­லாற்­றிற்கு நூற்றி ஐம்­பது வரு­ட­மா­கின்­ற­போது, அத்­தே­யிலைத் தொழிலில் ஈடு­பட்டு வரும் தமிழ் தொழி­லாளர் பரம்­ப­ரை­யினர் நூற்றித் தொண்­ணூற்றி மூன்று வருட வர­லாற்றைக் கொண்­ட­வர்­க­ளாகக் காணப்­ப­டு­கின்­றனர்.

பிரித்­தா­னி­யரால் கோப்பித் தொழிற்­றுறை 1823 ஆம் ஆண்டு அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டது. பதிவின் படி 1824 ஆம் ஆண்டு தென்­னிந்­தி­யா­வி­லி­ருந்து முதல் தொழி­லாளர் குழு இலங்­கைக்கு அழைத்­து­வ­ரப்­பட்­டனர். அன்­றி­லி­ருந்து 1941 ஆம் ஆண்­டு­வரை தென்­னிந்­திய தமிழ் தொழி­லா­ளர்­களின் வரு­கையும், செல்­கையும் நடை­பெற்­ற­துடன், படிப்­ப­டை­யாக நிரந்­தரத் தொழி­லா­ளர்­க­ளாக இலங்­கையின் தோட்­டங்­களில் தங்கவும் ஆரம்­பித்­தனர்.

1867 இல் கோப்பிப் பயிர்ச்­செய்­கையை நோய் தாக்­கவே ஜேம்ஸ் டெய்லர் என்ற தோட்­டப்­பயிர்ச் செய்­கை­யா­ளரால் தேயிலைப் பயிர் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டது. இப்­பயிர் வெற்­றி­க­ர­மாக வளர்ந்த நிலையில், தென்­னிந்­தி­யா­வி­லி­ருந்து வந்த தொழி­லா­ளர்­களின் தொகை அதி­க­ரித்­த­துடன் நிரந்­த­ர­மாகத் தங்­குதல் மேலும் அதி­க­ரித்­தது. 1948 ஆம் ஆண்டை அண்­மிக்­கையில் பத்து லட்சம் தமிழ் தொழி­லா­ளர்கள் தோட்­டப்­பு­றங்­களில் நிரந்­த­ர­மாக வாழ்ந்­துள்­ளனர்.

தேயிலை உற்­பத்­தி­யுடன் நாட்டில் இருப்­புப்­பா­தைகள், கற்பாதைகள், மற்றும் துறை­முகம் உள்­ளிட்ட அனைத்து உட்­கட்­டு­மா­னங்­களும் உரு­வாக்­கப்­பட்­டன.

இவ்­வ­னைத்து உட்­கட்­டு­மானப் பணி­க­ளிலும் தென்­னிந்­தியத் தமிழ்த் தொழி­லா­ளர்கள் பெரு­ம­ள­வில ஈடு­ப­டுத்­தப்­பட்­டனர். தேயிலை உற்­பத்­தி­யுடன் மாந­க­ரங்கள், நக­ரங்கள், மற்றும் பட்­டினங்கள் உரு­வாக்­கப்­பட்­டன.

இம் மாந­க­ரங்­க­ளி­லும், பட்­டி­னங்­க­ளிலும் உரு­வாக்­கப்­பட்ட உள்­ளூ­ராட்சிச் சபை­களில் சிற்­றூ­ழி­யர்­க­ளாக தென்­னிந்­திய தமி­ழர்­களே பணியில் அமர்த்­தப்­பட்­டனர். கோப்பி மற்றும் தேயிலை உற்­பத்­தியின் விளை­வாக இலங்­கையின் அர­சியல், சமூக, பொரு­ளா­தார மற்றும் கலா­சார தளத்தில் பாரிய பரி­மாற்றம் ஏற்­பட்­டது. நாட்டு மக்­க­ளது கல்வி, பொரு­ளா­தாரம் போன்­ற­வற்றில் பாரிய மாற்றம் ஏற்­பட்­ட­துடன் நாடு பல வகையில் செழிப்­புற்­றது.

ஆனால், நாடும் மக்­களும் செழிப்­புற தம்மை அர்ப்­ப­ணித்த தோட்ட மற்றும் நகர்­புற தமிழ் தொழி­லா­ளர்­களுக்கு அப் பலனை அனு­ப­விக்க வாய்ப்பு கிட்­ட­வில்லை.

நாடு சுதந்­தி­ர­ம­டை­வ­தற்கு முன்னர் பிரித்­தா­னிய கால­னி­யா­திக்­க­வா­திகள் குடி­ய­மர்த்­தப்­பட்­ட­வர்­க­ளா­க­வி­ருந்த தோட்ட மற்றும் நகரத் தொழி­லா­ளர்­களை இலங்கை நாட்டின் பிர­ஜை­க­ளாகக் கருதி அவர்­க­ளுக்கும் சர்­வ­சன வாக்­கு­ரி­மையை 1931 இல் வழங்­கினர். இதனை சுதேச அர­சியல் தலை­வர்­க­ளான டீ.எஸ்.சேனா­நா­யக்க, மற்றும் எஸ்.டபிள்யு.ஆர்.டீ. பண்­டா­ர­நா­யக்க கடு­மை­யாக எதிர்த்­தனர். ஆனால் அம்­மு­யற்­சியில் தற்­கா­லிகத் தோல்­வியைக் கண்­டனர். இதன் விளைவு டொனமூர், சோல்­பரி அர­சி­ய­ல­மைப்­பு­களில் இம்­மக்கள் உள்­வாங்­கப்­பட்­ட­துடன் சட்ட சபையில் பிர­தி­நி­தித்­துவம் பெறும் வாய்ப்­பினையும் பெற்­றி­ருந்­தனர்.

ஆனால், 1935 இல் கிரா­ம­ச­பை­க­ளுக்­கான திருத்­தச்­சட்டம் கொண்­டு­வ­ரு­கையில் தோட்ட மக்கள் உள்­வாங்­கப்­ப­டு­வதை தடுப்­பதில் மேற்­கூ­றப்­பட்ட இரு தலை­வர்­களும் வெற்­றி­கண்­டனர். இத்­தி­ருத்தச் சட்டம் மூலமாக தோட்ட மக்கள் கிரா­ம­ச­பை­களில் பங்கு கொள்­வது தடை செய்­யப்­பட்­டது. இத்­தடை பின்னர் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்ட உள்­ளூ­ராட்சி சபை­க­ளுக்கும் விரி­வாக்­கப்­பட்­டது.

இதன் மூலம் கிராம சபை­க­ளிலும் ஏனைய உள்­ளூ­ராட்சி மன்­றங்­களில் இம்­மக்கள் பங்­கு­கொள்­வதும் மற்றும் அதன் மூலம் முன்­னெ­டுக்­கப்­படும் அபி­வி­ருத்தி திட்­டங்­களை பெறும் வாய்ப்பும் இல்­லா­தொ­ழிக்­கப்­பட்­டது. இவ் ஓரங்­கட்­டலை முழு­மை­யாக ஆக்கும் வகையில் 1948 ஆம் ஆண்டு சுதந்­திரம் கிடைத்­த­வுடன் சுதந்­திர நாட்டின் பிர­த­ம­ரா­கிய டி.எஸ் சேனா­நா­யக்க பிரஜா உரிமை சட்­டத்தை அறி­மு­கப்­ப­டுத்­தி­யதன் மூலம் இம்­மக்கள் கல்வி, காணி, வீடு, சுகா­தாரம் முத­லிய உரி­மை­களை அனு­ப­விக்கும் வாய்ப்­பினை இல்­லா­தொ­ழித்தார். இரண்டு நூற்­றாண்டை அண்­மிக்கும் வேளை­யிலும் இன்றைய மலை­யக மக்கள் அபி­வி­ருத்­தியை சம­னாக அனு­ப­விக்கும் வாய்ப்பை இழந்து நிற்­கின்­றனர்.

1948 ஆம் ஆண்டு மறுக்­கப்­பட்ட பிர­ஜா­வு­ரிமை பிரச்­சினை 2003 ஆம் ஆண்டு கொண்டு வரப்­பட்ட திருத்தச் சட்­டத்­துடன் அனைத்து மலை­யக மக்­களும் குடி­யு­ரிமை பெற்­ற­வ­ராக அங்­கீ­க­ரிக்­கப்­பட்ட போதிலும், இன்றும் பிர­தேச சபை­க­ளினால் வழங்­கப்­படும் அபி­வி­ருத்­தியை சம­மாக அனு­ப­விக்க முடி­யா­துள்­ளனர். 1994 ஆம் ஆண்டு முதல் இப்­பி­ரச்­சி­னை­பற்றி ஏற்­புரை செய்­யப்­பட்டு வந்­த­போ­திலும், இவ்­வு­ரிமை மறுப்­பினை மலை­யக தலை­மைகள் புரிந்து கொள்ள பல வரு­டங்கள் எடுத்­தன. 2008 ஆம் ஆண்டு உட­ப­லாத்த பிர­தேச சபை கலைக்­கப்­பட்ட பின்­னரே இதனை புரிந்­துக்­கொண்­டனர்.

மஹிந்த ஆட்­சியின் இறு­திக்­கா­லத்தில் இவ்­வு­ரிமை மறுப்­பினை நீக்கும் வகையில் முன்னாள் அமைச்சர் தினேஸ் குண­வர்­தன சட்­ட­தி­ருத்தம் கொண்டு வர முனைந்தார். ஆனால் ஆட்சி கலைந்­த­மை­யினால் அம்­மு­யற்சி நடை­பெ­றாமல் போய்­விட்­டது. புதிய நல்­லாட்­சியின் நூறு நாள் வேலைத்­திட்­டத்தின் கீழ் இப்­பி­ரச்­சி­னையைத் தீர்க்க முயற்­சிகள் மேற்­கொள்­ளப்­பட்­டன. அம்­மு­யற்­சியும் பய­னற்று போய்விட்டது.

பின்னர் 2015 ஆம் ஆண்டு உரு­வான புதிய பாரா­ளு­மன்­றத்­திற்கு தெரிவு செய்­யப்­பட்ட மலை­யக பிர­தி­நி­தி­க­ளான தில­கராஜ், வேலு குமார் போன்­றோரால் இப் பிரச்சினை முன்­வைக்­கப்­பட்­ட­துடன் எதிர்­கட்­சிகள் உட்­பட ஆளும் கட்சி உறுப்­பி­னர்கள் .

அனை­வரும் இப்­பி­ரச்­ச­னையை வியப்­புடன் நோக்கி கேள்வி எழுப்­பி­ய­துடன் அதற்கு பதி­ல­ளித்த உள்­ளூ­ராட்சி அமைச்சர் முஸ்­தபா, இப்­பி­ரச்­சி­னையைத் தீர்க்க 1987 முதல் மலை­யக அர­சியல் தலை­மை­க­ளினால் ஒரு திருத்தச் சட்­டத்தை கொண்டு வர­மு­டி­யாமற் போனது துரதிஷ்டம் என ஆங்­கி­லத்தில் கூறி, இதனை ஒரு தேசிய தேவை­யாகக் கருதி பிர­தேச சபை சட்­டத்­திற்குள் மலை­யக தோட்ட பகு­திவாழ் மக்கள் பய­ன­டையும் வகையில் உட­ன­டி­யாக சட்­டத்­தி­ருத்தம் கொண்டு வரு­வ­தாக ஆங்­கி­லத்தில் உரை­யாற்­றினார்;. I t is unfortunate that from 1987 the political leaders representing the plantation sector have been unable to make this simple amendment. I discussed this matter with my Deputy Minister who represent Ratnapura District where there are lots of plantations. He continuously agitated that we should look at this in nationalistic way. We are all Sri Lankans and I assure you that we will bring in this amendment, which, I see, is a national me” ( Hanzard – 01-.12.-2015)

இதனைத் தொடர்ந்து, 2016 ஜன­வரி 1ஆம் திகதி நடந்த அமைச்­ச­ரவைக் கூட்­டத்தில் இப்­பி­ரச்­சினை 6வது விட­ய­மாக கலந்­து­ரை­யா­ட­லுக்கு எடுத்துக் கொள்­ளப்­பட்­ட­துடன் அதில் பின்­வ­ரு­மாறு குறிப்­பிட்டு திருத்தம் கொண்டு வர அனு­ம­தியும் வழங்­கப்­பட்­டது. “ It has been identified that removal of legal obstacles is essential to provide utilities to estate settlements. Accordingly the proposal made by Ho, Faizer Mustafa, Minister of Provincial Councils and Local Government, to draft amendments to the Pradedeshiya Sabha Act no 15 of 1987 to enable the use of Pradeshiya Sabha Fund for the above purpose was approves by the Cabinet of Ministers”

மலை­யக மக்­களின் இவ்­வு­ரிமை மறுப்­பினை தேசிய தேவையை கருதி உட­ன­டி­யாக திருத்தம் கொண்­டு­வ­ரு­தாக அமைச்சர் பைசர் முஸ்­தபா கூறி, அமைச்­ச­ர­வையில் அதற்­கான அனு­ம­தியை பெற்ற போதிலும் சரி­யாக ஒரு வருடம் கழிந்து விட்­டது. ஆனால் இது­வரை சட்­டத்­தி­ருத்தம் கொண்டு வரப்­ப­ட­வில்லை.

தாம­தாக வழங்கும் நீதி, மறுக்­கப்­பட்ட நீதிக்கு சம­மாகும் (Late justice is equal for denied justice) என்­ப­தனை அனை­வரும் நன்கு அறிவார். மலை­யக அர­சியல் தலை­மை­களின் தவ­றினை சுட்­டிக்­காட்­டிய அமைச்சர் பைசர் முஸ்­தபா இவ்­வாறு இழுத்­த­டிப்புச் செய்­வது கவலையளிக்கின்றது.

அமைச்சர் பாராளுமன்றத்தில் கூறியதுபோல் இது தேசிய தேவையென்பதுடன் நாட்டின் பிரஜைகளது அடிப்படை உரிமையாகும். நாட்டின் அனைத்து பிரஜைகளினதும் அமைச்சர் என்ற வகையில் விரைவில் இப்பிரச்சினைக்கு தீர்வினைப்பெற்றுக் கொடுக்க அவர் முன்வரவேண்டும்.

மறுபுறம் மலையக மக்களால் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற பிரதிநிதிகள் இவ்விழுத்தடிப்பிற்கு எதிராக பாராளுமன்றத்தில் மீண்டும் இப்பிரச்சினையை மேலெழுப்பி, விரைவில் திருத்தச் சட்டத்தைக் கொண்டு வரும் செயற்பாட்டில் இறங்க வேண்டும்.

ஒரு சிறு திருத்தச் சட்டத்தை கொண்டு வர அரசாங்கம் ஒரு வருடத்திற்கு மேலாக காலம் எடுப்பது என்பது அப்பட்டமான மனித உரிமை மீறலாகும். மறுபுறம் இவ்வளவு காலதாமதம் தொடர்பாக பாராளுமன்றத்தில் மலையக பிரதிநிதிகள் குரலெழுப்பாது மௌனம் காப்பது கவலைக்குரியதாகும்.

நன்றி - வீரகேசரி
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates