இலங்கையில் இந்தியத் தமிழர்கள் குடியமர்த்தப்பட்டது முதல் மலையகத் தமிழர்கள் என்ற நாமத்திலேயே அழைக்கப்பட்டு வந்தனர் வருகின்றனர். ஆனால், தற்போது மலையகத் தமிழர்கள் என்று அழைக்கப்படும் பெயர் நாமம் விவாதிக்கும் கருபொருளாக மாறியுள்ளது.
ஆங்கிலேயக் காலனித்துவத்தில் பெருந்தோட்டங்களில் குடியமர்த்தப்பட்ட இந்தியத் வம்சாவளித் தமிழர்களை இதுவரை காலமும் மலையகத் தமிழர்கள் என்றே அழைத்துவந்தனர். ஆனால், கடந்த வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட சபை ஒத்திவைப்பு பிரேரணையின் போது மலையக மக்களை மலையகத் தமிழர்கள் என்று அழைக்கப்படுவதை மாற்றியமைத்து ஏனையவர்கள்போல் தமிழர்கள் என்று அழைக்கப்பட வேண்டுமமென தேசிய சகவாழ்வு மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்திருந்தார்.
இந்த நாட்டில் மலையகத் தமிழர்களுக்கென்றொரு பாரம்பரியம் இருக்கின்றது. அதனை முறையாக மக்களிடம் கலந்துரையாடாமல் எவ்வாறு அமைச்சர் அந்தக் கருத்தை நாடாளுமன்றத்தில் பதிவுசெய்ய முடியும். வரலாற்றில் பல சந்தர்ப்பகளில் இலங்கையில் அரசமைப்பு உருவாக்கப்பட்டிருந்தது. ஆனால், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மலையகத் தலைமைகள் மலையகத் தமிழர்கள் என்ற நாமத்தை மாற்ற வேண்டுமென அரசுக்கு கோரிக்கை விடுக்கவும் இல்லை. எவ்வாறு மக்களுக்குத் தெரிவிக்கவும் இல்லை.
பெருந்தோட்ட மக்களின் அடிப்படைப் பிரச்சினையான சம்பளப் பிரச்சினையை தீர்மானிக்கும் கூட்டு ஒப்பந்தம் காலாவதியாகி ஒரு வருடம் கடக்கவுள்ள நிலையில், இது தொடர்பில் தமிழ் முற்போக்குக் கூட்டணியோ அல்லது, இலங்கைத் தொழிலாளர் காங்கிரசோ இதுவரை ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எதனையும் மேற்கொள்ளவில்லை. வெறுமனே பேச்சுகளுக்கு அழைத்தால் மாத்திரம் 1, 000ரூபா என்ற கோஷத்தை எழுப்புகின்றனர்.
கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடும்வரை அடிப்படை சம்பளத்துடன், 100 ரூபா அதிகரித்து தருவதாகக் கூறிய அரச தொழில் மற்றும் தொழிற்சங்க அமைச்சர் ஜோன் செனவிரத்த 4 மாதமாகியும் தமது வாக்குறுதிக் குறித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது தனியார் துறைக்கு அதிகரிக்க உள்ள 2,500ரூபா சம்பள அதிகரிப்பில் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளமும் அதிகரிக்கப்பட வேண்டும் என்ற கருத்தை முன்வை வருகிறார். இவை தொடர்பில் சில மலையக முக்கிய அமைச்சர்கள் மக்களுக்குத் தெளிவான கருத்தைத் தெரிவிக்கவும் இல்லை. அதனைத் தீர்ப்பதற்கு ஆக்கப்பூர்வமான எந்தவொரு நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.
இவ்வாறானப் பிரச்சினை இருக்கும் சூழலில் அடையாளமகவுள்ள மலையகத் தமிழர்கள் என்று அழைக்கப்படும் நாமத்தை மாற்ற வேண்டும் என்று தெரிவிக்கின்றனர். இது பாரிய சிக்கல் வாய்ந்த விடயம் என்பதை குறிப்பிடுபவர்கள் தெரிந்துவைத்துள்ளார்களா என்பது கேள்விக்குறியே மலையகத்தில் போற்றதகு இருந்த தலைவர்களான சி.பி வேலுப்பிள்ளை மற்றும் சௌமிய மூர்த்தி தொண்டமான் போன்றோர் மலையகத் தமிழர்களின் தனியான அடையாளம் குறித்து பல முறை தமது கருத்துகளைப் பதிவுசெய்துள்ளனர்.
1964ஆம் ஆண்டு சிறிமா சாஸ்திரி ஒப்பந்தம் மற்றும் இலங்கையில் இடம்பெற்ற இனக் கலவரங்களின் போது மலையகத் தமிழர்கள் இந்திய வம்சாவளி மலையகத் தமிழர்கள் என்ற அடையாளம் இருந்தமையால் பெரும்பாலானர்கள் தப்பிச் சென்றனர். இல்லாவிடின் அன்று சிங்களவர்கள் மத்தியில் சிக்கியிருந்தால் மலையகத் தமிழர்களின் நிலை என்னவென்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். உலகில் தமிழர்கள் எங்கு வாழ்ந்தாலும் தமிழர்கள் தமிழர்கள்தான் ஆனால், வாழும் இடத்தில் அவர்களுக்கென்று ஒரு அடையாளம் இருப்பதே சிறந்த பாதுகாப்பு. இல்லாவிடின் அவர்களின் பாரம்பரியம், பண்பாடு, கலாசாரம் என்பன சிதைக்கப்பட்டுவிடும்.
புதிய அரசமைப்புக்குத் தீர்த்திட்டம் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆராயும் ஸ்கொட்லாந்தை எடுத்துக்கொண்டால் அது ஐக்கிய இராச்சியத்தின் ஒரு பகுதி அங்கும் வெள்ளையர்கள்தான் வாழ்கின்றனர். ஆனால், அவர்கள் ஸ்கொடிசாகத்தான் வாழ்கின்றனர். அவர்கள் ஐக்கிய இராச்சியத்தினர் என்றாலும், தமது பண்பாடு, கலாசாரம் மற்றும் மொழி அடிப்படையில் வேறுப்பட்டவர்கள் என்தால் அவர்களுக்கு ஸ்கொட்லாந்தினர் என்ற நாமம் உள்ளது.
மலையகத் தமிழர்கள் என்ற நாமம் இருக்கும்வரைதான் ஏதும் அநீதியிழைக்கப்பட்டால் இந்தியாவிடம் கூற முடியும் இல்லாவிடின் அதற்கான வாய்ப்பு மறுக்கப்படும் என்பது நிதர்சம். மலையகத் தமிழர்கள் என்றாலே, இந்தியாவில் இருந்து ஆங்கிலேயர் காலத்தில் இலங்கையில் குடியமர்த்தப்பட்டவர்கள் என்ற விடயம் உலகலாவிய ரீதியில் தெரிந்த விடயம் அதனை மாற்றியமைப்பது கண்டிப்பாக விவாதத்திற்கு உட்படுத்தப்பட வேண்டும். என்பதுடன், இது சிக்கலான விடயம்.
மலையத்தில் உள்ள பெரும்பாலான புத்திஜீவிகள் மலையகத் தமிழர்கள் என்ற நாமத்தை மாற்றியமைப்பதற்கு எதிரானவர்கள். புதிய அரசமைப்பில் மலையக மக்களின் தீர்வுத் திட்டம் குறித்து தமிழ் முற்போக்கு கூட்டணி வலியுறுத்தியதில் முதலில் இருத்த விடயம்தான் மலையகத் தமிழர்கள் என்ற நாமம். ஆனால், தற்போது மாறுப்பட்ட கருத்தை தெரிவிக்கின்றனர். இது மக்களையும் குழப்பும் செயற்பாடாகும்.
இலங்கை என்பது இனவாதத்தில் புரையோடிப் போயுள்ள நாடுகளின் பட்டியிலில் முன்னிலையில் உள்ளது. மாற்றம் இடம்பெற ஆரம்பித்து ஒரு வருடம்தான் கடந்துள்ளது. ஆனால், இன்னமும் இலங்கையில் இனவாதத்தின் வேர் அருக்கப்பட வில்லை. அதற்கிடையில் எமக்கான அடையாளத்தை மாற்றியமைப்பது எமது மக்களின் எதர்காலத்தை கேள்விக்குறியாக்கிவிடும். இலங்கையில் சகல இனங்களும் சமாதானமாக வாழ்வதற்கு சமஷ்டி அரசமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்ற கருத்து வலுப்பெற்றுவரும் சூழலில் இலங்கையின் தற்போதைய அரசு சமஷ்டி என்ற பெயருக்கே இடமில்லை எனத் திட்டவட்டமாகத் தெரிவிதுள்ளது.
எனவே, மலையகத் மக்களின் பாரம்பரியம், கலாசாரம் மற்றும் அடையாளத்தைப் பாதுகாத்துவரும் மலையகத் தமிழர்கள் என்ற நாமத்தை வெறுமனே அமைச்சர்கள் நினைப்பதால் மாற்றியமைக்க முடியாது. அது மலையக மட்டத்தில் தீர்க்கமாக கலந்துரையாடப்பட வேண்டும். அது ஒட்டுமொத்தமான மலையகத் தமிழர்களின் உரிமையின் அடையாளம். இலங்கையில் நிலையான சமாதானமும், நல்லிணக்கமும் ஏற்படவில்லை. அதற்கான அரசரமைப்பு பற்றி இதுவரை தெரியாதுள்ளது.
மலையகத் தமிழர்கள் என்ற நாமத்துடன், இலங்கையின் தேசிய நீரோட்டத்தில் வாழ்வதில் எவ்வித சிக்கலும் ஏற்பட போவதில்லை. பல சமூகங்கள் வாழும் நாடுகளில் நல்லிணக்கம் ஏற்படுத்தப்பட்ட பின்னரும் அந்தச் சமூகங்கள் தங்களுடைய அடையத்தில்தான் வாழ்கின்றன. இதற்குத் தக்க உதாரணமாக தென்னாபிரிக்க, இந்தியா, ஐக்கிய அமெரிக்கா போன்ற நாடுகளில் ஒரு மொழி பேசும் இனங்களாயினும் சமூக அடிப்படையில் தமது அடையாளத்தை பேணிகாக்கும் வகையிலேயே வாழ்கின்றனர்.
தற்போதைய சூழலில் தேர்தல் முறை மாற்றம் என்ற உடன் மலையகத் தமிழர்களின் பிரதிநிதித்துவம் பற்றி பேசுகிறோம். ஆனால், அந்த அடையாளம் இல்லாமல் செய்யப்பட்டால் எவ்வாறு அதற்கானக் கோரிக்கையை முன்வைப்பது. எனவே, இந்த விடயம் ஆளமாக விவாதிக்கப்பட வேண்டும். மலையக மக்களின் பிரதிநிதிகள் என்ற காரணத்திற்கான மக்களிடம் பேச்சுகள் நடத்தாமல் மக்களின் அடையாளத்தை மாற்றியமைக்க முடியாது என்பது தெளிவான விடயமாகும்.
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...