இநத நாட்டில் பொருளாதார முன்னேற்றத்தில் பாரிய பங்களிப்பை வழங்கி இந்த தேசத்துக்கு தேயிதை தேசம் என பெயர் வாங்கித்தந்த தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களை முழுதாக தனியார் வசம் ஒப்படைத்து கூட்டு ஒப்பந்தம் மூலம் அவர்களது சம்பள பிரச்சினையை தீர்க்க இடமளிக்காது தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விடயத்தில் பிரதமரும் தொழில் அமைச்சரும் தலையிட வேண்டும் என தொழிலாளர் தேசிய முன்னணியின் பொதுச் செயலாளரும் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.திலகராஜ் தெரிவித்துள்ளார்.
2016 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டத்தில் தொழில் அமைச்சு மீதான குழு நிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் மேலம் கருத்துத் தெரிவிக்கையில்,
இந்த நாட்டில் பொருளாதார முன்னேற்றத்தில் பாரிய பங்களிப்பை வழங்கும் இந்த தேசத்துக்கு தேயிலைத் தேசம் என பெயர் வாங்கித்தந்த தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் பிரதிநிதி என்ற வகையில் தொழில் அமைச்சின் விவாதத்தில் தோட்டத் தொழிலாளர்களின் தொழில் உரிமை சார்ந்த பேசுவதற்கு எனக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் ஐந்து நிமிட நேரம் எந்த வித்திலும் எனக்கு போதுமானதாக இருக்காது என நினைக்கின்றேன்.
தங்களது இருநூறு வருட கால தொழில் வாழ்க்கை வரலாற்றிலே, வெறும் 20 வருடங்கள் மாத்திரமே அரச கூட்டுத்தாபனங்களுக்கு கீழாக இந்த தோட்டத் தொழிலாளர்கள் நிர்வகிக்கப்பட்டிருக்கின்றார்கள். ஏனைய காலங்களில் எல்லாம், இலங்கை குடியரசாவதற்கு முன்பு 1972ம் ஆண்டுவரை பிரித்தானிய தனியார் கம்பனிகளின் நிர்வாகத்தின் கீழாகவும் 1992 ஆம் ஆண்டுக்குப்பிறகு பிராந்திய கம்பனிகளின் நிர்வாகத்திற்கு கீழாகவும் வேலை செய்ய வேண்டிய துர்பாக்கிய நிலைக்கு இந்த தோட்டத் தொழிலாளர்கள் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.
தொழில் சட்டங்களும் தொழில் திணைக்களமும் நிர்வகிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்ற இந்த நாட்டில் ‘கூட்டு ஒப்ந்தத்தின்’; அடிப்படையிலே பிராந்திய கம்பனிகள் வசம் கையளிக்கப்பட்டிருக்கின்ற தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கை நிலை மிகவும் மோசமாகவுள்ளது.
இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை தீர்மானிக்கப்படுகின்ற கூட்டு ஒப்பந்தம் மூலமாகவும் அந்த கூட்டு ஒப்பந்தத்தில் தீர்மானிக்கப்படுகின்ற சம்பள தொகையில்தான் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் தீர்மானிக்கப்படுகின்ற நிலையில் கடந்த மார்ச் மாதம் 31ம் திகதியுடன் முடிவடைந்த கூட்டு ஒப்பந்தம் இன்னும் புதுப்பிக்கப்படாமல் கூட்டு ஒப்பந்தம் செய்கின்ற தரப்புகளான முதலாளிமார் சம்மேளனத்தினாலும் தொழிற்சங்க கூட்டமைப்பினராலும் அவை இன்னும் இழுத்தடிக்கப்படுகின்ற நிலை காணப்படுகின்றது.
ஏனக்கு முன்பு இந்த விவாதத்திNலு கலந்துகொண்டு உihயற்றிய அமைச்சர் டிலான் பேரேரா அவர்கள் 1000 ரூபா கோரிக்கை வெறும் அரசியல் கோரிக்கையாக மாத்திரமல்லாமல் அது அந்த மக்களுக்கு கிடைக்கக் கூடிய தொகையாக மாற்றியமைக்க வேண்டும் என கருத்து தெரிவித்தார். அவருக்கு நான் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கின்றேன். அதேநேரம் அந்த தொகையினைப் பெற்றுக்கொடுப்பதற்கு தனியே தனியார் வசம் மாத்திரம் இந்த விடயத்தை ஒப்படைத்து விடாமல் அரசும் இந்த விடயத்தில் தலையிட்டு உரியசம்பள தொகையினை பங்களிப்பு செய்யவேண்டும் என கோரிக்கையை முன்வைத்தார்.
இந்த 1000 ரூபா சம்பளத்தொiகையை அறிவித்தவர்கள், அரசியல் தொகையை அதனைத் தீர்மானித்து விட்டு அது குறித்த பேச்சவார்த்தைகளை கம்பனிகளுடன் மூடு மந்திரமாக பேச்சுவார்த்தைகளை நடாத்தி வருகின்ற அதேநேரம் அதனைப் பெற்றுக்கொடுக்க முனையாமல் இருப்பதுடன் இன்று பாராளுமன்றத்திலே தொழில் அமைச்சு விவாதம் நடைபெற்றுக்கொண்டிருக்கும் வேளையில் இந்த சபையிலே அது பற்றிய கருத்து கூறுவதற்கு கூட வருகைதராதவர்களாக இருக்கின்றார்கள்.
ஏனக்கு முன்பு இந்த சபையிலே உரையாற்றிய என்னுடன் நுவெரலியா மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற உறப்பினர் கே.கே.பியதாச நுவரெலியா மாவட்ட மக்களின் பல்வேறு சுகாதார பிரச்சினைகள் குறித்து எடுத்துக் கூறியிருந்தார்.. அவரது கருத்துக்களை நான் ஆமோதிக்கின்றேன்.
அதேபோல பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் அவர்கள் தோட்டத் தொழிலாளர்களின் தோட்டத் தொழிலாளர்களின் பல்வேறு தொழில் உரிமை சார்ந்த பிரச்சினைகளை முன்வைத்தார்..
அதேநேரம் நுவரெலியா மாவட்டத்தில் வெற்றிலைச் சின்னத்தின் கீழ் போட்டியிட்ட இரண்டு தொழிற்சங்க உறுப்பினர்கள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தைப் பெற்றுக்கொடுப்போம் என பத்திரிகைகளிலே அறிக்கை விட்டுக்கொண்டிருக்கனிறார்களே தவிர இங்கே சபையிலே தொழில் அவர்களை காணக்கிடைப்பதில்லை. இந்த எட்டாவது பாராளுமன்ற அமர்வுகள் தொடங்கி மூன்று மாதங்களாகின்றன. ஆனால் இதுவரை இந்த சபையிலே எதுவும் கருத்து கூறாத வாய்மூடி மௌனிகளாக அவர்கள் உள்ளனர்.
தொழில்சார்ந்த பிரச்சினைகள் சம்பந்தமாக புதிய சட்டத்திருத்தங்களை கொண்டு வருவதற்கு ஏற்பாடுகளைச் செய்திருப்பதாக சற்று முன்னர் பாhளுமன்றத்திலே உரையாற்றிய பிரதமர் அறிவித்திருக்கிறார். தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விடயம் தொடர்பாகவும் தாங்கள் கவனம் செலுத்தவுள்ளதாக அவர் தெரிவித்தார். எனவே வெகு விரைவில் பிரதமரின் தலையீட்டுடனும் தொழில் அமைச்சின் தலையீட்டுடனும்; இந்த சம்பள விடயம் தீர்த்து வைக்கப்பட வேண்டும் என்று நான் இந்த உச்ச சபையிலே வேண்டுகோள் விடுக்கின்றேன் எனவும் தெரிவித்தார்.
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...