பெருந்தோட்ட பாடசாலைகளில் பணிப்புரிவதற்காக அண்மையில் வழங்கப்பட்ட
ஆசியர் உதவியாளர் நியமனத்தின் படி அவ்வாசிரியர்கள் தமது பயிற்சி நெறியை நிறைவு செய்யும்
வரையில் ‘ஆசிரிய உதவியாளர்‘ என்ற தரத்தினை உடையவர்களாகவே இருப்பர். மேலும், இத் தரத்தின்
அடிப்படையில் சம்பளமாக ரூ. 6000 மட்டுமே வழங்கப்படும். இந்நிலையில் ஆசிரிய பயிற்சி
கல்லூரிக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
இதில் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில் நுட்பவியல் பாடத்திற்கான விண்ணப்பங்கள் கோரப்படவில்லை.
இதனால் இப்பாடத்துறைக்காக நியமிக்கப்பட்ட கனிசமான ஆசிரிய உதவியாளர்கள் பாதிப்படைகின்றனர்.
இது குறித்து உரிய கவனமெடுக்குமாறு வேண்டுகோள் கடிதமொன்றினை இலங்கை கல்விச் சமூக சம்மேளனத்தின்
பொதுச் செயலாளர் ஆர். சங்கர மணிவண்ணன் கல்வி அமைச்சின் செயலாளருக்கு அனுப்பியுள்ளார்.
முகப்பு »
» ‘ஆசிரியர் பயிற்சிக்காக தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில் நுட்பவியல் பாடத்திற்கான விண்ணப்பங்கள் கோரப்படவில்லை‘ பொதுச் செயலாளர் ஆர். சங்கரமணிவண்ணன்
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...